Facebook Twitter RSS

ஆழமாக தடம் பதித்துள்ள இராணுவ பூட்ஸுகள் - எகிப்து பற்றிய ஒரு மிலிட்டறி வியூ!

கிப்தின் அரசியல் வரலாறு என்பதன் மறுபெயர் இராணுவ 
புரட்சி அல்லது சதி அல்லது துரோகம்.எகிப்திய இராணுவத்தி
ல் கேர்ணல் தரத்தில் இருந்த கமால் அப்துல் நாஸர் முஹம்மது
 நாகிபுடன் இணைந்து முதலாம் பாரூக் மன்னரை கவிழ்த்து விட்டு
 புரட்சிகர கவுன்சில் மூலம் நாகிய்பினை அதிபராக்கினார். மீண்டும்
 ஒரு இராணுவ புரட்ச்சியின் மூலம் அவரை வீட்டுச் சிறையில் 
அடைத்து விட்டு தன்னை சர்வாதிகாரம் பொருந்திய தலைவராக
 மாற்றிக்கொண்டார். அல் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினர்
 இவரை படுகொலை செய்ய எடுத்த முயற்ச்சி தோல்வியில் முடிந்த 
போது மிருகத்தனமாக இஹ்வான்களை வேட்டையாடினார். சுயஸ்
 கால்வாலைய தேசிய மயப்படுத்தி மக்கள் நாயகனாக மாறினார்.
 இஸ்ரேல் அரபு யுத்ததின் போது ஏற்பட்ட பின்னடைவின் பின் சில 
காலங்களில் ஏற்பட்ட மாரடைப்பால் மரணித்தார். 


துணை அதிபராக இருந்த அன்வல் எல் சதாத் அதிபரானார்.
 இஹ்வானிய வேட்டையை தொடர்ந்தார். அதே வேளை 
பலஸ்தீனர்களிற்காக ஆதரவு கரம் நீட்டினார். எகிப்திய இராணுவத்
தை நவீன மயப்படுத்தினார். இஸ்ரேலியர்களின் பெருநாள் 
கொண்டாட்டத்தின் போது ஒரு ஆச்சரியம் நிகழ்ந்து. அதனை 
“அக்டோபர் வோர்” என்பார்கள். “அப்பரேஷன் பத்ர் அல் ரமாழான்”
 என்ற பெயரும் எகிப்தியர்கள் மத்தியில் பிரசித்தம். 

சத்தமில்லாமல் நகர்ந்த எகிப்திய இராணுவம் சுயஸ் கால்வாயின் 
கட்டுப்பாட்டை மீண்டும் தன் வசப்படுத்தியது. சினாயின் 
பறிக்கப்பட்ட எல்லைகள் மீட்கப்பட்டன. 15 கிலோமீட்டரிற்கு
எகிப்திய இராணுவம் உள்நுழைந்தது. சிரிய அதிபர் ஹபீஸ் அல்
 அஸாதும் எகித்திற்கு துணையாக தனது டாங்கிகளை அனுப்பி

 கோலானில் ஒரு பகுதியை மீண்டும் கைப்பற்றினார்.அன்றைய
 இஸ்ரேலிய தளபதி ஏரியல் ஷரோன் தனது படையணியுடன்
 சுயஸ் கால்வாயினுள் நுழைந்து எகிப்திய இரண்டாம் டிவிசன்
 இராணுவத்தை அழிக்க முற்பட்டார். ஆனால் அது பெரும்
 இழப்புக்களுடன் தோல்வியில் முடிந்தது இஸ்ரேலியர்களிற்கு.
 சினாயை இழந்து, சுயஸ் கால்வாயில் இருந்து பின்வாங்கி, 
கோலானையும் இழக்கும் நிலை இஸ்ரேலிற்கு ஏற்பட்ட போது 
அந்த துரோக தேசத்திற்கு கைகொடுக்க அமெரிக்கா களமிறங்கியது. 

எகிப்துடன் உறவுகளை வளர்க்க முற்பட்டது. விலைவாசி உயர்வு,
 பொருளாதார நலிவு என்று தள்ளாடிய எகிப்திற்கு கோதுமை
 மாக்களை கப்பல் கப்பலாக கொண்டு வந்து கொட்டியது. மெல்ல
 மெல்ல ஏற்பட்ட அமெரிக்க உறவு அன்வர் சதாதை அமெரிக்கர்களின்
 நண்பராக மாற்றியது. 

இஸ்ரேலுடன் அமைதி பேச்சுவார்த்தைகளை நடத்தினார் அன்வர்
 சதாத். இஸ்ரேலிற்கு விஜயம் செய்தார். அமெரிக்க கப்பலில் 
வைத்து அமெரிக்க அதிபர் முன்னிலையில் இஸ்ரேலுடன்
 “கேம்ப் டேவிட்” என புகழ் பெற்ற துரோக சாஸனத்தில் கையொப்பமிட்டு 
இஸ்ரேலை ஒரு தேசமாக அங்கீகரிந்தார். நோபல் பரிசை
 வாங்கிக்கொண்டார் பகரமாக. அரபு நாடுகள் ஆவேசமாக கண்டித்தன 
இந்த செயலை. 

“எனது காரிற்கு அராபிய பெற்றோல் தேவையில்லை. அமெரிக்க
 தரும் வெனிஷுவெலாவின் பெற்றோல் போதும்” என கொக்கரித்தார் 
அன்வர் எல் சதாத்.

இந்த துரோகத்திற்கு பகரமாக இராணுவ அணிவகுப்பு மரியாதையின்
 போது காலித் இஸ்லாம் பூலியும் அவரது சகாக்களும் சேர்ந்து இவரை 
மேடையில் வைத்து குண்டு வீசி பின் சுட்டுத்தள்ளினர். அந்த இடத்திலேயே
 செத்துப் போனார் அன்வர் சதாத். 

அன்வர் எல் சதாத் சுடப்பட்ட போது எகிப்தின் துணை அதிபராக
 இருந்தவர் ஹொஸ்னி முபாரக். அந்த தாக்குதலில் அன்வர் எல்
 சதாத்திற்கு பக்கத்தில் இருந்தவர். இன்றைய எகிப்திய இராணுவ
 புரட்ச்சிக்கு பினனால் உள்ள முன்னால் இராணுவ தளபதிகளும்
 அதே மேடையிலேயே இருந்தனர். 

இவர்களிற்கு இஸ்லாம் மீதும், இஹ்வான்கள் மீதும் வெறுப்பு வர
 இது ஒரு பிரதான காரணியாயிற்று. இஸ்லாம் எகிப்தில் வந்தால்
 என்னவாகும் என்ற பயம் இவர்களை இஸ்லாமிய விரோதிகளாக
 மாற்றிற்று. இதனை நன்றாகவே பயன்படுத்திக்கொண்டன 
அமெரிக்காவும் இஸ்ரேலும். 

முஹம்மட் முர்ஷியின் ஆட்சி என்பது அவர்களால் நினைத்து
 பார்க்க முடியாத ஒன்று.  ஹுஸ்னி முபாரகிற்கு எதிரான மக்கள் 
எழுச்சி என்பது வேறு இஸ்லாத்தின்பால் மக்கள் ஈர்க்கப்பட்ட
 இஸ்லாமிய எழுச்சி என்பது வேறு. ஜெஸ்மின் புரட்சியில்
 இஸ்லாமிய எழுச்சியை விடவும் சர்வாதிகாரத்திற்கும், பாசிஸ 
கொள்கைகளிற்கும் எதிரான மக்கள் எழுச்சி என்பதே அன்று இருந்தது. 

இதனை நன்றாக புரிந்து வைத்திருந்த எகிப்திய கிழட்டு ஜெனரல்கள்
 மக்கள் புரட்ச்சியை எதிர்கொள்ள முடியாத நிலையில் ஹுஸ்னி 
முபாரக்கை கைகழுவி விட்டு மெல்ல காத்திருந்து இஸ்லாத்தின்
 புரட்சியாக மார்தட்டிய இஹ்வான்களை மெல்ல இயங்கவிட்டு
 மக்கள அலை ஓய்ந்தவுடன் தங்கள் வேலையை காண்பித்துள்ளனர். 

இது தான் எகிப்து. இது தான் இந்த தேசத்தின் அடிப்படை.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: