Facebook Twitter RSS

ஈரானில் கொலை செய்யப்பட்ட 07 சுன்னி முஸ்லிம்களும் கொல்லப்பட காத்திருக்கும் 26 சுன்னி முஸ்லிம்களும் !!


Mahabad. ஈரானில் உள்ள சுன்னத் வல் ஜமாவினது (சுன்னி) நகரம். இஸ்ரேலின் மேற்கு ஜெரூஸலத்தில் வாழும் முஸ்லிம்களை விட மோசமாக இவர்கள் ஈரானிய அரசால் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இங்கேயுள்ள 07 சுன்னி முஸ்லிம்களிற்கு ஈரானிய அரசு மரணதண்டனை என்ற பெயரில் அவர்களை கொலை செய்துள்ளது. சிரிய சண்டைகளின் பின்னர் நீறு பூத்த நெருப்பாக தணலாக இருந்த சுன்னி ஷியா வரலாற்று முரண்பாடுகள் இப்போது விஸ்வரூபம் கொண்டுள்ளன. எதிரியை அழிந்த பகை முடிக்கும் தீர்மானத்தில் இரு தரப்பும் இருப்பது நிறையவே சிரியாவின் கடல் நகரான குசைரில் காணக்கூடியதாக இருந்தது.


Mahabad-ல் இருக்கும் சுன்னி முஸ்லிம் அறிஞர்களை ஈரானிய ஷியா அரச இயந்திரத்தின் ஏவலர்கள் பலவந்தமாக கட்டாயப்படுத்தி இவர்களிற்கான மார்க்க தீர்ப்பை பெற்றுக்கொண்டு இந்த தண்டனையை நிறைவேற்றியுள்ளனர். வழங்கப்பட்ட மார்க்கத்தீர்பென்பது ஈரானிய அரசால் இந்த எழுவர் மீதும் சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டிருந்தது.

சில நாட்களிற்கு முன்னர் இவர்கள் கைது செய்யப்பட்டு யாரும் அறியாத ஒரு இடத்தில் சிறையிடப்பட்டனர். இவர்களே இப்போது மரண தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர். தங்கள் மரணதண்டனைக்கான அரசியல் நியாயங்களை தேடிக்கொள்ள ஷியாக்கள் இந்த அஹ்லுஸ் ஸுன்னாவின் அறிஞர்களின் கையொப்பம் அவர்களிற்கு தேவைப்பட்டது. தண்டனை நிறைவேற்றப்பட்ட சுன்னி முஸ்லிம்களின் பெயர் விவரம் கீழேயுள்ளது.

* Sheikh Farhad Salimi
* Karim Ayoub
* Anvar Khezri
* Qasim Absita
* Khosro Bashart
* Kamran Shaykha

* Dawud Abdullah

குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்ததும் அதற்கேற்ப வாழ முற்பட்டதும் தவிர இவர்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. ஆதாரமற்று குற்றச்சாட்டுக்களை இவர்கள் மீது சுமத்தியே இந்த கொலைகளை ஈரான் செய்து முடித்துள்ளது. எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான அரசியல் படுகொலைகள் நிகழ அதிக வாய்ப்புக்கள் உள்ளன.

 Karaj -ல் உள்ள Rajai Shahr சிறைச்சாலையில் இந்த எழுவருடன் மேலும் 26 சுன்னி முஸ்லிம்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிற்கும் இது போன்ற மரண தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வஹாபிகள் என இவர்கள் மீது குற்றம் சுத்தியுள்ள ஈரானிய அரசு, ஈரானிய அரசாட்சிக்கு எதிரான வஹாபிஸ கருத்துக்களை பரப்பியமை, குறுந்தகடுகளை விநியோகித்தமை, சிரியாவின் போராளிகளின் வெற்றிக்காக பிரார்த்தித்தமை என பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: