Facebook Twitter RSS
*/

Latest News

ஜனநாயகம் பற்றி முஸ்லீம்கள் சிந்திக்க வேண்டிய பக்கங்கள்

 

ஆட்சியாளர்களை தேர்ந்த்தேடுக்கும் உரிமை ,தட்டிக் கேட்கும் உரிமை ,போன்ற சில மாயைப்  பண்புகளை அது சுமந்திருப்பதால் "ஜனநாயகம்" (Democracy ) சத்தியமாகிவிடாது!! அதன் தோற்றம் ,நோக்கம் என்பன இஸ்லாத்தின் அரசியலான மக்களுக்கு நன்மை செய்தல் என்ற விடையத்தை அடிப்படையாககொண்டதுமல்ல. .மாறாக 'குப்ரிய'ஆளும் வர்க்கத்தின் ஒரு எமாற்றுக்கருவி ; அதை இஸ்லாத்திற்குள்  எடுக்கும் தேவை ஏன்?

          ஆன்மீக வாழ்வையும் ,உலக வாழ்வையும் பிரிப்பது ! எனும் அடிப்படையில் கிறிஸ்தவ உலகம் இந்த ஜனநாயகத்தை தனது கட்டாயத்தேவையாக பயன் படுத்தியது . பண்டைய கிரேக்கரின் பின் மத்திய ஐரோப்பாவின் மதகுரு சர்வாதிகாரத்தை எதிர்த்து கடவுளுக்குரியதை கடவுளுக்கும் ,அரசருக்குறியதை அரசருக்கும். எனும் விதியின் கீழ் மதச்சார்பின்மை கோட்பாட்டை நோக்கியதாக திசை மாற்றியது . ஜனநாயகத்தின் நவீன பயண்பாடு இவ்வாறுதான்  ஆரம்பிக்கின்றது .

     முஸ்லிம் சமூகம் இதன்பக்கம் வழிகாட்டப்படும் நோக்கத்தை சரியாக புரிந்துகொள்ள வேண்டும்  . இஸ்லாத்த்தினில் பிரத்தியோகமானதும் நிலையானதுமான ஒரு அரசியல் வழிகாட்டல் இல்லையா ?!! 'வஹி' இந்தவிடையத்தில் குறைபாடு செய்துவிட்டதா ?!! அல்லாஹ் (சுபு ) எம்மை பாதுகாக்க வேண்டும் .

அல்லாஹ் வெளிப்படுத்தியதை கொண்டு எவர் தீர்ப்பு செய்யவில்லையோ
அவர்கள் நிராகரிப்பாளர்கள் ! (TMQ 5:44)

அல்லாஹ் வெளிப்படுத்தியதை கொண்டு எவர் தீர்ப்பு செய்யவில்லையோ
அவர்கள் அநியாயக்காரர்கள் ! (TMQ 5:45)

அல்லாஹ் வெளிப்படுத்தியதை கொண்டு எவர் தீர்ப்பு செய்யவில்லையோ
அவர்கள் பாவிகள் ! (TMQ 5:47)

(நபியே !)"நிச்சயமாக அல்லாஹ்விற்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி
உரித்தானதென்பதை நீர் அறியவில்லையா? ... (TMQ 5:40)

          போன்ற அல்குர் ஆன் வசனங்களும் இன்னும் பல ஏராளமான அல்குர் ஆன் வசனங்களும் தெளிவாக இருக்க முஸ்லிம்' உம்மாவை ' தவறான ஒரு படு பாவத்தை நோக்கி இந்த ஜனநாயகம் இட்டுச்செல்கின்றது என்பது ஒரு வெளிப்படையுண்மை.


     இந்த ஜனநாயகத்தை பயன்படுத்தி இஸ்லாத்தை மறுமலர்ச்சி அடையவைக்கமுடியும் எனும் வாதமே நகைப்புக்கிடமானது ! ஏனெனில் இதனோடு இணைவு என்பதே முதலாளித்துவத்தை தலுவச்சொல்லும் 'கலிமா ' ஆகும் . ஏனெனில் அது தனக்கென பிரத்தியோகமான ஓர் அரசியல் ,பொருளாதார, சமூகவியல் வழிமுறைகளை கொண்டது . 

    அதனூடாக பயணிக்க நிணைப்பவர்களுக்கு தனது சிந்தனைகளோடும் , வழிமுறைகளோடும் முரண்படாத வரை ஒரு செயல் சுதந்திரத்தை தாராளமாக அள்ளிவழங்கும் அமெரிக்காவின் வாசிங்க்டன் முதல் இஸ்ரேலின் டெல்அவிவ் வரை இதில் தடையே இருக்காது ! அதன் கொள்கை சார் சுயரூபத்தை புலப்படுத்துமிடம் எது என்றால் , அவர்கள் தனிமனித சுதந்திரமாக கருதுமிடங்களில் இஸ்லாம் தனது சட்டங்களை சொல்லவரும்போதுதான் தனது கொடூர முகத்தை காட்டத் தொடங்கும் .மதச் சார்பின்மை என்ற தனது அடிப்படையை பாதுகாக்க சர்வாதிகாரத்தையும் சர்வ சாதாரணமாக பயன் படுத்தும் . 


         இன ,மத, குல, நிற ,வர்க்க, பிரிவுகளை மறைமுகமாகவோ ,வெளிப்படையாகவோ அங்கீகரித்து அது மனித உரிமையாகவும் ,தனி மனித சுதந்திரமாகவும் வரையறுக்கும் ! தேச, தேசிய எல்லைகளை இயல்பாக்கி கீழ்த்தரமான இன, மத, சாதி  மோதல்களை தூண்டிவிடும் .இதுதான் ஜனநாயகத்தின் சுயரூபம் !!!! மேலே தந்த சுருக்கமான ஜனநாயகத்தின் விளைவுப்பொருட்கள் எந்த அடிப்படையில் இஸ்லாத்தோடு ஒத்துப்போகும் ! சற்று இது பற்றி சிந்திப்போமா?

பாகிஸ்தான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தலிபான்கள் அறிவிப்பு



பாகிஸ்தான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த விரும்புவதாக தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது.
தலிபான் அமைப்பின் பாகிஸ்தான் பிரிவு தலைவர் ஹகிமல்லா மிசுட் இதனை அறிவித்துள்ளார்.
பொதுமக்கள் மீது தாம் தாக்குதல் நடத்தவில்லை எனவும், அமெரிக்கா மற்றும் அதன் நேச நாட்டு இலக்குகளையே தாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அரசாங்கம் ஊடகங்களில் அறிவித்த போதிலும் இதுவரையில் உத்தியோகபூர்வமாக தங்களை அணுகியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உத்தியோகபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் விரும்பினால் தாம் அதற்குத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் பாகிஸ்தான் அரசாங்கப் பிரதிநிகளின் பாதுகாப்பை உச்ச அளவில் உறுதிப்படுத்தத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
நிபந்தனைகள் எதனையும் விதிக்கப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதிகளை தலிபான்கள் கட்டுப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த கால சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைவதற்கு அரசாங்கமே பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க அதிரடிப் படை DELTA FORCE வீதியில் நடத்திய ஒரு அதிகாலை ஆள் கடத்தல்!

 
மெரிக்காவால் நீண்ட காலமாக தேடப்பட்டு, ‘தலைக்கு 5 மில்லியன் டாலர்’ பரிசு அறிவிக்கப்பட்டிருந்த தீவிரவாத சந்தேக நபர் அல்-லிப்பி, அதிரடி நடவடிக்கை ஒன்றில் கைது செய்யப்பட்டார். அமெரிக்க அதிரடிப்படை ‘டெல்ட்டா ஃபோர்ஸ்’ (Delta Force) கொமாண்டோக்கள் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு, கார் ஒன்றில் இருந்த அல்-லிப்பியை ‘கடத்தி’ சென்றனர்.


‘கைது செய்தனர்’ என்பதைதான் தவறுதலாக ‘கடத்திச் சென்றனர்’ என எழுதிவிட்டோம் என்று நினைக்கிறீர்களா? இல்லை.

“அல்-லிப்பியை அமெரிக்க கடத்திச் சென்றுவிட்டது” என்று கூறியிருப்பது நாங்கள் அல்ல.. லிபியா அரசு. காரணம், லிபியாவில் வைத்துதான் அல்-லிப்பியை பிடித்தது அமெரிக்க அதிரடிப்படை.
பிடித்த உடனே அவரை, பிரத்தியேக விமானம் ஒன்றின் மூலம் லிபியாவுக்கு வெளியே கொண்டு சென்றும் விட்டார்கள்.
இதற்குமுன் வெளிநாடுகளில் சி.ஐ.ஏ. அதிரடியாக ஆட்களை பிடித்து நாட்டுக்கு வெளியே கொண்டுபோன சம்பவங்கள் பற்றி எழுதியுள்ளோம். இம்முறை அமெரிக்க அதிரடிப்படை ‘டெல்ட்டா ஃபோர்ஸ்’ களத்தில் இறங்கியுள்ளது.
லிபியா தலைநகர் த்ரிபோலியில் வசித்த அல்-லிப்பி, அதிகாலை தொழுகைக்கு சென்றுவிட்டு காரில் திரும்பி வந்தார். தமது வீட்டுக்கு முன்னால் காரை நிறுத்திவிட்டு இறங்க முயற்சித்தார். திடீரென அவரது கார் அருகே உரசியபடி கருப்பு நிற பென்ஸ் கார் ஒன்று வந்து நின்றது. சற்று பின், டின்டட் கிளாஸ் போட்ட வேறு வாகனங்களும் சடுதியாக வந்து நின்றன.
இரண்டிலும் இருந்து துப்பாக்கிகளுடன் குதித்த ‘முகமூடி’ நபர்கள், அல்-லிப்பியை காரில் இருந்து இழுத்து வீழ்த்தினார்கள். அவரது தலையில் துணிப்பை ஒன்று போட்டு முகத்தை மறைத்தார்கள். அல்-லிப்பியின் இடுப்பில் இருந்த துப்பாக்கியை பிடுங்கிக் கொண்டார்கள். ஆளை குண்டுக் கட்டாக தூக்கி பென்ஸ் காரில் போட்டுக்கொண்டு பறந்து விட்டார்கள்.
அதிகாலையில், விடிந்தும் விடியாததுமான நேரத்தில் இவை அனைத்தும் ஒருசில விநாடிகளில் நடந்துவிட்டது.
அதன் பின்னரே இந்த அதிரடி நடவடிக்கை அமெரிக்க அதிரடிப்படை ‘டெல்ட்டா ஃபோர்ஸ்’ செய்த காரியம் என்று தெரிய வந்தது. இவர்கள் லிபியா அரசுக்கு தெரிந்துதான் வந்தார்களா, அல்லது பாகிஸ்தானில் பின்-லேடனை கொல்வதற்கு வந்ததுபோல ரகசியமாக வந்து இறங்கினார்களா என்பதில் குழப்பம் உள்ளது.

லிபியா அமைச்சர் ஒருவர், “அல்-லிப்பியை அமெரிக்கா கடத்திச் சென்றுவிட்டது. அல்-லிப்பி தீவிரவாத சந்தேக நபராக இருக்கலாம். ஆனால், அவர்மீது குற்றம் நிரூபிக்கப்படுமுன் எமது நாட்டில் இருந்து கடத்திச் சென்றதை கண்டிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
லிபியா அரசுக்கு கடத்தல் விவகாரம் முன்கூட்டியே தெரியாது என கூறப்படுவதை, எந்தளவுக்கு உண்மை என்று எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை.
இந்த அல்-லிப்பியின் நிஜப் பெயர், நாசி அப்துல்ஹமிட் அல்-ருகாயி. அமெரிக்க உளவுத்துறை எஃப்.பி.ஐ.யின் தேடப்படுவோர் பட்டியலில் 2000-ம் ஆண்டில் இருந்து உள்ளார். ஒரு காலத்தில் பின்-லேடனுடன் நேரடித் தொடர்பில் இருந்த நபர் இவர். தற்போது 49 வயது.
1998-ம் ஆண்டு கென்யா தலைநகர் நைரோபியில் இருந்த அமெரிக்க தூதரகம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. அதில்247 பேர் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதலை நடத்துவது தொடர்பான திட்டமிடலை செய்வதற்கு பின்லேடனால் கென்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நபர், இந்த அல்-லிப்பிதான் என்கிறது, அமெரிக்க உளவுத்துறை.
பின்-லேடனால் கென்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அல்-லிப்பி, நைரோபியில் இருந்த அமெரிக்க தூதரகத்தை நோட்டமிட்டு, போட்டோக்களை எடுத்துக் கொண்டார். அதன்பின் தூதரகத்தை தாக்குவது எப்படி என திட்டமிட்டு, செயல்படுத்தினார் என்பது, சி.ஐ.ஏ.வின் குற்றச்சாட்டு.
த்ரிபோலி நகர வீதியில் அதிகாலையில் நடந்த இந்தக் கடத்தலை நேரில் பார்த்தவர்கள் உள்ளார்கள். கடத்தப்பட்ட அல்-லிப்பியின் சகோதரர் நசீர், “அல்-லிப்பியின் மனைவி தமது வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக இந்தக் கடத்தலை பார்த்தார். அல்-லிப்பியை கடத்தியவர்கள், வெளிநாட்டவர்கள் போல தோற்றம் கொண்ட கொமாண்டோக்கள் என அவர் கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அவரது மகன் லோக்கல் டி.வி. சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில், “அல்-லிப்பியை கடத்தியவர்கள், லிபியாவை சேர்ந்தவர்கள்தான். இரண்டு கார்கள், மற்றும் ஒரு பஸ்ஸில் அவர்கள் வந்தார்கள். இந்த வாகனங்கள் அனைத்தும் கருப்பு கண்ணாடி போடப்பட்டவை. லைசென்ஸ் பிளேட் ஏதும் கிடையாது. வந்தவர்கள், லிபியா உச்சரிப்புடன் பேசிக் கொண்டார்கள்” என்றார்.
பொதுவாகவே இப்படியான அதிரடி ஆபரேஷனுக்கு வரும் அமெரிக்க அதிரடிப் படையினர், வாய் திறந்து பேசுவதில்லை. தமக்கிடையே சைகைகள் மூலமே பேசிக் கொள்வார்கள். கடத்தல் நடந்து முடிந்த சில விநாடிகளில், லிபியா உச்சரிப்புடன் பேசிக்கொண்டார்கள் என்றால், அது திசைதிருப்பும் ஒரு நடவடிக்கையாக இருக்கலாம்.
அல்-லிப்பி கைது செய்யப்பட்டுள்ளதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. அவர் தற்போது லிபியாவில் இல்லை என்றும் தெரிவித்துள்ள அமெரிக்கா, அவர் எங்கே கொண்டு செல்லப்பட்டார் என்பதை தெரிவிக்கவில்லை. லிபியாவில் இருந்து எப்படி வெளியே கொண்டு செல்லப்பட்டார் என்ற விபரமும் கூறப்படவில்லை.

ஹிஸ்புல்லாவின் கைகளில் 2 லட்சம் ராக்கெட்டுகள்! இஸ்ரேலிய பிளான் என்ன?

 
 
“ஹிஸ்புல்லா இயக்கம் வைத்திருக்கும் ராக்கெட்டுகள் அத்தனையையும் ஏவினால், இஸ்ரேலில் உள்ள அனைத்து வீடுகளையும் தாக்க முடியும்” இவ்வாறு கூறியிருப்பவர், ஹிஸ்புல்லா இயக்கத்தின் தளபதி அல்ல, இஸ்ரேலிய உள்ளக பாதுகாப்பு அமைச்சர்.


சமீபகாலமாக இஸ்ரேல், ஹிஸ்புல்லா இயக்கம் தமது நாட்டை தாக்கக்கூடிய அச்சுறுத்தல் உள்ளது என அடிக்கடி கூறத் தொடங்கியுள்ளது. அந்த வரிசையில் அமைந்துள்ளது இன்று (செவ்வாய்க்கிழமை) இஸ்ரேலிய உள்ளக பாதுகாப்பு அமைச்சர் கிலியாட் எர்டனின் பேச்சு.
இஸ்ரேலிய பாதுகாப்பு தொடர்பாக இன்று பர்-இலான் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய எர்டன், “எமக்கு கிடைத்துள்ள உளவுத் தகவல்களின்படி, ஹிஸ்புல்லா இயக்கத்திடம் கையிருப்பில் 200,000 ராக்கெட்டுகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் சேர்த்து வைத்திருக்கும் ராக்கெட்டுக்களின் எண்ணிக்கை, இந்த அளவுக்கு வந்துள்ளது.
இவற்றை அவர்கள் இஸ்ரேலை நோக்கி ஏவினால், இஸ்ரேலின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து வீடுகளையும் தாக்க முடியும். இதைத் தடுப்பதற்காக அடுத்த சில வாரங்களில் கடுமையான உள்ளக பாதுகாப்பு சட்டம் ஒன்றை கொண்டுவரவுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
ஹிஸ்பொல்லாவிடம் 2 லட்சம் ராக்கெட்டுகள் உள்ளனவோ, இல்லையோ என்று தெரியாது. ஆனால், இவர்கள் (இஸ்ரேல்) ஏதோ வில்லங்கமான பாதுகாப்பு சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப் போகிறார்கள் என்பது மட்டும் நன்றாகப் புரிகிறது.

கொலைகாரனுக்கு இராஜ தந்திர பாதுகாப்பா ஏன் !?



 ' பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் ' என்ற உண்மைய 'குப்ரிய' ஏகாதிபத்திய கூட்டு சிரிய விவகாரத்தில் மீண்டும் ஒரு தடவை தெளிவாகவே நிரூபித்துள்ளது . ஒரு கொலைகாரக் கொடுங்கோலனுக்கு பாதுகாப்பையும் ,அதே நேரம் அவனது சிறந்த கொடூர செயல்களை மறைத்து மூடும் போலியான அரசியல் இராஜதந்திர நியாயங்களையும் கற்பிக்கத் தொடங்கியுள்ளது. இது ஏன்? என்ற வினாவைத் தொடுத்தால் அதற்கான ஒரே பதில் நிச்சயமாக இஸ்லாம் என்பதாகவே இருக்கும் .

    பசர் அல் அசாத் என்ற இந்த இரத்தக் காட்டேரி இரண்டரை வருடங்களாக தொடுத்த இந்த வெறியாட்டத்தில் சிரியாவில் 100,000 முதல் 300,000 வரையான மனித உயிர்கள் பலியாகியுள்ளன சிறு கிராமங்கள் மற்றும் சிறு நகரங்கள் முற்றாகவே அழிக்கப்பட்டுள்ளன , பல இலட்சங்களை தாண்டும் அளவுக்கு காயமடைந்தோர் இருக்கின்றனர் . ஏறத்தாழ 10,000 இற்கும் அதிகமான பெண்கள் இவனது படையின் காம வெறியாட்டத்தில் சீரழிக்கப் பட்டுள்ளனர் .வார்த்தைகளில் வடிக்க முடியாத சித்திர வதைகளை இவனது அட்டூழியப் பட்டாளம் செய்துள்ளது . சிறுவர்கள் ,குழந்தைகள் ,முதியோர்கள் என்ற பாகுபாடின்றி இந்த கொடூர நிகழ்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன .

         இங்குள்ள கேள்வி என்னவென்றால் அப்போதெல்லாம் அறிக்கைப் போலிகளை ஏகாதிபத்தியங்களது  மீடியாக்கள் பரவலாக வெளியிட்டு விட்டு இப்போது இரசாயன ஆயுத தாக்குதலை காரணம் காட்டி நேரடி தரிசனம் ஏன் என்பதே ஆகும் ? இன்னும் இந்த கொடூரங்களுக்கு ஆயுத மற்றும் இராஜதந்திர பின்புலம் கொடுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அமைதிக்கான நோபல் பரிசும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது ஆச்சரியமே !

        மேலும் அமெரிக்க சார் மேற்குலகு அதன் கூட்டுச் சதி மண்டபமான ஜெனீவாவில் கூடி இன்னொரு முகமூடி போட்ட முஸ்லீம் பெயர்தாங்கி  அடிவருடிக் காட்டேரிகளை அவசரமாக சிரிய அரசியலுக்காக அமைக்கும் மந்திராலோசனையும் நடத்தியுள்ளது ஏன் ? 


      

       இத்தகு கேள்விகளுக்கெல்லாம் இருக்கக் கூடிய ஒரே விடை சிரிய மக்காளால் தெளிவாகவே வெளியிடப்பட்டுள்ள 'இஸ்லாமிய கிலாஃபா ஒன்றே எமது தீர்வு! என்ற ஒரே முடிவே ஆகும் . உலக முஸ்லீம் உம்மாவே ! சிறிய மக்களது இறப்புக்கள் ,இழப்புக்கள் ,இரத்தம் சிந்தல்கள் எல்லாம் அவர்களுக்காக மட்டுமல்ல உனக்காகவும் தான் என்பதை புரிந்துகொள் . உனது பிரார்த்தனையாலும் வார்த்தைகளாலும் குறைந்த பட்சம் அவர்களுக்கு உதவு ! 


       தவிர அல்லாஹ்வின் எதிரிகளின் சூழ்ச்சிப் பிரச்சாரங்களில் ஏமாந்து சீரியப் போராட்டம் தொடர்பில் தவறான முடிவுகளுக்கு வந்து விடாதே !

“நேவி சீல்” அணியினர் சோமாலிய கடற்கரையில் நடந்த சண்டையில் பலி - தோல்வியில் முடிந்த அமெரிக்க தாக்குதல்!!



முதல் Navy SEALs. அமெரிக்க கடற்படையின் முதன்மை தாக்குதல் அணி. கடல் ஆகாய தரை தாக்குதல்களை நடாத்தக்கூடிய திறன் வாய்ந்தது இந்த நேவி சீல். அமெரிக்க மரைன் போர்சஸிற்கும் இவர்களிற்கும் உள்ள வித்தியாசங்களில் முக்கியமானது  இவர்கள் தாக்குதல் நடாத்திய பின் உடனடியாகவே தங்கள் தளம் திரும்பி விடுவர் என்பதாகும். இவர்கள் நேற்றைய தினம் சோமாலியாவினுள் நுழைந்து அல்-ஸபாப் அமைப்பின் தலைவர் Sheikh Mukhtar Abu Zubayrஅவர்களை கொலை செய்ய அல்லது கைது செய்ய எடுதுத்த முயற்ச்சி தோல்வியில் முடிந்துள்ளது. 



அமெரிக்க கடற்படை கப்பலில் இருந்து பலூன் போட்களில் விரைந்து வந்த இரண்டு நேவி சீல் அணியினர் சோமாலிய கடற்கரை நகரான Barawe ல் வைத்து அல்-ஸபாப் தலைவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்தனர். அவர்களிற்கு அதன் தலைவர் அங்குள்ள உல்லாச விடுதியில் இருப்பதாக கி்டகத்த தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் இந்த ஒப்பரேஷனை திட்டமிட்டிருந்தனர். 

அமெரிக்க நகரினுள் நுழைந்ததும் தமக்கு ஆதரவு வழங்க சீ.ஐ.ஏ.யினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏஜென்டின் சிக்னல் கிடைத்தவுடன் சடுதியாக உள்ளே நுழைந்தனர். இவர்களது வரவை ஏலவே தெரிந்திருந்த அல்-ஸபாப் போராளிகள் இவர்கள் நுழைந்தவுடன் சடுதியாக அகோர தாக்குதலை மேற்கொண்டனர். அவர்களின் தாக்குதலிற்கு முன் தாக்கு பிடிக்க முடியா நேவி சீல் தாக்குதல் அணியினர் பின்வாங்க ஆரம்பித்தனர். ஏற்கனவே சர்வதேச கடற்பரபபில் நிறுத்திய வைக்கப்பட்டிருந்த அமெரிக்க கடற்படை கலத்தில் தங்கள் ஸ்பீ்ட் போர்ட்களின் உதவியுடன் நேவி சீல் அணியினர் தப்பி ஒடிவிட்டனர்.. 

இந்த தாக்குதலில் 06 நேவி சீல் கொலைக்குழுவின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒரு சோமாலிய போராளியும் பலியாகியுள்ளார். நேவி சீலுடன் நடை பெற்ற சண்டைகளின் பின்னர் நகரை சுற்றி வளைத்துள்ள அல்-சபாப் போராளிகள் வீடு வீடாக தேடுதல் வேட்டை ஒன்றை ஆரம்பித்துள்ளனர். நேவி சீல் அணியினரிற்கு வழிகாட்டியாக செயற்பட்ட ஒருவர் இங்கேயே பதுங்கியுள்ளதனை போராளிகள் அறிந்ததன் விளைவே இந்த நடவடிக்கை.                                                                                                                                       

சினாயினை ஊடறுத்து எகிப்திய இராணுவம் தாக்குதலை ஆரம்பித்தது


கிப்திய ராணுவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தடவையாக அல்-காய்தா ஆதரவு இயக்கத்தின் பலம்வாய்ந்த பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளது. எகிப்தின் சினாய் பிராந்தியத்தின் மையப் பகுதியில் உள்ள இந்த இடம், தீவிரவாதிகள் மறைந்து வாழ பாதுகாப்பான இடம் என்று கருதப்படுகிறது.


சினாய் மத்தியில் உள்ள ஜபால் அல்-ஹலால் பகுதிக்குள் இதுவரை ராணுவம் நுழைந்ததில்லை. ‘எகிப்தின் தோரா-போரா’ என்று அழைக்கப்படும் ஜபால் அல்-ஹலால் பகுதி, ஆப்கானிஸ்தானின் தோரா-போரா பகுதி போலவே புவியியல் தன்மை கொண்டது. ஆப்கான் தோரா-போரா குகைகளில்தான் பின்-லேடன் பாகிஸ்தானுக்கு செல்வதற்கு முன் மறைந்திருந்தார்.

எகிப்திய ராணுவத்துக்கு எதிராக கெரில்லா தாக்குதல்களில் ஈடுபடும் அல்-காய்தா ஆதரவு சலாஃபி இயக்கம், எகிப்துக்குள் தமது ஆயுத பலம், மற்றும் ஆட்பலத்தை சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

ஒரு காலத்தில் வெறும் ஏ.கே.47 எந்திரத் துப்பாக்கிகளுடன் இயங்கிய இவர்களது கைகளில் தற்போது, டாங்கி எதிர்ப்பு பீரங்கிகள், 120mm ஹெவி மோட்டார்கள் என ராணுவத்தின் மீது தாக்கும் அளவிலான ஆயுதங்கள் உள்ளன. கடந்த வாரம் எகிப்திய ராணுவ இலக்குகள் மீது இவர்கள் நடத்திய ராக்கெட் தாக்குதல்கள், பலரையும் ஆச்சரியப்பட வைத்தன.
அதுவரை, இந்த அமைப்பினரால் ராணுவத்துக்கு எதிரான ஒரு சம்பிரதாய போரில் ஈடுபட முடியாது என்றே பலரும் நினைத்திருந்தனர். இப்போது அந்த நினைப்பு மாறியுள்ளது.

எகிப்திய ராணுவ தலைமையும், அல்-காய்தா ஆதரவு சலாஃபி இயக்கம் தமக்கு பலத்த அச்சுறுத்தலாக வளர்ந்து வருவதை புரிந்து கொண்டுள்ளது. அதனால்தான், ஜபால் அல்-ஹலால் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது.
ஜபால் அல்-ஹலால் பகுதியை, ‘எகிப்தின் தோரா-போரா’ என்று சும்மா பேச்சுக்கு பெயர் வைக்கவில்லை. நிஜமாகவே, ஆப்கான் தோரா-போரா போன்ற நில அமைப்பு உள்ள பகுதி. பாலைவனத்தில் பாறைகள் அடங்கிய நிலப்பரப்பில், இடையிடையே அடர்த்தியாக உலர் வலயக் காடுகளும் உள்ளன. அதைவிட ஆப்கான் தோரா-போரா போல இங்கு ஏராளமான குகைகள் உள்ளன.

இந்தக் குகைகளில் மறைந்துகொண்டால் கண்டுபிடிப்பது கஷ்டம். காரணம், பல குகைகளுக்கு இடையே சுரங்கப் பாதைகள் உள்ளன. விமானத் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக்கொள்ள அட்டகாசமான இடம் இது. அத்துடன், உளவு சாட்டலைட்டுகளின் கண்களில் இருந்து மறைந்து வாழ குகைகள் பாதுகாப்பு கொடுக்கும் இடம் இது.

ஜபால் அல்-ஹலால் பகுதிக்குள் செல்வதற்கு, சரியான பாதைகள்கூட கிடையாது. இந்தப் பகுதியை நன்றாக அறிந்தவர்களால் மட்டுமே, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பாதை கண்டுபிடித்துச் செல்ல முடியும். சுருக்கமாக சொன்னால், ஒரு ராணுவ நகர்வுக்கு உகந்த இடமல்ல இது. ராணுவ கவச வாகனங்கள், டாங்கிகள், மற்றும் கனரக வாகனங்களை கொண்டுசெல்ல முடியாது.

இந்தப் பகுதியில் அல்-காய்தா ஆதரவு இயக்கத்தை சேர்ந்த சுமார் 3,000 பேர் இருக்கலாம் என்பது, எகிப்திய உளவுத்துறையின் கணிப்பு. ராணுவம் நுழைய முடிந்திராத இந்தப் பகுதிக்குள், அல்-காய்தா ஆதரவு இயக்கம் வெவ்வேறு படைப்பிரிவுகளை வைத்திருக்கிறது என்பது மற்றொரு உளவுத் தகவல்

இந்தப் பகுதி மீதான படையெடுப்புக்கு எகிப்திய ராணுவம் கடந்த சில வாரங்களாகவே ஏற்பாடுகளை செய்து வந்தது. அங்கு சென்று தாக்குதல் நடத்த நேற்று எகிப்திய ராணுவம் அப்பகுதிக்கு சென்றுள்ளது என்ற தகவலை, எகிப்திய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அப்தெல்-ஃபாட்டா எல்-சிசி மறுக்கவில்லை.

ஆனால், அங்கு அனுப்பி வைக்கப்பட்ட படைப் பிரிவுகள் தொடர்பாக வெளியாகியுள்ள விபரங்களை உறுதி செய்ய மறுத்துவிட்டார்.
“அப்பகுதியில் உள்ள தீவிரவாதிகளை தாக்கி முறியடிக்க போதியளவு பலமுள்ள படைப்பிரிவுகள் அனுப்பப்பட்டுள்ளன. படைப் பிரிவுகள் பற்றிய விபரங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிட முடியாது” என்றார் அவர்.

அவர் தெரிவிக்காவிட்டாலும், ராணுவ வட்டாரங்களில் இந்த விபரங்களை தெரிந்துகொள்ள வழியுள்ளது. கிடைத்த தகவல்களின்படி, ஜபால் அல்-ஹலால் பகுதிக்குள் சென்று தாக்குதல் நடத்த எகிப்திய ராணுவத்தின் ஒரு எந்திரமய பிரிகேட் (mechanized brigade), 3 கமாண்டோ படைப்பிரிவுகள், 120mm மோட்டார்களுடன் கூடிய 1 ஆட்டிலரி படைப்பிரிவு ஆகியவை அந்தப் பகுதியை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இவர்களுக்கு ஆகாய சப்போர்ட் கொடுப்பதற்காக, அப்பச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களை இயக்கும் விமானப்படை படைப்பிரிவு ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.

மற்றொரு விஷயம், எகிப்திய ராணுவத்தின் இந்த நகர்வுக்காக, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறைகள் பல உளவுத் தகவல்களை வழங்கி வருவதாக சொல்லப்படுகிறது. அவை எவ்விதமான உளவுத் தகவல்கள் என வெளிப்படையாக கூறப்படவில்லை. பெரும்பாலும், அல்-காய்தாவினரின் பலம், அவர்களிடம் உள்ள ஆயுதங்கள் பற்றிய விபரங்கள், மற்றும் அவர்களது சப்ளை ரூட்டுகள் பற்றிய உளவுத் தகவல்களாக இருக்கலாம்.
அமெரிக்க, இஸ்ரேலிய உளவுத்துறைகள் சமீப காலங்களில் எகிப்தின் சினாய் பகுதியில் அதிகளவு கவனம் செலுத்துகின்றனர். அதற்கு காரணம், இங்கு மறைந்திருக்கும் அல்-காய்தா சலாஃபி இயக்கத்தினர், டாங்கி எதிர்ப்பு ராக்கெட்டுகளை ஓரிரு தடவைகள் சூயஸ் கால்வாயில் சென்ற கப்பல்கள் மீது ஏவியிருந்தனர்.

தரையின் பயன்படுத்தப்படும் அவ்வகை ராக்கெட்டுக்களை, கடல் தாக்குதல்களில் துல்லியமாக பயன்படுத்த முடியாது. அதனால், இவர்களது தாக்குதல்கள் எந்தக் கப்பலையும் இதுவரை பெரியளவில் சேதப்படுத்தவில்லை.

ஆனால் நாளைக்கே இவர்களது கைகளில் கடல் தாக்குதல்களில் பயன்படுத்தக்கூடிய கப்பல் எதிர்ப்பு ராக்கெட்டுகள் கிடைத்தால், சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும். அதுதான், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறைகள் இந்தப் பகுதிமீது அதிக ஆர்வம் காட்டுகின்றன. இப்போது இஸ்ரேலிய ராணுவத்துக்கும் உதவ முன்வந்துள்ளார்கள்.

அடுத்த சில தினங்களில், இப்பகுதியில் எகிப்திய ராணுவ தாக்குதல்கள் நடைபெற தொடங்கலாம். ஜபால் அல்-ஹலால் பகுதி, ராணுவத்தைவிட, தீவிரவாத இயக்கங்களுக்கே சாதகமான பகுதி என்பதால், எதிர்த் தாக்குதல்களும் பலமானதாகவே இருக்கும்.