Facebook Twitter RSS

எனக்கு இந்தியாவில் அகதி அந்தஸ்து கிடைக்கவில்லை : ஜூலியன் அசாஞ்ச்!
 

 
 



அமெரிக்காவின் தொழில்நுட்ப வல்லுனர் எட்வார்ட் ஸ்னோவ்டெனுக்கு இந்தியா அகதி அந்தஸ்து வழங்க வேண்டும் என விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்
தெரிவித்துள்ளார். இரகசிய சைபர் நெட்வேர்க்கை பயன்படுத்தி அமெரிக்கர்கள் மற்றும் வெளிநாட்டவர்களின் தொலைபேசி மற்றும் இணையப்பாவணை தொடர்பில் பல லட்சக்கணக்கில் பிரத்தியேக தகவல்களை அமெரிக்க பாதுகாப்புத்துறை...
திரட்டி வைத்திருப்பதாக ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார் எட்வார்ட் ஸ்னோவ்டென். இவர் முன்னர் அமெரிக்காவின் இரகசிய பாதுகாப்புத்துறையில் பணியாற்றியவர் ஆவார். தற்சமயம் அமெரிக்காவை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சம் கோரி வருகிறார். சுவிற்சர்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருக்கிறார். இந்நிலையில் இவர் தைரியமாக முன்வந்து வெளிப்படுத்திய தகவல்களினால், இந்தியர்களின் சைபர் நெட்வேர்க்குகள் மீது அமெரிக்கா குறிவைத்திருந்த விடயம் தெரியவந்துள்ளது. இவருக்கு நிச்சயம் இந்தியா பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஜூலியன் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு ஆபத்து நேர்ந்த போது முதன்முறையாக இந்தியாவிலேயே அகதிகள் தஞ்சம் கோரியிருந்ததாகவும், எனினும் மனிதாபிமானத்தை, மனித உரிமைகளை மதிக்கும் நாடாக கருதப்படும் இந்தியா தனது கோரிக்கைக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டதாகவும் அசாஞ்ச் தெரிவித்துள்ளார். 'விக்கிலீக்ஸின் மிகப்பெரிய ஆதரவாளர்களாக இந்தியா இருந்தது. இதனால் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் ஊடாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தை தொடர்பு கொண்டேன். அவர்களுகு பல முறை கோரிக்கை விடுத்திருந்தேன். எனினும் எனக்கு புதுடெல்லி பதில் அளிக்க மறுத்துவிட்டது' என்கிறார் ஜூலியன் அசாஞ்சே.

அவர் கடந்த வருடன் ஜூன் 19ம் திகதியிலிருந்து இங்கிலாந்தில் உள்ள எகுவடோர் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். எகுவடோர் போன்ற மிகச்சிறிய நாடுகளே அகதி அந்தஸ்து அளிக்க முன்வந்துவிட்டன. ஆனால் சர்வதேச வல்லமையுடன், பில்லியனுக்கு மேற்பட்ட சனத்தொகை கொண்ட இந்தியா போன்ற நாடு, மனித உரிமைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முன்வராதது ஏமாற்றத்தை அளிக்கிறது. எனக்கில்லையென்றாலும், ஸ்னோவ்டெனுக்காவது இந்தியா அகதி அந்தஸ்து அளிக்க வேண்டும்.

மனிதாபிமானத்திற்கு ஆதரவாக இந்தியா துணைநிற்க வேண்டிய தருணம் இது என அசாஞ்ச் கூறியுள்ளார். மேலும் இந்தியா தனக்கு அகதி அந்தஸ்து அளிக்க இப்போது முன்வந்தாலும் தான் அங்கு வருவதற்கு தயாராக இருப்பதாகவும், இதுவரை ஒரு நாளும் இந்தியாவுக்கு வந்ததில்லை. எனினும் அங்கு அதிகமான நண்பர்கள் இருக்கிறார்கள் எனவும் விக்கிலீக்ஸிற்கு மிகப்பெரும் ஆதரவு தமக்கு இந்தியாவில் இருந்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார். 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: