Facebook Twitter RSS

சிரிய யுத்தத்தில் நேரடியாக களமிறங்குகிறதா அமெரிக்கா?

“சிரிய யுத்தத்தில் நேரடியாக களமிறங்க அமெரிக்கா ஆலோசிக்கின்றது” - அமெரிக்க இராணுவத் தளபதி

Martin Dempsey

Martin Dempsey (Chairman of the Joint Chiefs of Staffஅமெரிக்க கூட்டு படைகளின் 
கட்டளைத் தளபதி. அவர் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். “அமெரிக்கா,
 சிரியா மீது நேரடியான இராணுவ நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக 
ஆராய்கிறது” என்பதே அது. இவ்வளவு காலமும் அமெரிக்கா இது பற்றி 
ஆராயாமல் சிரிய சண்டைக்களங்களின் படத்தையா பார்த்து கொண்டிருந்தது 
என்பது இயல்பாக எமக்கு எழும் கேள்விதான். அராபிய வசந்தத்தை பென்டகள்
 திட்டமிட்ட போதே எல்லாம் வடிவமைக்கப்பட்டு முடிந்து விட்டது. அதில்
 ஒரு கட்டம் அமெரிக்க இராணுவ தாக்குதல்கள். அதை ஏதோ இப்போது 
நிலைமைகளின் தீவிரத்தன்மைகள் கருதி அமெரிக்கா ஆராய்வது போல
 கருத்து வெளியிட்டுள்ளார் தளபதி டெம்ப்ஸே. 


சிரியா மீதான தாக்குதலிற்கான வழிமுறைகள், யுக்திகள் பற்றி தான் ஏற்கனவே
 ஒபாமா நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 அதில் அவர் கோடிட்டு காட்டிய ஒரு தாக்குதல் முறையே “kinetic strikes.”

kinetic strikes என்பது மிக வேகமான அதிஉட்சபட்ச தாக்குதல் முறையாகும்.
 தன்னிடம் இருக்கும் அதி விஷேட வலுக்களை வரையறுக்கப்பட்ட காப்பகுதியி
ல் பாவித்து இலக்கை அடைவது அல்லது அழிப்பது இந்த தாக்குதல் முறையின்
 சிறப்பம்சம். வலுக்கள் பல வகையில் உள்ளன. chemical energy, thermal energy, 
electromagnetic energy, elastic energy, nuclear energy, electric energy, மற்றும் rest energy.
 இவை அடிப்படையில் பிரதானமாக இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன:
 potential energy மற்றையது kinetic energy.
விஞ்ஞான கற்பனை படங்களில் வரும் தாக்குதல் முறையை ஒத்தவை இவை.

ஒன்றை இயக்குவதன் மூலம் அது மீண்டும் இயங்குவதும், ஒன்றை 
இயக்குவதன் மூலம் அது மற்றவற்றை இயக்குவதும் இதன் தொழில்நுட்பமாகும்.
 இதனை அரசியல் மற்றும் இராணுவ மயப்படுத்தி சிந்தித்தால் அவரின்
 வார்த்தைகளின் அர்த்தங்கள் தெளிவாகவே புரியும். 

நான்கு நட்சத்திர அமெரிக்க ஜெனரலான Martin Dempsey சிரியா மீதான
 அமெரிக்க தாக்குதல் பல வகைப்பட்ட விதத்தில் அமையும் என்றும் அதில் 

  • 20,000 அமெரிக்க டெல்டா போசஸ் சிறப்பு தாக்குதல் அணியினரை ஜோர்தானில் தரையிறக்கி நேரடியாக சிரிய எல்லையினுள் நுழைவது
  • சிரய ஈரானிய உறவை உடைப்பது
  • எப்.எஸ்.ஏ. போராளிகளிற்கு நவீன ஆயுதங்களை வழங்குவது
  • சிரிய வான்பரப்பு எல்லையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆகாய தடை            விதிப்பது
  • ட்ரோன் விமானங்கள் மூலம் சமகாலத்தில் அல்-காயிதா போராளிகளை இலக்கு     வைத்து அழிப்பது
போன்ற பல திட்டங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். Martin Dempsey யின்
 சிந்தனைப்படி சிரிய இராணுவத்தினை பலமிழக்கச் செய்து பஸர் அல் அஸாதின் 
ஆட்சியை கவிழ்ப்பது மட்டமல்லாமல் ஜபாஃ அல் நுஸ்ராவின் தலைமைத்துவத்ததை அழிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதும் அதற்கான பெனிட்ரேஷன் தாக்குதல்
 அணிகளை உருவாக்குவதுமாகும். லிபியாவில் இவ்வாறே அல்-காயிதா 
ஆதரவு குழுக்களை அமெரிக்கா வேட்டைாயட முற்பட்டது. 

இவை எதிர்பார்க்கப்ட்டவையே. சிரியாவில் போராடும் போராளிகளிற்கும் இது
 தெரியும். அவர்கள் இதனை சிரியா என்ற தேசத்தின் அரசியல் அதிகாரத்தை
 கைப்பற்றும் சண்டைக்களமாக பார்க்கவில்லை. மாறாக சிரியா எனும் ஷாம் 
தேசத்திற்கான இஸ்லாமிய கிலாபாவை உருவாக்குவதற்கான களமாகவே 
கருதுகின்றனர். நிழலாக நடந்து வரும் மூன்றாம் சிலுவை யுத்தம் அபீசியலாக
 நடப்பதற்கான களமாக சிரியா தன் வாயிலை திறந்து விட்டுள்ளது. 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: