Facebook Twitter RSS


ஹைதராபாத் குண்டுவெடிப்பு:குஜராத் போலீசுக்கு அடிபணியாததால் ரயீசுதீனை சிக்க வைக்க முயற்சி!



குஜராத் மோடி அரசின் போலீசில் போலி என்கவுண்டர் நாயகனாக கருதப்படும் ஏ.சி.பி நரேந்திரகுமார் அமீனுக்கு எதிராக சாட்சி கூறக்கூடாது என்ற மிரட்டலுக்கு அடிபணியாத காரணத்தால் ஹைதராபாத் இரட்டைக் குண்டுவெடிப்பு வழக்கில் அப்பாவியான முஹம்மது ரயீசுதீனை போலீஸ் சிக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றவாளியான நரேந்திரகுமார் அமீன் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் அமீன் சம்பந்தப்பட்டுள்ளார். பன்னாட்டு குத்தகை நிறுவனத்திற்காக தனியார் துறைமுகம் கட்டுவதற்கு எதிராக போராட்டம் நடத்திய கர்னல் ஸேவ் என்பவர் போலீஸ் கஸ்டடியில் மரணமடைந்த வழக்கிலும் அமீன் குற்றவாளியாவார்.

குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியாவின் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டி அப்பாவியான மவ்லானா நஸ்ருத்தீனை குஜராத் போலீஸ் கைது செய்திருந்தது. இந்நடவடிக்கைக்கு தலைமை வகித்தவர் நரேந்திரகுமார் அமீன். தன்னைத் தேடி குஜராத் போலீஸ், ஹைதராபாத்திற்கு வந்துள்ளது என்பதை அறிந்த மெளலானா நஸ்ரூத்தீன், ஹைதராபாத் டி.ஜி.பி அலுவலகம் அருகில் உள்ள சி.ஐ.டி ஆபீசுக்கு சென்றார். இதனை கேள்வி பட்டு முஸ்லிம் இளைஞர்கள் திரளாக டி.ஜி.பி அலுவலகத்தின் முன்னால் திரண்டனர். இக்கூட்டத்தில் முஹம்மது ரயீசுத்தீனும் அடங்குவார்.

மவ்லானா நஸ்ருத்தீனை குஜராத் போலீஸ் கைது செய்து அழைத்துச் செல்லும்போது போலீஸ் வேனுக்கு குறுக்கே முஸ்லிம் இளைஞர்கள் தடையாக நின்றனர். அப்பொழுது நரேந்திர குமார் அமீன், வெறித்தனமாக முஸ்லிம் இளைஞர்களை நோக்கி சுட்டார். இதில் ரயீசுத்தீனின் உற்ற நண்பரான முஜாஹித் ஸலீம் கொல்லப்பட்டார்.
கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து ஸைஃபாபாத் போலீஸ் ஸ்டேசனில் நரேந்திரகுமார் அமீன் மீது கொலைக் குற்றத்திற்கான வழக்கு பதிவுச் செய்யப்பட்டது. இவ்வழக்கில் முக்கிய சாட்சி ரயீசுத்தீன் ஆவார். இதற்கு பழி வாங்குவதற்காக முஜாஹித் ஸலீமின் இறுதி ஊர்வலத்தின்போது போலீஸ் மீது கல்வீசி தாக்கியதாக கூறி ரயீசுத்தீன் உள்ளிட்ட பல முஸ்லிம் இளைஞர்கள் மீதும் வழக்கு பதிவுச் செய்யப்பட்டது.
குஜராத் ஏ.சி.பி நரேந்திரகுமார் அமீனுக்கு எதிரான சாட்சி வாக்குமூலத்தை வாபஸ் பெறக்கோரி ரயீசுத்தீனை போலீஸ் கொடூரமாக சித்திரவதைச் செய்தது.
பின்னர் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு தொடர்பாக ஹுஸைனி போலீஸ் ஸ்டேசனில் ரயீசுத்தீன் மீது இரண்டு க்ரிமினல் வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டன. பின்னர், குற்றமற்றவர் என்று கூறி நீதிமன்றம் ரயீசுத்தீன் உள்ளிட்ட முஸ்லிம் இளைஞர்களை விடுவித்தது.
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக குற்றவாளியாக சேர்க்கப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைகளை அனுபவித்த அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆந்திர மாநில அரசு மூன்றரை லட்சம் ரூபாய் இழப்பீடும், நற்சான்றிதழும் வழங்கியது. ஆனால், ரயீசுத்தீனுக்கு நற்சான்றிதழ் கிடைத்ததே தவிர இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. போலீஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கு தற்போதும் உள்ளதால் இழப்பீடு தொகை தரமுடியாது என்று நியாயம் கூறப்பட்டது.
நரேந்திரகுமார் அமீனுக்கு எதிரான சாட்சி வாக்குமூலத்தை வாபஸ் பெற்றால், இழப்பீட்டுத் தொகை தருவது குறித்து ஆலோசிக்கலாம் என்று போலீஸ் ஆசை வார்த்தை காட்டியது. ஆனால், தனது கண் முன்னால் சுட்டுக் கொல்லப்பட்ட தனது உற்ற நண்பனுக்காக ரயீசுத்தீன் போலீசின் ஆசை வார்த்தைக்கு அடிபணியவில்லை.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: