Facebook Twitter RSS

அன்வர் சதாத் மற்றும் ஹுஸ்னி முபாரக் மீதான தாக்குதல் தடங்கள்....... - இரண்டு எகிப்திய சிங்கங்கள் பற்றிய அறிமுகம் -


Khalid Ahmed Showky Al-Islambouli

எகிப்திய இராணுவத்தின் 333-வது ஆட்லறி பிரிவின் லெப்டினன்ட். 
அன்வர் எல் சதாத்தினை இஸ்ரேல் மீது மேற்கொண்ட எகிப்திய
 இராணுவத்தின் வெற்றிகர தாக்குதலான “ஒக்டோபர் தாக்குதல்”
 நினைவு தினத்தின் போது இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பு
 மரியாதையின் போது படுகொலை செய்தவர். கேம்ப் டேவிட்
 உடன்படிக்கையின் பிரகாரம் இஸ்ரேலை ஒரு தேசமாக ஏற்றுக்கொண்ட
 துரோகத்திற்கு பரிசாக அவரை படுகொலை செய்ய வேண்டும்
 எனும் முடிவில் உறுதியாக இருந்து, அதற்காக அயராது உழைத்து,
 மிக நுட்பமாக திட்டமிட்டு, கிடைத்த சந்தர்ப்பத்தை துல்லியமாக
 பயன்படுத்தி,  தனது இலக்கை வெற்றிகரமாக அடைந்தவர்.


 Islambouli, Abdelhameed, Abdul Salaam, 
Ata Tayel Hameeda Raheel,
 மற்றையவர் Hussein Abbas.
 இது தான் அந்த தாக்குதல் அணி.
 இஸ்லாம் பூலி தவிர்ந்த ஏனையவர்கள் திட்டமிட்டு இவரது ட்றக்கில்
 ஏற்றப்பட்டவர்கள். அதில் பயணிக்க 
வேண்டடிய இராணுவ சிப்பாய்களை 
தனது லெப்டினன்ட் அதிகாரத்தை 
பாவித்து வேறு விடயங்களிற்கு 
அனுப்பியிருந்தார் இஸ்லாம் அல் பூலி. 

அன்வர் அல் சதாத் வீற்றிருந்த மேடைக்கு நேராக அவரது ட்ரக் வந்த சமயத்தில் 
எகிப்திய ஜெட் விமானங்கள் வர்ணங்களை புகையாக கக்கிய வண்ணம் 
தாழப்பறந்து வந்தன. ட்றக்கில் இருந்து பாய்ந்த இஸ்லாம் பூலி முதலாவது
 கிரனைட்டை எடுத்து வீசினார். அது வெடிக்கவில்லை. இரண்டாவதும் 
இலக்கு பிசகி வீழ்ந்தது. வெடிக்கவில்லை. உடனடியாக ட்றக்கில் இருந்த 
ஏனையவர்கள் மேடையை நோக்கி கலஷ்னிகோவ்களினால் ஒபன் பயரிங்
 செய்ய ஆரம்பித்தனர். வீசிய மூன்றாவது கிரனைட் வெடித்து சிதறியது. 
ஸ்தலத்தில் 14 பேர் துடிதுடித்து இறந்தனர். அன்வர் சதாத், அவரது ஜெனரல்கள், 
ஆலோசகர் என. அதில் தான் ஹுஸ்னி முபாரக்கும் வீற்றிருந்தார். தப்பி விட்டார். 

15-ஏப்ரல்-1982. உயிருடன் கைது செய்யப்பட்ட இஸ்லாம் பூலியும் அவரது
 மூன்று சகாக்களும் எகிப்திய பயரிங் ஸ்குவார்ட்டினால் தலையில் 
சுடப்பட்டு மரணித்தனர். இந்த தாக்குதலில் சம்மந்தமுடைய ஏனைய 19
 பேரிற்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்த தாக்குதலின் முக்கிய 
சூத்திரதாரிகளான எகிப்திய இராணுவ உயர்நிலை அதிகாரிகள் தாக்குதல் 
நடந்த தினமே நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர். 

ஆனால் இந்த தாக்குதலின் பின்னால் தொழிற்பட்ட நாடு ஈரான். மன்னர்
 ஷாவிற்கு அன்வர் சதாத் அடைக்கலம் கொடுத்ததே அவர்களிற்கு ஏற்பட்ட
 கோவம். இஸ்ரேலுடனான ஒப்பந்தத்தை அதனுடன் இணைத்து வேலையை
 முடித்து விட்டனர். 

ஈரானின் அன்றைய ஆன்மீக தலைவர் அயாத்துல்லாஹ் ரூஹுல்லாஹ் 
கொமெய்னி, இஸ்லாம் பூலியை தியாகி என வர்ணித்தார். அவரது பெயரை
 தெஹ்ரானின் ஒரு வீதிக்கும் வைத்தது தெஹ்ரானிய மாநகர சபை. அந்த 
வீதி பின்னைய நாட்களில் இன்திபாத ஸ்டீரீட் என அழைக்கப்படுகிறது. 

Ahmed Showqi Al-Islambouli 


இஸ்லாம் பூலியின் இளைய சகோதரர். ஆப்கானில் சோவியத்
 படையினரிற்கு எதிரான சண்டைக்கு எகிப்தியர்கை உள்வாங்கியவர்.
 பெஷாவாரில்  World Islamic Front for Jihad Against Jews and Crusaders 
எனும் அமைப்பின் முன்னணி அங்கத்தவர். அண்ணன் காட்டிய
 வழியில் இவரும் பயணித்தார். ஹஸன் அல் துராபி, அல் ஸவாஹிரி
 போன்றவர்களுடன் இணைந்து தன் செயல் நடவடிக்கைகளை எகிப்தில் 
முன்னெடுத்தார். 

அடிஸ் அபாபா விமான நிலையத்தில் வைத்து ஹுஸ்னி முபாரக்கின்
 வாகன தொடரணி மீது ரொக்கெட் தாக்குதலை மேற்கொண்டார். இலக்கு
 சற்று தவறி விட்டது. திறமையான முபாரக்கின் வாகன சாரதி சடுதியாக
 ரிவேர்சில் வாகன்ததை பின்னகர்த்தி திருப்பி சென்று விட்டார். மயிரிழையில்
 உயிர் தப்பினார் ஹுஸ்னி முபாரக். இது நடந்நதது ஜுன் 22, 1995-ல்.

அல்-கமா-அல் இஸ்லாமியா கொமாண்டராக செயற்பட்ட அல் இஸ்லாம் 
பூலி சோமாலியாவில் தனது தளத்தை அமைத்து பின்னர் எகிப்திய 
உளவுப்பிரிவின் அசாசினேஷனில் இருந்து தப்புவதற்காக 1997-ல் ஈரானில்
 தஞ்சமடைந்தார். ஈரான் அவரை 2011-ல் எகிப்திடம் கையளித்து தனது 
துரோகத்தின் நிறத்தை வெளிப்படுத்தியது. இதனை செய்தவல் அஹ்மட் 
அல் நிஜாட். சிறையில் அடைக்கப்பட்ட அல் இஸ்லாம் பூலி 2012-ல் அவரது 
வயது, உடல் நிலை காரணமாக விடுதலை செய்யப்பட்டார். 

இது இரண்டு சிங்கங்கள் பற்றிய அறிமுகம் மட்டுமே.....

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: