Facebook Twitter RSS
*/

Latest News

“ஈரானுக்கு எதிரான போர் “இன்னும் மேசை மேல்” - நெதன்யாகூவை சமாதானப்படுத்தினார் ஒபாமா?


செவ்வாயன்று வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டம், பணிநிறுத்த அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது பெரிதும் மறைக்கப்பட்டது, இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தனியாகுஅமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவை ஈரானுக்கு எதிரான இராணுவ அச்சுறுத்தல்களையும் பொருளாதாரத் தடைகளையும் தக்க வைக்க மற்றும் மேலும் விரிவாக்கஅழுத்தம் கொடுத்ததுதான். ஒபாமா, தன்னுடைய நிர்வாகமும் முந்தையதும் ஈரானை அச்சுறுத்தப் பயன்படுத்திய அதே மந்திரத்தை மீண்டும் கூறிய வகையில் அதற்கு இசைந்தார். “இராணுவ நடவடிக்கை உட்பட, மேசையில் இருந்து எந்த விருப்பத் தேர்வையும் நாம் அகற்றவில்லை.” என்று அமெரிக்க ஜனாதிபதி ஒரு மணி நேரம் நெத்தனியாகுவுடன் பேசிய பின், செய்தி ஊடகத்துடன் குறுகிய நேரம் பேசியபோது குறிப்பிட்டார்.


நெத்தனியாகுவின் வருகை, சமீபத்தில் ஈரானின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஹசான் ருஹானியுடன் ஒபாமா ஒரு 15 நிமிட தொலைபேசி உரையாடலை நடத்திய மூன்றே நாட்களுள் வந்துள்ளது—அத்தகைய தொடர்பு இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே 1979 ஈரானியப் புரட்சிக்குப்பின் முதல் தடவையாக வந்துள்ளது. இரு புறத்தின் கூற்றுக்களில் இருந்தும், இரு ஜனாதிபதிகளும் ஒரு உடன்பாட்டை பேச்சுக்களின் மூலம் முன்னேற்றுவிக்கும் விருப்பத்தை தெரிவித்தனர்; நீண்டகாலமாக ஈரானின் அணுத் திட்டம் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினர்.

P5+1 குழு என அழைக்கப்படுவதற்கும் (அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா, ரஷ்யா, ஜேர்மனி) மற்றும் ஈரானுக்கும் இடையே முறையான பேச்சுக்கள் ஜெனிவாவில் அக்டோபர் 15 அன்று மீண்டும் தொடங்க உள்ளன. வாஷிங்டன், தெஹ்ரானிடம் இருந்து தொலைநோக்கான சலுகைகளை பெறமுடியும் என நம்புகிறதுஅதேவேளை ஈரானிய அரசாங்கம், ஈரானிய உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரங்களைப் பெரிதும் பாதித்து, சமூக அமைதியின்மை ஆபத்தை தூண்டும் பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்பட வேண்டும் என  ஆர்வமாக உள்ளது.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் இந்த குறிப்பிடத்தக்க மாற்றம்,கடந்த மாதம் சிரியாவிற்கு எதிரான போரில் அமெரிக்க மக்களை தள்ள எடுத்த முயற்சி, பெரும்பான்மையான மக்கள் விரோதப் போக்கால் தடைக்கு உட்பட்டதை அடுத்து வந்துள்ளது. வாஷிங்டனின் நெருக்கமான நட்பு நாடான, பிரித்தானியப் பாராளுமன்றத்தில் போர் ஆதரவுத் தீர்மானம் முதலில் நிராகரிக்கப்பட்டதை முகங்கொடுத்து, பின் அமெரிக்க காங்கிரசிலும் இராணுவ சக்திப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் கிடைக்காமல் முன்னோடியில்லா வகையில் தோல்வி அடையலாம் என்ற நிலையில், நிர்வாகம் அதன் திட்டமிட்ட தாக்குதலில் இருந்து பின்வாங்க நேர்ந்தது. சிரியா அதன் இரசாயன ஆயுதங்களை அழிக்கத்தயார் என்ற ரஷ்ய முயற்சியை நிர்வாகம் தழுவிக்கொண்டது.

திலிருந்து, ஒபாமா நிர்வாகம், ஈரானின் அணுத் திட்டம் குறித்து ஒரு பேச்சுவார்த்தைகள் மூலம் வரும் உடன்பாட்டை வளர்க்க முயலகிறது. அமெரிக்கா பல தசாப்தங்களாக தண்டனை போன்ற பொருளாதாரத் தடைகளைச் சுமத்தியுள்ளதுடன், ஈரான் அணுவாயுதங்களை தயாரிக்கிறது என்ற குற்றச்சாட்டுக்களை அடித்தளமாகக் கொண்டு போர் அச்சுறுத்தலையும்செய்துள்ளது. தெஹ்ரானோ தொடர்ச்சியாக இக்குற்றச்சாட்டுக்களை மறுத்து, அதன் அணுத்திட்டம் சமாதான நோக்கங்களுக்கு மட்டுமே என வலியுறுத்தி வந்துள்ளது.

நெத்தனியாகு தலைமையிலான இஸ்ரேலிய ஆட்சி இதை எதிர்கொண்ட விதம் வெறித்தனமானது, தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே சமரச நடவடிக்கைக்கு அது விரோதப் போக்கை கொண்டுள்ளது.

அமெரிக்காவிற்கு பறப்பதற்கு முன் நெத்தனியாகு, இஸ்ரேலியச் செய்தி ஊடகத்திடம் கூறினார்: “நான் இஸ்ரேல் குடிமக்களை, நம் தேசிய நலன்களை, மக்கள் என்னும் முறையில் எமது உரிமைகளை, நம்மையும்,சமாதானத்திற்கான நம் நம்பிக்கையை காக்கும் உறுதியையும்பிரதிநிதித்துவப்படுத்துவேன்.”
திங்களன்று வாஷிங்டனிலும் செவ்வாயன்று ஐ.நா. பொதுமன்றத்திலும் தன் பணி, “உண்மையை பேசுவது. இனிய பேச்சுக்கள், சிரிப்புக்களுக்கு எதிராக உண்மைகள் கூறப்பட வேண்டும்”என்றார்.

ஒபாமாவை சந்தித்தபின், இஸ்ரேலிய பிரதம மந்திரி கூறினார்: “ஈரான்,இஸ்ரேல் அழிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது”; அமெரிக்கா இன்னும் மற்ற பிரதான சக்திகளுன் பேசுகையில் ஈரான் அதன் அணுத்திட்டத்தை தொடர்ந்தால், “பொருளாதாரத் தடைகள் இன்னும் வலுப்படுத்தப்பட வேண்டும்”என்றார் அவர். ஈரானிடம் காட்ட வேண்டிய ஒரே கொள்கை “நல்ல நம்பகத்தன்மை மிக்க இராணுவ அச்சுறுத்தல் மற்றும் வலுவான பொருளாதாரத் தடைகள்தான்” என்று அவர் வலியுறுத்தினார்.

வெள்ளை மாளிகையில் பேச்சுக்களுக்குப் பின்னர், நெத்தனியாகு காபிடோல் ஹில்லில் அமெரிக்க சட்டம் இயற்றுபவர்களுன் வெளியேறும் அமெரிக்கத்தூதர், அமெரிக்காவில் பிறந்த மைக்கேல் ஓரெனுக்கு நடத்தப்படும் விழாவில் பங்கு பெறச்சென்றார். குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளுக்குள் விகிதத்தை மீறிய செல்வாக்கு உள்ளதை இஸ்ரேல் பயன்படுத்த விரும்புகிறது; இதையொட்டி வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே உடன்பாட்டில் தடைகளை ஏற்படுத்தலாம்  என்பது பற்றிக்கணக்கிடுகிறது.

இஸ்ரேலின் வலதுசாரி சியோனிச அரசாங்கத்தை பற்றிய நிலைப்பாட்டின் அப்பட்டமான அறிக்கை, அதன் முன்னாள் வெளியுறவு மந்திரி அவிக்டர் லிபர்மன்னிடம இருந்து வந்தது. கடந்த ஆண்டு இறுதியில் அவர் ஒரு ஊழல் அவதூறில் சிக்கயதை ஒட்டி பதவியில் இருந்து இறங்கும் கட்டாயத்திற்கு உட்பட்டார்.

பேச்சுக்களை ஒட்டி வரக்கூடிய உடன்பாட்டிற்கு ஈரான் அளிக்கும் ஆதரவை “சமரசத்தின்மீது தாக்குதல்” என்று அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் எழுதி, “ஈரானியர்கள் நீண்டகாலமாக ஏமாற்று வகையைக் கடைப்பிடிக்கின்றனர்: பலவகை உறுதிமொழிகள் கொடுக்கும் தந்திர உத்தி, சர்வதேச சமூகத்திற்கு தவறான தகவலை மீண்டும் மீண்டும் கொடுத்து தாமதப்படுத்துல், அதேநேரத்தில் தங்கள் இலக்கான அணுவாயுதத்தை பெற முயற்சிகளை தொடர்தல் என்பவை உலக சமாதானத்தை அச்சுறுத்துவதாகும்.”

லிபர்மன் குறிப்பாக, 1981 ல் இஸ்ரேல் ஒருதலைப்பட்சமாக ஈராக்கின் ஓசிரிக் அணு உலைக்கூடத்தின் மீது நடத்திய தாக்குதலைக் குறிப்பிட்டு அறிவித்தார்: “ஈராக்கிய உலைக்கூடத்தை பொறுத்தவரை, இஸ்ரேல் ஒரு எச்சரிக்கை கொடுத்தது மட்டும் இல்லாமல், பின்னோக்கிக் காணும்போது, மற்றவற்றைப் போல் நாம்தான் சரி என்பதையும் கண்டோம் என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்.”

இக்கருத்து, இஸ்ரேல் அதேபோன்று அமெரிக்காவை போருக்கு இழுக்கும் நோக்கத்துடன் ஈரான் மீதான ஒருதலைப்பட்ச தாக்குதலை நடத்தத் தயார் என்ற அச்சுறுத்தலைத்தான் கொண்டுள்ளது என்பது அறியப்பட வேண்டும்.

இஸ்ரேல், வாஷிங்டனுக்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுக்கள் மூலம் வெற்றிகரமான உடன்பாடு வருவதை அகற்றும் நோக்கத்துடன்ஆத்திரமூட்டுதல்களை நடத்தும் என்னும் அச்சுறுத்தல், ஞாயிறன்று இஸ்ரேலின் பாதுகாப்புப் பிரிவு ஷின் பெட்டுடைய அறிவிப்பில் இருந்தது; அது ஈரானிய ஒற்றர் எனப்படுபவரை கைப்பற்றியதாகவும், அவரிடம் இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் புகைப்படங்கள் இருந்தன என்றும் கூறியுள்ளது. இஸ்ரேலிய செய்தி அமைப்புக்கள் கூற்றுப்படி இக்கைது மூன்று வாரங்களுக்கு முன்பு நிகழ்ந்தது.

டெல்அவிவில் உள்ள அச்சங்கள், வார இறுதியில் இஸ்ரேலின் நாளேடானHa’aretz   ல் “அமெரிக்காவுடன் சமரசம் என்பது ஈரானின் பிராந்திய சக்தியை அதிகரிக்கும், உலகில் நற்பெயரைக் கொடுக்கும்” என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “கடந்த காலத்தில் அணுத்திட்டம், தேசிய அடையாளமாகவும் ஈரானின் வலுவில் அசைக்கமுடியாத அஸ்திவாரமாக இருந்தது என்றால், இப்பொழுது அத்திட்டத்தைத் தடைக்கு உட்படுத்தும் பேச்சுக்கள் ஈரானால் இன்னும் அதிக பிராந்திய செல்வாக்கு, அதிகாரத்தை அடையத்தான் பயன்படுத்தப்படும்.” என்று கட்டுரை கூறுகிறது.

இஸ்ரேலின் ஆளும் அரசியல் நடைமுறை, எந்த பிராந்திய சக்தியும் அணுவாயுதங்கள் மேல் தான் கொண்டிருக்கும் ஏகபோக உரிமையை சவாலுக்கு உட்படுத்தும் திறனுடன் வெளிப்படுவதை நிறுத்துவதில் உறுதியாக உள்ளது; அத்துடன் மத்திய கிழக்கில் ஒரு பிராந்திய தலைமைப்பங்கை அது அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கொண்டிருப்பதையும் உறுதிப்படுத்துகிறது. அந்த இலக்கின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் வாஷிங்டன் அளிக்கும் 3.1 பில்லியன் டாலர் உதவிப் பணம் பெறுவதையும் நியாயப்படுத்த, (பெரும்பாலானது இராணுவத்திற்கு), அதற்கு தொடர்ச்சியான மோதல் நிலை தேவைப்படுகிறது.

திங்களன்று குறுகிய காலத்திற்கு ஒன்றாகத் தோன்றிய ஒபாமாவும் நெத்தனியாகுவும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு இடையே “சமாதான வழிவகை” பற்றியும் பேசினர்; இதை அமெரிக்க நிர்வாகம் சமீபத்தில் புதுப்பிக்க முயன்றுள்ளது.

நெத்தனியாகுவை அவருடைய “பாலஸ்தீனிய அதிகாரத்துடன் நல்ல தன்மையுடன் பேச்சுக்கள் நடத்துவதற்கு” ஒபாமா பாராட்டியதுடன், இஸ்ரேலிய பிரதமரின் “அந்த இலக்கிற்காக முன்னேற்றப்படி எடுத்துவைக்கும் தைரியத்திற்கும்” தன் பாராட்டைத் தெரிவித்தார்.

பாலஸ்தீனிய நிலங்களை இரக்கமற்று திருடுவதில்தான் நெத்தனியாகு தன் “தைரியத்தை” காட்டியுள்ளார்; சியோனிச  குடியிருப்புக்கள், ஆக்கிரமிக்கப்பட்டமேற்குக்கரையிலும் ஜெருசெலத்திலும் வந்துள்ளன; அங்கு மக்கள்தொகை160,000ல் இருந்து 650,000 என சமாதான வழிவகை தொடங்கியபின் வளர்ந்துள்ளது.

ஈரானுடன் பேச்சுக்களை நடத்தும்போது, டெல் அவிவை சமாதானப்படுத்தும் நோக்கத்தில், வாஷிங்டன் பாலஸ்தீனிய மக்கள்மீது இஸ்ரேல் தாக்குதல்நடத்துவதற்கு இன்னும் கூடுதல் ஆதரவைக் கொடுக்கக் கூடும்.

ஹமாவிற்கும் அலிபோவிற்கம் இடையிலான நெடுஞ்சாலை போராளிகள் வசம் - சிரிய களங்களில் மாற்றங்களை நிகழ்த்தவல்ல சாலையது..



சிரிய முஜாஹித்கள் இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாதையை (Zaman Alwasl) தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர். சிரிய படையினருடன் நிகழ்ந்த மிக உக்கிரகரமான சண்டைகளின் பின்னர் பெரிய இழப்புக்களை விலை கொடுத்து இந்த சாலையை  அவர்கள் கைப்பற்றியுள்ளனர். ஹமாவையும் அலிபோவையும் இணைக்கும் நீண்ட பாதையான இது, போராளிகள் வசம் வீழ்ந்தமையானது சிரிய படையினரிற்கான விநியோக மார்க்கத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. 



Khanaser  நகரை கைப்பற்றுவதற்கான சண்டைகளில் முஜாஹித்களின் கரம் ஓங்கிய நிலையில் உள்ளது. அநேகமாக அது அவர்கள் வசம் வீழ்வது உறுதியாகியுள்ளது. இதற்கு அடுத்த பிரதேசமான அல் ஸிப்ராவினிலேயே சிரிய இராணுவத்தின் மிலிட்டரி பேஸ்கள், மிலிட்டரி கொம்பிளேக்ஸ்கள், ஆயுத கிடங்குகள், ஆயுத உற்பத்தி நிலையங்கள் என்பன உள்ளன. இது போராளிகள் வசம் வீழ்ந்தால் சிரிய சண்டைக்களங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்பதே உண்மை. 

காஸாவில் சர்வதேச ஜிஹாத் களம் - அல்-கஸ்ஸாம் பிரிகேட்டின் மாபெரும் அணிவகுப்பு உணர்த்துவது எதனை?



லஸ்தீன மக்களின் விடுதலைக்காக போராடும் ஹமாஸ் அமைப்பின் இராணுவ பிரிவான இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம் படையணி ஒரு பெரிய இராணுவ அணிவகுப்ப நேற்றைய தினம் ( 04/10/2013 ) நிகழ்த்தி முடித்துள்ளது. 1984-ல் அல் கஸ்ஸாம் படையணி உருவாக்கப்பட்டது முதல் இது நாள் வரை இப்படியொரு இராணுவ பராட்டை அது நடாத்தியது கிடையாது. இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம் படையணியின் இராணுவ அணிவகுப்பு நிகழ்வது தொடர்பான தகவல்கள் கிடைத்தும் கூட இஸ்ரேல் அவசர தாக்குதல்கள் எதையும் செய்யவில்லை. அல்-கஸ்ஸாம் படையணியினர் இம்முறை விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட அதிநவீன ஆயுத சன்னத்தர்களாக தங்கள் இராணுவ அணிவகுப்பை நிகழ்த்தியது இஸ்ரேலிற்கு தெரியும். 



காஸா மீதான இறுதி தாக்குத்ல் ஒன்றை நிகழ்த்த இஸ்ரேல் ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. அதன் பின்னர் காஸா மீதான இராணுவ தாக்குததலை எகிப்திய இராணுவத்தை கொண்டு நிகழ்த்தும் நகர்வுகளில் அது ஈடுபட்டிருந்தது. ஜெனரல் சிசியின் ஜுன்டா இராணுவ அரசும் அதற்கு உடன்பட்டிருந்தது. ரபாவின் பாதைகளை அடைத்ததுடன் நிலக்கீழ் சுரங்கங்களை வெடி வைத்து தகர்த்தும் இருந்தது எகிப்திய இராணுவம். தனது எல்லை சோதனை சாவடியில் சினைப்பர் துப்பாக்கிகளை பொருத்தி எல்லை கடக்கும் பலஸ்தீனர்களை சுட்டுத்தள்ளும் அடுத்த கட்ட நடவடிக்கையையும் எகிப்திய இராணுவ அரசு செயற்படுத்தியிருந்தது. 

இம்முறை அல்-கஸ்ஸாம் படையணி நிகழ்த்திய இராணுவ அணிவகுப்பு லெபனானின் ஹிஸ்புல்லாக்களின் பாணியை ஒத்ததாக இருந்தமை கவனிக்கத்தக்க விடயமாகும். அது போலவே ஹிஸ்புல்லாஹ் படையணிகள் பயன்படுத்தும் அதி நவீன ஆயுதங்கள் மற்றும் தொழில் நுட்பங்கள் என்பனவற்றையும் அவற்றில் காணக்கூடியதாக இருந்தது. 

இதை விட இன்னொரு விடயம் இங்கு கவனிக்கத்தக்கது. 

வழக்கமாக பலஸ்தீன கொடிகளை ஏந்தும் ஹமாஸ் போராளிகள் இம்முறை அல்-காயிதா போன்ற அடிப்படைவாத அமைப்புக்கள் கொண்டுடிருக்கும் கறுப்பு பின்புலத்தில் வெள்ளை எழுத்துக்கள் கொண்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். இரு சர்வதேச இஸ்லாமிய கோட்பாட்டியல் போராட்டங்களுடன் தம்மை இணைத்து கொள்ளும் ஒரு நகர்வாகவே காணத்தக்கது. 

காஸாமீதான தகாக்குதலிற்கு எதிராகவும், காஸாவை கைப்பற்றும் நிகழ்வுகளிற்கு எதிராகவும் ஷாமைப்போல சர்வதேச ஜிஹாத்களத்தை காஸாவில் திறக்கும் ஒரு முனைப்பான செயற்பாடாகவே இதனை நோக்கக்கூடியதாக உள்ளது. ஹிஸ்புல்லாக்களின் பாணியை இதில் கலந்தமை நேர் முரணாண இரு புள்ளிகளை ஒரு சமாந்தரத்தில் இணைக்கும் புரியாத போக்காக இருப்பதும் உண்மையே..

மோட்டார் பைக்கில் வந்து ராணுவத்தை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தும் மர்ம நபர்கள்!


கிப்தில் ராணுவ வாகனங்கள் மீது ‘அடையாளம் தெரியாத’ மர்ம நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்வது, தொடர்கதையாகி விட்டது. நேற்று (வெள்ளிக்கிழமை) காலை தலைநகர் கய்ரோவை நோக்கி வந்த ராணுவ வாகனத் தொடர் ஒன்றின்மீது, மோட்டார் பைக்கில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில், இரு ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.
இதுபோன்ற ஹிட்-அன்ட்-ரன் சம்பவம், கடந்த வாரத்தில் மூன்றாவது தடவையாக நேற்று நடைபெற்றுள்ளது.

இஸ்மாலியா நகரில் இருந்து கய்ரோவை நோக்கி இந்த ராணுவ வாகனத் தொடரணி வந்துகொண்டிருந்தது. வாகனத் தொடரணியில் ராணுவ ட்ரக்குகள், தாக்குதல் டாங்கிகளையும், கவச வாகனங்களையும் வீதியில் இழுத்து வந்து கொண்டிருந்தன.

வாகனத் தொடரணி கய்ரோவை நெருங்கிவிட்ட நிலையில், வீதியில் எதிரே வந்த மோட்டார் பைக்குகளில் வந்த, ஹெல்மெட் அணிந்திருந்த சிலர், திடீரென ராணுவ ட்ரக்குகள் மீது எந்திரத் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். அதில் இரு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து ராணுவத்தினர் தரையில் குதித்து திருப்பிச் சுடத் தொடங்கியபோது, மோட்டார் பைக்கில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். எந்தவொரு இயக்கமும் இந்த தாக்குதலுக்கு இதுவரை உரிமை கோரவில்லை.

கடந்த திங்கட்கிழமை மற்றும், புதன் கிழமைகளில் இதே போன்ற இரு தாக்குதல்கள், போர்ட் சையத் பகுதியில் நடைபெற்றன. அவற்றிலும், மோட்டார் பைக்கில் வந்தவர்களே தாக்குதல் நடத்தியதில், திங்கட்கிழமை 3 ராணுவ வீரர்களும், புதன் கிழமை 8 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.
போர்ட் சையத் பகுதியில் தாக்குதல் நடத்தியவர்கள், ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. அவர்களது முகங்கள் தெளிவாக தெரிந்த போதிலும், அவர்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. 

புதன் கிழமை நடந்த தாக்குதலில், மோட்டார் பைக்கில் வந்தவர்கள் ரொக்கட் லாஞ்சர் மூலம் தாக்குதல் நடத்தியதில், ஒரு ராணுவ ட்ரக், மற்றும் ஜீப் வெடித்துச் சிதறியது.

அதற்கும் யாரும் இதுவரை உரிமை கோரவில்லை.

எகிப்தில் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி நடக்கும் புதிய அரசுக்கு, ‘முஸ்லிம் சகோதர சமூகம்’ அமைப்பும், அங்குள்ள அல்-காய்தா ஆதரவு இயக்கமும் பெரும் சவாலாக உள்ளன. இந்த மோட்டார் பைக் அதிரடித் தாக்குதல்களை, இந்த இரு தரப்பில் யார் செய்கிறார்கள் என்பது மர்மமாகவே உள்ளது.

இஸ்ரேலியப் பிரதமரின் புழுகு மூட்டை விசாரணைக்கு உட்படுத்து மாறு ஈரான்

zar-270x170

          ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரே பொய்யை பல வருடங்களாக கூறி வருகிறார் என்றும் இது குறித்து கேள்வி எழுப்ப சர்வதேச சமூகம் கடமைப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் முஹம்மது ஜவாத் ஷாரிஃப் கூறியுள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த ஷாரிஃப் கூறியது: ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக இஸ்ரேல் கடந்த 22 ஆண்டுகளாக குற்றம் சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டை நாங்கள் பொருட்படுத்தவில்லை.
ஆனால், பொய் கூறி உலகத்தை ஏமாற்றி அச்சுறுத்தி வரும் இஸ்ரேலிடம் உலக நாடுகள் விளக்கம் கேட்க வேண்டும் என்று ஷாரிஃப் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அவையின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் நெதன்யாகுவின் நேற்றைய உரைக்கு முன்பாக ஷாரிஃபின் அறிக்கை வெளியானது. கடந்த ஆண்டு ஐ.நா.வில் ஆற்றிய உரையிலும், ஈரான் 6 மாதத்திற்குள் அணு குண்டை தயாரிக்கப் போவதாக நெதன்யாகு புழுகியிருதார்.

காஸாவை தாக்க எகிப்து இராணுவ நிர்வாகம் திட்டம் !


சினாய் தீபகற்பத்தில் எகிப்து இராணுவத்தின் மீதான தாக்குதல் தொடரும் பட்சத்தில் பலஸ்தீனின் காஸா  பகுதி மீது இராணுவ தலையீட்டை மேற்கொள்ள எகிப்து இராணுவம் திட்டமிட்டுள்ளது.என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஹமாஸ் ஆளுகைக்கு உட்பட்ட காஸாவில்  தாக்குதல்களை முன்னெடுக்கும் இலக்குகள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக எகிப்து இராணுவ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது எகிப்து- காஸா  எல்லையில் ஆயுதக் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களையும் இலக்குவைத்து வான் தாக்குதல் நடத்த எகிப்து திட்டமிட்டுள்ளது. எகிப்தின் காஸா எல்லையான சினாய் தீபகற்பத்தில் தொடரும் தாக்குதல்களின் பின்னணியில் காஸா  ஆயுதக் குழுக்களுக்கு தொடர்பு இருப்பதாக எகிப்து இராணுவமும் இஸ்ரேலும் குற்றம் சாட்டி வருகின்றன .
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ,அடக்குமுறைக்கு திட்டங்களுக்கு மிகப்  பெரும் சவாலாக காஸா மக்கள் இஸ்ரேலுக்கு எதிராக போராடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களாம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி  முர்ஸியின் ஆட்சிக்கு எதிராக இராணுவ சதிப் புரட்சியை மேற்கொண்ட இராணுவத் தளபதி சிஸி ஒரு யூத சியோனிச பின்னணிகளை கொண்டவர் என்பது சுட்டிக் காட்டத்தக்கது.
அதேவேளை காஸாவிலிருந்து ஹஜ் கடமைக்காக சென்ற 100க்கும் அதிகமான பலஸ்தீனர்களை  எகிப்திலிருந்து இராணுவ நிர்வாகம் திருப்பி அனுப்பியுள்ளது  சவூதி செல்வதற்காக காசாவிலிருந்து ரபா வாயிலூடாக எகிப்தை சென்றடைந்தவர்களே மீண்டும் காஸாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன

“மிஸ்டர் பீன்” இஸ்லாத்தில் இணைந்தார் !! (?) - முதலில் செய்தி வெளியிட்டது யூத ஊடகங்களே..



சீரியஸான விடயங்களை மட்டுமே எழுதும் நமக்கும் கொஞ்சம் கூலாக எழுத ஒரு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. சார்ளி சப்ளினின் பின்னர் உலகம் முழுதும் உள்ள மக்களை தனது நகைச்சுவை மூலம் தன் கட்டுப்பாட்டில் தொடராக தக்க வைத்திருந்தவர் Rowan Atkinson. “மிஸ்டர் பீன்” என்றால் தெரியாதவர் யாரும் இல்லை. அவர் புனித இஸ்லாத்தை தழுவியுள்ளார்.


“நான் முஸ்லிம்கள் பற்றியும் நபி முஹம்மத் பற்றியும் எடுக்கப்பட்ட அண்மைகால படங்களை பார்த்தேன். அது பற்றிய ஆராய்தலின் விளைவே எனக்கு இஸ்லாம் கிடைக்க வழிவகுத்தது” என்று ரொவான் அட்கின்சன் கூறியுள்ளார். 

இந்த தகவலை ஒரு இஸ்ரேலிய உடகவே முதலில் வெளியிட்டது. அதன் பின்னர் சுமார் 60 இற்கும் அதிகமான யூத இணையத்தளங்கள் இதனை பதிவிட்டுள்ளன. இந்த செய்தி பரவிய பின்னர் அரபு மற்றும் முஸ்லிம் ஊடகங்கள் இதனை பரவலாக பகிர்ந்துள்ளன. பேஸ் புக் பற்றி பேசவே தேவையில்லை.

Israellycool தங்களால் இதனை நம்ப முடியாது என்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த இணையத்தளம் மட்டுமே இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ள அதே வேளை ஏனைய இஸ்ரேலிய சார்பு ஊடகங்கள் இதனை செய்தியாக வெளியிட்டுள்ளன.

நியூயோர்க் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடரில் இராஜதந்திரரீதியில் ஈரானிய அதிபரின் நடவடிக்கைகள் மேற்கை கவர்ந்ததும் இஸ்ரேலிய பிரதமரின் உரை உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தல் விடுப்பதாக அமைந்ததும் நாம் அறிந்ததே.

தங்களின் அரசியல் தோல்வியை தவிர்க்கும் வண்ணம் இந்த கதையாடல் உருவாக்கப்பட்டு ஸியோனிஸ ஊடகங்களின் பேசுபொருளாக மாற்றப்பட்டுள்ளதா அல்லது உண்மையாகவே அவர் புனித இஸ்லாத்தில் நுழைந்துள்ளாரா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.!!