Facebook Twitter RSS

களமிறங்க தயாராகும் இஹ்வான்கள் !

களமிறங்க தயாராகும் இஹ்வான்கள் !! - “இஸ்லாத்திற்கும் மதச்சார்பின்மைக்கும் இடையிலான பலப்பரீட்சை களமாகும் எகிப்து”

Heating Cairo, the Muslim Brotherhood called for a national demonstration to support Mursi

கிப்தின்  “இஸ்லாமிய தேசிய முன்னணி” நாடு தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்திற்கு அவசரமாக அழைப்பு விடுத்துள்ளது. தலைநகர் Cairo விலும் Giza விலும் இந்த ஆர்ப்பாட்ட பேரணியை நடாத்தி முடிக்க அவர்கள் ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளார்கள். எகிப்திய அதிபர் முர்ஷிக்கு ஆதரவாக இந்த பேரணி நடைபெறவுள்ளது. அண்மைய நாட்களில் அரசிற்கு எதிராக மதச்சார்பற்றவர்கள், முதலாளித்துவாதிகள், தாராளகொள்கைவாதிகள், ஷியாக்கள், இஸ்லாமிய எதிர்புண்ர்வு கொண்ட மேற்கத்தைய நாகரீத்தினை ஆகர்ஷிப்பவர்கள், இஸ்லாமிய அரசை விரும்பாத சடவாத சிந்தனை கொண்ட இராணுவ ஆதரவாளர்கள் என பல தரப்பட்டவர்களும் ஒன்றினைந்து அலெக்ஸாண்டிரியாவில் ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தை நடாத்தியிருந்தனர். அந்த ஆர்ப்பாட்டம் மெல்ல அரசிற்கு எதிரான கலவரமாக மாறியது. அது தலைநகர் கெய்ரோ வரைக்கும் தனது பாதங்களை பதித்துள்ளது. இதற்கெதிராகவே இந்த பேரணிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


நாம் முன்பு கைபர் தளத்தில் “இஹ்வானிய அரசின் பின் பதுங்கியுள்ள இராணுவ மூளைகள்” எனும் தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தோம். அதில் கோடிகாட்டிய எதிர்வு கூறல்களிற்கு ஏதுவாக இப்போது நிலைமைகள் உருவாகியுள்ளன.

இஸ்லாமியவாதிகளிற்கும் (இஹ்வான்களிற்கும்) சடவாத சிந்தனை கொண்ட மதச்சார்பற்றவர்களிற்கும் இடையிலான போராட்டமே அங்கு உருவாகியுள்ளது. முர்ஷியின் அரசை கவிழ்ப்பதன் ஊடாக எகிப்தில் இராணுவ ஆட்சியை உருவாக்கும் பெரிய ஒரு திட்டத்தின் முதற்கட்ட செயற்பாடுகளாகவே இவையமைந்துள்ளன. அதற்கு ஏற்றாற் போல இப்போது எகிப்திய இராணுவம் 48 மணி நேரத்தினுள் இருதரப்பையும் சமரசத்திற்கு வருமாறும் இல்லாவிட்டால் இராணுவம் ஆட்சியை பாரமெடுக்கும் நிலை உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பாதுகாப்பமைச்சர் General AbdelFattah al-Sissi இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஆனால் அல்-இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினர் வரும் திங்கட்கிழமை எகிப்திய பல்கலைக்கழகத்தில் இருந்து தங்கள் அடையாள ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை ஆரம்பிப்பதில் உறுதியாக உள்ளனர். 

இஹ்வான்கள் எகிப்திய அரசிற்கு எதிரான வன்முறையில் இயங்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை தாங்கள் முகம் கொள்ள தயாராக உள்ளதாக அறிவித்துள்ளனர். எகிப்திய இராணுவத்ததை ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதித்தால் அது இன்னொரு இராணுவ புரட்சிக்கு வித்திடும் என இஹ்வான்கள் கருதுகின்றனர். 

எகிப்தில் இதுவரை நடந்த கலவரங்களில் 18 இற்கும் மேற்பட்டவர்கள் மரணித்துள்ளனர். அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் நேரடியாகவே இறங்கியுள்ளனர். இவர்களிற்கு பின்னால் சர்வதேச அரசியல் சக்திகள் உள்ளன என்பது வெளிப்படை.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: