Facebook Twitter RSS

அநியாயகார அரசனின் முன் ஹக்கை கூறுவது ஜிஹாதில் சிறந்த ஜிஹாத்!

  

        மது சஹாபாக்கல் எத்தகைய முன்மாதிரியை எமக்கு வழங்கிறுள்ளார்கள் என்பதனை ஜஆபர் (றழி) அவர்கள் அபீசினிய ஹிஜ்ரத்தின்போது நஜ்ஜாசி மன்னனிடம் இஸ்லாத்தின் பெருமையையும் மகத்துவத்தையும் எடுத்துகூறிய முறை எமக்கு மிகப்பெரிய பாடத்தைப் புகட்டுகிறது!

ஜஃபர் (ரழி) அவர்களது இஸ்லாம்பற்றி தெளிவும் அவர்களது மனவலிமை பற்றி சிந்தித்து பாடம் பெறுவோம்.

இன்று எமது முஸ்லிம் உம்மத் இத்தகைய நபித்தோழர்களது தஃவாவில் பாடம் படிக்க வேண்டியுள்ளது.

அவரின் உரையின் பகுதிகள்:

அரசே! நாங்கள் அறியாமைக் காலத்தில் இருந்தோம்! சிலைகளை வணங்கினோம்! இறந்த பிராணிகளைச் சாப்பிட்டோம்! மானக்கேடான காரியங்களைச் செய்தோம்! உறவுகளத் துண்டித்து அண்டை வீட்டாருக்கு கெடுதிகளை விளைவித்தோம்! எங்களில் உள்ள எளியோரை வலியோர் விழுங்கி வந்தனர்! இப்படியே நாங்கள் வாழ்ந்து வரும்போது எங்களில் உள்ள ஒருவரையே அல்லாஹ் எங்களுக்கு தூதராக அனுப்பினான்.

அவர் வமிசத்தையும் அவர் உண்மையாளர், நம்பிக்கைக்குரியவர், மிக ஒழுக்கசீலர் என்பதனையும் நாங்கள் அறிந்திருந்தோம்!

அவர் எங்களுக்கு கட்டளையிட்டதெல்லாம் நாங்கள் நாங்களும் எங்கள் மூதாதையரும் வணங்கிவந்த கற்சிலைகள் மற்றும் புனித ஸ்தலங்களைவிட்டு விலகவேண்டும்! உண்மையை உரைக்க வேண்டும்! அமானிதத்தை நிறைவேற்றவேண்டும்! உறவினர்களுடன் சேர்ந்து வாழவேண்டும்! அண்டை வீட்டார்களுடன் அழகிய முறையில் நடந்துகொள்ள வேண்டும்! அல்லாஹ் தடை செய்தவற்றையும் கொலைக் குற்றங்களையும் விட்டு விலகிவிடவேண்டும் என்பதேயாகும்!

மேலும் மானக்கேடானவைகள் பொய்பேசுதல் அனாதைகளின் சொத்துக்களை அபகரித்தல் பத்தினியான பெண்களின் மீது அவதூறு கூறுதல் என்பவற்றைவிட்டும் எங்களைத் தடுத்தார்! அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும்! அவனுக்கு இணையாக்கக் கூடாது! தொழவேண்டும் நோன்பு நோற்க வேண்டும் என்று பல கட்டளைகளை எடுத்துக் கூறி விளக்கினார்!

நாங்கள் அவரை உண்மையாளராக நம்பினோம்! விசுவாசித்தோம! அவர் எங்களுக்கு அறிமுகப்படுத்தின அல்லாஹ்வின் மார்க்கத்தை பின்பற்றினோம்! அல்லாஹ் ஒருவனையே வணங்க ஆரம்பித்தோம்! அவனுக்கு இணைவைப்பதை விட்டுவிட்டோம்! அவன் எங்களுக்கு விலக்கியதில் இருந்து விலகிக்கொண்டோம்! அவன் எங்களுக்கு ஆகுமாக்கியதை அப்படியே ஏற்றுக்கொண்டோம்!


இதனால் எங்கள் இனத்தவர்கள் எங்கள் மீது அத்துமீறினர்! எங்களை வேதனை செய்தனர்! அல்லாஹ்வை வணங்குவதை விட்டுவிட்டு முன்பு போலவே சிலைகளை வணங்கும்படி கோரினர்! முன்பு போலவே கெட்டவைகளை செய்யும் படி நிர்பந்தித்து எங்கள் மார்க்கத்தில் இருந்து திருப்ப முயற்சித்தனர்! எங்களை அடக்கி அநியாயம் செய்து நெருக்கடியை உண்டாக்கி எங்கள் மார்க்கத்தை பின்பற்றுவதற்கும் மதச்சுதந்திரத்திற்கும் அவர்கள் தடையானபோது உங்கள் நாட்டுக்கு நாங்கள் வந்தோம்! உங்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்! உங்களிடம் தங்குவதற்கு விருப்பப்பட்டோம்! அரசே, எங்களுக்கு இங்கு அநீதி இழைக்கப்படமாட்டாது என்று நம்புகிறோம்! எனக்கூறி முடித்தார்!

நன்றி:khandaqkalam.blogspot.com

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: