Facebook Twitter RSS
*/

Latest News


கத்னா(சுன்னத்து) சட்டபூர்வமானது: புதிய சட்டம் கொண்டுவருகிறது ஜெர்மன் அரசாங்கம்

குழந்தைக்கு சுன்னத்து செய்யப்படுகிறது

ஆண்குறியின் முன் தோலை வெட்டிவிடும் வழக்கமான சுன்னத்து சட்டப்பூர்வமானதுதான் என தெளிவாக அறிவிக்கும் புதிய சட்டம் ஒன்றுக்கு ஜெர்மன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

முஸ்லிம்களும் யூதர்களும் தமது ஆண் பிள்ளைகளுக்கு செய்வதைப் போல மதக் காரணங்களுக்கென சுன்னத்து செய்வது சட்டவிரோதமான காரியம் என்று கலோன் நகரத்து நீதிமன்றம் ஒன்று கடந்த ஜூனில் தீர்ப்பளித்திருந்தது.
இந்தத் தீர்ப்புக்கு உலகின் பல பாகங்களிலிருந்து யூதக் குழுக்கள் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் மதக் காரணங்களுக்காக சுன்னத்து செய்வது சட்டப்பூர்வமான ஒரு காரியம்தான் என தெளிவுபடுத்தும் சட்டம் ஒன்றைக் ஜெர்மனியின் அரசு கொண்டுவருகிறது.
மருத்துவ ரீதியில் பயிற்சி பெற்றவர்களே சுன்னத்து செய்ய வேண்டும், சுன்னத்து செய்யும்போதும் செய்த பின்னரும் எழக்கூடிய பிரச்சினைகள் பற்றி பெற்றோர்களுக்கு முழுமையாக அறிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளும் இந்த சட்டத்தில் வரையறுக்கப்படும்.
யூத மற்றும் முஸ்லிம் சமூகங்களில் நடந்துவருகின்ற சுன்னத்துகளில் இந்த விஷயங்கள் ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்டுவரலாம் என்பதை இந்த சட்டம் அங்கீகரிக்கிறது.
உடல நலத்துக்கு அவசியம் என்றில்லாமல் மதக் காரணங்களுக்காக மட்டும் சுன்னத்து செய்வது ஒரு நபரை துன்புறுதுதும் செயல் என கலோன் நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, குறிப்பாக யூத சமூகத் தலைவர்கள், யூத இன அழிப்பு நடந்த ஜெர்மனியில் யூதர்களின் வாழ்க்கை முறை மீதான மேலுமொரு தாக்குதல் இந்த தீர்ப்பு எனக் கூறி கண்டனம் தெரிவித்திருந்தனர்.
ஜெர்மனியில் இந்தச் சட்டம் அமலுக்கு வரும்போது, சுன்னத்து சம்பந்தமான சட்டபூர்வ நிலைப்பாடு தெளிவடையும்.
ஆனாலும் யூதர் வெறுப்புணர்வு மீண்டும் தலைதூக்குவதாக யூதர்கள் சிலரிடையே இந்த விவகாரத்தால் எழுந்த உணர்வலைகள் அவ்வளவு சட்டென அடங்கிவிடப்போவதில்லை.

வெனிசூவேலாவில் 4-வது தடவையும் அதிபரானார் சாவேஸ்

58 வயதான ஹூகோ சாவேஸ் லத்தீன் அமெரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு எதிராக எழுகின்ற பலத்த குரல்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறார்
58 வயதான ஹூகோ சாவேஸ் லத்தீன் அமெரிக்காவிலிருந்து எழுகின்ற அமெரிக்க எதிர்ப்புக் குரல்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறார்

வெனிசூவேலாவின் இடதுசாரித் தலைவர் ஹூகோ சாவேஸ் நான்காவது தடவையாகவும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வெனிசுவேலா அதன் ஜனநாயக சோசலிஸ பாதையில் தொடர்ந்தும் வீறுகொண்டு பயணிக்கும் என்று ஹூகோ சாவேஸ், வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள அவரது ஆதரவாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் ஹென்ரிக் கேப்ரிலேஸை விட 10 வீதம் அதிகமாக, 54 வீதமான வாக்குகளை சாவேஸ் பெற்றுள்ளார்.
லத்தீன் அமெரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு எதிராக குரல் எழுப்பிக்கொண்டிருக்கும் தலைவர்களில் அதிபர் சாவேஸ் மிக முக்கியமானவராக பார்க்கப்படுகிறார்.
இம்முறைத் தேர்தலில் தோல்வியடைந்தெள்ள எதிரணியினர், நாட்டில் அரைவாசிப்பேர் அதிபர் சாவேஸின் கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருப்பதை அவர் உணரவேண்டுமென்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
சாவேஸ் அண்மையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றிருந்தார். அவர் இப்போது பூரணமாக குணமடைந்துவிட்டதாகக் கூறுகிறார்.
எண்ணெய்வளம் மற்றும் இயற்கை வாயு என உலகின் பெரும்பங்கு இயற்கை வளப் படிமங்களை கொண்ட நாடு வெனிசூவேலா என்பது குறிப்பிடத்தக்கது.


தேச பிரிவினையின் தந்தை  பா.ஜ.க!!!!!!

பிடிவாதம் நீடித்தால் கர்நாடகா அரசு டிஸ்மிஸ் செய்யப்படலாம்: சட்ட வல்லுநர்கள் கருத்து




பெங்களூர்: உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட மறுத்து வரும் கர்நாடக அரசு கலைக்கப்பட்டு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்த எச்சரிக்கையை விடுத்திருப்பதும் கூட கர்நாடக மாநில அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் அசோக் ஹரனஹள்ளிதான்!
தமிழகத்துக்கு அக்டோபர் 15-ந் தேதி வரை 9 ஆயிரம் கன அடிநீரைத் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 28-ந் தேதி உத்தரவிட்டது. ஆனால் நேற்று இரவு முதல் திடீரென காவிரியில் நீர் திறப்பதை கர்நாடக அரசு நிறுத்திக் கொண்டது. இதையடுத்து கர்நாடகா அரசு மீது தமிழகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்திருக்கிறது.
இதனிடையே கர்நாடகத்தின் இத்தகைய அடாவடித்தனமான நடவடிக்கையை அம்மாநிலத்தின் முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் அசோக் ஹரனஹள்ளியும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
கர்நாடக அரசு மேற்கொண்டிருக்கிற இந்த கடும் நடவடிக்கையால் உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ள அடுத்த கட்ட விசாரணையின் போது கர்நாடகத்துக்கு மேலும் சிக்கல் ஏற்படும். கர்நாடகத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடும்போது அரசியல்சாசன சிக்கல் ஏற்படும். கர்நாடக முதல்வர் மீது நீதிமன்ற அவமதிப்புக்கான நடவடிக்கையை உச்சநீதிமன்றம் மேற்கொள்ளலலாம். மேலும் கர்நாடக அரசு தொடர்ந்தும் பிடிவாதம் காட்டினால் மாநில அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரைக்கும் வாய்ப்பும் இருக்கிறது என்று அவர் எச்சரித்துள்ளார்.


வாஷிங்டன், அக். 8-அமெரிக்க ராணுவத்தினரின் தற்கொலைகளில் 10-ல் 6 பேர் தங்களின் தற்காப்பிற்காக வைத்துள்ள துப்பாக்கியால் சுட்டே இறந்துள்ளனர். இதை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவர முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த வருடம் இதுபோன்று தற்கொலைகள் அதிகரித்துள்ள நிலையில், அவர்கள் வைத்துள்ள துப்பாக்கிகள் மற்ற போதைப் பொருட்களை பாதுகாக்கவோ அல்லது மறைத்து வைக்கவோ குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் சேவை உறுப்பினர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய ராணுவ துறையினர் முயற்சி எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், இதை ஒரு தேசிய பேரழிவாக கருதி தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இப்பிரச்சினையை தீர்க்க முன்வரவேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென நாட்டில் பல்வேறு கண்டனக்குரல் எழுப்பப்பட்டு வருகின்றன. இருப்பினும் இப்பிரச்சினையில், அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகனுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

பிலிப்பைன்ஸில் முஸ்லிம் பிராந்தியத்துக்கு தன்னாட்சி வழங்க இணக்கம்

பிலிப்பைன்ஸ் அரசு அந்நாட்டின் மிகப்பெரிய முஸ்லிம் கிளர்ச்சிக்குழுவுடன் அமைதி ஒப்பந்மொன்றுக்கான இணக்கத்தை எட்டியுள்ளதாக அதிபர் பெனிங்கோ அக்கியூனோ தெரிவிக்கின்றார்.
பிலிப்பைன்ஸில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் உயிர்களை பலிகொண்டுள்ள மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியுடன் (எம்ஐஎல்எஃப்) நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் எட்டப்பட்டுள்ள இந்த புதிய உடன்பாடு, கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வாழும் பிலிப்பைன்ஸில் முஸ்லிம்கள் செறிந்துவாழும் தென் பிராந்தியத்தை புதிய தன்னாட்சி அலகாக அங்கீகரிக்கிறது.
எம்ஐஎல்எஃப் இயக்கம் இந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பில் 'மிக்க மகிழ்ச்சி' அடைந்துள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மலேஷியாவில் நடந்த பேச்சுவார்த்தைகள் மூலம் எட்டப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் வரும் அக்டோபர் 15-ம் திகதி அதிகாரபூர்வமாக கைச்சாத்திடப்படவுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக இருதரப்புக்குமிடையில் அமைதிப் பேச்சுக்களுக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும், அவை வன்முறைகளால் முறிவடைந்துபோனமை குறிப்பிடத்தக்கது.

 




Background
Background
 
16-30 சப்டம்பர் 2012
முன்
பக்கம்
பக்க
எண்
005
அடுத்த
பக்கம்
16-30 சப்டம்பர் 2012
முன்
பக்கம்
பக்க
எண்
005
அடுத்த
பக்கம்
 
Background
Background
 நன்றி: சமரசம்

கூடங்குளம் அணு உலையை கடல் வழியாக முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்; பெரும் பதற்றம்!

 

கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடல்வழி முற்றுகைப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து படகுகளில் புறப்பட்ட மீனவர்கள் தற்போது கூடங்குளம் அணு உலை அருகே 500 மீட்டர் தொலைவில் கடலில் நின்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக கடந்த ஓராண்டுகாலமாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக இன்று கடல்வழியே முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த செப்டம்பர் 10-ந் தேதியன்றும் கடல்வழியே முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்ற போது பெரும் வன்முறையில் முடிந்தது. இதேபோல் கடந்த 22-ந் தேதியும் கடல்வழி முற்றுகைப் போராட்டம் நடத்த முயற்சித்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் படகுகள் மூலம் கூடங்குளம் நோக்கி சென்றனர். கூடங்குளம் அணு உலை அருகே கடலில் 500 மீட்டர் தொலைவில் கடலில் படகுகளில் நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கூடங்குளத்தில் கடைகளும் அடைக்கப்பட்டிருக்கின்றன.
அணுமின் நிலைய முற்றுகை போராட்டத்தாலும், போலீசார் குவிக்கப்பட்டதாலும் கூடங்குளம் பகுதியில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.
கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்-உதயகுமார்:
இந் நிலையில் எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறினார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

கூடங்குளம் அணு உலையை இழுத்து மூட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. போராட்டக் குழுவினர் மீது போடப்பட்டிருக்கும் பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். வரும் 29ம் தேதி சென்னையில் சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டம் நிச்சயம் நடக்கும். இதற்கு சில கட்சிகள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார்.