Facebook Twitter RSS

லண்டனில் உலா வரும் பறக்கும் தட்டுகள்


fly_plat_001.w245லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில், மாயாஜாலக் காட்சிகள் போன்றே ஓர்டர் செய்த உணவுகள் பறக்கும் தட்டாக ஆகாயத்தில் வந்து குதிக்கிறது.
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஹோட்டல் நிறுவனம் யோ சுஷி. தலைநகர் லண்டன் மட்டுமின்றி நாட்டின் பல இடங்களிலும் ரஷ்யா, ஐக்கிய அரபு குடியரசு உள்ளிட்ட நாடுகளிலும் இதன் கிளைகள் உள்ளன. இதன் லண்டன் கிளையில் தான் சமீபத்தில் டிரோன் சர்வீஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர் ஓர்டர் செய்த உணவை மினி டிரோன் ஒன்று சுமந்து கொண்டு டேபிளுக்கே பறந்து வருகிறது. ஐபேட் கண்ட்ரோலில் இயக்கப்படும் இந்த டிரோன் சப்ளை வாடிக்கையாளர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
இதில் மினி ஹெலிகாப்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளதால், அது அழகாக இறக்கைகளை சுழற்றியபடி ஜிவ்வென்று பறந்து செல்கிறது. உணவுப் பதார்த்தங்களை வாடிக்கையாளர் எடுத்துக் கொண்ட பிறகு திரும்பி பறந்து சென்று விடும் வகையில் இது ட்யூன் செய்யப்பட்டுள்ளது.
2 நவீன கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த டிரோனை, ஹோட்டல் ஊழியர் ஒருவர் ஐபாட் உதவி கொண்டு இயக்குகிறார். இந்த டிரோன் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறனுடையது.
இது குறித்து யோ சுஷி ஓட்டல் அதிகாரிகள் கூறுகையில், உலகம் முழுவதும் எங்கள் ஹோட்டல்கள் 70 இடங்களில் உள்ளது. கன்வேயர் பெல்ட் மூலம் சப்ளை செய்வது, ரோபோ மூலம் சப்ளை செய்வது ஆகிய முயற்சிகளை தொடர்ந்து, தற்போது மினி டிரோன் உதவியுடன் சப்ளையை தொடங்கியிருக்கிறோம்.
அசம்பாவிதங்கள் எதுவுமின்றி, இது சிறப்பாக நடந்தால் மற்ற கிளைகளிலும் அறிமுகப்படுத்தப்படும் எனதெரிவித்தனர்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: