Facebook Twitter RSS

பாலஸ்த்தீன குழந்தைகளையும் குறி வைக்கும் இஸ்ரேல்

பலஸ்தீனர்களினதும் இஸ்ரேலியர்களினதும் “புதிய தாக்குதல் ஒழுங்குகள்” - உன்னால் முடியும் தம்பி!!


Asaf Hikmat. ஒரு பலஸ்தீன பையன் . மேற்கு கரையின் பதின்ம வயதினன்.
 வரவிருக்கும் தவணைக்கான சோதனைக்காக தன்னை கடுமையாக
 தயார்படுத்திகொள்ளும் மாணவன். ஒரு நாள் காலையில் அவன்
 அதிர்ந்து போனான். காரணம் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் அவன்
 முகத்தை போட்டு ஒட்டிய சுவரொட்டி  போஸ்டரினால். “உன்னை 
கண்டால் நாம் கைது செய்வோம்” (IDF wanted poster) என மிரட்டியிருந்தது
 இஸ்ரேலிய பாதுகாப்பு படை. இவ்வளவிற்கும் அவன் செய்த குற்றம் தான்
 என்ன?

Asaf-ம் அவனது தோழர்களும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறும்
 “யூத குடியேற்றங்களை மேற்குகரையில் விரிவுபடுத்தல்” என்ற சியோனிஸ
 அரசின் திட்டத்திற்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து
 கொண்டு கோஷம் எழுப்பினர். அவ்வளவு தான். அந்த ஆர்ப்பாட்டத்தை
 யூத இராணுவம் ரப்பர் கோடட் குண்டுகளாலும், டியர் கேஸ்களினாலும் அடக்கியது. 




மறு தினம் காலையில் இஸ்ரேயில் இராணுவம் சுவரொட்டிகளை 
ஒட்டியுள்ளது. அதில் பல பலஸ்தீன சிறுவர்களின் படங்கள் 
பிரசுரிக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு சுவரொட்டி அஸாப் பற்றி பேசியது.
 ‘We are the army. Be careful. We will catch you if we see you.’ இந்த 
வார்த்தைகள் தடித்த போல்ட் செய்யப்பட்ட எழுத்துக்களில் பலஸ்தீன 
சிறுவர்களை பயமுறுத்தப் பார்த்தது.

RT செய்தி ஏஜென்சியின் மேற்குகரைக்கான செய்தியாளர் Paula Slier. 
இவர் Asaf ஐ பேட்டி கண்டுள்ளார். அதில் அவன் சொல்கிறான், “அவர்கள்
 எங்களை பயமுறுத்தி பார்க்கிறார்கள். ஆனால் நாங்கள் பயப்பட போவதில்லை.
 அவர்கள் எங்களை கண்டால் பிடித்திழுத்து தங்கள் கவச வாகனங்களில்
 போட்டு செல்வர். அநேகமாக எனது வீட்டின் கதவை அதிகாலையில் 
தட்டி என் கண்களையும் கைகளையும் கட்டி இழுத்து சென்று இஸ்ரேலிய
 சிறையில் அடைப்பர். அவர்களின் நீதி மன்றம் என்னை “பலஸ்தீன
 பயங்கரவாதி” என்று முத்திரை குத்தும். நடக்கப்போவது இதுதான். 
எனக்கு தெரியும்” 

Karnei Shomron settlement-ல் வசிக்கும் Herzl Ben Ari இது பற்றி தனது 
கருத்தை வெளியிடுகையில் “அந்த பலஸ்தீன பையன்கள் பயங்கரமான
 பயங்கரவாதிகள். ஒவ்வொரு நாளும் நான் காரில் ஏறும் போது பயமாக
 இருக்கிறது. அவர்கள் எங்கள் கார் கண்ணாடிகளை குறிவைத்து கல்லை
 வீசுகிறார்கள். அது நொருங்கி போகிறது. எங்களிற்கு இஸ்ரேலிய அரசு 
வின்ட் ஸ்கிறீன்களை தரப்போவதில்லை. காரில் இருக்கும் சிறு குழந்தைகளின்,
 முதியோரின் கதி தான் என்ன?. அதனாலேயே சொல்கிறேன் பலஸ்தீன
 சிறுவர்கள் பயங்கரவாதிகள் என்று”

இஸ்ரேலிய தகவல்களின்படி கார்களை இலக்கு வைத்து கல் எறியும் 
இந்த புதிய அனுகுமுறை கடந்த மாதங்களுடன் ஒப்பிடும் போது 110% 
மாக அதிகரித்துள்ளது என்கின்றன. 

யூத சட்டவிரோ செட்டில்மென்ட்களின் மூலாதாரமே சொகுசான வாழ்க்கை. 
இஸ்ரேலிய அரசின் கொடுப்பனவுகள். வேலை செய்யாமல் காரில் சுற்றலாம்.
 அதற்காகவே கிழக்கைரோப்பாவில் இருந்து வந்து தங்களை இஸ்ரேலிய 
யூதர்கள் என பிரகடனம் செய்கின்றனர். இப்போது அந்த வாழ்க்கைக்கும் 
ஆப்பென்றால் என்னதான் செய்வது. 

Mordechai Yogev, Parliamentarian & Member Of Knesset Foreign Affairs And 
Defence Committee. இவர் இது பற்றி கூறுகையில் “ இது பயங்கரமான நிலை.
 ஹமாஸின் இந்திபாதாவை விடவும் ஆபத்தானது. “இஸ்ரேலில் எமக்கு
 பாதுகாப்பு இல்லை” என்ற எண்ணம் குடியேற்றவாசிகளிடம் வந்து விட்டால்
 அகண்ட இஸ்ரேலிய தேசத்தை எம்மால் உருவாக்க முடியாமல் போய்விடும்.
இறுதியில் யூதர்களை விட துப்பாக்கிகளே அதிகமாக எஞ்சி நிற்கும்
 இஸ்ரேலில்” என அங்கலாய்க்கிறார். 

இப்போது இந்த சிறுவர்களை கட்டுப்படுத்த இஸ்ரேலிய பாதுகாப்பு படை
 சிறப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. யூத ஆக்கிரமிப்பாளர்களின் கார் 
கண்ணாடிகள் உடையாமல் இருக்க “சுவரொட்டி  போஸ்டரில் அவர்களின்
 முகங்களை போட்டு” நள்ளிரவில் கைது செய்யும் உளவியல் யுக்தி. இதனால்
 சிறுவர்களை பயமுறுத்தலாம் என நினைக்கிறது யூத தேசம்.

வீதியில் சுவரொட்டிகள். தேடுதல் வேட்டையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு
 இராணுவம். பாடசாலை செல்ல முடியாது. வீட்டில் இருந்தும் படிக்க முடியாது. 
அங்கும் இராணுவம் தேடி வரும். அப்படியானால் இவர்களின் ஒரே தெரிவு 
பலஸ்தீன விடுதலைக்காக போராடும் ஏதாவது ஒரு இராணுவ அமைப்பை
 தேர்ந்து கொள்வதே. பேனா கொண்டு நீல மையால் எழுதாமல் துப்பாக்கி 
கொண்டு சிவப்பு இரத்தத்தால் எழுத....

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: