Facebook Twitter RSS

எகிப்து யுத்தத்தில்.........

எகிப்து யுத்தத்தில் தலிபானுக்கு  தலைமை தாங்குவது உஸாமா பின் லாதினின் பிரத்தியேக டாக்டர்!

    கிப்தின் சினாய் பகுதியில் ராணுவத்துக்கு எதிராக பாலஸ்தீன ஹமாஸ்,
 மற்றும் தாலிபன் ஆதரவு அமைப்பு தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள
 நிலையில், இந்த அல்-காய்தா ஆதரவு அமைப்பு பற்றிய சில தகவல்கள்
 இப்போதுதான், தெரியவந்துள்ளன.

அதுவும் முக்கியமாக, சினாய் பகுதியில் இந்த தாலிபன் ஆதரவு அமைப்பு
 யாருடைய தலைமையில் செயல்படுகிறது என்ற தகவல் இப்போதுதான்
 உளவு வட்டாரங்களில் அடிபடுகிறது. இவர் யார் என்று தெரியவந்ததும்,
 பலரும் இந்தப் பகுதியில் ஒரு கண் வைக்க தொடங்கியுள்ளனர்.
சினாய் பகுதியில் ராணுவத்துக்கு எதிராக 7,000 முதல் 9,000 எண்ணிக்கையில்
 ஆயுதம் ஏந்தியவர்கள் யுத்தம் புரிகிறார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
 இவர்களில் தாலிபன் ஆதரவு இயக்கத்தினருக்கு தலைமை தாங்கும்
 நபர், டாக்டர் ராட்ஸி மவாஃபி. (மேலே சிறிய போட்டோவில் உள்ளவர்)

இவருக்கு ஒரு பெரிய பின்னணியே உண்டு. அது என்னவென்றால், பின்-லேடனின்
 பிரத்தியேக டாக்டராக இருந்தவர் இவர்.

இந்த டாக்டருக்கு, 23 ஆண்டுகளுக்கு முன்பே பின்லேடனுடன் தொடர்புகள்
 இருந்தது. 1990-ம் ஆண்டு பின்லேடனும், அவரது ஆரம்பகால தளபதிகளும் 
மெக்காவுக்கு புனிய யாத்திரை சென்றபோது, அவர்களுடன் இவரும் சென்றிருக்கிறார்.

அந்த புனித யாத்திரை முடிந்தபின் பின்லேடனும் மற்றையவர்களும்,
 பாகிஸ்தானிய நகரமான பெஷாவாருக்கு சென்றனர். அங்குதான் தாலிபனின்
 ஆரம்பகால திட்டங்கள் சில தீட்டப்பட்டன. டாக்டர் ராட்ஸி மவாஃபியும் அந்தக்
 குழுவில் இருந்திருக்கிறார்.

இவரது தலைமையில்தான், அன்சார் அல்-ஜிஹாத்  என்ற பெயருடைய 
தாலிபன் ஆதரவு இயக்கத்தினர் சினாய் பகுதியில் ராணுவத்துக்கு 
எதிரான தாக்குதல்களை நடத்துவதாக தற்போது தெரியவந்துள்ளது.

சினாய் பகுதியில் இன்றைய தேதியில் இவர்களது கைதான் ஓங்கியுள்ளது.
 எகிப்திய ராணுவத்தினர் மீது இவர்கள் சினைப்பர் தாக்குதல்களையும் நடத்த
 தொடங்கியுள்ளனர். இவர்களிடம் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளும்
 உள்ளதால், சினாய் பகுதி எல்லையின் மறுபக்கத்தில் உள்ள இஸ்ரேலும் அலர்ட் 
ஆகியுள்ளது.

இந்த தாலிபன்  ஆதரவு இயக்கத்தினர் கடந்த ஆண்டு (ராணுவ புரட்சி 
ஏற்படும் முன், மொஹமெட் மோர்ஸி ஜனாதிபதியாக இருந்தபோது)
 ஒருதடவை சினாய் பகுதியில் இருந்து எல்லை ஊடாக இஸ்ரேல்மீது 
தாக்குதல் தொடுக்க முயன்றனர்.

சரியாக சொல்வதானால், 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி நடந்தது அந்த
 தாக்குதல்.தாலிபன்  ஆதரவு இயக்கத்தினர், சினாய் பகுதியில் இருந்த
 ராஃபா ராணுவ முகாம்மீது தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் 16
 எகிப்திய கமாண்டோ வீரர்களை கொன்ற இவர்கள், ராணுவ முகாமில் இருந்த
 கவச வாகனங்கள், ராக்கெட்டுக்கள் மற்றும் கனரக ஆயுதங்களை கைப்பற்றினர்.
அதன்பின், இஸ்ரேல் எல்லையை நோக்கி செல்ல தொடங்கினர். செல்லும்போதே,
இஸ்ரேல்மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்த தொடங்கினர்.

இஸ்ரேல் திருப்பி தாக்கியதில், இவர்களது கவச வாகனங்கள் அழிக்கப்பட்டன.
 அப்படியிருந்தும் ஒரேயொரு கவசவாகனம் தப்பித்துக்கொண்டு இஸ்ரேலிய 
எல்லையை சென்றடைந்தது. இறுதியில் இஸ்ரேலிய ஹெலிகாப்டர் ஒன்று 
வந்து குண்டுவீசி அந்த கவச வாகனத்தை அழித்தது.

அதன்பின், இந்த தாலிபன்  ஆதரவு அமைப்பு திடீரென அமைதியாகிவிட்டது.
இப்போது, எகிப்திய ஜனாதிபதி மொஹமெட் மோர்ஸி ராணுவப் புரட்சியால்
 வெளியேற்றப்பட்டு, ராணுவ ஆட்சி நடக்கும்போது, ராணுவத்துக்கு எதிரான
 தாக்குதல்களில் குதித்துள்ளது இந்த இயக்கம்.

அதற்கும் ஒரு பலமான காரணம் உண்டு. அதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
 மொஹமெட் மோர்ஸி எகிப்திய ஜனாதிபதியாக இருந்தபோது, உளவுப் பிரிவின்
 தலைவராக இருந்தவர், ஜெனரல் முராட் மவாஃபி.இவர் வேறு யாருமல்ல, 
டாக்டர் ராட்ஸி மவாஃபியின் ஒன்றுவிட்ட சகோதரர்.

இந்த விவகாரங்கள் எல்லாமே, வெளியே தெரியவராமல் ‘எகிப்து அரசு
 ரகசியங்களாக’ இருந்துவந்தன. அதன்பின் அரசு கவிழ்ந்து, ராணுவத்தின்
 கைகளில் அதிகாரம் வந்துள்ள நிலையில், ராணுவத்தை எதிர்த்து தாலிபன்  
ஆதரவு இயக்கம் தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில், எகிப்திய ராணுவமே
 இந்த ரகசியங்களை கசிய விட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு – இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்துக்கு – சினாய் பகுதியில்
 தலைமை தாங்குவது டாக்டர் ராட்ஸி மவாஃபிதான் என்ற விஷயம் ஏற்கனவே
 தெரியுமா என்பது சரியாக தெரியவில்லை.ஒருவேளை தெரிந்திருந்தால், 
எப்படியாவது டாக்டரை ‘தூக்குவதற்கு’ஏற்பாடுகள் செய்திருப்பார்கள். 
ஆனால், அப்படியான முயற்சிகள் ஏதும் நடந்ததாக தெரியவில்லை.

எப்படியோ, இப்போது இந்த விவகாரம் தெரியவந்ததில், சினாய் பகுதியில்
 இஸ்ரேலும் ஒரு கண் வைக்கப் போகிறது. ஏற்கனவே எகிப்திய ராணுவத்துக்கு 
இஸ்ரேல் சில உதவிகளை ஓசைப்படாமல் செய்ததாக சொல்கிறார்கள்.

இனி, தாலிபன்  ஆதரவு அமைப்பு மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல், எகிப்திய
 ராணுவத்துக்கு மேலதிக உதவிகளை செய்யலாம். சந்தடி சாக்கில் டாக்டர் 
மீதும் தாக்குதல் நடக்கலாம்.

மற்றொரு பக்கத்தில், டாக்டர் ராட்ஸி மவாஃபி தலைமையிலான இயக்கம்
 ஏற்கனவே ஒரு தடவை இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்த முயன்றது. இப்போது
 மீண்டும் அந்த முயற்சியில் ஈடுபடலாம். மொத்தத்தில், சினாய் பகுதியில்
 போர்க்களம் உக்கிரமாக போகிறது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: