Facebook Twitter RSS

'தாகூத்தியத்' சொல்லும் அரசியலில் முஸ்லிமின் வாழ்வு !

'தாகூத்தியத்' சொல்லும் அரசியலில் முஸ்லிமின் வாழ்வு !



ரு சித்தாந்தம் இன்னொரு சித்தாந்த ஆதிக்க தயவில் வாழ்வது
 சாத்தியமற்றது அப்படி வாழ்வதாக இருந்தாலும் அது தனது இயல்பான
 உயிரோட்டத்தை இழந்தே இருக்கும் . இஸ்லாம் ஒரு தனித்துவமான
 சித்தாந்தம் என்றால் குப்ரிய மேலாதிக்கத்தின் கீழ் அதன் இயல்பான
 வடிவத்தில் நடைமுறை காண முடியாது . 

       ஆதிக்கத்தில் இருக்கும் குப்ரிய சித்தாந்தம் இஸ்லாம் தனது நடைமுறை 
ஆதிக்கத்தை இழக்கும் வகையில் கடுமையான விட்டுக் கொடுப்புகளையும் ,
மாற்றங்களையும் ,சிதைவுகளையும் இஸ்லாத்தின் மீது எதிர்பார்க்கும் ,
அத்தோடு நிர்ப்பந்திக்கும் அதனூடாக அதன் சித்தாந்த மற்றும் வாழ்வியலின்
 மேலாதிக்கத்தை ஒருபக்கம் பேணிக் கொள்வதோடு ஒரு தக்கன பிழைத்தல்
 தொடர்பான அச்சத்தையும் இஸ்லாத்தின் மீது ஏற்படுத்தி விடும் .

            இந்த ஆபத்தான கோணத்தின் முன் முஸ்லீம்கள் தரப்பு இஸ்லாத்திற்கு
 வேலி போட உருவாக்கிய நியாயங்களே .'இஸ்லாத்தின் நெகிழ்ந்து கொடுக்கும் 
தன்மை' என்ற கருத்தியலாகும் .மேலும் திட்டவட்டமான விடயங்களிலும் 
'இஜ்திஹாத்' செய்யும் மனோபாவமும் ஆகும் .உண்மையில் இது ஒரு தெளிவான
 சரணடைவு அரசியலாகும் .
சூழ்நிலையை புரிந்து கொள்ளாதவரை முஸ்லீம்களாகிய எமது போராட்டங்கள்
 எதிரியின் வெற்றியை நிச்சயப் படுத்தும் ஒரு தவறான நடவடிக்கையாகும் .
 இன்னும் சற்று தெளிவாக சொன்னால் அது பின்வருமாறு இருக்கும் .

               அதாவது கடுமையான வீட்டுக்காவல் போடப்பட்ட ஒரு மனிதனை 
ஒத்த சமூக வாழ்வே 'செக்கியூலரிச அரசியல் ' முஸ்லீம் உம்மாவின் மீது 
சுமத்தியுள்ளது . இங்கு முஸ்லீம் பெயரளவில் முஸ்லிமாக வாழ்வதில் தடை
 இருக்காது ,மேலும் இறைவனை வழிபாடும் நியாயத்தில் கூட சிலபோது 
நிர்ப்பந்தங்களை அவன் சகித்தே ஆகவேண்டும் .

        அதாவது 'கடவளுக்கு உரியதை கடவுளுக்கும் அரசனுக்குரியதை 
அரசனுக்கும் கொடு ' எனும் அதிகார எல்லை கூட இஸ்லாம்  விடயத்தில் 
சிம்பிளாக மீறப்பட 'தாகூத்திய 'சர்வதிகாரம் தனது பூட்சுகளால் முஸ்லிமின்கழுத்தை மிதிப்பதும் தவிர்க்க முடியாதது . எனவே முஸ்லீம்களாகிய 
நாம்  இன்றைய மக்கா  தொடங்கி இலங்கையின்  மஹியங்கனை வரை ஒரே 
வாழ்வை சில பெயரளவு மாற்றங்களோடு சந்திப்பதும் தவிர்க்க முடியாதது .
               இப்போது முஸ்லீம்களாகிய எமது தேவை பலமான ஒரு அரசியல்
 இராஜ தந்திர இஸ்லாமிய பின் புலம் அது ஒரே 'கலீபாவை ' கொண்ட 'கிலாபா'
 அரசு தவிர்ந்த வேறு ஒன்றாக நிச்சயமாக இருக்க முடியாது . 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: