Facebook Twitter RSS

சவுதி அரசு ஒருபோதும் இஸ்லாமிய அரசு அல்ல

சவுதி அரசு ஒருபோதும் இஸ்லாமிய அரசு இல்லை,அது ஒரு அமெரிக்க அடிவருடி அரசு!!!!!!!!!!

 

Shaikh Al-Arifi-ஐ சிறையில் தள்ளியது சவுதி அரசு!! - துளங்கும் பின்புலங்கள்..

Inna Lillah, Saudi regime Shaikh Al-Arifi throw into prison


“06 வருடங்கள் சிறை. 03 மில்லியன் சவுதி ரியாள்கள் அபராதம்.
 அப்படி அவர் என்னதான் செய்தார்?

சவுதி அரேபியாவின் எல்லோராலும் அறியப்பட்ட மார்க்க அறிஞரா
ன Shaykh Muhammad al-Arifiஅந்நாட்டு அரசால் சிறையில் தள்ளப்பட்டார்.
 கட்டாரின் தலை நகர் டோஹாவில் இருந்த ஷேய்ஹ் ஆரிப் அவர்களை 
ரியாத்திற்கு மீள வரவழைத்த சவுதி அரசு அவர் மீது குற்றச்சாட்டுகளை 
சுமத்தி சிறையில் அடைத்துள்ளது. 


1970-ல் பிறந்த Shaykh Muhammad al-Arifi அவர்கள் சவுதி அரேபியாவின் பிரபல
 மார்க்க அறிஞரான அப்துல்லாஹ் பின் பாஸ் (ரஹ்) அவர்களின் முக்கிய 
மாணவராவார். சவுதி நேவி அகடமியின் "King Fahd" மஸ்ஜித்தின் இமாமாகவும்
 இவர் இருந்துள்ளார். இவர் எழுதிய நூல்கள் இஸ்லாமிய உலகில் வெகு பிரசித்தம். 

இவரது எழுத்துக்கள், பேச்சுக்கள், பிரச்சாரங்கள் என எல்லாமே சவுதி அரேபியர்களை
 கவரும் விதத்தில் அமைந்துள்ளன. சமூகவலைத்தளங்களான பேஸ்புக்
, டிவிட்டர் போன்றவற்றில் இவரது பிரச்சாரங்களை பார்த்தவர்கள் பல இலட்சம் 
பேர். சவுதி ரோயல் குடும்பத்திற்கு மிக நெருக்கமானவரான இவர் சவுதி பொலிஸ்
 அகடமியின் வழிகாட்டல் பேராசிரியராகவும் இருந்துள்ளார். 

சில வாரங்களிற்கு முன்னரும் சவுதி அரேபிய உளவுத்துறை அதிகாரிகள் இவரை
 விசாரணை என்ற பெயரில் தடுத்து வைத்திருந்தனர். இவர் மீதான சவுதி
 அரசின் குற்றச்சாட்டு “எகிப்திய இஹ்வானிய அரசிற்கு ஆதரவாக
 செயற்பட்டமையாகும்”. டிவிட்டரில் எகிப்திய மக்களையும் இஹ்வான்களையும் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்ட இராணுவ அரசிற்கு எதிராக போராடுமாறு இவர் விடுத்த
 அறைகூவல் கலந்த வேண்டுகோளாகும்”. இதை விட இன்னொரு விடயமும்
 இவர் மேல் சவுதி அரசிற்கு பிடிக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் எகிப்திய அரசு கவிழ்க்கப்பட்டதில் பங்குதாரர்கள். 

அது, “சிரிய போராளிகளிற்காக நிதி சேகரித்தமையும் வழங்கியமையுமாகும்”.
 சிரியாவில் பஸர் அல் அஸாதின் அரசிற்கு எதிராக அமெரிக்காவின் அரசியல்
 போக்கிற்கு ஆதரவாக சிரிய போராளிகளிற்கு பெரும் நிதியை வழங்கியது
 சவுதி அரேபிய அரசே. அவர்கள் கைகளில் ஆயுதங்கள் பல சென்றடைய
 கட்டாரும் சவுதியும் பல்வேறு வழிகளில் அனுசரணையாளர்களாக இருந்துள்ளனர்
 எப்.எஸ்.ஏ. போராளிகளின் மாதாந்த ஊதியமும் இதில் அடங்கும். பிறகென்ன 
ஷேய்ஹ் ஆரிப் மேல் இத்தனை கோபம்?, காரணம் இருக்கிறது. 

அவர் வழங்கிய நிதிகள் அல்-காயிதா ஆதரவு ஜபாஃ அல் நுஸ்ரா போராளிகற்காகும்.
 இதுவே சவுதி அரேபியாவின் ஆட்சியாளர்களை அச்சமடையவும், கோபமடையவும்
 வைத்த விடயம். 

தந்திரமாக வரவழைத்து உள்ளே தள்ளிவிட்டார்கள் இவரை. அரசிற்கு மாற்றமான 
கருத்துக்களை வெளியிட்ட பல நூறு முத்தாவாக்கள் சவுதியின் சிறைகளில் 
நீதி விசாரணைகள் இன்றி வாடுகின்றனர். அதில் கடைசியாக இணைத்து 
கொள்ளப்பட்ட பெயர் Shaykh Muhammad al-Arifi .

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: