Facebook Twitter RSS
*/

Latest News


மியான்மரில் மீண்டும் கலவரம்: 10 பேர் மரணம்! ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது


மத்திய மியான்மரில் மீக்திலா நகரத்தில் நேற்று முன் தினம் வெடித்த இனக்கலவரத்தில் ஒரு புத்த சன்னியாசி உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இப்பகுதியில் 3 முஸ்லிம் மஸ்ஜிதுகளை வன்முறையாளர்கள் தீக்கிரயாக்கியுள்ளனர். அங்கு தெருக்களில் சடலங்கள் கிடக்கக் காணப்பட்டதாக ஒரு உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.நகரத்தில் ஒரு நகைக்கடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கலவரத்தில் முடிந்துள்ளது. 200க்கும் மேற்பட்டவர்கள் நகரத்தில் பரஸ்பரம் மோதலில் ஈடுபட்டதாக போலீஸ் கூறுகிறது. காயமடைந்த ஏராளமானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த இப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரத்தை தொடர்ந்து இப்பகுதியில் இருந்து ஏராளமானோர் புலன்பெயர்வதாக அல்ஜஸீரா கூறுகிறது.



மும்பைக் கலவரம்:சுதந்திரமாக சுற்றித்திரியும் சிவசேனா தீவிரவாதிகள்! – நீதியின் ஓரவஞ்சனை!



1992-ஆம் ஆண்டு டிசம்பரிலும் 1993 ஜனவரி மாதமும் மும்பை வீதிகளில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை உயிருடன் தீயில் பொசுக்கி, துப்பாக்கியால் சுட்டு, கத்தியால் குத்தி கொலைச்செய்த சிவசேனா தீவிரவாதிகள் இன்றும் மும்பையில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்.
மும்பைக் குண்டுவெடிப்புக்கு காரணமே அன்று மும்பையில் நடந்த கலவரமாகும் என்று குண்டுவெடிப்பு வழக்கை விசாரணைச் செய்த சி.பி.ஐயின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கலவரத்தை நடத்தியது சிவசேனாக்காரர்களும், அதற்கு தலைமை தாங்கியது பால்தாக்கரேயும் என்று மும்பைக் கலவரத்தைக் குறித்து விசாரணை நடத்திய ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை கூறியது. ஆனாலும், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கவோ அரசுகள் தயாராகவில்லை.
கலவரத்தைத் தொடர்ந்து முஸ்லிம்கள் அவர்களின் நிறுவனங்களையும், சொத்துக்களையும் இழந்துவிட்டு சேரிகளில் தங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார்கள். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபருக்கு உச்சநீதிமன்றம் தூக்குத்தண்டனையை உறுதிச் செய்தது சர்ச்சையை கிளப்பும் வேளையில் குண்டுவெடிப்புக்குக் காரணமான மும்பைகலவரம் குறித்து யாரும் வாய் அசைக்கவில்லை.
மும்பைக் கலவரத்தில் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையின் படி 900 பேர் கொல்லப்பட்டனர். 2036 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதிகாரப்பூர்வமற்ற புள்ளிவிபரப்படி 2000க்கும் மேற்பட்டவர்கள் கலவரங்களில் கொல்லப்பட்டனர். சிவசேனாவிற்கு கலவரத்தில் பங்கு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது. வாக்காளர் பட்டியலுடன் முஸ்லிம்களை தேடிப்பிடித்து திட்டமிட்டு கலவரம் நடத்தப்பட்டது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் அவ்வமைப்பின் தலைவர் பால்தாக்கரே முஸ்லிம்களுக்கு எதிராக விஷத்தை கக்கியதே நூற்றுக்கணக்கான நபர்களின் உயிர் பறிபோக காரணம் என்று ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை கூறியது.
ஒரு முஸ்லிம் கூட சாட்சி கூற மீதம் வைக்கக்கூடாது என்ற உத்தரவை பிறப்பித்தவர் பால்தாக்கரே. ஆனால், சாம்னாவுக்கும், அதேபோல விஷம் கக்கும் செய்திகளை வெளியிட்ட நவகால்பத்திரிகைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு தயாராகவில்லை. அதேவேளையில் மஹராஷ்ட்ரா அரசின் விளம்பரங்கள் தாராளமாக இப்பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டன. பால்தாக்கரேக்கு எதிராக சுண்டுவிரலை அசைக்க கூட அரசு தயாராகவில்லை. அதேவேளையில் தாக்கரே மரணித்தபோது பரிபூரணமான அரசு மரியாதையுடன் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியது அரசு.
சிவசேனா முன்னாள் எம்.பிக்கள் சர்போட்தார், ரமேஷ் உள்ளிட்டவர்கள் முஸ்லிம்களை கொன்றொடுக்க அழைப்பு விடுத்ததை கமிஷன் கண்டறிந்தது. ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கைக்குப் பிறகு சில கண் துடைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது உண்மைதான். ஆனால், அவை பாதிக்கப்பட்டவர்களை அவமானப்படுத்தும் நடவடிக்கைகளாக அமைந்தன.மதுகர் சர்போட்தாரை கலவரத்தை தூண்டும் விதமாக உரையாற்றினார் என்று கூறி மும்பை சிறப்பு நீதிமன்றம் ஒரு ஆண்டு தண்டனை விதித்தது. ஆனால், தீர்ப்பு வெளியாகி ஒரு மணிநேரத்தில் சர்போட்தாருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 2010-ஆம் ஆண்டு சர்போட்தார் மரணிக்கும் வரை சிறைக்கு வெளியேதான் வாழ்ந்தார்.
கலவரத்தில் லட்சக்கணக்கான மதிப்புடைய தொழிற்சாலைகள் தீக்கிரையாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு மஹராஷ்ட்ரா அரசு வெறும் ரூ.4 ஆயிரத்தை இழப்பீடாக வழங்கியது.தனது விலைமதிக்கமுடியாத ஐந்து ஆண்டுகளையும், அரசு கஜானாவில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தையும் ஏன் வீணாக்குகின்றீர்கள்? என்று தனது அறிக்கையின் மீது நடவடிக்கை மேற்கொள்ளாதற்காக ஸ்ரீகிருஷ்ணா அங்கலாய்த்தார்.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும் இதற்கான பொறுப்பில் இருந்து நழுவிட முடியாது. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடும், குற்றவாளிகளுக்கு சரியான தண்டனையும் வழங்க வகைச் செய்யும் கம்யூனல் அண்ட் டார்கெட்டட் வயலன்ஸ் மசோதாவை அமல்படுத்துவோம் என்பது 2004-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தேர்தல் வாக்குறுதியாக அமைந்தது. ஆட்சிக் கட்டிலில் ஏறி பத்தாண்டுகள் கழிந்த பிறகும் ஐ.மு அரசு இம்மசோதாவை கிடப்பில் போட்டுள்ளது.
 ஏவுகணை எச்சரிக்கை கோள் விண்ணில் செலுத்தியது அமெரிக்கா ஈரானைத் தாக்கினால் இஸ்ரேலிய நகரங்களை அழிப்போம்
 

 
ஏவுகணை எச்சரிக்கை செயற்கை கோள் விண்ணில் செலுத்தியது அமெரிக்கா

உலகின் எந்த பகுதியில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டாலும், அதுகுறித்து முன்னெச்சரிக்கை செய்யும் செயற்கை கோளை, அமெரிக்கா,விண்ணில் செலுத்தியுள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வல்லரசு நாடுகளும், வடகொரியா உள்ளிட்ட சில நாடுகளும் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக தயாரித்து தயார் நிலையில் வைத்துள்ளன. அவற்றை எப்போது ஏவினாலும், அதுகுறித்து முன்னெச்சரிக்கை செய்யும் செயற்கை கோளை அமெரிக்கா தயாரித்தது. அமெரிக்காவின், புளோரிடா பகுதியிலுள்ள கேப் கெனவரெல் ஏவுதளத்தில் இருந்து, "ஜியோ-2' என, பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைகோள், "அட்லஸ்-5' ராக்கெட் மூலம், விண்ணில் செலுத்தப்பட்டது. அகசிவப்பு கதிர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்த செயற்கைக்கோள், உலகின் எந்த பகுதியில் இருந்தும்,எதிரி நாட்டு மீது ஏவுகணை ஏவப்பட்டால், உடனடியாக அது குறித்து, அமெரிக்காவுக்கு முன்னெச்சரிக்கையாக தெரிவிக்கும். ஏற்கனவே, "ஜியோ-1' என்ற பெயரில் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கை கோள், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, வெற்றிகரமாக செயல்படவில்லை என்றாலும், 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் குறித்த தகவல்களை அனுப்பியுள்ளது.

ஈரானைத் தாக்கினால் இஸ்ரேலிய நகரங்களை அழிப்போம் - அயதொல்லா காமேனி
அணுஆயுத நடவடிக்கைகளை கைவிடாவிட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேல் கூறிவருகிறது. இந்நிலையில் ஈரான் மதத்தலைவர் அயதொல்லா காமேனி துபாயில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவிவ் மற்றும் ஹைபா நகரங்களை தரைமட்டமாக்குவோம்.
கடந்த சில வருடங்களாகவே ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் கொண்டு வந்து பல்வேறு தடைகளை ஏற்படுத்தியுள்ளன. துடிப்பு மிக்க ஈரானை எந்த ஒரு நாடும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாது.
ஈரான் குடிமக்களின் பயன்பாட்டிற்காகவே அணு ஆயுத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

பெற்றோருடன் அப்துல் நாஸர் மஃதனி சந்திப்பு! பிரார்த்தனையின் போது கண்ணீர் விட்டு அழுதார்!


ஐந்து தினங்கள் ஜாமீன் கிடைத்ததன் மூலம் கர்நாடகா அரசிடமிருந்து நீதியின் புதிய சூரிய உதயம் உருவானதாக நான் நம்பவில்லை என்று பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனி கூறினார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக மக்கள் மத்தியில் உரையாற்றினார் அவர்.
மகள் ஷமீராவின் திருமணத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார் அப்துல் நாஸர் மஃதனி. அப்பொழுது அவர் தனது உரையில் கூறியது:
அரசுகளிடமிருந்து கிடைக்கும் சித்திரவதைகளால் நான் நிராசையடையவில்லை. சில கடுமையான வார்த்தைகளை பிரயோகித்ததால் என்னை சிறையில் அடைத்தார்கள். ஆனால், ஒரு தவறும் செய்யாத மலப்புறத்தைச் சார்ந்த ஸக்கரியா என்ற பதினைந்து வயது சிறுவன் உள்பட ஏராளமானோர் இந்தியாவின் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கு தொடர்பாக முன்பு இரண்டு பேருக்கு நீதிமன்றம் நான்கு தினங்கள் ஜாமீன் வழங்கியதால் நிர்பந்தமான சூழலில் எனக்கு ஜாமீன் கிடைத்தது. பொது சமூகத்தின் தலையீடு ஜாமீன் கிடைக்க காரணமானது.
பெங்களூரில் சந்திக்கும் நீதி மறுப்பு கோயம்புத்தூரை விட பயங்கரமானது. முந்தைய காலங்களில் எனது உரை பாணியில் சில தவறுகள் ஏற்பட்டுள்ளன. இந்த தவறுக்காக சங்குமுகம் கடற்கரையில் நடந்த மாநாட்டில் கேரள சமூகத்திடம் நான் மன்னிப்புக் கோரியுள்ளேன். அதற்கு பிறகும் எனக்கு எதிரான அரசின் நிலைபாடு மாறவில்லை என்பது வேதனையானது. நான் ஒரு உரையை நிகழ்த்தும் சூழலில் இல்லை. கேரள சமூகம் என்னோடு உள்ளது என்பது எனக்கு பலம் தந்துள்ளது.
வலது கண்ணின் பார்வை முற்றிலும் இழந்துவிட்டது. இடது கண்ணின் பார்வை 60 சதவீதம் இழக்கப்பட்டுள்ளது. ஆனால், நான் சித்திரவதைகளால் நிராசையடையவில்லை. இறைவன் அளிக்கும் சோதனைகள் என்னை திடப்படுத்துவதற்கான வாய்ப்பாக கருதுகிறேன். இவ்வாறு அப்துல் நாஸர் மஃதனி கூறினார்.
மஃதனி உரை நிகழ்த்தும்பொழுது தொண்டர்கள் உணர்ச்சி மிகுந்து காணப்பட்டனர். அப்பொழுது மஃதனி, உணர்வுகள் எல்லை மீறினால் தான் மீண்டும் வருவது தாமதமாகும் என்று அறிவுறுத்தினார்.
மஃதனி உரை நிகழ்த்தும்போது கர்நாடக போலீஸ் பல முறை கட்டுப்படுத்த முயன்றது. அவர் தனது உரையில் கட்சி பேதமின்றி தனது ஜாமீனுக்காக பாடுபட்ட முதல்வர் உம்மன் சாண்டி, எதிர்கட்சி தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன், பிணராய் விஜயன், இ.டி.முஹம்மது பஷீர் உள்ளிட்ட அனைவரது பெயரையும் எடுத்துக் கூறி நன்றி தெரிவித்து தனது உரையை இருபது நிமிடங்கள்  நிகழ்த்தினார்.
அதன் பிறகு அன்வாருச்சேரியில் தனது பெற்றோர்களை சந்தித்தார்.நோய்வாய்ப்பட்டுள்ள தந்தை அப்துல் ஸமது மாஸ்டர் மற்றும் தாயார் அஸ்மாபீவி ஆகியோரை சந்தித்த மஃதனி அவர்களுடன் மதிய உணவை சாப்பிட்டார்.
மதிய தொழுகையான லுஹரில் தலைமை வகித்த அப்துல் நாஸர் மஃதனி தொழுகைக்கு பிறகு நடந்த பிரார்த்தனையின் போது கண்ணீர் விட்டு அழுதார். “நான் குற்றவாளி என்றால் என்னை தண்டித்துவிடு. நான் நிரபராதி. தேசத் துரோகம் குற்றம் சாட்டி அடக்கி ஒடுக்க முயற்சிக்கின்றார்கள்.பிறந்த மண்ணை நேசிப்பவர்கள் நாங்கள். நீதிக்காக மரணிக்கவும் தயார்” என்று மஃதனி பிரார்த்தனையின்போது கூறினார்.
பின்னர் அவர் அங்கிருந்தவர்களுடன் நலம் விசாரித்துவிட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். இன்று அவர் சிறைக்கு திரும்புவார் என்று பி.டி.பி வட்டாரங்கள் தெரிவித்தன.


பாக்-இரான் எரிவாயுக் குழாய் திட்டம் தொடக்கம்


இரான் பாகிஸ்தான் எரிவாயுக்குழாய் திட்டம்
பாகிஸ்தான் மற்றும் இரானின் அதிபர்கள் , இரு நாடுகளையும் இணைக்கும் எரிவாயுக் குழாய்த் தொடரை தொடங்கி வைத்துள்ளனர்.
பாகிஸ்தானின் எரிசக்திப் பற்றாக்குறையைக் குறைக்கும் ஒரு வழியாக இந்தத் திட்டம் பார்க்கப்படுகிறது.
ஆனால் பகிஸ்தானின் உடனடி எரிசக்திப் பற்றாக்குறையை இது தணிக்காது என்று கூறும் அமெரிக்கா, இரானின் அணு சக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பாகிஸ்தானுக்கு எதிராக தடைகளைக் கொண்டுவரப்போவதாக அச்சுறுத்தியிருக்கிறது.
இந்த இரு நாடுகளுக்குமிடையே உள்ள எல்லைப்புறத்தில் நடந்த வைபவத்தில் பேசிய , இரானிய அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத், இந்த எரிவாயுக்குழாய்க்கும் அணு சக்தித்திட்டத்துக்கும் தொடர்பில்லை என்று கூறினார்.
இரான் இத்திட்டத்தில் அதன் பங்கை ஏறக்குறைய நிறைவேற்றிவிட்டது. ஆனால் பாகிஸ்தான் அதன் பகுதிக் கட்டுமானத்தை இன்னும் தொடங்கவில்லை.
இத்திட்டம் முன்பு இரானிய எரிவாயுவை, பாகிஸ்தானைத் தவிர, இந்தியாவுக்கும் கொண்டு செல்வதாக இருந்தது. ஆனால் இந்தியா இத்திட்டத்திலிருந்து விலகிவிட்டது.


பட்கல் என்ற பெயரைக் கேட்டாலே ஒரு தீவிரவாதியின் உருவம் மனதில் தோன்றும் அளவுக்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நகரத்தை இண்டலிஜன்ஸ் ஏஜன்சியும்(ஐ.பி), ஊடகங்களும் களங்கப்படுத்தியுள்ளன.
பட்கல் – வடக்கு கர்நாடகாவில் கடலோர பகுதியில் அமைந்துள்ள நகரம். இந்நகரத்தை பெயரை களங்கப்படுத்தியது ஐ.பியும், மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படையும், இவர்கள் அளிக்கும் செய்தியை கதைகளை ஜோடித்து வெளியிடும் ஊடகங்களுமாகும்  என்று இந்நகர மக்கள் கூறுகின்றனர்.
ஹைதராபாத் இரட்டைக் குண்டுவெடிப்பிற்கு பிறகு பட்கலின் பெயர் மீண்டும் ஊடகங்களில் செய்தியாக மாறியுள்ளன. பல்வேறு குண்டுவெடிப்புகளை நிகழ்த்த சதித்திட்டம் தீட்டியவர்கள் என்று ஐ.பி, பல்வேறு மாநில ஏ.டி.எஸ்ஸுகளால் (தீவிரவாத எதிர்ப்பு படையினரால்) குற்றம் சாட்டப்படும் ரியாஸ் ஷாஹ்பந்தரி, சகோதர இக்பால் ஷாஹ்பந்தரி, யாஸீன் என்று அழைக்கப்படும் சித்தி பாபா ஆகியோர் பட்கலைச் சேர்ந்தவர்கள் என்பது இந்நகரத்தை குட்டி பாகிஸ்தானாகவும், இந்திய முஜாஹிதீனின் புகலிடமாகவும் சித்தரிக்கப்பட காரணமாகும்.
பட்கல் தீவிரவாதத்தின் உறைவிடம் என்பது பொய்ப் பிரச்சாரம் என்று கூறுவது இங்குள்ள முஸ்லிம்கள் மட்டுமல்ல.பா.ஜ.க, காங்கிரஸ் எம்.எல்.ஏ, எம்.பி, ஏ.எஸ்.பி ஆகியோர் ஐ.பியின் பொய்ப் பிரச்சாரம் குறித்து கேள்வி எழுப்புகின்றனர். இங்குள்ள மக்களின் வாழ்க்கையை நேரடியாக பார்க்காமல் பட்கலை தீவிரவாத மையமாக ஊடகங்களும், ஐ.பியும் முத்திரைக் குத்துவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ ஏ.ஜே.டி.நாயக் கூறுகிறார்.
ரியாஸ், இக்பால், யாஸீன் ஆகியோர் இங்கு என்ன தீவிரவாத செயல்களை புரிந்துவிட்டார்கள்? என்பது குறித்து தொடர்புடையவர்கள் விளக்கமளிக்கவேண்டும் என்று நாயக் கூறுகிறார்.
ஐ.பி கூறுவதைப் போல பட்கலில் தீவிரவாத செயல்களோ, ஸ்லீப்பர் செல்களோ கிடையாது என்று பா.ஜ.க தலைவரும், முன்னாள் அமைச்சருமான சதாசிவ நாயக் கூறுகிறார். பா.ஜ.கவின் முன்னாள் எம்.எல்.ஏ சித்தரஞ்ச்ன் கொலை வழக்கில் யாஸீன் உள்பட 3 பேருக்கு தொடர்பிருப்பதையும் அவர் மறுக்கிறார். சம்பவம் நடக்கும்பொழுது ரியாஸ் மஹராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்தார்.சி.பி.ஐ விசாரணையில் கூட ரியாஸ் குறித்த விமர்சனம் இல்லை என்று சதாசிவ நாயக் தெரிவிக்கிறார்.
பட்கலை குறித்து வெளியாகும் கதைகள் ஜோடிக்கப்பட்டது என்று வடக்கு கன்னடா எம்.பியான கே.டி.பாலகிருஷ்ணா குற்றம் சாட்டுகிறார்.இங்கு தீவிரவாதிகள் எவரும் இல்லை.இந்தியன் முஜாஹிதீனின் தலைவர்கள் மஹராஷ்ட்ராவில்தான் உள்ளனர். பட்கலில் இல்லை என்று அவர் கோபத்துடன் தெரிவிக்கிறார்.
“பட்கலில் நான் எனது சொந்த பைக்கில் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி சுதந்திரமாக சஞ்சரிக்கிறேன்” என்று பட்கல் பாதுகாப்பு பொறுப்பை வகிக்கும் எ.எஸ்.பி சுதீர் ரெட்டி கூறுகிறார். ரிஸர்வ் ஃபாரஸ்டோடு சேர்ந்துள்ள வீட்டில் வசிக்கும் தனக்கு இதுவரை எவ்வித மிரட்டலும் விடுக்கப்படவில்லை என்று சுதீர் ரெட்டி மேலும் கூறுகிறார்.
கடந்த ஆண்டு சவூதி அரேபியாவில் இருந்து கைது செய்யப்பட்ட ஃபஸீஹ் மஹ்மூதும், யாஸீன் பட்கலும் இங்குள்ள அஞ்சுமன் காலேஜ் ஆஃப் இன்ஜீனியரிங்கில் பயின்றார்கள் என்பது ஐ.பியின் வாதமாகும். கல்லூரி ஆவணங்களில் யாஸீன் இங்கு படித்ததற்கான ஆதாரம் இல்லை. அதுமட்டுமல்ல, யாஸீன் 10-ஆம் வகுப்பு வரை மட்டுமே பயின்றுள்ளார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
2010-ஆம் ஆண்டு யாஸீனின் சகோதரர் அப்துல் ஸமதை மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் 2010-ஆம் ஆண்டு மங்களூர் விமானநிலையத்தில் வைத்து கைது செய்தது. துபாயில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய வேளையில் இந்த கைது நிகழ்ந்தது. பெரிய தீவிரவாதியொருவர் கைது செய்யப்பட்டதாக அன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூட செய்தியாளர்களிடம் தம்பட்டம் அடித்தார். பின்னர் யாஸீன் என்று தவறாக புரிந்து கைது செய்துவிட்டதில் வருந்துவதாக கூறி அப்துல் ஸமதை விடுதலைச் செய்தனர்.
ஐ.பியும், ஊடகங்களும் பட்கலை தீவிரவாத மையமாக சித்தரித்தபோதிலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகில் உயரமான சிவனின் சிலையை காண்பதற்கு வருகை தரும் ஹிந்துமதத்தைச் சார்ந்த பக்தர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் எவ்வித பாதுகாப்பு பிரச்சனைகளோ, மிரட்டல்களோ உருவாகவில்லை.


ஹமாஸ்-பதாஹ் கூட்டரசாங்கம்: புரிந்துணர்வு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

நீண்ட எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் மீண்டும் கூட்டரசாங்கம் ஒன்றினை நிறுவும் நோக்குடன் ஹமாஸ் மற்றும் பதாஹ் புரிந்துணர்வு பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்திருக்கின்றன. இதற்கு முன்னரும் எத்தனையோ தடவை இவர்களுக்கு மத்தியில் உடன் பாட்டை ஏற்படுத்துவதற்கான பல முயற்சிகள் பல தரப்பினராலும் நடந்தேறின. ஆனால்,  ‘பலஸ்தீனின் தேசிய நலன்’என்ற பெயரில் சர்வதேச சக்திகளின் எஜன்டாக்களை தனது தலையில் சுமந்து வந்து தேசியவாத பதாஹ் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்ததால் அவை சாத்தியப்பட வில்லை.

என்றாலும், இம்முறை கூட்டரசாங்கம் ஒன்றை நிறுவுவதற்கான பேச்சுவார்த்தைகள் சற்று நம்பிக்கையளிப்பது போல் தோன்றுகின்றது. காரணம், இம்முறை பதாஹ் மற்றும் ஹமாஸ் இடையிலான புரிந்துணர்வுப் பேச்சுவார்த்தை என்ற சிந்தனை எழுந்த சூழமைகள் முன்னைய காலங்களை விட வித்தியாசமாக அமைந்திருப்பதாகும்.
அண்மையில் மேற்குக் கரையை தனது அதிகாரத்தில் கீழ் வைத்திருக்கும் பதாஹ்வும், காஸாவை தனது அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கும் ஹமாஸும் பெற்றுக் கொண்ட இரு முனை வெற்றிகளும், உலகின் பரவலான எதிர்ப்புக்கு மத்தியிலும் இஸ்ரேல் தன்பாட்டில் அதிகரித்து வரும் குத்ஸ் பிரதேச குடியேற்றங்களும், பதாஹ்வையும் ஹமாஸையும் கூட்டாக செயற்படுவதே நலன் என்ற புள்ளியில் இணைத்திருக்கின்றன.
இதுவே இம்முறை உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தைகளின் அவசியத்தை இரு சாராருக்கும் உணர்த்திய நேரடிக் காரணங்கள் எனலாம். 
இன்னும் சற்று ஆழமாக நோக்கினால், அண்மைக் காலமாக ஹமாஸிற்கு உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் கிடைத்து வரும் அங்கீகாரமும், பல நாட்டு இராஜ தந்திரகளின் காஸா விஜமும் பதாஹ்வை சற்று சிந்திக்க வைத்துள்ளது போன்று தென்படுகிறது.
குறிப்பாக காஸா மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, ஹமாஸிற்கான ஆதரவு பதாஹ் ஆளுகை பிராந்தியமான மேற்குக் கரையில் பாரியளவில் அதிகரித்தது. அது மாத்திரமன்றி, சர்வதேச ஊடகச் சேவையொன்று நடாத்திய கருத்துக் கணிப்பில், மேற்குக் கரையில் பதாஹ்விற்கான ஆதரவில் அதிகளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதாவது கிட்டத்தட்ட 54% மாக இருந்த அறபு தேசியவாதத்தை பின்புலமாகக் கொண்ட பதாஹ்விற்கான ஆதரவு 44% வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய நிலைமாற்று தோற்றப்பாடுகளும் பதாஹ்விற்கு ஹமாஸுடன் கைகோர்ப்பதற்கான அவசியத்தை ஏற்படுத்தியது என்பதனையும் மறுக்க முடியாது. அத்துடன் அறபு இஸ்லாமிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றங்களும், இஸ்லாமியவாதிகளது எழுச்சியும் தேசியவாத பதாஹ்வை இஸ்லாமியப் பின்புலம் கொண்ட ஹமாஸுடனான புரிந்துணர்வு உடன்படிக்கையை நோக்கி நகர்த்தியமைக்கு பங்களித்த மற்றொரு முக்கிய உள்ளகக் காரணியாகும். 
பதாஹ் பலஸ்தீனப் பிரச்சினையில் அரசியல் ரீதியான தீர்வை முன்னுரிமைப்படுத்துகிறது. ஹமாஸ் ஆயுத ரீதியான தீர்வை முற்படுத்துகிறது. இதனால் சர்வதேசத்தின் ஆசிர்வாதத்தோடு இவர்கள் இருவரும் ஒன்று சேரும் புள்ளிகள் மிக அரிது.
எனவே சமீபத்திய இஸ்லாமியவாதிகளுக்கு சார்பான அரசியல் சூழமைவுகளே இவர்களை ஒன்று சேர்ப்பதில் கூடிய பங்கு வகித்திருக்கிறது என்கிறார் பஹ்மி ஹுவைதி.
மேற்கூறப்பட்டவைகள் போக, கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை சார்ந்த 3 முக்கிய அம்சங்கள் இம்முறை இடம் பெறும் பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கையை தருவதாக அல்ஜஸிராவின் அரசியல் ஆய்வாளர் பிராஸ் அபூ ஹிலால் குறிப்பிடுகிறார்.
அவை யாவன:
*      இம்முறையும் கூட்டரசாங்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் பல அமர்வுகளாக இடம்பெறவுள்ளன. அவற்றுக்கிடையிலான கால இடைவெளி மிகவும் குறுகியதாக உள்ளமை சாதகமான ஒரு அம்சமாகும். ஏனென்றால், முன்பெல்லாம் அமர்வுகளுக்கிடையிலான கால இடைவெளி பாரியதாக இருந்தன. இதனால், வெளிச்சக்திகளின் தலையீடுகள் பல எற்பட்டு அடுத்த கட்ட அமர்வுகள் நடைபெறாமலேயே சென்றுள்ளன.
*      இவ்வுடன்படிக்கைக்கு பலம் சேர்க்கும் மிக முக்கியமான இன்னொரு அம்சம்; எகிப்தின் தலைமையில் பதாஹ் மற்றும் ஹமாஸ் உறுப்பினர்கள் அடங்கலான ஒரு குழு, பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செயற் படுத்தப்படுவதனை உறுதி செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளமையாகும்.
அத்துடன், இம்முறை பேச்சு வார்த்தைக்கு தலைமை தாங்குவதனை முர்ஸி தலைமையிலான புதிய எகிப்து பொறுப்பேற்பதும் நம்பிக்கையளிக்கும் ஒரு மாற்றம். ஏனென்றால், இதற்கு முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தவரை, ஹூஸ்னி முபாரக் தலைமையிலான எகிப்து, அமெரிக்கா என்பன மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பதாஹ்விற்கு சார்பாகவே நின்றன. ஆனால் இம்முறை பேச்சு வார்த்தைகளின்போது பழைய  பக்கசார்பான காட்சிகள் மீட்டப்படும் நிலை தவிர்க்கப்படலாம் என்பது உறுதியாக சொல்லக் கூடியாதாக இருக்கின்றமை.
*      அடுத்ததாக, பேச்சுவார்த்தைகள் நடைபெறும் காலப்பகுதியில் பதாஹ் ஹமாஸைப் பற்றியோ அல்லது ஹமாஸ் பதாஹ்வைப் பற்றியோ எதிர்மறை ஊடக அறிக்கைகள் விடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. முன்னைய காலங்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் பயனற்றுப் போவதற்கு பரஸ்பர எதிர்மறை ஊடக அறிக்கைகளும் காரணமாக இருந்தன. இதனால் இம்முறை கலந்துரையாடல்களுக்கான நிபந்தனைகளில், ஊடக அறிக்கைகளை தவிர்ப்பது சீரியஸாக அவதானிக்கப்படும் என எகிப்து தெளிவாகவே தெரிவித்துள்ளமை நோக்கத்தக்கது.
*      இதுவரை இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளில் பல முக்கியமான அம்சங்களில் இரு சாராருக்கும் மத்தியில் நியாயமான உடன்பாடுகள் ஏற்பட்டுள்ளமை பேச்சு வார்த்தைகளின்  வெற்றியை எதிர்வு கூறும் மிக முக்கியமான அம்சமாகும். உதாரணமாக,  ஒரு பொதுத் தேர்தலின் பின்னர், கூட்டரசாங்கம் ஒன்றிற்கான பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதனையே அப்பாஸ் தலைமையிலான பதாஹ் வலியுறுத்தி வந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் சிலபோது பதாஹ்விற்கு எதிராகவோ அல்லது ஹமாஸூக்கு எதிராகவோ அமைந்தால், அது பேச்சுவார்த்தையின் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதனால் ஹமாஸ் அதனை கடுமையாக எதிர்த்தது. என்றாலும், இம்முறை பதாஹ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு தேர்தலுக்கு முன்னரே பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு முன்வந்துள்ளமை சாதகமான அம்சமாகும்.