| இராணுவத்தை பலப்படுத்த ஈரான் போர் ஒத்திகை: 8 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பு |
இராணுவத்தை பலப்படுத்த ஈரான் போர் ஒத்திகை: 8 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பு
ஈரான் இரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக சந்தேகம் கொண்ட இஸ்ரேல் அடிக்கடி மிரட்டல் விடுத்து வருகிறது.இதனால் நவீன ஆயுதங்கள், ஏவுகணைகளை தயாரித்து இராணுவ பலத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈரான் இறங்கி உள்ளது. கடந்த 1ஆம் திகதி சர்வதேச கடல்பகுதியில் சென்று கொண்டிருந்த அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் போர் விமானம் சுட்டதாக பென்டகன் குற்றம்சாட்டியிருந்தது. இந்நிலையில் ஈரான் மிகப்பெரிய அளவில் விமானப்படை போர் ஒத்திகையை நடத்தி வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் பாதி நிலப்பரப்புக்கு ஒப்பான கிழக்கு பகுதியில் இந்த ஒத்திகை நடப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஒத்திகையில் 8 ஆயிரம் வீரர்கள் ஈடுபடுகிறார்கள் என்றும், போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள், குண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
Subscribe to:
Post Comments (Atom)















0 comments: