Facebook Twitter RSS
*/

Latest News

இதுதான் பா.ஜ.க வின் இலச்சணம் இவர்களை நாடாலவிட்டால் நாட்டுக்கே பெரிய  ஆபத்து செந்தியுங்கள்....................


பாஜக அலுவலகத்தில் ஒரு பெண்  பலாத்காரம்.. அடங்காமல் தொடரும் பாலியல் கொடூரம்


டெல்லி: மத்தியப் பிரதேச மாநிலத்தில் தலைநர் போபால் அருகே பாஜக அலுவலகத்தில் வைத்து ஒரு இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அந்த மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் மாணவி ஒருவரை ஓடும் பஸ்சில் வைத்து ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில் அதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இந்த நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அருகே பாஜக அலுவலகத்தில் வைத்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பரஸ்வாரா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்துள்ள புகாரில், கடந்த 17-ம் தேதி மதியம் உள்ளூரில் உள்ள பரஸ்வாரா பகுதி பாஜக அலுவலகத்திற்கு நான் இன்டர்நெட் பார்க்க சென்றேன். அப்போது அங்கு வந்த எனது உறவினர் என்னை அங்கு உள்ள ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார். உள்புறமாக கதவை தாழ்ப்பாள் போட்டு என்னை கட்டாயப்படுத்தி கற்பழித்தார். இது பற்றி வெளியே சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டி சென்று விட்டார். வெளியே சொன்னால் சமுதாயத்தில் அவமானமாகப் பார்ப்பார்கள் என்று நானும் மவுனமாக, இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் இருந்து விட்டேன் என்று கூறியுள்ளார். 3 பேரால் பலாத்காரம்.. 17 வயது பெண் தற்கொலை இதேபோல பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா நகரில் 3 பேர் கொண்ட கும்பலால் 17 வயதுப் பெண் சீரழிக்கப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சியால் அவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். நாடு முழுவதும் தினசரி இதுபோன்ற கொடூரங்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

ஹிந்துத்துவா தீவிரவாதி சுனில் ஜோஷியை கொன்ற ஹிந்துத்துவா பயங்கரவாதி ராஜேந்தர் சவுத்ரி!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியை, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு குற்றவாளியான ஹிந்துத்துவா பயங்கரவாதி ராஜேந்தர் சவுத்ரி கொலைச்செய்ததாக கருதப்படுகிறது.2007-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனில் ஜோஷி மர்மமான முறையில் கொலைச் செய்யப்பட்டான். இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளி அண்மையில் மத்திய பிரதேச மாநிலத்தில் வைத்து கைதுச் செய்யப்பட்ட ராஜேந்தர் சவுத்ரி என்று என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தங்களின் ரகசியங்கள் வெளியுலகிற்கு தெரியாமலிருக்க சுனில் ஜோஷியை ஹிந்துத்துவா சக்திகள் கொலைச் செய்துள்ளனர். 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்த மாலேகான் குண்டுவெடிப்பு, 2007 பெப்ருவரி மாதம் நிகழ்ந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, 2007 அக்டோபரில் அஜ்மீர் தர்காவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு, 2008-ஆம் ஆண்டு மலேகானிலும், மொடாஸாவிலும் நிகழ்ந்த குண்டுவெடிப்பு ஆகியவற்றை சதித்திட்டம் தீட்டியதில் ஜோஷி முக்கிய பங்கு வகித்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதில் அஜ்மீர் தர்காவில் குண்டுவைப்பதற்கான திட்டம் வெற்றிப் பெற்றதில் ஜோஷிக்கும் அளவுக்கதிகமான தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது.இவ்வழக்கில் போலீசார், அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதுச்செய்ததும், மக்களிடையே முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வு வளர்ந்ததும், ஜோஷிக்கு சந்தோசத்தை ஏற்படுத்தியது.தங்களின் பின்னால் புலனாய்வு ஏஜன்சிகள் வராததும், சதித்திட்டங்கள் தீட்டுவது, இயக்கத்தை வழி நடத்துவது ஆகியவற்றில் ஜோஷிக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியதோடு காரியங்களை எளிதாக கையாளவும்வழிவகுத்தது.இதனைத்தொடர்ந்து பலரிடம் ரகசியங்களை ஜோஷி பகிர்ந்துகொண்டுள்ளான்.இதனை இயக்கத்தின் இதர தீவிரவாதிகள் அச்சுறுத்தலாககண்டனர். இதன் மூலம் ஜோஷியை கொலைச்செய்வதை தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. மத்தியபிரதேச மாநிலம் மோவ் பிரதேசத்தில் ஜோஷி கொலைச்செய்யப்பட்டான்.இதைப்போலவே பல்வேறு கொலைகள் நடந்துள்ளன.இதனைக்குறித்தும் என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது.தற்போது சம்ஜோதா எக்ஸ்பிரஸ்,மக்கா மஸ்ஜித், மலேகான் குண்டுவெடிப்புகளில் தனது பங்கினை ராஜேந்தர்சவுத்ரி ஒப்புக்கொண்டுள்ளான்.சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வைக்கப்பட்டநான்கு குண்டுகளில் ஒன்றை வைத்தவன் ராஜேந்தர் சவுத்ரி ஆவான்.


மலேகானிலும் நாங்கள் தாம் குண்டுவைத்தோம்: ஹிந்துத்துவா பயங்கரவாதி வாக்குமூலம்!


2006-ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவைத்தது நாங்கள் தாம் என்று சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹிந்துத்துவா பயங்கரவாதி வாக்குமூலம் அளித்துள்ளான். தேசத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய 2006-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பில் 37 பேர் பலியானார்கள். 300 பேருக்கு காயம் ஏற்பட்டது. துவக்கத்தில் இவ்வழக்கை விசாரித்த மஹராஷ்ட்ரா மாநில தீவிரவாத எதிர்ப்பு படையினர்(ஏ.டி.எஸ்) தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் உறுப்பினர்கள் என அநியாயமாக குற்றம் சாட்டி ஒன்பது முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மலேகான் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் என்று சுவாமி அஸிமானந்தா அளித்த வாக்கு மூலம் இவ்வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது. சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டு வைத்த வழக்கில் தொடர்புடைய இதர குற்றவாளிகளான டான்சிங், ராம்ஜி கல்சங்கரா, அஸ்வினி சவுகான், ஆகியோருடன் நானும் சேர்ந்து மலேகானில் குண்டு வைத்ததாக அண்மையில் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினில் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதி ராஜேந்தர் சவுதரி ஒப்புக்கொண்டுள்ளான். இதில் டான்சிங், ராஜேந்தர் சவுதரி கைது செய்யப்பட்ட பின்னர் அளித்த தகவலின் அடிப்படையில் மறுதினமே கைது செய்யப்பட்டான். இவ்வழக்கில் இதர குற்றவாளிகளான ராம்ஜி மற்றும் அமித் என்ற அஸ்வினி சவுகான் ஆகியோர் தற்போதும் தலைமறைவாகவே உள்ளனர். இவர்கள் தாம் மலேகான் சென்று குண்டு வைப்பதற்கான இடத்தை தேர்வு செய்துள்ளனர். மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷிக்கும், சந்தீப் டாங்கேவுக்கும் இத்தகவல் தெரிந்துள்ளது. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மலேகானை குண்டுவைக்க தேர்வு செய்ததாக ராஜேந்தர் சவுதரி வாக்குமூலம் அளித்துள்ளான். வெடிப்பொருட்கள் எங்கிருந்து வந்தது? என்பதை குறித்து என்.ஐ.ஏ தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது. குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைத் தொடர்ந்து ராஜேந்தர் சவுதரி மலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றவாளியாக சேர்க்கப்படுவான்.

அரச பயங்கரவாதம் :படைத்தவனே இந்த உலகில் எந்தத் தாய்க்கும் எந்தத் தந்தைக்கும் இந்த நிலை வந்துவிடக்கூடாது


எதற்காக எங்கள் மகனை இப்படிக் கொல்லாமல் கொல்கிறார்கள்? அவன் குற்றவாளிதான் என்றால் தாராளாமாகத் தண்டியுங்கள். ஆனால் குற்றம் நிரூபனமாகும் வரை ஜாமீன்கூட மறுக்கப்படுவது காட்டு நீதியல்லவா?' இப்படிக் கேட்பவர்கள் அப்துந் நாஸர் மஅதனியின் தந்தை டி.எ. அப்துஸ்ஸமது மாஸ்டரும் அவருடைய மனைவி அஸ்மாபீவியும் தான். "கோவையில் விசாரணைக் கைதியாக எங்கள் மகனை ஒன்பதே கால் வருடம் சிறையில் அடைத்திருந்தார்கள். இறுதியில் குற்றவாளியல்ல என்று தீர்ப்பளித்து நீதினம்றன் அவனை விடுதலை செய்தது. சிறையிலிருந்து வெளியே வந்து மீண்டும் ஒரு வாழ்க்கையைத் தொடங்குவதற்குள் பெங்களூரு போலீஸ் வந்து அவனைக் கைது செய்து அழைத்துச் சென்றுவிட்டது. பிணையில் கூட விடுவிக்காமல் அவனை ஏன் இப்படி அடைத்து வைத்திருக்கிறார்கள்? படைத்தவனே இந்த உலகில் எந்தத் தாய்க்கும் எந்தத் தந்தைக்கும் இந்த நிலை வந்துவிடக்கூடாது." எழுபத்து இரண்டு ஸமத் மாஸ்டரும் அஸ்மாபீவியும் மனம் உடைந்து அழுது பிரார்த்திக்கிறார்கள். ஓடித் தளர்ந்த இயந்திரம் போல் உள்ளார் இந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். மகனுக்கு நீதி வேண்டி ஆண்டுக்கணக்கில் அதிகாரிகளின் அரண்மனைக் கதவுகளைத் தட்டிய ஸமத் மாஸ்டர், பக்கவாதம் வந்து படுத்த படுக்கையில் ஆகிவிட்டார். அதனால் அப்துந் நாஸர் மஅதனியை பெங்களூரு போலீசார் அழைத்துச் சென்றதைக்கூட பல மாதங்களுக்குப் பின்புதான் அறிந்தார். கோவை சிறையில் மஅதனி இருந்த போது நீதிக்கான போராட்டத்தில் ஸமத் மாஸ்டர் முன்னனியில் இருந்தார். ஆனால் இன்று நாற்காலியில் தளர்ந்தமர்ந்து கண்ணீர் விடத்தான் முடிகிறது. அடக்குமுறைகள், அநீதிகள் எனும் எத்தனையோ ஆழிப்பேரலைகளை எதிர்கொண்டதுதான் இந்தக் குடும்பம். பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதை ஒட்டி மஅதனியின் ஐ.எஸ்.எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டது. அப்போது மாஸ்டரும் மனைவியிம் தங்கலின் பாரம்பர்ய வீட்டிலிருந்து வெளியேற வேண்டி வந்தது. வடமாநிலத்தைச் சேர்ந்த மாவட்டக் காவல்துறை அதிகாரியின் தலைமையில்தான் தலைமையில்தான் இவர்கள் வீட்டை விட்டு விரட்டப்பட்டார்கள். அந்த வீடு பிறகு போலீஸ் கேம்ப் ஆக மாற்றப்பட்டது. அந்தக் கொடுமையை ஸமத் மாஸ்டர் நினைவு கூறுகிறார். " டிசம்பர் 31ஆம் தேதி போலீஸ் திடீரென்று வந்து வீட்டில் ரெய்டு நடத்தியது. நாற்காலிகளும் துணிகளும் தவிர வேறு எல்லாவற்றையும் வீட்டிலிருந்து அள்ளிக்கொண்டு போனது. பள்ளிக்கூடத்தில் நடந்த பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்று அப்துந் நாஸர் வாங்கிய பரிசுப் பொருள்கள், சான்றிதழ்கள் எல்லாவற்றையும் போலீஸ் சின்னாபின்னமாக்கியது. இளைய மகன் அன்வர் ஹுசைனுக்கு அன்று ஒரு வயது. குழந்தையையும் தூக்கிக் கொண்டு உடனே வீட்டை விட்டு வெளியேறும் படி அவர்கள் அஸ்மாபீவியை அச்சுறுத்துனர். "மஅதனி தவிர ஏழு மக்களுடன் நாங்கள் அன்று இரவு வீட்டை விட்டு வெளியேறி நடுரோட்டுக்கு வந்து விட்டோம். வீட்டை அன்று இரவே போலீஸ் சீல் வைத்துவிட்டது. கேம்ப் செயல்பாடுகள் தொடங்கிவிட்டன. பிறகு நான்கு ஆண்டுகள் சொந்தக்காரர்கள் பலருடைய வீடுகளில் அபயம் தேடினோம். 1997-ல் வீடு திரும்பக் கிடைத்தபோது ஒரு போர்க்களம் போல் இருந்தது. போலீசார் எங்கள் வீட்டுப் பரப்பைச் சின்னாபின்னபடுத்தி இருந்தார்கள். தென்னை மரங்கள் எல்லாம் கருகிப்போய்க் கிடந்தன. காவல்துறையினரின் கலப்படமற்ற பொய்ச் செய்திகள் குறித்து எந்தப் பத்திரிகையும் ஊடகமும் கண்டுகொள்ள்வே இல்லை. அதைப்பற்றி நாங்களும் கவலைப்படவில்லை. எங்களுக்குப் பிற்ல்காலத்தில் ஏற்பட்ட சோதனைகளையும் வேதனைகளையும் எண்ணிப் பார்க்கும்போது இதெல்லாம் ஒன்றுமே இல்லை. ஸமத் மாஸ்டர் குரல் தழுதழுத்தது. 1998 மார்ச் 31 அன்று ஆட்சேபணைக்குரிய வகையில் பேசினார் என்று கூறி கோழிக்கோடு கசபா காவல் துறையினர் மஅதனியைக் கைது செய்து கோவை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிறகு பினையில் வர அனுமதிக்காமல் ஒன்பது ஆண்டுகளும் நான்கு மாதங்களும் சிறையில் கழிந்தது. அச்சுதானந்தனும் உம்மன் சாண்டியும் வயலார்ரவியும் அவரவரின் தளங்களில் மஅதனி அனுபவிக்கின்ற எல்லையற்ற சிறைவாசப் பிரச்சினையில் தலையிட்டனர். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இறுதியில் கோவை அமர்வு நீதிமன்றம் மஅதனி குற்றமற்றவர் என்று கூறிவிடுதலை செய்யும்படி உத்தரவிட்டது. அவனுடைய இளமைக்காலம் எல்லாம் சிறையிலேயே கழிந்தது. இதோ, இப்போது மீண்டும் அவனைக் கைது செய்துள்ளார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்டு 17ஆம் நாள் அவனை பெங்களூரு போலீஸ் கொண்டு சென்றது. 47 வயதுதான் ஆகிறது என்றாலும் இன்று அவன் ஏராளாமான நோய்களால் தாக்கப்பட்டுள்ளான்.படைத்த இறைவன் மீது நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கைதான் எங்களைக் காப்பாற்றி வருகிறது. நான் அவனைக் கடைசியாகப் பார்த்தது பக்கவாதம் வந்து வீழ்ந்த அன்று காலையில்தான். அவனுடைய உம்மா அவனைப் பார்த்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. மஅதனியின் கண்பார்வை கிட்டத்தட்ட முழுவதுமாகப் போய்விட்டது என்று சொல்கிறார்கள். நீதி கிடைப்பதற்கு இனி என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. தற்கொலை செய்து கொள்வதைக் குர்ஆன் தடுத்திருக்கிறது. இல்லையெனில் நாங்கள் எப்போதோ அந்த வழியைத் தேர்ந்தெடுத்திருப்போம். ஆதரவற்ற இந்த முதிய தாய் தந்தையரின் கண்ணீருக்கு இந்திய அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? நன்றி சமரசம் (டிசம்பர் 16- 31 )

10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் விரைவில் வெளியிடபட்டு அதிர்ச்சி அளிக்கப்படும் - ஜூலியன் அஸாஞ்சே!

பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவற்றில் அனைத்து நாடுகளை குறித்த அதிர்ச்சியளிக்கும் செய்திகள் இடம்பெறும் என்று விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அஸாஞ்சே கூறியுள்ளார். லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் 200-க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அஸாஞ்சே இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் செய்தியாளர்களும் கலந்து கொண்டனர். பாலியல் கொடுமை வழக்கில் விசாரணைக்காக சுவீடனுக்கு நாடு கடத்த பிரிட்டீஷ் போலீஸ் தீர்மானித்ததை தொடர்ந்து ஜூலை மாதம் முதல் அஸாஞ்சே ஈக்வடார் நாட்டில் அபயம் தேடியுள்ளார். ’சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைக் குறித்த ரகசியங்கள் எங்கள் வசம் உள்ளன. அடுத்த வருடம் துவக்கத்தில் அவை அனைத்தும் வெளியிடப்படும். கடந்த ஆண்டுகளைப் போலவே எங்களது உறுப்பினர்களுக்கு 2013 ஆம் ஆண்டு பிசியான ஆண்டாக இருக்கும். எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவோருக்கு எப்பொழுதும் வாசல்கள் திறந்தே உள்ளன. உண்மையான ஜனநாயகம் என்பது வெள்ளைமாளிகையும், கேமராக்களும் அல்ல. சத்தியத்தை ஆயுதமாக்கி (எகிப்தில்) தஹ்ரீர் சதுக்கம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் நடத்திய போராட்டங்களாகும்’ – இவ்வாறு அஸாஞ்சே கூறினார். வியாழக்கிழமை பொது மக்கள் மத்தியில் உரையாற்றுவேன் என்று முன்னரே அஸாஞ்சே ட்விட்டர் மூலம் தெரிவித்திருந்தார்.


எகிப்து: 2-வது கட்ட வாக்கெடுப்பிலும்  இஸ்லாமிய 

அரசியல் சாசனத்திற்கு ஆதரவு!


எகிப்தில் அரசியல் சாசனத்தின் மீதான மக்கள் விருப்ப வாக்கெடுப்பின் 2-வது கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. 17 மாகாணங்களில் நடந்த வாக்கெடுப்பு அமைதியாகவே நடந்தது. எதிர்கட்சியினர் எதிர்ப்புகள் இருந்தாலும், இஃவானுல் முஸ்லிமீனுக்கு செல்வாக்குள்ள இப்பகுதிகளில் அதிபர் முர்ஸியின் முயற்சியால் கொண்டுவரப்பட்டுள்ள அரசியல் சாசனத்திற்கு ஆதரவாகவே வாக்குகள் பெரும்பாலானவை பதிவானதாக கருதப்படுகிறது. மக்கள் கூட்டம் காரணமாக இரவு 11 மணிவரை வாக்குப்பதிவை நீட்டிக்க தேர்தல் கமிஷன் அனுமதித்தது. ஜனநாயகத்தை பாதுகாக்கும் அனைத்து காரணிகளும் அரசியல் சாசனத்தில் இருப்பதாக இஃவான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதனை எதிர்கட்சியினர் எதிர்க்கின்றனர். இம்மாதம் 15-ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்களிப்பின் போது, புதிய அரசியலமைப்புக்கு ஆதரவாக 56.8 வீத வாக்குகளும் இரண்டாம் கட்ட வாக்களிப்பின் போது 71.4 வீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. சர்வதேச ரீதியில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்றிருந்ந எகிப்தின் புதிய அரசியலமைப்பு சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. சர்வதேச அறிஞர்கள் ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி யூசுஃப் அல் கர்ளாவி அவர்கள், “தற்போது தயாரிக்கப்பட்டுள்ள புதிய அரசியல் சாசனம் எகிப்தின் வரலாற்றிலே மிகச் சிறந்த ஒன்று” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த அரசியலமைப்பு 100 சட்ட நிபுணர்கள் சேர்ந்து பல மாதங்கள் கலந்தாலோசித்தே பின்பே உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான மேல் முறையீடுகளை நீதிமன்றம் பரிசீலிப்பதால் நாளை கழிந்த பிறகே அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளிவரும். அரசியல் சாசனம் வெற்றிப் பெற்றால் மூன்று மாதத்திற்குள் பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறும். நேற்று நடைபெற்ற 2-வது கட்ட விருப்ப வாக்கெடுப்பில் பெரும்பாலோனோர் ஆதரவாகவே வாக்களித்ததாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். வாக்களித்தவர்களிடம் நடைபெற்ற கருத்துக்கணிப்பும், அரசியல் சாசனத்திற்கு ஆதரவானதாகும். அதே வேளையில் அதிகாரப்பூர்வமான முடிவுகளை மட்டுமே அங்கீகரிக்க முடியும் என்று எதிர்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

குஜராத் சோமாலியாவை விட மோசம்: மார்க்கண்டேய கட்ஜு!

இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர், மார்கண்டேய கட்ஜு, மத்திய பிரதேச மாநிலம் சென்றிருந்தார். போபாலில் பேட்டியளித்த அவர் கூறியதாவது:- குஜராத் மாநிலம் முன்னேறி விட்டதாக நரேந்திரமோடி கூறிவருகின்றார். இந்த முன்னேற்றம் சராசரி மனிதனின் முன்னேற்றத்துக்கு எந்த வகையிலும் உதவிடவில்லை. மோடியின் தற்பெருமை பேச்சால், தங்களுக்கு எந்த பலனும் இல்லை என்பதை குஜராத் மக்கள் உணரும் காலம் வரும். குஜராத்தில் வாழும் ஏழைகளின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாகவே தொடர்ந்து இருந்து வருகின்றது. ஊட்டச் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஏழை நாடான சோமாலியாவை விட குஜராத்தில் தான் அதிகமாக உள்ளது. தொடர்ந்து, 3வது முறை முதல் மந்திரியாவது என்பது பெரிய காரியம் அல்ல. தற்போது, நம் நாட்டில் தேர்தலில் போட்டியிடுபவர்கள், எப்படி வெற்றியடைகின்றார்கள் என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். 2002-ம் ஆண்டு நடந்த குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையில் மோடியின் பங்கினை மாய்க்க எவற்றாலும் முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.