Facebook Twitter RSS
*/

Latest News


அப்சல் குரு தூக்கு : மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் !


நாடாளுமன்ற தாக்குதல் நாடகம்! அப்சல் குருவுக்கு அநீதியான தூக்கு!
மதுரை உயர்நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 12.02.2013 செவ்வாய்
நேரம் : காலை 10.00 மணி
பங்கேற்போர்
: மனித உரிமை போராளிகள், ஆர்வலர்கள், ஜனநாயக சக்திகள், வழக்கறிஞர்கள், புரட்சிகர இயக்கங்கள்
ஆர்ப்பாட்டம் செய்திட! அனைவரும் வருக!
மதுரை ஆர்ப்பாட்டம்
___________________________________________________________________
  • ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., இந்து மதவெறி பாசிஸ்டுகளை திருப்திபடுத்தவே அப்சல்குரு தூக்கு!
  • ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., சங்கப் பரிவாரங்கள் இந்து பயங்கரவாதிகள் என்று சொன்ன மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே அதற்குப் பரிகாரமாய் அப்சல் குருவை இரகசியமாய் தூக்கிலிட்டுஅறிவித்தார்!
  • சங்கப் பரிவாரங்கள் இந்து பயங்கர வாதிகள் என்றால் காங்கிரஸ் மதச்சார்பற்ற முகமுடி அணிந்த பயங்கரவாதி!
  • இந்திய–ஐரோப்பிய– அமெரிக்க அரசுகளின் பயங்கரவாதமே இசுலாமிய தீவிர வாதத்துக்கு அடிப்படை!
  • நாடாளுமன்றத் தாக்குதலுக்கு திட்டம் வகுத்துக் கொடுத்து மூளையாகச் செயல்பட்டது இந்திய உளவுத்துறை ராவும் இந்து மதவெறி பாசிஸ்டு அத்வானியும் தான்! அதை மூடி மறைக்கவே அப்சல் குரு அவசரக் கொலை.
  • உச்சநீதிமன்றம் உச்சிக்குடுமி மன்றம். இந்திய தேசிய மன சாட்சி என்பது இந்து மதவெறி மனசாட்சி தான்!
  • இந்தியாவில் நீதி, நியாயம், ஜன நாயகம் என்பதெல்லாம் வெற்றுக்கூச்சல்.
  • புனிதமான நாடாளுமன்றமா? கிரி மினல்கள் பொங்கி வழியும் குற்றவாளிகளின் கூடாரமா?
  • இந்திய அரசே!
    காஷ்மீரை கபளீகரம் செய்யாதே!
    7லட்சம் ராணுவத்தை வெளியேற்று!
  • காஷ்மீரின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரி!
  • மதத் தீவிரவாதிகளின் பெயரால்–அரசு பயங்கரவாதம் தாண்டவமாடுகிறது!
    மறுகாலனியாக்கத்தை எதிர்த்துப் போராடும் சொந்த நாட்டு மக்களை ஒடுக்கவே தீவிரவாதம், பயங்கரவாதம் வளர்க்கப்படுகிறது.
    சிறப்பு ஆயுதச் சட்டம், பயங்கர வாத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்.
    பதட்டமான பகுதி என்று அடுக்கடுக்காகப் போட்டுவரும் கருப்புச் சட்டங்கள் பன்னாட்டு மூலதனத்துக்குப் பாய் விரிக்கத் தான்.
    நாட்டை மீண்டும் அடிமை யாக்கும் அனைத்து ஓட்டு சீட்டு
    அரசியல்தரகர்களை எதிர்த்துப் போராடாவிட்டால் நாளையப் பொழுது நமக்கில்லை, கார்ப்பரேட்களுக்கே!
  • சிங்… சிங்… மன்மோகன் சிங்,
    நீயா… நீயா… சோனியா
    பசி… பசி… அகோர பசி, நாட்டை விற்றும் அடங்காத பசி
    பச்சை துரோகத்துக்குப் பெயர் தேச பக்தி!
சட்டம்,நீதி, மனித உரிமைகளை மீறி படுகொலைகளை ரகசியமாக அரங்கேற்றும் போலி ஜனநாயக அரசினை எதிர்த்துப் போராடுவோம்!
போராடும் உரிமைகளை இழக்கும் முன் போராடும் துணிவைப் பெறுவோம்!


அப்சல் குரு தூக்கு : இந்திய அரசின் பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம் !


2001 - பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட அப்பாவி அப்சல் குரு இன்று காலை (9.2.2013) 8 மணிக்கு புதுதில்லி திகார் சிறையில் தூக்கிலடப்பட்டார். இந்தப் படுகொலை நடந்த உடன் இதை பெருமையாக உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே காவி பயங்கரவாதிகள் மனம் குளிருமாறு தெரிவித்திருக்கிறார்.
2002 ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றத்தால் அப்சல் குருவின் மீதான வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் உச்சநீதிமன்றத்தால் 2004-ம் ஆண்டு உறுதி செய்யப்பட்டது. அப்சல் குரு மீதான கருணை மனுவினை சில நாட்கள் முன்புதான் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். இதனையடுத்து காசாப்பை இரகசியமாக தூக்கிலட்டது போல அப்சல்குருவையும் இரகசியமாக தூக்கிலிட்டு கொன்றிருக்கின்றனர். குற்றமிழைத்த கசாப்பை தூக்கிலிட்ட போதே குற்றமிழைக்காத அப்சல் குருவையும் தூக்கிலிட வேண்டும் என்று இந்துத்தவ வெறியர்கள் வற்புறுத்தினர்.
அப்சல் குருவின் குடும்பம் வடக்கு காஷ்மீரில் வாழ்கிறது. கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார் என்பதை குருவின் மனைவிக்கு தெரிவித்திருக்கிறார்கள். அப்சல் குருவின் உடலைக் கூட அவரது உறவினர்களிடம் ஒப்படைக்காமல் சிறையிலேயே புதைக்கப்படுவார் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
அப்சல் குருவை கொன்றிருப்பதால் காஷ்மீர் மாநிலம் மீண்டும் தீப்பற்றி எரியும். இதை எதிர்பார்த்து அங்கே ஊடரங்கு சட்டத்தை பிறப்பித்திருக்கிறார்கள்.
அப்சல் குரு ஒரு அப்பாவி என்பதை அருந்ததி ராய் முதல் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் வரை ஆதாரப் பூர்வமாக நிரூபித்திருக்கின்றனர். கீழே தொடர்புடைய இடுகைகளை வாசகர்கள் அவசியம் படியுங்கள். அதில் அப்சல் குரு தனிப்பட்ட முறையில் எழுதிய கடிதமும் இருக்கிறது. அதில் நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புகளில் எல்லாம் தனது பெயர் வேண்டுமென்றே சேர்க்கப்படுவதை அவர் கண்டிக்கிறார். முக்கியமாக அந்த குண்டு வெடிப்புகளை வெளிப்படையாக கண்டிக்கிறார்.
மூவர் தூக்கு குறித்து அதிகம் அறிந்த தமிழகத்தில் அப்சல் குருவின் நியாயம் பலருக்கும் தெரியாது. பாராளுமன்றத் தாக்குதலில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதும், அத்தகைய ஆதாரங்கள் ஒன்று கூட இல்லாத நிலையில் ‘தேசத்தின் மனசாட்சியை’ திருப்திப் படுத்துவதற்க்காக அவருக்கு மரண தண்டனை அளிப்பதாக வெட்கம் கெட்ட உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.
மேலும் பாராளுமன்றத் தாக்குதல் நிச்சயமாக இந்திய உளவுத்துறையின் சதி நடவடிக்கை என்பதை பல மனித உரிமை அமைப்புகள் உரிய காரணங்களுடன் முன்வைத்திருக்கின்றனர். இதை உண்மையாக விசாரித்துப் பார்த்தால் அன்று இருந்த பா.ஜ.க அரசும், உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படுவார்கள். அதை மறைக்கவே இந்துத்வா கும்பல் அப்சல் குருவை அதிவிரைவாக தூக்கிலட வேண்டும் என்று துடித்தது. காங்கிரசு அரசு இன்று அதை நிறைவேற்றியிருக்கிறது.
இதை காஷ்மீரத்து மக்கள் அறிவார்கள். அப்சல் குரு அநியாயமாகத் தூக்கிலடப்பட்டிருப்பதால் காஷ்மீர் மீண்டும் தீப்பிடித்து எரியும்.  அப்சல் குருவை இரகசியமாக தூக்கிலட்ட இந்திய அரசுக்கு காஷ்மீர் மக்கள் தக்க  பதிலளிப்பார்கள்.
அப்சல் குருவை படுகொலை செய்த இந்திய அரசின் பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிக்கிறோம். பதிவர்கள், வாசகர்கள், அனைவரும் இந்த அநீதியை கண்டிக்க வேண்டுமென கோருகிறோம்.

அப்சல் குரு – உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் !


அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கறுப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம்
அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னைக் கிளை, உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களை ஒருங்கிணைத்து சென்னை உயர்நீதிமன்ற வாயிலில் இன்று மதியம் 1.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 வழக்குரைஞர்கள் கலந்து கொண்டு உணர்வுபூர்வமாக முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தினை தலைமையேற்று நடத்திய சென்னைக் கிளை செயலாளர் வழக்குரைஞர். மில்ட்டன் பேசியதாவது:
”அப்சல் குருவின் மீதான வழக்கு விசாரணை அவருக்கான சட்டபூர்வ வாய்ப்புக்கள் கொடுக்கப்பட்டு நடத்தப்படவில்லை. சந்தேகத்திற்கு இடமில்லாமல் குற்றம் நிரூபிக்கப்படவும் இல்லை. அவருக்காக விசாரணை நீதிமன்றம் நியமித்த ஒரு இளம் வழக்குரைஞர் அவரை ஒருமுறை கூட சென்று சிறையில் பார்த்து பேசாமலேயே வழக்கினை நடத்தியுள்ளார். ஆனால் உச்சநீதிமன்றம் இந்திய மக்களின் மனசாட்சியை திருப்திபடுத்துவதற்காக அப்சல் குருவை தூக்கிலிட வேண்டுமென்று தீர்ப்பு வழங்கி தேசிய வெறிக்கு துணை போனது. ஆளும் காங்கிரஸ் அரசோ, திருட்டுத்தனமாக மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு முறையாக தெரிவிக்காமல், இரகசியமாக இந்த அரசியல் படுகொலையை நிகழ்த்தியுள்ளது. இது காஷ்மிர் மக்களின் சுய நிர்ணய உரிமையை ஒடுக்குகின்ற, மக்களை அச்சுறுத்தும் பாசிச நடவடிக்கையே! இதைக் கண்டித்து ஜனநாயகத்தை விரும்பும் ஒவ்வொருவரும் போராட வேண்டும்”
கண்டன உரையாற்றிய மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்பு பேசியதாவது:
”குடியரசு தலைவர் கருணை மனுவை தள்ளுபடி செய்தவுடன், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்காட வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்ற கீழ்த்தரமான சிந்தனையில் மத்திய அரசு அவசரமாகவும், இரகசியமாகவும் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது. கருணை மனு தாமதமாக தள்ளுபடி செய்த ஒரே காரணத்துக்காக பல தீர்ப்புக்களில் உச்சநீதிமன்றம் மரண தண்டனையை இரத்து செய்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரும் மரண தண்டனையின் விளிம்பில் இருப்பதை நாம் அறிவோம். தொடர்ந்து போராடுவதன் மூலம் தான் நாம் அவர்களை காப்பாற்ற முடியும்”

ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள்:
ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!
அப்சல் குருவை தூக்கிலிட்டதை
கண்டித்து ஆர்ப்பாட்டம்!
நிரூபணமாகாத குற்றச்சாட்டு
பொய்யான சாட்சியங்கள்
குடும்பத்தை பணயமாக்கி
மிரட்டி பெற்ற வாக்குமூலம்
அப்சல் குருவின் குற்றத்தை
நிரூபிக்கும் ஆதாரமாம்!
ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு
சட்டவிரோத விசாரணை நடத்தி
அநீதியாக வழங்கப்பட்டதே
அப்சல் குருவின் தூக்கு தண்டனை!
நிரூபணமில்லா குற்றச்சாட்டில்
தேச வெறியின் வால் பிடித்து
தூக்கு தண்டனையை உறுதி செய்த
உச்சநீதி மன்றத்தின்
தீர்ப்பு வழங்கிய நடவடிக்கை
சட்ட விரோதம் – அநியாயம்!
அதிகாரத்தை தக்க வைக்க
பிஜேபி போட்ட நாடகமே
பாராளுமன்ற தாக்குதல்!
ஊழல் கறையை மறைப்பதற்கு
காங்கிரஸின் சூழ்ச்சிதான்
அப்சல் குருவின் தூக்கு தண்டனை!
அப்சல் குருவின் குடும்பத்திற்கு
தகவல் கூட அளிக்காமல்
இரகசியமாய் நிறைவேற்றிய
அப்சல் குருவின் தூக்கு தண்டனை
சட்ட விரோத அரசியல் படுகொலை!
கார்கில் போர் சவப்பெட்டியில்
காசு பார்த்த பிஜேபியும்
போபர்ஸ் பீரங்கியில்
பொறுக்கித் தின்ற காங்கிரசும்
நாட்டின் பாதுகாப்பை பேசுவது
வெட்கக் கேடு! வெட்கக் கேடு!
தேசிய வெறியைக் கிளப்பிவிட்டு
தீவிரவாதப் பீதியூட்டும்
காங்கிரசின், பீஜேபியின்
முகத்திரையை கிழித்தெறிவோம்!
தேச வெறியின் பெயராலே
வழங்கப்படும் தூக்கு தண்டனை
அரசியல் படுகொலை என்பதை
அம்பலப்படுத்திப் போராடுவோம்!
அப்சல் குருவின் தூக்குக்கு எதிராக
போராடும் காஷ்மீர் மக்களுக்கு
ஆதரவளிப்போம்! போராடுவோம்!
அரச பயங்கரவாதத்தை
சட்டபூர்வமாக்கும் நடவடிக்கையை
முறியடிக்க போராடுவோம்!
காஷ்மீர் மக்களின்
சுயநிர்ணய உரிமைக்காக
குரல் கொடுப்போம்! ஆதரிப்போம் !


மியான்மர் தாக்குதலுக்கு பயந்து தாய்லாந்துக்கு புலன்பெயரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்!


அரசு ஆதரவுப் பெற்ற தீவிரவாத புத்தர்களின் தாக்குதலுக்கு அஞ்சி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரில் இருந்து தாய்லாந்திற்கு புலன் பெயர்ந்துள்ளனர்.

காலநிலையையும் புறக்கணித்து நேற்று படகு மூலம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தாய்லாந்துக்கு புலன்பெயர்ந்தனர்.போதிய உணவோ, குடிநீரோ இன்றி அவர்கள் தாய்லாந்திற்கு பயணித்தனர்.

 “நாங்கள் மியான்மரில் வசிக்க அஞ்சுகிறோம். ராக்கேன் மாநிலத்தில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் கடுமையான வறுமையில் உழலுகின்றனர். இனியும் அங்கே இருந்தால் கொல்லப்படுவோம்.ஆகையால் வேறொரு நாட்டிற்கு செல்கிறோம்” என்று தாய்லாந்துக்கு வருகை தந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் கூறுகின்றனர்.

 மலேசியாவுக்கு புலன்பெயரும் ரோஹிங்கியா முஸ்லிம்களை தாய்லாந்து கடற்படையினர் பிடித்து கடத்தல் காரர்களுக்கு விற்பனைச் செய்வதாக நேற்று முன் தினம் பி.பி.சி கூறியிருந்தது. ரோஹிங்கியா முஸ்லிம்களை பாதுகாக்கவேண்டும் என்று ஆம்னஸ்டி இண்டர்நேசனலும், ஹியூமன் ரைட்ஸ் வாட்சும் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களில் குண்டுவெடிப்பிற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டது – என்.ஐ.ஏ!



இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்புகளும் நாசவேலைகளையும் கட்டவிழ்த்துவிட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களில் வைத்து சதித் திட்டங்களை தீட்டியதாக தேசிய புலனாய்வு ஏஜன்சி கண்டறிந்துள்ளது.

 ஹிந்துத்துவா தீவிரவாதக்குழுவின் தலைவன் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி 2006-ஆம் ஆண்டு மே மாதம் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமாரை நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளான். ஆயுதங்களையும், வெடிப்பொருட்களையும் வாங்குவதற்காக அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியும், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் சாட்சியுமான பரத்துடன் சேர்ந்து தான் இந்திரேஷ்குமாரிடமிருந்து ரூ.50 ஆயிரம் வாங்கியதாக சுனில் ஜோஷி சுவாமி அஸிமானந்தாவிடம் கூறியிருந்தான்.


 விசாரணையின்போது பரத் இதனை ஒப்புக்கொண்டுள்ளான். நாக்பூரில் உள்ள தலைமையகத்தில் வைத்து இந்திரேஷ்குமார், ஜோஷிக்கு ரூ.50 ஆயிரம் அளித்ததையும் பரத் தெரிவித்துள்ளான். 1999-ஆம் ஆண்டு மத்தியபிரதேச மாநிலம் துங்கர்காவோனில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் ஜோஷியும் இதர இரண்டு நபர்களும் டெட்டனேட்டர்களை சோதனை நடத்தியதற்கும் சாட்சிகள் உள்ளனர். அஜ்மீர் குண்டுவெடிப்பை நடத்துவது தொடர்பான அனைத்து கூட்டங்களும் ஜார்க்கண்டில் உள்ள மிஹிஜாம் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது.

 2007-ஆம் ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதி சுனில் ஜோஷியை கொலைச் செய்த பிறகு துப்பாக்கிகளையும், எலக்ட்ரிக் வயர்களும் அடங்கிய இரண்டு பைகளை மத்தியபிரதேச மாநிலம் தேவாஸில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் பாதுகாத்து வைத்திருந்ததற்கும் சாட்சி உண்டு.

ராம்ஜி கல்சங்கரா என்ற ஆர்.எஸ்.எஸ் தலைவன் இதில் ஒரு பையை எடுத்துவிட்டு மற்றொன்றை நர்மதா நதியில் எறிந்ததாக என்.ஐ.ஏ அதிகாரிகள் கூறுகின்றனர்.தற்போது எந்த வழக்கிலும் இந்திரேஷ்குமார் குற்றவாளி இல்லை என்றாலும், புலனாய்வு ஏஜன்சிகளின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய 10 பேர் ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்று மத்திய உள்துறைச் செயலாளர் ஆர்.கே.சிங் கூறியிருந்தார்.

அப்ஸல் குரு:கலங்க வைத்த கடைசி தருணங்கள்!




அல் ஃபிதா – நான் ‘விடை பெறுகிறேன்’. தூக்கிலிடுவதற்கு சில நொடிகளுக்கு முன் அப்சல் குரு உதிர்த்த வார்த்தைகள் . பின்பு அப்சல் குருவின் தூக்கு மேடைக்கு கீழ் இருக்கும் பாதாளக் கதவுகள் திறக்கப்பட்டன. அதை திறப்பதற்கு ஒரு பிடியை நகர்த்தினார் மரண தண்டனையை நிறைவேற்றும் அந்த சிறைச் சாலை ஊழியர்.
அந்த பெயர் சொல் விரும்பாத சிறைச் சாலை ஊழியர் சொன்னதாவது:
அப்சல் குருவின் உயிர் ஒரு நிமிடத்தில் பிரிந்தது . ஆனால் சிறைச் சாலையின் விதி முறைப்படி அரை மணி நேரம் உடலை தொங்கவிடப்பட வேண்டும். அதன் பின் அவரது உடல் இஸ்லாமிய சடங்குகளுடன் திகார் சிறை எண் 3 அருகே புதைக்கப்பட்டது . கஷ்மீரைச் சார்ந்த மக்பூல் பட்  கல்லறையின் அருகே அப்சல் குருவின் உடலும் புதைக்கப்பட்டது.
ஆனாலும் இவர்கள் இருவருக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருந்தன . அப்சல் கஷ்மீர் பிரிவினை பற்றி பேசியது இல்லை. தான் விரும்பாமல் இந்த விசயத்தில் தன்னை தேவை இல்லாமல் இழுத்து வந்து விட்டார்கள் என்று கூறுவார். மேலும் இந்தியாவில் ஊழல் ஒழியவேண்டும் என்று விரும்பியவர் அப்சல் குரு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் உள்ள வலதுசாரி ஆதரவாளர்கள் (ஹிந்துத்துவா-சக்திகள்) அப்சல் குருவின் தூக்கை கொண்டாடினாலும் , சிறைச்சாலை வளாகம் அமைதியாகவே காணப்பட்டது. சிறை ஊழியர்கள் பலரும் வருத்ததுடன் காணப்பட்டனர். காரணம் அப்சல் குருவை தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும் பொது அவர் எல்லோரையும் பெயரை குறிப்பிட்டு தான் விடை பெறுகிறேன் என்று சொல்லியவாறு நகர்ந்தார்.
அவர் உண்மையாக தனது மார்க்கத்தை நேசிப்பவர் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்பவர் . தூக்கிடுவதற்கு முன் ஒன்றே ஒன்று தான் அவர் கேட்டுக் கொண்டார். ‘எனக்கு அதிக வலி அறியமுடியாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் ‘ என்றார் . அப்படியே பார்த்துக் கொள்கிறேன் என்ற உறுதி அளித்து அப்சல் குருவின் கண்களை உற்று நோக்கியவாறு கருப்பு துணியை வைத்து அவரது முகத்தை மூடினார் அந்த சிறைச் சாலை ஊழியர் . பின்பு மரணத்தை நோக்கிய அப்சல் குருவின் பயணம் இனிதே நிறைவேறியது.
பலரும் நினைப்பது போல் அப்சல் குருவின் தூக்கு தண்டனை நிறைவேற்றம் குறித்து அவருக்கு ஒரு நாள் முன்பு தெரிவிக்கப்படவில்லை. தண்டனை வழங்கப்பட்ட அன்று காலையில் தான் தெரிவிக்கப்பட்டது.
அன்று காலையில் அப்சல் குரு தேநீர் மட்டுமே அருந்தினார். அவருக்கு உணவு வழங்கப் படவில்லை. குளித்துவிட்டு வெள்ளை ஆடை உடுத்தி தொழுகை நடத்தினார் .
