Facebook Twitter RSS

அமெரிக்கா தனது அதிகாரத்தை எகிப்தில் ஆழப்படுத்துகிறதா?


அமெரிக்கா தனது அதிகாரத்தை எகிப்தில் ஆழப்படுத்துகிறதா?



மெரிக்க வெளிவிவகார துணைச் செயலர் வில்லியம் பேர்ன்ஸ் எகிப்தின் 
இராணுவ ஆதரவைக் கொண்ட புதிய அரசாங்கத்தின் தலைவர்களுடன் இரண்டு 
நாட்கள் பேச்சுக்களை நடத்த கெய்ரோ வந்தார்இதற்கிடையே அமெரிக்க
 கடற்படையானது செங் கடல் கடலோர பகுதிகளுக்கு கப்பல்களையும்
 மரைன்களையும் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இடைக்கால ஜனாதிபதி ஆட்லி மன்சூர் மற்றும் பிரதம மந்திரி ஹசிம்
 அல்-பெப்லவி ஆகியோரை பேர்ன்ஸ் சந்தித்தார். இவருடைய
 வருகையின் போது முஸ்லிம் சகோதரத்துவம் (MB) மற்றும்
 அகற்றப்பட்ட ஜனாதிபதி முகம்மது முர்சி ஆகியோரின் ஆதரவாளர்களின்
 பரந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன; “இராணுவ ஆட்சி வீழ்க”;
 “சர்வாதிகாரி வீழ்க”; “முர்சிதான் ஜனாதிபதி, வேறு எவரும்
 இல்லை” என்னும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கடந்த வியாழனன்றுஇரண்டு அமெரிக்க கடற்படைக் கப்பல்கள், மத்திய
 கிழக்கில் ரோந்து புரிபவை, எகிப்திய கடலோரத்திற்கு அருகே
 சமீப நாட்களில் நகர்ந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. மரைன்
 பிரிவுத் தளபதி ஜேனரல் ஜேம்ஸ் அமோஸ் சர்வதேச
 கற்கை மற்றும் மூலோபாயத்திற்கான மையத்தின் சிந்தனைக்
 குழுவுடன் நடத்திய உரையை மேற்கோளிட்டுள்ளது.

“எகிப்து ஒரு நெருக்கடியில் இப்பொழுது உள்ளது. “அப்படி
 இருக்கும்போது எமது தேசத்தின் மூத்த தலைமை கடமைப்பட்டிருப்பது
 சில விருப்பத் தேர்வுகளுக்காகும்” என்றார் அமோஸ்.

USS San Antonio என்னும் தரையிலும் கடலிலும் செல்லும்
 ஒரு தரைப்படை போக்குவரத்துக் கப்பல், USS Kearsarge என்னும் தரை
கடல் இரண்டிலும் தாக்குதல் நடத்தும் கப்பல்கள் இரண்டும்
 செங்கடலிருந்து இன்னும் வடக்கே நகர்த்தப்பட்டுள்ளதாகவும், இது
 ஹெலிகாப்டர்கள் பிற கருவிகளை நகர்த்துவதை எளிதாக்கும் என்றார்
 அமோஸ். “ஏன்? ஏனெனில் என்ன நடக்க உள்ளது என்பது பற்றி
 எங்களுக்குத் தெரியாது” என்றார் அவர். 

ஞாயிறன்று மொசாட்டிற்கு நெருக்கமான DEBKAfile என்னும் இணைய 
தளம், இப்படி துருப்புக்கள் அனுப்பவிடப்பட்டுள்ளமையானது இஸ்ரேலை
 ஒழுங்குபடுத்தும் நோக்கம் கொண்டது, “கெய்ரோவில் இருக்கும் தளபதிகளுக்கு
 ஒரு தடுப்பாக இருக்கும்” என்று கூறியுள்ளது; “ஜெனரல் அப்தெல்
 பட்டா அல் சிசி மற்றும் அவருடைய தளபதிகள்...MB ஐ துன்புறுத்துவதை
 இன்னும் அதிக அளவிற்குக் கொண்டு சென்றால்,” 2,600 மரைன்களை 
கொண்ட தாக்கும் கப்பல்கள் கடலோரப் பகுதியில் உள்ளன.

அமெரிக்காவிற்கு இருக்கும் உண்மையான கவலைதளபதிகள் அவர்களுடைய 
ஆட்சிக்கு எதிராக இருக்கும் மக்கள் எதிர்ப்பை பெரிய உள்நாட்டுப்
 போராக மாற்றுவதில் வெற்றி அடைந்துவிடக்கூடும் என்பதுதான்—
அவர்கள் இஸ்லாமியவாத எதிர்ப்பாளர்களை ஒடுக்குதல் அல்லது
 நீண்டகால அளவில் தொழிலாள வர்க்கத்தின் மீது அவர்கள் சுமத்த 
இருக்கும் நடவடிக்கைகளினால். ஆனால் இது தளபதிகளுக்கு எதிர்ப்பு 
என்பதை விட ஆதரவு என்பதைத்தான் உட்குறிப்பாகக் கொண்டுள்ளது. 
ஒபாமா நிர்வாகம் உண்மையில் ஜூன் 3 இல் ஆட்சி மாற்றத்தில்
 தோற்றுவிக்கப்பட்டுள்ள ஆட்சியில் செல்வாக்கு பெறுவதைத்தான் 
முக்கிய பங்காக கருதுகிறது—இராஜதந்திர முறையில், நிதிய முறையில்
 மற்றும் இப்பொழுது இராணுவ முறையில்.

பேர்ன்ஸின் உத்தியோகபூர்வ பணியின் நோக்கம் “அனைத்து வன்முறையும்
 நிறுத்தப்பட வேண்டும், அனைத்தையும் கொண்ட ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவில் ஆட்சிக்கு மாற்றம் வேண்டும்” என்பதை 
வலியுறுத்துவது ஆகும். மாற்றுச் சாலை வரைபடத்தை அவர் விவாதித்து
 “விரைவில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு
 மாற்றம் தேவை என்றும் அனைத்து அரசியல் தலைவர்களும் வன்முறை
 தூண்டுதலை தவிர்க்க உடனடியாக செயற்பட வேண்டும்” என்றும் விவாதித்தார்
 என வெளியுறவுச் செயலகம் கூறியுள்ளது.

“நேர்மையான தரகர்” என்று காட்டிக் கொள்வதற்கு வெளியுறவுச் 
செயலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜேன் சாகி ஜேர்மனிய கோரிக்கைகளான 
முர்சி மற்றும் பிற முஸ்லிம் சகோதரத்துவத்திற்கு எதிரான அனைத்து 
“கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும்” என்பதற்கு ஆதரவு கொடுத்துள்ளார். ஆனால் அமெரிக்காவானது ஜூலை 3 நிகழ்வுகளை இன்னமும்
 இராணுவ ஆட்சி மாற்றம் எனக் குறிப்பிட மறுத்து வருகிறது; அதையொட்டி
 அது எகிப்திய இராணுவத்திற்கு 1.1 பில்லியன் டாலர்களை தொடர்ந்து கொடுக்க
 முடியும். பாரிய, பெருகிய ஒடுக்குதல்களுக்கு மத்தியில் இராணுவத்திடம் இது மரியாதையுடன் வலியுறுத்துகிறது. 

ஒரு வாரத்திற்கு முன் இராணுவத் துருப்புக்களுடன் மோதியபின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 240 முர்சி ஆதரவாளர்களுக்கு சிறையில் மூடப்பட்டு
 நடக்கும் வழக்கில் தடுப்புக்காலம் விரிவாக்கப்பட்டுள்ளதை முஸ்லிம்
 சகோதரத்துவத்தின் மூத்த தலைவர் எசம் எல்-எரியன் கூறியுள்ளார்.
 “240 குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஏன் ஒரு ஆதரவு வக்கீல்கூட இல்லை?
 இது சட்டத்தின் ஆட்சிக் கொள்கைகள் அனைத்தையும் தீவிரமாக மீறுவது ஆகும்” என்றும் கேட்டுள்ளார்.

சகோதரத்துவத்தின் மீதான குற்றச்சாட்டுகளை நடத்தும் சமூகச் சக்திகளின் பின்னணியானது விசாரணை நடத்துபவர்கள் முர்சி மற்றும் இன்னும் பிறர்
 2011 ஆண்டு ஹொஸ்னி முபாரக் எழுச்சியின்போது வாடி நாட்ரன் சிறையில் 
இருந்து தப்பியது குறித்து விசாரனைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்னும்
 உண்மைதான்.

அதனுடைய பிராந்திய நட்பு நாடுகளும் வளைகுடா முடியரசுகளின் மூலமும் 
ஆட்சியானது போதுமான நிதி பெறுகிறது என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்துகிறது.

சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள் மற்றும் குவைத் ஆகியவை
 எகிப்திற்கு 12 பில்லியன் டாலர்கள் உதவியை உறுதியளித்துள்ளன; 
சௌதி ஆட்சி 5 பில்லியன் டாலர்கள் அளிக்கிறது. சனிக்கிழமை ஜனாதிபதி 
பாரக் ஒபாமா எகிப்து விவகாரத்தை அப்துல்லா மன்னருடன் விவாதித்தார்.

சதி ஆட்சித் தலைவர் அல்-சிசி தான் அதிகாரத்தை கைப்பற்றியதை பாதுகாப்பது
 குறித்து தன்னம்பிக்கையுடன் உள்ளார்; வெள்ளியன்று முர்சி “நீதித்துறையுடன்,
 செய்தி ஊடகத்துடன், பொலிஸ் மற்றும் மக்கள் கருத்துக்களுடன் முரண்பட்டார்.
 பின் அவர் ஆயுதப் படைகளுடனும் பூசலிட்டார்”இராணுவம் குறித்து
 கருத்துக்கள் கூறுவது “தேசிய கௌரவத்தில் குத்துவதற்குச் சமம்” என்றார்.

அமெரிக்க நலன்களுக்கு ஏற்ப நடந்து கொள்வதற்கு ஒரு முக்கிய காரணியாக,
 இராணுவப் படைகளின் தலைமைக் குழுவின் (SCAF) கீழ், ஒரு சிவிலிய
 முன்னணியாக இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவது இருக்கும்.

முன்னாள் நிதி மந்திரியும் சர்வதேச நிதிய நிறுவனங்களில் உழைத்துள்ள
 தாராளவாத பொருளாதார வல்லுனருமான அல்-பெப்லவியை பிரதம
 மந்திரியாக இடைக்கால ஜனாதிபதி மன்சூர் நியமித்துள்ளார். எல்-பெப்லவி,
போஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்ற மற்றொரு
 தாராளவாத பொருளாதார வல்லுனரான அஹ்மத் கலாலை, தன் நிதி
 மந்திரியாக நியமித்துள்ளார்.

அமெரிக்காவிற்கான ஒரு முன்னாள் தூதரான நபில் பாஹ்மி, புதிய
 வெளியுறவு மந்திரியாவார். ஆட்சிக் குழுவின் அடக்குமுறை அப்பட்டமானதால்,
 சலாபி அல் நூர் கட்சி, இடைக்கால அரசாங்கத்தில் சேர மறுத்துவிட்டது.
 ஆனால் அது ஆட்சிக்கு வெளியே இருந்து ஆதரவைக் கொடுக்கிறது.
 “நாங்கள் சாலை வரைபடத்திற்கு வெளியே உள்ளோம்; ஆனால் அரசியல்
 காட்சிக்கு வெளியே அல்ல” என்று நூரின் துணைத் தலைவர் ஜர்க்கா அல்ஜசிராவிடம் கூறினார்.

சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், பெயரளவிற்கு
 தாராளவாத எதிர்த்தரப்பிற்கு தலைவருமான எல்பரடேய்க்கு இடைக்கால வெளியுறவுகளுக்கான துணைத் தலைவர் பதவியை எடுக்கும் நிலை
 SCAFஉடைய தந்திரோபாயங்களுக்கு மறைப்பை அளிக்கும் நோக்கத்துடன்
 ஏற்பட்டுள்ளது. அவர் பேசும் அதிகாரத்தை கொண்டிருக்கவில்லைஆனால்
 தேசிய மீட்பு முன்னணியின் எல்பரடேய் குடைக் குழுவின் தலைவர் அல்ல; 
ஏனெனில் இப்பொழுது “அவர் அனைத்து எகிப்தியர்களுடைய ஒரு துணைத்
 தலைவராக உள்ளார்” என்று செய்தித் தொடர்பாளர் கலீட் தாவுத் கூறினார்.

இந்த இழிசெயல்களுக்கு வாஷிங்டன் தன் ஆதரவைக் கொடுத்து, ஒரு புதிய அரசியலமைப்பு மற்றும் ஒரு புதிய அரசாங்கம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில்
 வரும் என்னும் கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதையும் “எச்சரிக்கையுடன் ஊக்குவிக்கிறது.”

இயற்றப்பட இருக்கும் அரசியலமைப்பு ஒரு ஜனநாயக விரோதக் கொடுமையாகும். அதிலுள்ள புதிய விதிகளில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள்
 பாராளுமன்றத்தில் 50 சதவிகிதம் இடம் ஒதுக்கப்படும் என்ற தற்பொழுதுள்ள
 விதி அகற்றப்பட்டு, வேலைநிறுத்தத்திற்கு எந்த ஆதரவும் இல்லாமல் செய்யப்பட்டுவிட்டது. அரசு ஒரு வகையான கட்டாய வேலை செய்யுமாறு
 சட்டம் இயற்றலாம், தேவையானால். குடிமக்கள் மீதான இராணுவ விசாரணைகளும் நடத்தப்படலாம்.

இஸ்லாமும் ஷரியச் சட்டமும் “சுன்னா மற்றும் ஜமா—அதாவது சுன்னி
 இஸ்லாம்—மக்களின் கொள்கைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்கள்”, சட்டமியற்றுவதற்கு முக்கிய ஆதாரங்கள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
பரிசீலனையிலிருக்கும் பொருளாதார நடவடிக்கைகள் சம முக்கியத்துவம்
 உடையவை; இவை மக்களின் பெரும் தட்டுக்களை அழிக்கும்.

வெளிநாட்டு நாணய இருப்புக்கள் முபாரக் ஆட்சிக்கு பின் கிட்டத்தட்ட 60
 சதவிகிதம் சரிந்துவிட்டன; அரச கருவூலத்தில் 14.9 பில்லியன் டாலர்கள்தான்
 உள்ளது. இது மூன்றுமாத கால இறக்குமதிக்கு சமம். தொழிலாள வர்க்கத்தின்
 மீதான ஒரு மிருகத்தனத் தாக்குதல் மூலம் இது திருத்தப்படும்.

2012ல் அல் பெப்லவி எகிப்து வரவு-செலவுத் திட்டத்தை “அசாதாரணமானது”,
“நம்மால் உருவாக்கப்படும் பொருட்கள்அவைகளை நாம் பயன்படுத்துவதில்லை”
 என்றார். ஊதியங்களை மட்டும் என்று இல்லாமல், வெளிநாட்டு 
கடன்கொடுப்பவர்களுக்கு திருப்பிச் செலுத்துவதற்கு எரிபொருள், கோதுமை
 மீதான மானிய உதவித் தொகைகள் மீதும் இலக்குவைக்க வேண்டும் என்று
 அவர் கூறியுள்ளார்; அத்தகைய நடவடிக்கை மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் தள்ளும். எரிபொருள் மானிய உதவித் தொகைகள் இப்பொழுது
 எகிப்து வரவு-செலவுத் திட்டத்தில் 33 சதவிகிதமாக உள்ளன.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: