Facebook Twitter RSS

சிரியா' நிலவரங்கள் சொல்லும் செய்தி .

சிரியா' யுத்தம் பல ஆச்சரியமான களச் செய்திகளை எமக்கு தருகின்றது . அந்த வகையில் புதிய செய்தியாக கிடைத்திருப்பதுசிரிய , ஈராக்கிய எல்லையில் ஈராக்கிய இராணுவம் சிரியப் போராளிகளுடன் கடுமையாக போரிட்டுள்ளது எனும் தகவல் ஆகும் .
நிகழ்வுகளின் கோர்வைகள் ஒரு குழப்பமான அரசியலை காட்டி நின்றாலும் நிதானமாக சிந்தித்து ஒரு தூய போராட்டத்தை புரிந்து கொள்ளும் அவசியம் முஸ்லீம்களுக்குஇருக்கின்றது .

பசர் அல் அசாத் சார் அரசு அதன் பலம் மற்றும் ஆதரவுத் தளம் மற்றும் 74 % மான சுன்னி முஸ்லீம்கள் வெறும் 17% மான அலவி ஷியா ஆதிக்கத்தின் கீழ் பற்பல கொடுமைகளின் கீழ் வாழ்ந்த கடந்த வரலாறு இப்படி பல்வேறு விடயங்களை அலசும் போது நிகழ்கால போராட்டத்தின் தோற்றப்பாடு எதேச்சையாகவோ ,திடீரெனவோ தோன்றிய ஒன்றல்ல எனும் முடிவுக்கு எம்மால் வரமுடியும் .

ஆனால் நிகழ்கால போராட்டத்தின் தொடக்க வரிகளை வைத்து போராட்ட வடிவத்தை ஒரு 'அமெரிகன் ஜிஹாத் ' ஆக குறித்துக் கட்டுவதிலும் ,பிரச்சாரப் படுத்துவதிலும் பசர் அசாத் சார் ஊடகங்களும் , மேற்கின் மீடியாக்களும் அதன் மத்திய கிழக்கு ஆதரவாளர்களும் இரு வேறுபட்ட பாணிகளில் ஒரே பணியையே செய்தனர் .

அரேபிய வசந்தம் என்பது ஒரு நவ காலனித்துவ கொடும்பிடியின் சாந்தமான ஒரு ஆதிக்க வடிவம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும் .இங்கு இயல்பான மக்கள் எழுச்சியையும் ,அதன் எதிர்பார்ப்பையும் எவ்வாறு கையாழ்வது என்பதில்தான் மேற்கின் புதிய திட்டங்கள் மத்திய கிழக்கில் அமுல் படுத்தப்பட்டன.

முஸ்லீம் நாடுகளில் புதிய அரசியல் முகங்கள் தொடர்பில் 1. இஸ்ரேல் ,மற்றும் மேற்குலகு தொடர்பான நலன்பாதுகாக்கப்படல் . 2. இவர்கள் தொடர்பான முஸ்லீம்களின் நம்பிக்கையீனம் களையப்படுவது என்பன பிரதானமானது . அந்த வகையில் மாற்றீடுகள் களம் இறக்கப் பட்டனர் . 'நேற்றைய எதிரியை விலைபேசி இன்றைய நண்பனாக்கிக் கொண்டால் நாளைய சவால்களை செலவின்றி தடுக்கலாம் '. எனும் இராஜதந்திரப் பொறி வழமையான 'ஜனநாயக சாயத்தோடு 'வைக்கப்பட்டது. தேவைக்கும் தேசியத்துக்கும்ஏற்றால் போல 'இஸ்லாமியம்' எனும் இன்னொரு வண்ணத்தாலும் முஸ்லீம்கள் மனம் குளிர வைக்கப் பட்டனர் .

மதச் சார்பின்மையை நேற்று கடுமையாக எதிர்த்தவர்கள் இன்று காலத்தின் கட்டாயம் , அல்லது படிமுறை மாற்றம் என்ற நியாயங்களோடு அதன் காவலர்களாக பணியமர்த்தப் பட்டனர் . அடுக்கடுக்காக இந்தப் பொறியில் வீழ்ந்த முஸ்லீம் தேசங்களின்
வரிசையில் சிரியாவும் விழும் என்ற நம்பிக்கையில் காரியங்கள் ஒழுங்கு படுத்தப் பட்டன .ஆனால் நடப்பு நிகழ்வுகள் இப்படியான ஒரு மேற்கு எதிர்பார்த்த சாதகத்தை குறிகாட்டி நிற்கவில்லை .

நடப்பு அரசியலில் 'இஸ்லாமிய ஷரீயா 'முதலிடம் ,அல்லது தலைமை மாற்றம் , பற்றி சிரிய மக்கள் எழுச்சியின் நகர்வுகள் பேசியிருந்தால் . 'கடாபியை' போலஒரு அகால முடிவை நோக்கி NATO உதவியோடு கூடிய இராணுவ அரசியல் அல்லது 'ஹுஸ்னி முபாரக் ' சந்தித்த நீதிமன்ற அரசியல் போன்ற போலி முகங்கள் 'பசர் அல் அசாத்' விடயத்தில் இந்நேரம் அமுலாகி இருக்கலாம் .

ஆனால் சிரிய மக்களின் தேடல்கள் மிக ஆழமானதும் , இஸ்ரேல் மற்றும் மேற்கின் சித்தாந்த அரசியலுடன் முற்றிலுமாக மோதக் கூடியதும் ,இஸ்லாமிய வாழ்வியலை முற்றாக அமுல் நடத்தக் கூடிய துமான 'இஸ்லாமிய கிலாபா' அரசை வேண்டுவதே நிலமை வருடக்கணக்காக அழிவுகளோடு தொடர்வதற்கான காரணமாகும் .

செய்திகளின் இருட்டடிப்பு , மக்கள் படுகொலைகள் , சதி இராணுவக் குழுக்களின் நடவடிக்கைகள் , இப்போது அந்த வரிசையில்' ஷியா சார் அமெரிக்க உருவாக்கமான ஈராக்கிய இராணுவத்தின் தாக்குதல்கள்! இறப்புக்களால் ,இழப்புக்களால் தூய இலட்சியவாதம் தோற்கடிக்கப் பட முடியாதது . இறைவன் முன்னறிவித்த சக்தி மிக்க இஸ்லாத்தின் மீள்வருகையை சாத்தானிய சக்திகளால் தடுக்கவும் முடியாது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: