Facebook Twitter RSS
*/

Latest News

First shots fired in 40 years in the Golan Heights near "Israel"

நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு..........அல்லாஹ் அக்பர்..............................

'சியோனிச மிஷனில் 'வெள்ளைக் காக்கா சிரியாவில் மல்லாக்காய் பறக்குது !


ஏகாதிபத்திய நாடக பாணி அரசியலின் அடுத்த கட்டமும் சிரிய விவகாரத்தில் அரங்கேறி விட்டது . அது ஐநாவின் பங்கி மூன் அவரது திரு வாயால் மொழிந்து அறிக்கையாக வெளியிட்டு விட்டார் . அது குறித்த இரசாயன தாக்குதலை செய்தது சிரியப் போராளிகளாம் .


                முன்பு பசர் அல் அசாத் இரசாயன தாக்குதல் நடத்தியதற்கு தம்மிடம் ஆதாரம் உள்ளதாக அமெரிக்க வெளி விவகார அமைச்சர் அறிக்கை விட்டது அவர்களுக்கே மறந்து போனதுதான் இன்று  ஆச்சரியம் ! 

                      உண்மையில் இந்த சிரியப் போர் முஸ்லீம் உம்மத்திற்கு பல உண்மைகளை விளக்கி நிற்கிறது .ஈரான் மற்றும் அவர்களின் 'ஹிஸ்புஸ் சைத்தான்களது ' உருவத்தை தெளிவாக தோலுரித்து காட்டியது  உட்பட   இஸ்லாத்திற்கு எதிரான அணைத்து தரப்பையும் ஒன்றாகவே  முஸ்லீம் உம்மாவின் முன் வெளிக்கொண்டு வந்துள்ளது .

                    இஸ்லாத்திற்கு மத அந்தஸ்து கொடுத்து 'மஸ்ஜித்தோடு' முடக்கிப் போட்டு ,முஸ்லீம் உம்மாவை பல்வேறு பிரிவினைகளில் வாழ வைத்தது வரை இந்த சண்டியர்கள் பாடு கொண்டாட்டமாய் இருந்தது .இப்போது இஸ்லாத்தின் மீள் அதிகார வருகை பற்றி ஒற்றுமையோடு தெளிவோடு சிரியாவில் இருந்து வரும் குரல்கள் தான் இவர்களின் திண்டாட்டத்துக்கு காரணமாகும் .

நீங்களும் கப்பல் பார்க்கப் போனீர்களா !?

 
கொழும்புத் துறைமுகத்தை 'லோகோஸ் ஹோப் ' எனும் கப்பல் புத்தகங்களை சுமந்து ஆல் கடலில் ஒரு அறிவுச் சுரங்க வடிவில் வந்திருக்கின்றது. இக்கப்பல் வருவது இதுதான் முதற் தடவையல்ல .இலவசமாக சென்று ரசித்து புத்தகங்கள் உட்பட பல பொருட்களை  கொள்வனவு செய்துவர மக்கள் வெள்ளமும் அலை மோதுகிறது . இந்த முஸ்லீம் உம்மத்தும் நிறையவே செல்கிறது .


                        முதலில் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் .புத்தகங்களை விற்கும் இலாபத்தை நோக்கமாக வைத்து இந்தக் கப்பல் வரவில்லை அந்த விடயமே ஒரு பக்குவமான முகமூடி ! அது ஒரு அகீதாவின் உருவத்தை நாகரீகம் ,நடத்தை , அபிமானம்,சமூக உதவி  என்ற போர்வைக்குள் புகுத்தி பொதுநலன் என்ற வெளிப்பார்வையோடு வந்துள்ளது .

               "அவர்கள் வந்தபோது அவர்கள் கையில் 'பைபிள்' இருந்தது .  எமது கையில் தேசம் இருந்தது .எம்மை கண்ணை மூடி ஜெபிக்கச் சொன்னார்கள் . பின் கண்ணை திறந்து பார்த்த போது எம் கையில் பைபிள் இருந்தது அவர்கள் கையில் தேசம் இருந்தது ! இந்த ஆபிரிக்கக் கவி வடிவம் ஒரு தெளிவான விடயத்தை குறித்து நிற்கிறது .

               முதலாளித்துவ சித்தாந்தம் 'செக்கியூலரிச ' வடிவில் மதத்தையும் 
வாழ்வையும் பிரித்து வைத்தாலும் கிறிஸ்தவ மதத்தோடு அதன் பற்றுள்ள பார்வை ,விசுவாசம் மாறவே மாறாது . பரலோகத்தில் இறைவனின் எல்லையை  வைத்து விட்டு பூலோகத்தில் எத்தகு வாழ்வையும் வாழலாம் . சர்ச்சுக்குள் சென்று பாவமன்னிப்பு கேட்டால் போதுமானது . பாவச் சுமையை இன்னொருவர் சுமப்பார் ! 

            அற்புதமான இந்த கொள்கை சுயநலம் பிடித்த குள்ள நரிகளின் கழுத்திலும் சிலுவையை தொங்கப் போட்டதில் ஆச்சரியம் இல்லைதான் .இவர்கள் செல்லுமிடமெல்லாம் இந்த கிறிஸ்தவத்தையும் கொண்டு செல்வார்கள் . இந்த மதம் இவர்களது சுயநல வாழ்வில் தலையிடாது .மாறாக  தேவைக்கு  உதவும். இவர்கள் அடித்தாலும் மறுபக்கம் அணைக்கும் கரமாக இந்த முதலாளிகளுக்கு மதம் 'சப்போர்ட்' ஆகியது .

                   அரசியல் அற்ற அரசியலும்  ,சிலபோது அரசுக்குள் ஒரு அரசாகவும் !  கிறிஸ்தவம் இருக்கும் .உதாரணமாக   பண்டைய சிலுவைப்போருக்கும் நவீன 'போஸ்னியா ' WAR இற்கும் இடையில் அரசியலாக அது கிறிஸ்தவர்களை இயக்க வில்லையா !?   

                          இன்னொரு புறம் அரச சார்பற்ற குழுக்கள் மூலம் SOFT HAND வேதங்களாக   இந்த கிறிஸ்தவ மதத்தை பயன் படுத்தியே  சிந்தனை யுத்தத்தை முழு உலகிலும் ,இஸ்லாத்தின் பூமியிலும்  இந்த முதலாளித்துவ வாதிகள் சிறப்பாக முன்வைத்தனர் வென்றனர் . எனவேதான் இவர்களது 'மிசனரிகளுக்கு' இராஜ தந்திர பாதுகாப்பு முழு உலகிலும்  சாதாரணமாகவே கிடைத்து விடுகிறது .' ஜெனரல் சீசி ' யும் பரக் ஒபாமாவும் இத்தகு சிந்தனா வடிவத்தில் தான் ஒன்றானவர்கள் .

                    அப்படி ஒரு கப்பல் தான் நீங்கள் பார்த்து ரசித்து, சிந்தனை வயப்பட கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது . அதாவது 'மிசனறிக் கப்பல் ! சிந்தனை மாற்றத்துக்கான புதிய விதைகளை விநியோகிப்பார்கள். நாம் வீசிவிட்டு சென்றாலும் எங்காவது சிலது முளைக்கும் . முதலாளித்துவ வாழ்வியலுக்கு சாதகமாக . பள்ளி வாசலில் தேசியக்கொடி ஏற்றியது வரை அவர்கள் தந்து நாம் ஜீரணித்த சிந்தனை தானே !
 

“சிரிய சமர்களத்தில் சக முஸ்லிம் ஜிஹாதிய அணிகள் மேல் தாக்குதல்களை மேற்கொள்ளாதீர்கள்” - ஜபாஹ் அல் நுஸ்ராவிற்கு அல்-காயிதாவின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி வேண்டுகோள்!!

 Amir Al-Qaeda Syaikh Aiman azh-Zhawahiri: Hindari 'menyerang' kelompok Muslim lain!
இது ஒரு பொறி. உலகில் உள்ள எல்லா சுன்னி பயங்கரவாதிகளும் சிரியாவில் வந்து வீழ்ந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் ஒரு முனையில் வைத்து அழிப்பதன் ஊடாக உலகில் சுன்னிகளின் ஜிஹாதை அமெரிக்கா அழிக்கப்போகிறது. சுன்னிகள் சிரியாவை விட்டு சென்று விடுவதே அவர்களிற்கான சிறந்த வழி - ஹஸன் நஸ்ருல்லாஹ் (ஹிஸ்புல்லாக்களின் தலைவர் மற்றும் கட்டளை தளபதி) குசைரிலும், ஹோம்ஸிலும் வாங்கிய அடியின் வலியில் நஸருல்லாஹ் சொன்ன வார்த்தைகள் இவை


அல்-காயிதா. ஆப்கானில் நிகழ்ந்த சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான யுத்தத்தின் போதே ஆரம்பமான அமைப்பு. தளபதி அப்துல்லாஹ் ஆஸமின் (ரஹ்) மறைவின் பின் ஆப்கானில் சமர் புரிந்த அராபிய போராளிகளை ஒருங்கிணைத்து அதன் நட்சத்திர தளபதியாக உஸாமா பின் லாதின் (ரஹ்) அவர்களின் வழி நடாத்தலில் தொடர்ந்து போராடிய கூட்டாகும். உஸாமா அவர்களை சேஹ் அப்துர் ரஹ்மான் அவர்களும், சேஹ் அய்மன் அல் ஸவாஹிரி அவர்களும் வழி நடாத்தினர். 

உலகில் உள்ள முஜாஹித அணிகளை (குர்ஆன் சுன்னாவை) முன்னிலைப்படுத்தி போராடும் அணிகளை ஒன்றிணைத்து அவர்களிற்கான ஆன்மீக வழிகாட்டலை வழங்குவதும், முஸ்லிம்கள் இன சங்காரம் செய்யப்படும் நாடுகளிற்கு போராளிகளை போராட அனுப்புவதும் என அதன் எல்லைகள் விரிய ஆரம்பித்தன. சவுதி அரேபியாவின் மன்னராட்சியை அகற்றி ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்க்கு ஒரு டொலர் கொடுக்கும் அமெரிக்க சுரண்டல் வர்த்தக ஏகாதிபத்தியத்தை மத்திய கிழக்கில் விரட்டுவது வரை அதன் எல்லைகள் விரிவாக்கம் அடைந்து சென்றன. 

ஒஸாமாவின் மரணத்தின் பின்னர் இஸ்லாமிய போராளிகளை ஒருங்கிணைக்கும் ஈர்ப்பு மிக்க தலைவராக அய்மன் அல் ஸவாஹிரி அவர்கள் தோற்றம் பெற்றுள்ளார். 

சிரிய போராட்டத்தில் அல்-காயிதா ஒரு காத்திரமான பங்கிணை வகித்து வருகிறது. சிரிய சண்டைக்களத்தை சர்வதேச ஜிஹாத்திற்கான விளை நிலமாக மாற்றி உலகலாவிய முஜாஹித்களை ஒரு புள்ளியில் ஒன்று குவித்த சாதனையை இது சிரியாவில் நிகழ்த்தி காட்டியது. இந்த இடத்தில் தான் அமெரிக்காவின் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” எனும் திட்டம் தோல்விலைய சந்தித்தது. 

அய்மன் அல் ஸவாஹிரி அவர்கள் ஒரு பிரகடனத்தை நேற்று முன்தினம் விடுத்துள்ளார். அதில் அவர் எக்காரணம் கொண்டும் “முஸ்லிமை முஸ்லிம் தாக்கும் முரண்பாட்டு இராணுவ களங்களை திறக்க வேண்டாம்” என அனைத்து போராளி அமைப்புக்களையும் கேட்டுள்ளார். 

சிரியாவில் ஏனைய இஸ்லாமிய குழுக்களை எக்காரணம் கொண்டும் தாக்கவோ, அழிக்கவோ வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். “எதிரி எம்மிடையே சண்டைகளை உருவாக்க முனைப்பாக திட்டங்கள் பல தீட்டி அதனை எம்மிடையே செயல்படுத்தி வருகிறான். நாம் நமக்குள் சண்டையிட்டால் சிரிய ஜிஹாத்திற்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும்” என அவர் எச்சரித்துள்ளார். 

இஸ்லாத்திற்கு எதிராக வெளிப்படையாக சண்டையிடும் எதிரிகளை கொல்லுங்கள். ஏனைய மதத்தவர்களை கொல்லாதீர்கள். கிறிஸ்தவர்கள், மஜுஸிகள் எவாராக இருந்தாலும். சந்தைகள், மஸ்ஜிதுகள், பாடசாலைகள், மருத்துவமனைகள் போன்றவற்றை சண்டையிடும் போது சேதம் விளையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். எதிரிகளின் பிரதேசங்களில் உள்ள கால்நடைகளை கொல்லாதீர்கள். அவர்களின் விளைநிலங்களை குடும்பங்களை அழிக்காதீர்கள் என வலியுறுத்தியுள்ளார். 

சிரிய சமர்களத்தின் ஒரு இறுகிய சூழ்நிலையில் இவரது இந்த அறிவிப்பு காலத்தின் தேவைாயகவே நோக்கத்தக்கதாகும். தம்மிடையே முரண்பட்டு தங்களை தாங்களே அழித்து கொல்லும் யஹுதி நஸரானிகளின் சதிவலையில் விழாமல் முஸ்லிம் முஜாஹிதா அணிகள் தங்கள் போராளிகளை அறிவுருத்துவதும் பேணுவதும் மிக அவசியமாகும்.

சிரிய இரசாயன ஆயுதங்கள் உடன்பாடு—அமெரிக்க போர் ஒத்தி வைக்கப்பட்டள்ளது, இரத்து செய்யப்படவில்லை

 
 
By Bill Van Auken
ஜெனிவாவில் அமெரிக்க வெளிவிவகார செயலர் ஜோன் கெர்ரிக்கும் ரஷ்ய வெளியுறவு மந்திரி சேர்ஜீ லாவ்ரோவிற்கும் இடையே சிரிய அராசங்கத்தின் இரசாயன ஆயுதக் கிடங்கை அகற்றுவது குறித்து அடையப்பட்ட உடன்பாட்டின் விளைவாக மத்திய கிழக்கில் ஒரு புதிய ஆக்கிரமிப்புப் போரை எதிர்ப்பவர்களிடையே ஒருவித நிம்மதி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


கசப்பான உண்மை என்னவென்றால், போர் என்பது தற்காலிகமாக மட்டுமே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒபாமா நிர்வாகம் அமைதியைத் தழுவிவிட்டது என்று நினைப்பவர்கள், அமெரிக்காவின் இராணுவ வாதத்திற்கு உந்துதல் கொடுக்கும் புறநிலையான சமூகப், பொருளாதார, பூகோள-அரசியல் நலன்களை புரிந்து கொள்ளவில்லை. ரஷ்யாவுடன் உடன்பாடு இருந்தபோதிலும், நிர்வாகம் ஒரு தந்திரோபாய பின்வாங்கலை தவிர மேலதிகமாக எதையும் செய்துவிடவில்லை. இது சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு உறுதியைக் கொண்டுள்ளது; அமெரிக்க ஏகாதிபத்தியம் அதை ஈரானுடன் ஒரு இராணுவ மோதலுக்கான தயாரிப்புக்களில் ஒரு இன்றியமையாத பாகமாக காண்கிறது.
ஞாயிறன்று ஏபிசியின் “ஜோர்ஜ் ஸ்டீபனோபோலோசுடன் இவ்வாரம்” என்று ஒளிபரப்பாகிய பேட்டியில் ஒபாமா, “ஈரான் இதில் இருந்து நாங்கள் சிரியாவைத் தாக்கவில்லை எனவே ஈரானைத் தாக்கமாட்டோம் என்ற பாடத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது” என்றார்.
வெறும் ஒரு வார இடைவெளிக்குள்ளாகவே ஒபாமா நிர்வாகம் சிரியாவை ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலின் விளிம்பில் இருந்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு என்பதற்கு வந்துள்ளது. அமெரிக்க கொள்கையில் இத்தகைய விரைவான மாற்றத்தின் பின்னணியில், போருக்கு மக்கள் எதிர்ப்பின் முன்னோடியில்லாத ஆழ்ந்த தன்மை இருந்தது. அது, ஆகஸ்ட் 29 அன்று பிரித்தானிய பாராளுமன்றம் இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு கொடுக்கும் தீர்மானத்தை நிராகரித்து அளித்த வாக்கெடுப்பில் முதலில் வெளிப்பாட்டைக் கண்டது.
ஐ.நா. தீர்மானம் என்னும் அத்தி இலையின் மூலம் சட்டபூர்வ தன்மையை பெற முடியாத நிலையில்—ரஷ்ய, சீன எதிர்ப்பால்—தன் மிக நெருக்கமான நட்பு நாட்டின் ஆதரவைக் கூடப்பெற முடியாத நிலையில், ஒபாமா நிர்வாகம் அமெரிக்கக் காங்கிரசை இராணுவ வலிமை பயன்பாட்டிற்கு ஒப்புதல் என்னும் தீர்மானத்தின் மூலம் சாதிக்க முயன்றது. அத்தகைய ஒப்புதல், போலி நெறித்தன்மையையும் மக்கள் ஆதரவு என்னும் முகப்பையும் ஒருதலைப்பட்ச சர்வதேச ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத செயலுக்குக் கொடுத்திருக்கும்.
இங்கும் நிர்வாகம் தோற்றது. காங்கிரசின் உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களிடம் இருந்து 9-1 என்ற கணக்கில் போர் எதிர்ப்புச் செய்திகளைப் பெற்றனர்; குடியரசுத் தலைமையில் இருக்கும் மன்றத்தில் ஒபாமா வாக்குப் பெற முடியாது என்பது தெளிவாயிற்று, ஜனநாயகக் கட்சியின் தலமையில் இருக்கும் செனட்டிலும் அவ்வாறுதான் போகக்கூடும்.
 ஒரு ஜனாதிபதி இராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் கேட்பதற்கு அத்தகைய நிராகரிப்பு வருவது அமெரிக்க வரலாற்றில் இதுதான் முதல் தடவையாக இருந்திருக்கும் மற்றும் ஒபாமாவின் ஜனாதிபதித் தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியிருக்கும்.
இச்சூழலில்தான் வெள்ளை மாளிகை, ரஷ்யாவின் திட்டமான சிரியாவுடன் இரசாயன ஆயுதக் களைவு குறித்த உடன்பாட்டிற்கு ஒப்புக்கொள்ளும் வகையில் நிலைமை முடிந்தது. அதுதான் அசாத் ஆட்சி ஆகஸ்ட் 21ம் திகதி டமாஸ்கஸ் புறநகர்ப்பகுதியில் இரசாயனத் தாக்குதலுக்கு பொறுப்பு எனப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை போலிக்காரணமாக கூறப்பட்டது. போர், சிரிய இரசாயன ஆயுதங்களை “தடுத்து, தரமிழக்கச் செய்யும்” என்று கூறப்பட்டது.
இவ்வகையில் அது மாஸ்கோவின் கூடுதல் தந்திர உத்திக்கு அடிபணிய நேரிட்டது; ரஷ்யா கெர்ரியின் அவசரக்கூற்றான ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் சிரிய அரசாங்கம் அதன் இரசாயன ஆயுதங்கள் கிடங்கை முற்றிலும் அழிப்பதின் மூலம்தான் அமெரிக்க இராணுவத் தாக்குதலை தவிர்க்க முடியும் என்றார். அதைச் செய்வதற்கு மாஸ்கோ அசாத்தின் உடன்பாட்டை பெற்றது, ஒபாமா நிர்வாகம் ஒரு தொமஹாக் ஏவுகணை கூட வீசப்பதாத நிலையிலும், மக்களிடையே செல்வாக்கற்ற போரை நடத்துவதற்கு இயலாத நிலைமையில் தன்னைக் கண்டது.
“இராஜதந்திர முறை” எனப்படுவதை தழுவிக்கொண்டுள்ளபோதும், ஒபாமாவும் அவருடைய உதவியாளர்களும் போர் இன்னமும் நிகழ்ச்சி நிரலில் உறுதியாக உள்ளது என்பதை தெளிவாக்க பெரும் முயற்சிகளை எடுத்துள்ளனர். ஒபாமாவே, ஜெனீவாவில் கொள்ளப்பட்ட உடன்பாடு, “அமெரிக்க சக்தி அச்சுறுத்தல் என்பது நம்பகமானது” என்பதின் விளைவில்தான் வந்துள்ளது என்று வலியுறுத்தியுள்ளார்; மேலும் “இராஜதந்திர முயற்சி தோல்வியுற்றால், அமெரிக்கா செயலில் இறங்கும்” என்றும் கூறினார்.
தன்னுடைய பங்கிற்கு கெர்ரி தெளிவாக, அசாத் ஆட்சி இரசாயன ஆயுதங்கள் உடன்பாட்டை செயல்படுத்தியுள்ளதா என்பதை அமெரிக்கா தன் சொந்த நிர்ணயத்தில் இருந்து முடிவு எடுக்கும் என்றும் அதையொட்டி இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். ஐ.நா. ஒப்புதல் இல்லாத நிலையில், அவ்வாறுதான் செயல்பட வேண்டும் என்று நினைத்தால், இராணுவத் தாக்குதல்கள் பற்றி “அமெரிக்க ஜனாதிபதி ஒத்தமனதுடைய நட்பு நாடுகளின் உதவியுடன் முடிவு எடுப்பார்.”
வெள்ளை மாளிகை, காங்கிரசிடம் ஒப்புதலுக்கு இருமுறை செல்லும் தவறை செய்யாது என்பதும் வெளிப்படை. மேரிலாந்தின் ஸ்டீனி ஹோயர், பிரதிநிதிகள் மற்றத்தில் இரண்டாம் உயரிடத்தில் இருக்கும் ஜனாதிபதிக் கட்சி உறுப்பினர், ப்ளூம்பேர்க் தொலைக்காட்சியிடம் வார இறுதியில் மன்றத்தின் சிறுபான்மைத் தலைவர் நான்சி பெலோசியோ, தானோ “ஜனாதிபதி இதையொட்டி காங்கிரசிற்கு வரத் தேவையில்லை, தன் விருப்பப்படி செய்யலாம்” என்றார்.
ஆனால், ரஷ்யாவுடனான உடன்பாடு காங்கிரசில் இசைவிற்கு உதவுப் பயன்படுத்தப்பட முடியும். “மக்கள் கூறுவர், ‘அவர் கூடுதலான முயற்சியை மேற்கொண்டார், மக்கள் வலியறுத்திய இராஜதந்திரப் பாதையை நாடினார். அது வேலை செய்யவில்லை.’ ” “எனவே இச்சூழலில் நமக்கு உள்ள ஒரே விருப்பத்தேர்வு இனியும் இரசாயன ஆயுதப் பயன்பாட்டை செயல்படுத்தும் சிரியாவின் முயற்சியை தடைக்கு உட்படுத்துதல், தவிர்த்தல்” என்றார் ஹோயர்.
ஒபாமா நிர்வாகத்தாலும் அரசியல் கணக்கீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிரியாவிற்கு வரலாறு சாதகமாக இல்லை. தங்கள் இரசாயன ஆயுதக் கிடங்குகளை அழிப்பதற்கு வேறு இரு மத்திய கிழக்கு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்—ஈராக்கின் சதாம் ஹுசைன் மற்றும் லிபியாவின் முயம்மர் கடாபி. அவர்களுடைய நாடுகளும், அமெரிக்காவின் ஆட்சி மாற்றப் போருக்கு உட்பட்டன, அவர்கள் இருவரில் ஒருவரும் இன்று உயிருடன் இல்லை.
அமெரிக்க ரஷ்ய உடன்பாடு சிரியாவிடம் தொடர்ச்சியான கோரிக்கைகளை வைத்துள்ளது. இரசாயன ஆயுத வல்லுனர்களின் கூற்றுப்படி, இவை மிகவும் செயல்படுத்த முடியாதவை. இரசாயன ஆயுதங்கள் உடன்பாடு நாடுகளுக்குத் தங்கள் ஆயுதங்கள் குறித்த முழுத் தகவலை அளிக்க 60 நாட்கள் கொடுத்தாலும் ஜெனீவாவில் அடையப்பட்ட உடன்பாடு டமாஸ்கஸுக்கு ஒரு வார காலம்தான் கொடுத்துள்ளது. அமெரிக்கா அதன் சொந்த இரசாயன ஆயுதங்களை அகற்ற கடந்த 18 ஆண்டுகளை செலவழித்திருக்கையில், இன்னும் இது முற்றிலும் முடிய ஒரு தசாப்தம் ஆகும் என்று கூறுகையில்—சிரியா இதே பணியை, ஒன்பது மாதங்களில் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது
இத்தடைகளை கடப்பதில் தோல்வி ஏற்படுவது போருக்கான காணத்தை அளிக்கும்; இதைத்தவிர அல் குவேடா தலைமையிலான “எழுச்சியாளர்கள் மற்றொரு இரசாயன ஆயுதங்கள் ஆத்திரமூட்டலை நடத்தி அசாத் ஆட்சியை குறைகூறும் திறனும் உள்ளது. 
இரசாயன ஆயுதங்கள், அமெரிக்காவின் நேரடி இராணுவத் தலையீட்டிற்கான நோக்கம் அல்ல, வெறும் போலிக்காரணம்தான். இத்தகைய போக்கு, பெருநிறுவன செய்தி ஊடகம் போர் பிரச்சார்த்திற்காக பாடுபடுவதின் மூலம் அளிக்கப்படுகிறது, அதாவது வாஷிங்டன் சிரியாவின் உள்நாட்டுப்போரில் வெறுமே பீதியுடன் வெளியே இருந்து பார்க்கும் நிலை, பாதுகாப்பற்ற குடிமக்கள் நலன் பற்றித்தான் அக்கறை கொண்டுள்ளது என்பவை, அபத்தமான பொய்கள் ஆகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் இப்போரின் முக்கிய குற்றவாளியாக உள்ளது; அசாத் விரோத எழுச்சியாளர்களுக்கு கால் பில்லியன் டாலர்கள் உதவியை அளித்துள்ளது, இன்னும் அதிக நிதி, ஆயுதங்களை அரபு உலகில் அதன் முக்கிய நட்பு நாடுகளான, பிற்போக்குத்தன சௌதி அரேபிய, கட்டார் சுன்னி முடியரசுகள் மூலம் வழங்கப்பட்டதை ஒருங்கிணைத்தது.

இப்பொழுது CIA, நேரடியாக இஸ்லாமியவாதிகள், குற்றவாளிகள், கூலிப்படைகள் என நாட்டை அழிக்கும் “எழுச்சியாளர்” களுக்கு பயிற்சிகளையும் அளித்து, ஆயுதங்களையும் கொடுக்கிறது. வாஷிங்டனின் பினாமிப் படைகள் தொடர்ச்சியாக பல போர்களில் தோல்வியுற்ற பின், கடந்த ஜூன் மாதம் அல் கசயரில் தொடங்கியதுதான், அமெரிக்கா இராசயன ஆயுதங்கள் என்னும் “சிவப்பக் கோட்டை” நிர்ணயித்து போருக்கு விரையும் நிலையை ஏற்படுத்தியது. சிரிய மக்களின் பரந்த அடுக்குகளின் எதிர்ப்பைச் சம்பாதித்தபின், அதுவும் பிற்போக்குத்தன இஸ்லாமியவாத சிந்தனை மூலம் குறுங்குழுவாத, குருதி கொட்டும் செயல்பாட்டின் பின், சிஐஏ ஆதரவு பெற்ற சக்திகள் தோல்வியின் விளிம்பில் இருந்தன.
இன்னும் அடிப்படையில், சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு அமெரிக்கா செயல்படுத்தும் போர் என்பது, எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு மற்றும் இன்னும் பரந்த அளவில்  மூலோபாய ரீதியாக முக்கியமான யூரேசிய நிலப்பகுதியின்மீது அதன் மேலாதிக்கத்தை உறுதி செய்யம் வாஷிங்டனின் மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும். ஒபாமா நிர்வாகம் அதன் ஒப்பீட்டளவிலான பொருளாதாரச் சரிவை ஈடுகட்டுவதற்கு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ மேலாதிக்கத்தை, அவரின் முந்தைய ஆட்சியாளர், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் கொண்டிருந்த அதே கொள்ளை முறையைத்தான் தொடர்கிறது. சிரியத் தலையீடு, வெறுமனே டமாஸ்கசில் ஆட்சி மாற்றத்தை நோக்கமாக கொண்டது மட்டும் இன்றி, அப்பிராந்தியத்தில் ஈரான், ரஷ்யா, சீனா ஆகியவற்றின் அதிகாரத்தையும், செல்வாக்கையும் முறிப்பதற்கும்தான். 
அமெரிக்க கடற்படைத் தாக்குதல் படையும், வளர்ந்து வரும் ரஷ்ய கடற்படையும் கிழக்கு மத்தியதரைக் கடலில் ஒன்றை ஒன்று எதிர்கொள்கின்றன.

சிரிய இரசாயன ஆயதங்களில், அமெரிக்க-ரஷ்ய உடன்பாடு ஒரு புதிய சமாதான சகாப்தத்தை கொண்டுவரவில்லை. இது வெறுமனே அதிகரித்து வரும் இராணுவ ஆத்திமூட்டல்கள் மற்றம் போர் அச்சறுத்தல் ஆகியவற்றின் மற்றொரு அத்தியாயம்தான்; அப்படித்தான் முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்கு முன் வந்தன.

இரசாயன ஆயுத பயன்பாடு பற்றி பேசும் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் பலஸ்தீனில் இஸ்ரேல் தாக்குதலிற்கு பயன்படுத்தும் “வைட் பொஸ்பரஸ் குண்டுகள்” பற்றி எதுவுமே பேசுவதில்லை!!

'மூஜாஹிடீன்கள்' காத்திருக்கின்றனர் !!! சிரியா விவகாரத்தில் U .N (ஐக்கிய நாடுகள் சபை ) அறிக்கை ! (ஒரு பார்வை ) PART 02


     சிரிய விவகாரத்தில் மேற்கின் நுழைவுக்குப் பின் இப்போது இன்னொரு 'ரீலும்' பக்குவமாக விடப்படுகிறது . அது ரஷ்யாவும் அமெரிக்காவும் இணைந்து விடயங்களை முடிவுக்குக் கொண்டுவர இருப்பதாக அந்த தகவல் தெரிவிக்கிறது . இங்கு ஒரு விடயத்தை நாம் தெளிவாக உணர வேண்டும் . அது இன்று உலகில் தனிப்பெரும் அதிகார அந்தஸ்தில் இருப்பது முதலாளித்துவம் மட்டுமே ஆகும் .அந்த வகையில் ரஷ்யாவோ , சீனாவோ சித்தாந்த எதிர்நிலை என்ற நிலையை பறிகொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது .


                        எனவே புதிய  சந்தை பிடிப்பு ,வளக்கொல்லை தொடர்பான போட்டி அரசியல் மட்டுமே இன்று இவைகளுக்கு மத்தியில் இருக்கின்றது . அதிலும் ரஷ்யா தனது MIC 29 ரக அதிவேக தாக்குதல் விமானங்களை கூட உல்லாசப் பயணிகளுக்கு வாடகைக்கு விட்டு வருமானம் தேடும் அளவுக்கு பஞ்சத்தில் அடிபட்டுள்ளது என்பதை நாம் சொன்னால் சிலருக்கு ஒரு 'ஜோக்' போல இருக்கும் . ஆனால் அதுதான் உண்மையாகும் . 

                  ஆனால் இந்த போட்டி ஏகாதிபத்திய வாதிகளுக்கு இடையில் சிரிய விவகாரத்தில் கூட்டு என்பது ஏன் ?அதாவது ஒட்டு மொத்தமாக U .N ,NATO ,ரஷ்யா என உலகச் சண்டியர்கள் இணைவது ஏன் ? அதன் ஒரே காரணம் தமது கேவலமான சுரண்டல் பிழைப்பு மீது ஒட்டு மொத்தமாக ஒரு பயங்கர அடி விழப்போகிறது என்ற அச்சமே ஆகும் . இந்த அச்சத்தின் காரணம் உணர சிரியப் போராளிகள் தரப்பில் இருந்து வந்துள்ள கூட்டு அறிக்கையின் சுருக்கத்தை கீழே தருகிறோம் .

             "சிரியாவில் பெரும்பகுதி தற்போது எமது கட்டுப்பாட்டிலேயே உள்ளது . இன்னும் குறிப்பிட்ட சில சதுர கிலோமீட்டர்களே பசர் அல் அசாத் வசம் இருக்கின்றது . மற்றும் இந்த NATO ,U .N , தலையீடானது எமது எதிர்கால இஸ்லாமிய அரசிற்கான அடித்தளத்தை அழித்து 'திமோகிரசி' எனும் குப்ரிய தேசிய அரசியலை சிரியாவில் புகுத்துவதற்கான நடவடிக்கையே ஆகும் . அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் .

                      மேலும் சிரியாவின் அணைத்து தரைமார்க்கப் பாதைகளும் எமது பூரண கட்டுப்பாட்டிலேயே உள்ளது .சிரிய மக்களும் எம்மோடு இருக்கிறார்கள் . பசர் அல் அசாதோ , அமெரிக்காவோ ,ரஷ்யாவோ , NATO வோ ,  ஐநாவோ எவர்களாக இருந்தாலும் எமது பார்வையில் ஒரே தரத்தை உடையவர்கள் . இஸ்லாத்தை நிலைநாட்டும் பணியில்  வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் நாம் எதையும் சந்திக்க தயாராகவே உள்ளோம் ! அல்லாஹ் எங்களோடு இருக்கின்றான் ". என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது .

                        எனவே எம்மால் கணிக்கக் கூடிய விடயம் என்னவென்றால் , முதலாளித்துவம் தனது சித்தாந்த ஆதிக்கத்தின் அழிவுப்புள்ளியை தெளிவாகவே சிரியாவில் இனம் கண்டுள்ளது . அந்தப் பதற்றம் அடிவயிற்றை கலக்க U .N ,NATO ,ரஷ்ய கூட்டு என சகல இராஜதந்திர , இராணுவ சைணியங்களையும் களமிறக்கி ஏதாவது ஒன்றை செய்யப் பார்க்கிறது . 

                      அத்தோடு இஸ்லாம் சுற்றிச் சுழன்று தனது பூர்வீக நிலப்பரப்பின் மீது இருந்தே  தனது மீள் மேலாதிக்க வரலாற்றை தொடரப் போகிறது ! என்ற அச்சம் இன்று யகூதி ,நசாராக்களுக்கு மட்டுமல்ல ,குறுநில குபேரர்களாய் சுக போகத்தில் திளைக்கும் அராபிய மன்னர்களுக்கும் ஏற்பட்டுள்ளது .பல பில்லியன்களை வீசி முஸ்லீம்களின் இரத்தத்தை அவர்கள் பருகும் PEPSI போல குடித்தாவது இந்த நெருக்கடியில் இருந்து தப்ப சிலுவை நிழலில் தஞ்சம் புகுந்துள்ளனர் .

                       இன்று இருக்கும் நிலையில் NATO விற்கு ஒரு உள்ளார்ந்த உதவித்தளம் ,மற்றும் சப்போர்ட் படைகள்  அங்கு அவசியமாகும். அந்தப் பணியை பசர் அல் அசாதே செய்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை .ஈரானின் 'ஹிஸ்புஸ் சைத்தான்கள் ' தாம் அவர்களோடு உள்ளார்களே ! இருந்தாலும் மற்றக் களங்கள் போல் அல்லாமல் NATO தனது தரைப்படை அனுப்பும் நிலை வந்தால் .... அந்தப் படை பட்டப் பகலில் கூட 'நைட் விசனோடு' தான். செல்லவேண்டி இருக்கும். காரணம் தமது எதிர்காலம் தொடர்பில் ஒரு இருண்ட சூனியத்தில் தான் இறக்கி விடப்பட்டிருப்பார்.