‘இதுவரை திகார் சிறைச் சாலை 25 க்கும் மேற்பட்ட தூக்கு தண்டனைகளை நிறைவேற்றி உள்ளது. எங்கள் அனுபவத்தில் 10 நபர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றி உள்ளோம். ஆனால் நாங்கள் அப்சல் குருவைப் போல், மரணம் தனக்கு வருவதை அறிந்தும் இவ்வளவு அமைதியும் அடக்கத்தையும் கட்டிக் காத்த மனிதரை பார்த்ததில்லை’
கடைசி இரண்டு மணி நேரத்தில் அப்சல் குரு சிறைத் துறை அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அவர் வாழ்வும் மரணமும் பற்றி அவருடை கருத்துகளை முன்வைத்தார். உலக சகோதரத்துவம், ஒருமைப்பாடு , மனித நேயம் குறித்து பேசினார். எந்த மனிதனும் தீயவன் அல்ல, எல்லா உயிர்களும் ஆண்டவனால் படைக்கப் படுகிறது. நாம் உண்மையின் பாதையை தேர்ந்தெடுத்து செல்ல வேண்டும். அது தான் உண்மையான சாதனை என்று விளக்கினர். ஒரு புத்தகத்தில் அவரது சிந்தனையை எழுதி தேதி குறிப்பிட்டு கையெழுத்தும் இட்டார் .
சிறை அதிகாரிகள் அவரது குடும்பத்தை இனி யார் பார்த்துக் கொள்வார்கள்? என்ற கேள்வியை அவரிடம் எழுப்பினார்கள். அதற்கு அவர், கடவுள் தான் எல்லா உயிர்களையும் பார்த்துக் கொள்கிறார். ஆகவே எனது குடும்பத்தையும் அவரே பார்த்துக் கொள்வார் என்றார் .
அவரின் பலமே ஆன்மீகம் தான். அப்சல் நன்கு படித்தவர். இஸ்லாம் மற்றும் இந்து மதத்தை நன்கு அறிந்தவர். இரு மதங்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை அடிக்கடி சொல்வார். சில காலங்களுக்கு முன் (ஹிந்து மதத்தின்) நான்கு வேதங்களையும் படித்துள்ளார். எத்தனை இந்துக்கள் நான்கு வேதங்களும் படித்துள்ளனர். ஒரு நல்ல ஆன்மா நம்மை விட்டு விலகும் போது நமக்கு அது பெரும் சோகத்தை விட்டுச் செல்கிறது என்றார் சிறை ஊழியர்.
இதற்கு முன் தூக்கு மேடைக்கு செல்லும் கைதிகள் நடுங்கிய படி தான் செல்வார்கள் . ஆனால் அப்சல் குரு அமைதியாக மகிழ்ச்சியாக முகத்தில் சோகம் இல்லாது ஒரு புன்னகையுடன் தான் தூக்கு மேடைக்கு சென்றார். அந்த புன்னகைக்கு பின்னால் ஆயிரம் பொருள் இருந்திருக்கும்.
மற்ற கைதிகளை தூக்கு மேடைக்கு கொண்டு செல்லும் போது, அவர்கள் பொதுவாகவே மதத்தை குறித்தும் அவர்கள் சார்ந்த அரசியல் சித்தாந்தம் குறித்தும் புலம்பியபடியே செல்வார்கள் . ஆனால் அப்சல் குரு , எவ்வகையிலும் புலம்பவில்லை. தன்னுடைய அறையில் இருந்து சுமார் நூறு அடி தூரம் வரை இருந்த தூக்கு மேடைக்கு செல்லும் வரை சுற்றி இருந்த அனைவருக்கும் தனது வாழ்த்துகளை சொல்லியபடியே நகர்ந்தார்.
இப்படி ஒரு மனிதரை இனி திகார் சிறை பார்ப்பது அரிது தான்.

அப்ஸல் குருவுக்கு தூக்கு அல்ல – நீதிக்கு தூக்கு!




ஆயிரம் குற்றவாளிகள் தப்பிவிடலாம்! ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது! என்பது நீதியின் தர்மம்! ஆனால், ஆயிரங்குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் பொழுது அப்பாவிகள் தொடர்ந்து தண்டிக்கப்படுகின்றார்கள் என்பதன் அண்மை உதாரணம்தான் அப்ஸல் குரு.
பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்ஸல் குருவை தூக்கிலிட்டதன் மூலம் அரசு அளிக்கும் செய்திதான் என்ன? தீவிரவாதத்துடன் எவ்வித சமரசமும் கூடாது என்பதா? சட்டம் தன் கடமையை சரியா நிறைவேற்றும் என்பதா? எனில், இதர சில கேள்விகளுக்கும் நாம் பதில் தேட கடமைப்பட்டுள்ளோம்!
பாராளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மன்னிக்க முடியாத அதிகபட்ச தண்டனைக்குரிய தேசத் துரோகம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்த தாக்குதல் யாரால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது என்பதில் பலத்த சந்தேகம் நிலவுகிறது. அதேவேளையில் அதிகபட்ச தண்டனை (capital punishment) என்பதை நிர்ணயிக்க நாம் இந்நாட்டில் எழுதி வைக்கப்பட்டுள்ள சட்டங்களைத்தான் அளவுகோலாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
அப்ஸல் குரு வழக்கில் பாரபட்சமும்,பழுதுகளும் நிறைந்த விசாரணை நடைபெற்றதாகவும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு சட்ட உதவி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வலுவாக எழுந்தது. அப்ஸல் குரு அப்பாவி என்பதை அருந்ததி ராய் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்கள்.
போலீஸின் விசாரணை ஊனமான, பலகீனமானது என்று கூறியது வேறு யாருமல்ல! உச்சநீதிமன்றம் தான் கூறியது. பாராளுமன்றத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி என்று போலீஸ் குற்றம் சாட்டிய டெல்லி பேராசிரியர் எஸ்.ஏ.ஆர் கிலானியை உயர்நீதிமன்றம் குற்றமற்றவர் என கூறி விடுதலைச்செய்தது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு நபரான ஷவ்கத்திற்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை உச்சநீதிமன்றம்தான் ரத்துச் செய்தது. ஆனால், சமூகத்தின் கூட்டு மனசாட்சியை (Total Conscience of the Society) திருப்திப் படுத்த மரணத்தண்டனை விதித்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிச் செய்தது. சமூகத்தின் கூட்டு மனசாட்சிக்கு எதனை அளவுகோலாக உச்சநீதிமன்றம் எடுத்துக்கொண்டது? என்ற கேள்விக்கு பதில் இல்லை.
அன்று உச்சநீதிமன்றம் கூறிய சமூகத்தின் கூட்டு மனசாட்சிக்கு இன்று சங்க்பரிவாரை திருப்திப்படுத்த அப்ஸல் குருவை தூக்கிலிட்டதன் மூலம் விளக்கம் அளித்துள்ளது ஐ.மு அரசு!
குடும்பத்தினருக்கு கூட தெரியாமல் ரகசியமாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கருணை மனு நிராகரிக்கப்பட்டால் அதனை நீதிமன்ற மீளாய்வுக்கு(judicial review) உட்படுத்தும் அரசியல் சாசன உரிமை அப்ஸல் குருவுக்கு மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அஜ்மல் கஸாபுக்கும் இந்த உரிமை மறுக்கப்பட்டது. தீவிரவாத தாக்குதலுக்கு அநியாயமாக பழி சுமத்தப்பட்டவரை மட்டும் தண்டித்து சமூகத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்த அரசு அவசரம் காட்டியபொழுது, இந்த தேசத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க முயலும் உண்மையான குற்றவாளிகள் மற்றும் அவர்களது சூழ்ச்சிகளுக்கு எந்த தீர்வும் காணப்படவில்லை.
சமூகத்தின் கூட்டு மனசாட்சியை கட்டமைப்பதில் இன்று தேசத்தில் பல்வேறு குண்டுவெடிப்புகளின் மூலம் தீவிரவாதத்தை கட்டியெழுப்பிய ஹிந்துத்துவா சக்திகளின் பங்கு முக்கியமானதாகும். அவர்களின் அரசியல் பிரதிநிதியான பா.ஜ.கவின் வாயை மூட இந்த மரணத் தண்டனையின் மூலம் ஐ.மு அரசு சாதித்திருக்கலாம். அதன் பிரதிபலனை அடுத்த பொதுத் தேர்தலில் ஆதாயமாக மாற்றவும் ஆளுங்கட்சி கருதியிருக்கலாம். ஆனால், சர்வதேச அளவில் மரணத்தண்டனைக்கு எதிராக வலுவான குரல்கள் எழுப்பப்பட்டு வரும் வேளையில், பெரும்பாலான நாடுகள் தூக்குத் தண்டனையை வாபஸ் பெற்றுள்ள சூழலில் உலகின் பெரிய ஜனநாயக தேசமான இந்தியாவின் இமேஜை இத்தண்டனை பாதிக்கும்.
கஷ்மீரின் முக்கிய நகரங்களில் கொந்தளித்த மக்கள் இந்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி மீண்டும் போராட்ட களத்திற்கு திரும்பியுள்ளனர். 1984-ஆம் ஆண்டு மக்பூல் பட்டை தூக்கிலிட்டது கஷ்மீரில் கொந்தளிப்பை உருவாக்கியது. ஒரு தேசம் தனது குடிமக்களிடம் கருணையும், தயவும் காண்பிக்கும் பொழுதே உண்மையில் அந்த தேசம் வலுவானதாக மாறும். அரசியல் லாபம் கருதி அப்பாவி அப்ஸல் குருவை தூக்கிலிடுவதில் அவசரம் காட்டியவர்கள் சட்டத்தின் கடமையை(?) நிறைவேற்றுவதற்கிடையே இதனை மறந்துவிட்டார்கள் போலும்!
-நன்றி செய்யது அலீ