Facebook Twitter RSS

தாய்லாந்து முஸ்லிம் படுகொலையும் - முன்னாள் பிரதமர் மீதான மரண வாசகமும்!!


Thailand's former Prime Minister Thaksin Shinawatra speaks during an interview with Reuters at his residence in Dubai
   நேற்று முன்தினம் யூ டியூப்பில் ஒரு வீடியோ கிளிப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அது மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜுலை மாதம் இந்த வீடீயோ பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் தென்கிழக்காசியாவிற்கான Al - Qaeda Southeast Asia என தம்மை இனங்காட்டிக்கொள்பவர்கள் முகத்தை மறைத்த நிலையில் கையில் துப்பாக்கிகள் ஏந்திய வண்ணம் சில விடயங்களை கூறியுள்ளனர். தாய்லாந்தில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்களிற்காக பழிக்கு பழி வாங்கப்படும் எனவும் சூளுரைத்துள்ளனர். 


முன்னால் தாய்லாந்தின் பிரதமர் Thaksin Shinawatra இந்த கொலைகளிற்கு ஜவாப் சொல்ல வேண்டும் என்றும் அவரின் உத்தரவின் பேரிலேயே தென்தாய்லாந்தில் இராணுவத்தினரால் முஸ்லிம் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து பிரதமரிற்கு தாங்கள் மரண தண்டமை விதித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 


Tak Bai 25 October 2004
Thaksin Shinawatra-வை விழித்து அவர்கள் ‘உன்னை நாம் எங்கு கண்டாலும் எவ்விடத்திலும் கொல்வோம். உலகின் எந்த மூளையில் போய் மறைந்தாலும் நீ கொல்லப்படுவாய். மரணித்த முஸ்லிம்களின் வலிகளிற்கு பகரமாக உனது உயிரை எடுப்போம். நாம் முஸ்லிம் உலகிற்கு உனது முகத்தை ஞாபகத்தில் வைத்திருக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். அப்போது தான் உன்னை உலகில் எங்கு கண்டாலும் கொல்ல முடியும்‘ என தெரிவித்துள்ளனர். 

2004ல் பிரதமராக இவர் இருந்த போது Narathiwat-ல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தினை நசுக்க உத்தரவிட்டார். அதில் 1300 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் இராணுவத்திடம் கையழிக்கப்பட்டனர். அவர்களில் 78 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். 

இந்த யூடியூப் வீடியோ 27-07ல் ரத்து செய்யப்பட்டது. சமூக வன்முறைகளை தூண்டும் கிளிப் என இதற்கு யூ-டியூப் காரணம் சொன்னது. பின்னர் அது மீண்டும் கடந்த மாதம் இன்னொருவரால் அப்லோட் செய்யப்பட்டது. இப்போது அதனை மீண்டும் யாரும் பார்க்க முடியாமால் நிறுத்தி விட்டது நிர்வாகம். 

சிரியாவின் படுகொலைகளை அப்பட்டமாக காட்டும் யூடியூப், ஈராக்கிய போராளிகளின் மிரட்டல்களை வெளியிடும் யூடியூப் தாய்லாந்தின் முஸ்லிம்கள் மீதான படுகொலையை காட்ட மறுத்து வருவதன் பின்னணி பற்றி இன்னொரு தருணத்தில் அலசுவோம். 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: