Facebook Twitter RSS

அமெரிக்கா இராணுவமயமாகிறது !!



மெரிக்க வாழ்க்கையில் பழகிப் போன ஒரு அம்சமாக மாறிவிட்டிருக்கின்
நகர்ப்புற போர்ப் பயிற்சி” ஒத்திகை நடவடிக்கை வரிசைகளில் சமீபத்தியதாக
இந்த வாரத்தில் சிக்காகோவில் பிளாக்ஹாக் ஹெலிகாப்டர்கள்நிறுத்தப்பட்டன.
மற்றெங்கிலும் போலவேஇந்த ஒத்திகையும் மக்களை திகைக்கச் செய்யும்வகையில் 
அறிவிப்பின்றி திடீரென்றே முளைத்ததுஇரகசியமாகநடத்தப்பட்ட இந்த 
ஒத்திகைகளின் - உள்ளூர் போலிஸ் முகமைகள் மற்றும்தேர்ந்தெடுக்கப்பட்ட 
அதிகாரிகள்ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக்கட்சியினர் ஆகிய 
அனைவரின் ஒத்துழைப்புடன் தான் இது நடந்திருக்கமுடியும் என்பது 
வெளிப்படை - நோக்கம் “நகர்ப்புற பகுதிகளிலான இராணுவநடவடிக்கைகள்” 
என்று பென்டகனின் சித்தாந்தம் விவரிக்கின்ற ஒன்றில்அமெரிக்க துருப்புகள் 
அனுபவம் பெறும் பொருட்டு தான் என்பதில்சந்தேகமில்லை.
இத்தகைய நடவடிக்கைகள் எல்லாம் சந்தேகத்திற்கிடமின்றி அமெரிக்க
இராணுவத்திற்கு வெகு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.ஆப்கானிஸ்தானிலும் 
ஈராக்கிலும் நாம் கண்ணுற்றதைப் போலஓரளவுக்குசக்தி குறைந்த 
நாடுகளை ஊடுருவதும் ஆக்கிரமிப்பதும் பின் அங்கிருக்கும்எதிர்ப்பு 
காட்டும் மக்களை பெரும்பாலும் நகர்ப்புற மையங்களில் வீடுவீடாகச்
 சென்று சண்டையிடுவதும் தான் கடந்த தசாப்தத்தில் அதன் பிரதானஇலக்காக 
இருந்திருக்கிறது.

     தென்மத்திய இண்டியானா பகுதியில் இராணுவம் 1,000 ஏக்கர் 
பரப்பில்நகர்ப்புற பயிற்சி மையம் ஒன்றை இயக்குகிறது. வீடுகள், 
பள்ளிக்கூடங்கள்,மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகள் 
போன்றவற்றின் மாதிரிகளாகவடிவமைக்கப்பட்டுள்ள 1500“பயிற்சி 
கட்டமைப்புகள் இந்த மையத்தில்இருப்பதாக பெருமையடிக்கப்படுகிறது.



வெளிநாட்டு சூழல்கள் மற்றும்உள்நாட்டு சூழல்கள் இரண்டு வகை 
மாதிரிகளையும் இங்கு கச்சிதமாகஉருவாக்க முடியும் ” என்று 
இம்மையத்தின் வலைத் தளம் கூறுகிறது.
இந்த பரந்து விரிந்த பயிற்சி மையத்தின் மாதிரிக் கட்டிட 
அமைப்புகளின்மூலம் சாதிக்க முடியாத எது ஒன்றை சிக்காகோவின் 
குடியிருப்புகட்டிடங்களின் மீது தாழ்வாகப் பறக்கிற பிளாக்ஹாக் 
ஹெலிகாப்டர்களும்அல்லது செயிண்ட் லூயிஸ் வீதிகள் வழியே 
பவனி வரும் ஆயுதமேந்தியஇராணுவ வாகன வரிசைகளும் 
சாதிக்கவிருக்கின்றனசென்ற ஆண்டில்மட்டும்லாஸ் ஏஞ்சல்ஸ்
சிக்காகோமியாமிடாம்பாசெயிண்ட் லூயிஸ்,மினபோலிஸ்
வேர்ஜினியாவில் உள்ள கிரீட்ஸ் பகுதிகளில் உட்படகுறைந்தபட்சம் 
ஏழு இத்தகைய ஒத்திகைகள் நடத்தப்பட்டன.
அமெரிக்க நகரங்களில் துருப்புகள் செயல்படுவதை இயல்பு நடவடிக்கைபோல் 
ஆக்க வேண்டும்அத்துடன் உள்நாட்டிற்குள் அமெரிக்க 
இராணுவவலிமை பயன்படுத்தப்படுவதை அமெரிக்க மக்கள் இயல்பாக 
எடுத்துக்கொள்ளப் பழக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாக இருக்க
முடியும்என்பது வெளிப்படை.
   இத்தகைய இராணுவ நிலைநிறுத்தல்களுக்கான தயாரிப்புகள்
 ஏற்கனவேமிகவும் முன்னேறிய மட்டங்களுக்குச் சென்று விட்டன 
கடந்த தசாப்தகாலத்தில்,“பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய போரை” 
தொடுப்பதானபேரில்அடுத்தடுத்த ஒடுக்குமுறை சட்டங்களை வாஷிங்டன் 
செயலாக்கிஇருக்கிறதுஅத்துடன் தாயகப் பாதுகாப்புத் துறையின் கீழ் 
அரசக்கட்டுப்பாட்டின் ஒரு புதிய பரந்த அதிகாரத்துவத்தையும் அது
உருவாக்கியிருக்கிறதுஒபாமா நிர்வாகத்தின் கீழ்அமெரிக்க மக்களின்
மீதான மின்னணுமுறை வேவுபார்ப்பு மிகப் பிரம்மாண்டமாய் விரிந்துசெல்கின்ற 
அதே நேரத்தில், அரச எதிரிகளை காலவரையற்ற இராணுவக்காவலுக்குள் 
தள்ளுவதற்கோ அல்லது அவர்களை ஆளில்லா விமானத்தாக்குதல்கள் 
மூலமாக அமெரிக்க மண்ணிலேயே கூட படுகொலைசெய்வதற்கோ 
வெள்ளைமாளிகை அதிகாரம் கோருகிறது.
இந்த நிகழ்முறையின் பகுதியாகவே அமெரிக்க இராணுவ அதிகாரத்தின்
இடைவிடாத வளர்ச்சியும் உள்நாட்டு விவகாரங்களிலும் கூட அதன்தலையீடு 
அதிகரிப்பும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது
2002 இல் அமெரிக்கவடக்குப் படைத்தலைமை உருவாக்கப்பட்டதானது 
முதன்முறையாகஅமெரிக்காவிற்குள்ளேயேயான நடவடிக்கைகளுக்கு ஒரு 
இராணுவத்தலைமையை அர்ப்பணித்திருக்கிறது.

உள்நாட்டிலான பிரச்சினைகளுக்கான பதிலிறுப்புகள் உட்பட குடிமை 
சட்டஅமலாக்க அதிகாரிகளுக்கு “உதவுகின்ற விதமாக அமெரிக்க 
மண்ணில்இயங்குகின்ற அமெரிக்க இராணுவப் படைகளுக்கான புதிய 
நடத்தை விதிகள்அமலுக்கு வருவதை சென்ற மே மாதத்தில் தான் 
பென்டகன் அறிவித்தது.
   இந்த ஆவணம் “அவசரநிலை அதிகாரம்” என்ற தலைப்பிலான ஒரு 
பிரிவின்கீழ் மிகப் பேரளவான வானளாவிய இராணுவ அதிகாரங்களை 
அறிவிக்கிறதுஜனாதிபதியிடம் முன்கூட்டிய அனுமதி பெறுவது 
சாத்தியமில்லாத,அரசியல்சட்டப்படியான உள்ளூர் அதிகாரிகள் 
நிலைமையைக்கட்டுப்படுத்துவது இயலாத அசாதாரணமான அவசரகால 
சூழ்நிலைகளில்,எதிர்பாராத வகையில் பெரிய அளவில் நடக்கக் கூடிய 
மக்கள்அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான 
நடவடிக்கைகளில்தற்காலிகமாக இறங்குவதற்கு ஒரு கூட்டரசின் 
இராணுவத் தளபதிக்குஇருக்கும் அதிகாரத்தை இந்த ஆவணம் திட்டவட்டமாக 
தெரிவிக்கிறது.வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பென்டகன் 
கூட்டமானது இராணுவச்சட்டத்தை வேண்டியபோது கையிலெடுப்பதற்கான 
அதிகாரத்திற்குஉரிமைகோருகிறது.
   இந்த அதிகாரங்கள் எல்லாம் ஏதோ அமெரிக்க மக்களை பயங்கரவாதத்தில்
இருந்து காப்பாற்றுவதற்கோ அல்லது சில கற்பனையான அவசரகாலநிலைகளை 
எதிர்கொள்வதற்காகவோ எல்லாம் நிலைநிறுத்தப்படவில்லை.அபாயம் எங்கே 
இருக்கிறது என்கிற விடயத்தை அமெரிக்க இராணுவத்தலைமை ரொம்பவே 
நனவுடன் புரிந்து வைத்திருக்கிறது.
   ஃபோர்ட் லீவன்வொர்த் தளபதிகள் மற்றும் படை ஊழியர்களுக்கான
கல்லூரியில் மூத்த விரிவுரையாளர் மற்றும் இராணுவத்தின் 
முன்னேறியஇராணுவ ஆய்வுகளுக்கான பள்ளியின் முன்னாள் இயக்குநரின் 
சமீபத்தியஒரு கட்டுரையில்இராணுவம் தலையீடு செய்யத்தக்க ஒரு 
சூழ்நிலைகுறித்து கூறியிருந்தார்.
     “இருபத்தொன்றாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தைய பெருமந்
தநிலையானதுஎவரொருவரும் கணித்திருந்ததை விடவும் நீண்டு கொண்டே
செல்கிறது

2012 இல் வெள்ளை மாளிகை மற்றும் நாடாளுமன்றத்தில் ஒரு மாற்றம்
ஏற்பட்டிருப்பதன் பின்னர்ஆளும் கட்சியானது பொருளாதாரஊக்குவிப்புக்கோ 
அல்லது நிவாரணத்திற்கென்றோ ஒதுக்கப்பட்டிருந்தஅத்தனை நிதிகளையும் 
துண்டித்து வருகிறது. தசாப்தத்தின் பாதிக்கும்மேற்பட்ட காலத்திற்கு, 1990களில் ஜப்பான் இருந்ததைப் போல அமெரிக்கப்பொருளாதாரமானது 
தேங்கி விட்டிருக்கிறது.
 2016க்குள்ளாகபொருளாதாரம்மீண்டெழும் அறிகுறிகளைக் காட்டினாலும் 
கூடநடுத்தர வர்க்கம் மற்றும்கீழ் நடுத்தர வர்க்கங்கள் வேலையில் வளர்ச்சி 
என்பதையோ அல்லது ஊதியஉயர்வுகள் என்பதையோ இனிமேல் தான் காண 
வேண்டியிருக்கிறது.வேலைவாய்ப்பின்மையின் அளவு இரட்டை இலக்கங்களுக்கு 
நெருக்கமாகவேவட்டமிட்டுக் கொண்டிருக்கிறது...”
வேறு வார்த்தைகளில் சொல்வதானால்அமெரிக்காவில் இன்று நிலவக்கூடிய 
சூழலுக்கு அதிக வித்தியாசமில்லாத மேற்கூறிய நிலைமைகள்இராணுவ 
வலிமையால் மட்டுமே தணிக்கப்படத்தக்க சமூக எழுச்சிகளைஉருவாக்குகின்றன 
என்பதை பென்டகன் காண்கிறது.
குடிமைச் சட்ட அமலாக்கத்தில் இராணுவத்தின் பயன்பாட்டைத் தடைசெய்கிற 
பல நூற்றாண்டு கால அரசியல் கோட்பாடுகள் தான் திரைமறைவில்ஏறக்குறைய 
எந்த ஊடகமும் செய்தி வெளியிடாமல் அதிகமான பொதுவிவாதங்களும் இன்றி 
இல்லாதொழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.சுதந்திரப் பிரகடனத்திலேயே கூட
ஜோர்ஜ் மன்னருக்கு எதிரான புரட்சியைநியாயப்படுத்தும் குற்றச்சாட்டில், ”அவர் மக்கள் அதிகாரத்தை விடஇராணுவம் சுயேச்சையானதாகவும் மேலதிகாரம் 
படைத்ததாகவும் இருக்கவழிவகுத்து பாதிப்பு ஏற்படுத்தினார்” என்ற குற்றச்சாட்டும்
இடம்பெற்றிருந்தது.

இராணுவத்தின் உள்நாட்டு அதிகாரம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றஅதே
வேளையில் குடிமை போலிசாக கருதப்பட்டு வந்ததும்இராணுவமயமாக்கப்பட்டு 
வருகிறதுசென்ற வார இறுதியில் “போர்த்திறபோலிசின் எழுச்சி”  (“The Rise of the WarriorCop”) என்ற தலைப்பில்வோல்ஸ்டிரீட் ஜேர்னலில் வெளியான ஒரு 
கட்டுரையில் இந்த நிகழ்முறைவிவரிக்கப்பட்டுள்ளது:
இராணுவ ஆவேசத்தினாலும் கத்திமுனைகள் மற்றும் எம்-16 துப்பாக்கிகள்
தொடங்கி ஆயுதமேந்திய வீரர்கள் சுமக்கும் வாகனங்கள் வரைஇராணுவ-பாணி சாதனங்கள் கிடைப்பதாலும் அமெரிக்க போலிஸ் படைகள்பல 
சமயங்களில் முன்னதாக போர்க்களத்திற்கென இருந்த ஒருமனோநிலையை 
ஏற்றுக் கொண்டிருக்கின்றனபோதை மருந்துகள் மீதானபோரும்மிக சமீபத்தில், 9/11க்குப் பிந்தைய பயங்கரவாத தடுப்புமுயற்சிகளும் அமெரிக்கக் காட்சியில் 
போர்த்திற போலிஸ் (warrior cop) என்றஒரு புதிய அவதாரத்தை 
உருவாக்கியிருக்கின்றன

 உடலெங்கும் கன ஆயுதம்தரித்திருக்கும் இவர்குறி வைக்கப்படும் 
தவறிழைப்போரையும் பழகியஅமெரிக்க சுதந்திரங்களுக்கு பெருகும் 
அச்சுறுத்தலையும் மிகக் கடுமையாகக்கையாளத் தயாராய் இருப்பார்.”
தாயகப் பாதுகாப்புத் துறையில் இருந்து சுமார் 35 பில்லியன் டாலர்அளவுக்கான 
நிதி உதவியுடன் ஏறக்குறைய அமெரிக்காவின் ஒவ்வொருநகரிலும் சிறப்பு 
ஆயுதங்கள் மற்றும் உத்திகள் பிரிவுகள் விரிந்துபரந்துள்ளதை இக்கட்டுரை 
விவரிக்கிறது.”இதில் பெரும்பான்மையான பணம்ஆயுதமேந்திய வீரர்களைச் 
சுமக்கும் பீரங்கி வாகனங்களை வாங்குவதற்குபயன்படுத்தப்படுகிறது.”

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: