Facebook Twitter RSS
*/

Latest News

ஈரானின் சைபர் உளவுத்துறை கமாண்டர் மர்மமான முறையில் சுட்டுக் கொலை! - கொலையின் பின்னணியில் “மொஸாட்” ??


ரானின் சைபர் உளவுத்துறை கமாண்டர் ஒருவர் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த காலங்களில், ஈரானிய அணு விஞ்ஞானிகள் சிலர் மர்மமான முறையில் கொல்லப்பட்டதன் தொடர்ச்சியாக, சைபர் உளவுத்துறையை சேர்ந்தவர்கள் தற்போது இலக்கு வைக்கப்பட்டுள்ளார்களோ என்ற சந்தேகம், அங்கு ஏற்பட்டுள்ளது.


ஈரானிய சைபர் உளவுத்துறையின் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் கமாண்டர் மஜ்டாபா அஹ்மதியின் உடல், இரு துப்பாக்கிக் குண்டுகள் மார்பில் பாய்ந்த நிலையில், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலைநகர் தெஹ்ரானுக்கு அருகே கராஸ் என்ற இடத்தில் மரங்கள் நிறைந்த சோலை ஒன்றில் இவரது உடல் காணப்பட்டது.

இவர் கடைசியாக தமது அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை பணிபுரிந்துள்ளார். அதன்பின் மாயமாக மறைந்து விட்டதாக தெரிகிறது.
கமாண்டர் மஜ்டாபா அஹ்மதியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சோலை பகுதியில் இரு மோட்டார் பைக்குகள் வந்து சென்றதற்கான தடங்கள் உள்ளதாக தெஹ்ரான் போலீஸ் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில், ஈரானிய அணு விஞ்ஞானிகள் சிலர் மர்மமான முறையில் கொல்லப்பட்டபோது, அவர்களும் மோட்டார் பைக்குகளில் வந்த மர்ம நபர்களாலேயே கொல்லப்பட்டிருந்தனர். அந்தக் கொலைகளின் பின்னணியில், அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.வும், இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தும் இருந்ததாக ஈரான் குற்றம்சாட்டியிருந்தது!

அமெரிக்கா........... ஆ.....ஆ....ஆ...

      வாஷிங்டன்: அமெரிக்க அரசு முடக்கி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கையோடு, அரசின் பல இணையதளங்களும் தங்களின் சேவையை நிறுத்திக் கொண்டுள்ளன. 
       இ கவர்னன்ஸ் எனும் மின்னணுமயமாக்கப்பட்ட அமெரிக்க நிர்வாகம் இதனால் ஒரேயடியாக ஸ்தம்பித்து நிற்க, மக்கள்பாடு பெரும் திண்டாட்டமாக உள்ளது. 
       ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு குடியரசுக் கட்சி முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதனால் மொத்தமாக அரசாங்கத்தையே முடக்கிவைத்திருக்கிறார் ஒபாமா. 
       இந்த ஷட்டவுன் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை (முன்பு க்ளிண்டன் ஆட்சியில் 21 நாட்கள் நீடித்தது). ஆனால் முடிவில் மக்களின் அமோக ஆதரவு ஒபாமாவுக்கே கிடைக்கும் நிலைதான் உள்ளது.                அரசின் முடக்கத்தால், பல அரசு இணையதளங்களும் முடங்கிப் போயுள்ளன. அட உலகமே ஆர்வத்துடன் பார்க்கும் நாசாவின் இணையதளம் கூட முடங்கிப் போயுள்ளது.

அதுபற்றிய விரிவான ஒரு பார்வை...

      அரசாங்கத்தின் சில இணைய தளங்கள் இயங்கினாலும், பெரும்பாலான தளங்கள், 'ஸாரி... ஷட்டவுன் காரணமாக சேவை நிறுத்தப்பட்டுள்ளது,' என்ற அறிவிப்புடன்தான் உள்ளன


அப்டேட் இல்லை.........  
       சில இணையதளங்கள் இயங்கினாலும், ஷட்டவுன் காரணமாக அப்டேட் செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளன. காரணம் அப்டேட் செய்ய வேண்டிய பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதுதான்.

நாசா:
       உலகின் மிகப் பிரபலமான அரசு இணையதளங்களுள் ஒன்றான நாசாவின் www.nasa.gov முழுமையாக முடங்கிப் போயுள்ளது. மேலும் விவரங்களுக்கு அமெரிக்க அரசின் இணையதளத்தைப் பார்க்கச் சொல்லி குறிப்பு தந்துள்ளனர். அந்தத் தளத்தில் ஏன் இந்த ஷட்டவுன் என்ற விவரம் தரப்பட்டுள்ளது.


   அமெரிக்க அரசின் குடும்ப நலத்துறை, அமெரிக்க நீதித்துறை, அமெரிக்க விவசாயத்துறை, வெளிவிவகாரத் துறை உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட அரசு இணையதளங்கள் முழுமையாக முடங்கியுள்ளன அல்லது அப்டேட் இல்லாமல் உள்ளன.

சிஐஏ:
  ஆனால் அரசின் முக்கிய துறைகளில் ஒன்றான சிஐஏவின் இணையதளம் மட்டும் முழுமையாக செயல்படுகிறது. அதில் அரசின் முடக்கம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறையில் அரசு கைவைக்காததால் இந்த நிலை.

     அரசின் இணையதளங்கள் முழுமையாக முடங்கிப் போயிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிலர், "இது மக்களை பரபரப்புக்குள்ளாக்கும் செயல். இதன் மூலம் நிலைமையின் தீவிரத்தை உணர வைக்கிறது அரசு. ஆனால் எப்படியும் இந்த நிலை ரொம்ப நாள் நீடிக்காது. எனவே அட்லீஸ்ட் இணையதளங்களையாவது முடக்காமல் இருக்கலாம்," என்று கூறியுள்ளனர்.

கடும் நிதி நெருக்கடி : அரசு நிறுவனங்களை மூடிய அமெரிக்கா

வாஷிங்டன் : வரும் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட சிக்கலால் விளைந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு அரசு நிறுவனங்களை அமெரிக்க அரசு மூடியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா 2வது முறையாக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கை அமெரிக்க பாராளுமன்றத்தால் ஏற்று கொள்ளப்படாததால் அமெரிக்க அரசு நெருக்கடியை சந்தித்துள்ளது.
ஒபாமா கேர் என்று அழைக்கப்படும் சுகாதார நலத்திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கும் திட்டத்திற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால் நிதி நிலை அறிக்கையை நிறைவேற்ற முடியவில்லை.
இந்நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு அரசு நிறுவனங்களை நிதி நிலை அறிக்கை நிறைவேறும் வரை மூட உத்தரவிட்டுள்ளது. முதல் கட்டமாக 7 இலட்சத்து 83 ஆயிரம் பேரை ஊதியமில்லா விடுப்பில் செல்ல பணித்துள்ளது. சுகாதாரம், ராணுவம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பில் ஈடுபட்டோர்க்கு மட்டும் விதிவிலக்கு அளித்துள்ளது.
ஒரு சில வாரங்களில் நிதி நிலை அறிக்கை ஏற்கப்பட்டால் மிகப் பெரும் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்று சொல்லப்படும் அதே வேளையில் இந்நெருக்கடி நீளும் பட்சத்தில் உலக பொருளாதாரத்தில் மிகப் பெரும் விளைவுகளை ஏற்படுத்த கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

யார் இந்த வன்சாரா?


ந்திய காவலர்களில் கிரண்பேடி போன்ற சிலர் மட்டுமே ‘Super Cop’ என்று அழைக்கப்பட்டனர்.
2007ல் சிறையில் அடைக்கப்படும் வரை குஜராத்தின்  ‘Super Cop’ ஆக       எல்லா அதிகாரமும் பெற்று திகழ்ந்தவர் தான் டி. ஜி. வன்சாரா.
1987 பேட்ச் குஜராத் கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான வன்சாரா குற்றவியல் பிரிவு தலைவராக பணியாற்றிய நாளிலிருந்தே என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக அறியப்பட்டவர். பல்வேறு என்கவுண்டர்களை நடத்தி மீடியாவின் புகழ் வெளிச்சத்தில் இருந்த வன்சாரா மத்திய பிரதேசத்தை சார்ந்த சொஹ்ராபுதீனை என்கவுண்டரில் சுட்டதிலிருந்து அவரின் சரிவு தொடங்கியது.
சொஹ்ராபுதீன் என்கவுண்டர் போலியானது என்று மனித உரிமை அமைப்புகள்  கொடுத்த அழுத்தத்தால் காவல்துறையால் மீண்டும் விசாரிக்கப்பட்டு குஜராத் மாநில சிஐடியால் 2007ல் சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கு பிறகு தான் வன்சாரா நடத்திய பல என்கவுண்டர்கள் போலியானவை என தெரிய வந்தது. என்கவுண்டரில் தான் சுடும் எல்லோரையும் பாகிஸ்தான் அல்லது லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் என்று சொல்வது தான் வன்சாராவின் ஸ்டைல். வன்சாரா நடத்திய போலி என்கவுண்டர்களில் குறிப்பிடத்தகுந்த என்கவுண்டர்கள் போலியானது என தெரிய வந்தது.
வன்சாரா நடத்திய போலி என்கவுண்டர்களில் குறிப்பிடத்தகுந்த  சிலஎன்கவுண்டர்கள் இந்நேரம் வாசகர்களுக்காக:
வீழ்ச்சிக்கு வழி வகுத்த சொஹ்ராபுதீன்
நவம்பர் 2005ல் மத்திய பிரதேசத்தை சார்ந்த சொஹ்ராபுதீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கவுசர் பீவி பேருந்தில் சென்று கொண்டிருந்த போது குஜராத் மாநில தீவிரவாத எதிர்ப்பு படையால் கைது செய்யப்பட்டனர். சொஹ்ராபுதீன் அஹமதாபாத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சில நாட்கள் வைக்கப்பட்டு பின் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் சுடப்பட்டு கிடந்தார். அவரது மனைவி கவுசர் பீவியோ காணாமல் போனார். பின் செய்தியாளர்களின் கூட்டத்தில் லஷ்கர் இ தொய்பாவால் அனுப்பட்ட தீவிரவாதி சொஹ்ராபுதீன் என்றும் மோடியை கொல்ல திட்டமிட்டார் என்றும் கூறினார்.
இஷ்ரத் ஜஹான்
சொஹ்ராபுதீன் என்கவுண்டருக்கு ஒரு வருடம் முன்பாக ஜுன் 2004ல் கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் மற்றும் மூவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்கள். வழக்கம் போல் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்டோர் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் என்று காவல்துறை கூறியது.
அது போல் 2003ல் பவ்நகரை சார்ந்த சாதிக் ஜமாலும் 2002ல் அஹமதாபாத்தில் கொல்லப்பட்ட சமீர் கானின் என்கவுண்டர்களும் போலியானவை என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
துளசி பிரஜாபாதி
 சொஹ்ராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கின் முக்கிய சாட்சியும் காவல்துறை இன்பார்மருமான துளசி பிரஜாபதி போலி என்கவுண்டரில் டிசம்பர் 2006ல் கொல்லப்பட்டார். தற்போது அக்கொலை சம்பந்தமாக அமித் ஷாவை காப்பாற்ற நடந்த முயற்சி குறித்த சிடி வெளியாகி பாஜகவை பீதிக்குள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கவுசர் பீவி
சொஹ்ராபுதீன் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட பின் அவரது மனைவி கவுசர் பீவி விஷம் கொடுக்கப்பட்டு பின் வன்சாராவின் கிராமத்தில் எரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று சிஐடி கருதினாலும் அவரது நிலை தெரியவில்லை. சிறையில் இருந்த போது கவுசர் பீவி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு "யார் அந்த கவுசர் பீவி" என்று கேட்டார் வன்சாரா.
சிறையில் வன்சாரா
சிறையில் இருந்த போது செய்திதாள்களை படிப்பதில்லை என்றும் தொலைக்காட்சியை பார்ப்பதில்லை என்று கூறிய வன்சாரா மன நிம்மதிக்காக சர்ச்சை புகழ் ஆசாராமின் யோகாவை பின்பற்றுவதன் மூலம் தான் மன நிம்மதி பெறுவதாக கூறியிருந்தார். 2008ல் இவருடன் சிறையில் இருந்த இன்னொரு காவல்துறை அதிகாரி அமீன் வன்சாராவால் தான் தாம் சிறையில் இருப்பதாக கூறி, கிரிக்கெட் மட்டையால் சிறைக்குள்ளேயே மோதி கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் மிகப் பெரும் நகைச்சுவை என்னவென்றால், சிறையில் இருக்கிற வன்சாரா மனித உரிமைகள் குறித்த பட்டயப்படிப்பை  படித்து கொண்டிருக்க்கிறார் என்பது தான்.

'தாக்கூத்' பேயே ! அரசியல் பிச்சை போடு !!!


 சாத்தானிய பஞ்சு மெத்தையில் புரண்டெழுந்து 'தாக்கூதிய' திருப்தியோடுதான் முஸ்லீம் உம்மத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். என நினைப்பவர்கள் இஸ்லாத்தின் யதார்த்தம் புரியாதவர்கள் . இந்த 'ஹுப்புத் துன்யா ' இஷம்  ஒரு 'பேஷனாகி ' முஸ்லீம் உம்மத்தை ஆட்டுவிக்கின்றது .

          நேர்வழி என்பது அல்லாஹ் (சுப ) அவனது தூதர் (ஸல் ) காட்டித் தந்தவை மட்டுமே ஆகும் . அந்தப் பாதையில் ஒரு நூல் சறுக்கினாலும் அடையும் இலக்கு தப்பாகிவிடும் . அதேபோல காலத்தின் தேவையை அந்த இறை வஹி காட்டித் தரவில்லை என்று கருதினாலும் அதுவும் இஸ்லாத்தின் பூரணத் தன்மை மீது நம்பிக்கை இல்லை என்றே ஆகிவிடும் .


          முஹம்மத் (ஸல் ) அல்லாஹ்வின் (சுப ) இறுதித் தூதர், புர்கான் அவர் மூலமாக அருளிய முழு மனித சமூகத்துக்குமான இறுதி வழிகாட்டல் என்பதில் ஒரு சிறு அளவேனும் சந்தேகம் இல்லாதவனே முஸ்லீம் ஆவான் .

          அந்த அடிப்படையில் காலம் 'வஹியின் ' முக்கியத்துவத்தை காலாவதி ஆக்கி விட்டது ; எனக் கூறுவதும் ஒன்றுதான் . 'வஹி 'வழிமுறை அல்லாத ஒன்றை எம் வாழ்வியலாக எடுத்து நடப்பதும் ஒன்றுதான் . எமது பிரச்சினைகளுக்கு 'வஹியின் 'தீர்வற்ற ஒரு இடைக்காலம் உண்டென நம்புவதும் ஒன்றுதான் .

        அதாவது சிந்தனையால் ,சொல்லால் ,செயலால் வஹியை மறுத்தல் என்ற பயங்கர பாவத்தின் கீழேயே விடயங்கள் வந்து விடும் . அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும் . 

         # ஆன்மீகத்துக்கு இஸ்லாமும் அரசியலுக்கு ஜனநாயக கூட்டுச் சர்வாதிகாரம் ,அல்லது தனிநபர் இராணுவ சர்வாதிகாரம் , அல்லது முடியாட்சி , குடியரசு இப்படி இஸ்லாம் அல்லாத ஏதாவது ஒன்றை முஸ்லீம் ஏற்றுக்கொள்ள முடியுமா ?

                    # அல்லாஹ்வுக்கு மட்டுமே சட்டமியற்றும் அதிகாரம் உண்டென அகீதாவழி பூரணமாக நம்பிக்கை கொண்ட முஸ்லீம் ,மனிதன் மனிதனுக்கு சட்டமியற்றலாம் என்ற அடிப்படைக்கு எவ்வாறு கட்டுப்பட முடியும் ? அதன் வழி நின்று முஸ்லீம் உம்மத்தை எவ்வாறு வழிநடாத்த முடியும் ?

                      #" இஸ்லாம் மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகி விட்டது " என்ற வஹியின் வார்த்தைகள் குப்பார்களுக்கான தேடல் சுதந்திரத்தை வரைவிலக்கணப் படுத்துகின்றது .தவிர முஸ்லீம்களை குறித்து நிற்கவில்லை என்பது எனது ஆணித்தரமான வாதம் . இதற்கு வஹியின் அடிப்படையில் ஏதாவது மாற்று கருத்துகள் இருக்கின்றதா ?

                  # முஸ்லீம் பெரும்பான்மையை நிரூபித்தே முஸ்லீம் உம்மத் இஸ்லாத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என 'ஜனநாயகம் ' சொல்லும் வரைவிலக்கணமே முஸ்லிமை பொறுத்தவரை மிகத் தவறானதும் இஸ்லாத்தை அவமதிப்பதுமாகும் என்பது எனது வாதம் . சுற்றி வளைக்காமல் சுன்னாவின் அடிப்படையில் இதற்கு மாற்றுக் கருத்து உண்டா ?

                      மொத்தமாக நான் கூற வருவது (இஸ்லாம அல்லாத ) ஜனநாயகமோ (வேறு எதுவோ )ஒரு கடவுள் கொள்கையாகவே இருக்கின்றது .இப்போது அதற்கு கட்டுப்படும் ஒவ்வொருவனும் சிர்க்கையே செய்கிறான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை .

                  அதாவது இங்கு வழிகேடு தான் வணங்கப் படுவதற்கு சிலைகள் போல , கபுருகள் போல வெளித் தெரியாது ! மாறாக சிந்தனைகளாக மறைந்து நிற்கும் .கவலையான விடயம் என்னவென்றால் நேற்று இதுபற்றி வார்த்தைகளை பீரங்கிகளாக முழங்கியவர்கள் ,குப்ரிய அரசியலில் தாகூத்தின் திருப்தி வேண்டி கூடிக் கூத்தடிக்க தொடங்கி விட்டார்கள். 

                    கேட்டால் உம்மத்துக்காக இருக்கும் ஒரே வழி ,காலத்தின் தேவை என புதிதாக வஹி வந்துள்ளது போல் கூறியும் விடுகிறார்கள் ! அதாவது நேற்று ஆழமாக 'ஹாக்கீமியத் ' பேசிய தாயிகள் எல்லாம் இன்று தாக்கூத் பேயே அரசியல் பிச்சை போடு ' என்ற கேவல வாழ்வியலை சரிகாண்பது வெட்கக் கேடானது .

                     கட்டார் 'ஹொட்டில் ' A /C  கூளிள் இருக்கும் உலமாவும் இதைத் தான் சொல்கிறார் . JAFFNA  வெயிலில் தேசியப் பட்டியலில் இருக்கும் அஷ் ஷெய்' கும் இதைத்தான் சொல்கிறார் .முஸ்லீம் சமூகம் தெளிவாகவே ஏமாற்றப் படுகின்றது

இரண்டு சகோதரர்கள். ஒருவர் ஜபாஃ அல் நுஸ்ராவில். மற்றையவர் எப்.எஸ்.ஏ.யில் - நாளை இவர்கள் இருவரும் அமெரிக்க சதுரங்கத்தில் எதிரிகளாக சண்டையிடப் போகிறார்கள்.... !!

Two brothers fighting against each other in Syria. At least we know one of them is doing the right thing. #fsa #alnusra #freesyria

தளபதி அப்துல்லாஹ் ஆஸம், கொமாண்டர் கத்தாப்ஃ வரிசையில் இன்னொரு மாமனிதன் - Dr. Abdul Fattah Numan

whysunni:

BEAUTIFUL STORY, BEAUTIFUL INDIVIDUAL-PLEASE READ!

Our wonderful brother, Dr. AbdulFattah Numan from Yemen, has been martyred in Syria. 

He was a Professor of Shariaa Jurisprudence at Sanaa University and also a surgeon. 

In 2011, he was a volunteer at the field hospital in “Change Square” in Sana’a to treat the wounded.

In 2012 he traveled to Gaza with a delegation to conduct medical surgeries for the wounded in the recent Israeli war on the Gaza Strip.

In 2013 he traveled to Egypt and volunteered at the field hospital “Rabaa El Adaweya” Square, site of the recent massacre. 

He then traveled to Syria to treat the wounded at a field hospital in Aleppo, where he was eventually martyred due to the Assad regime’s bombardment of the hospital.

May God have mercy on his soul and may God build him a house in Paradise.

ர்னஸ் டீ சேகுவேரா பற்றி நாம் நிறையவே தெரிந்து வைத்துள்ளோம். ஆர்ஜன்டீனாவலில் பிறந்து வளர்ந்த மருத்துவர். கியூபாவின் விடுதலைக்காக பிடல் கஸ்ரோ, ரால்ப் கஸ்ரோ, காமிலோஸ் போன்ற தலைவர்களுடன் கியூபாவின் காடுகளில் அலைந்து திரிந்து போராடியவர். பின்னர் பொலீவிய விடுதலைக்காக போராட முற்பட்ட வேளை படுகொலை செய்யப்பட்டார். ஒரு விடுதலை போராளியாகவும், மனித நேயமிக்க கெரில்லா போராளியாகவும் புரட்சிகர விடுதலை இயக்கங்கள் அவரை இன்றும் போற்றுகின்றன. 



இன்னொரு முஸ்லிம் முஜாஹித் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். அந்த விடுதலை போராளியின் பெயர் Dr. Abdul Fattah Numanயெமனில் பிறந்து வளர்ந்தவர். மருத்துவதுறையில் பிரபலமான டாக்டர். ஸன்னாவில் உள்ள மருத்துவ மனையில் டாக்டராக பணியாற்றியவர். சிரியாவில் நடந்த ஜிஹாதில் சஹீதாக்கப்பட்டவர். (இன்சாஅல்லாஹ்).

2011ல் சன்னாவில் நடந்த “Change Square” ஆர்ப்பாட்டங்களின் போது காயப்பட்டவர்களி்ற்கு மருத்துவ சிகிச்சைகளை புரியும் மொபைல் ஹொஸ்பிடலை  தலைமையேற்று நடாத்தினார். 

2012-ல் காஸாவிற்கு  தனது குழுவுடன் சென்று அங்கு இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளால் தாக்குதலிற்கு உள்ளாக்கப்பட்டு காயமடைந்த  பொது மக்களிற்கும், ஹமாஸின் போராளிகளிற்கும் உடனடி சத்திர சிகிச்சைகளை இரவு பகல் பாராது அயராது செய்து வந்தார். 

2013-ல் எகிப்திற்கு தனது உதவிகளை வழங்க விரைந்தார். “Rabaa El Adaweya” சதுக்கத்தில் ஜெனரல் சிசி நடாத்திய பாசிஸ படுகொலைகளில் காயமடைந்த எகிப்திய இஹ்வானிய சகோதரர்களிற்கு தொண்டர் மையமாக தற்காலிக ஆஸ்பத்திரியை நிறுவி அவர்களிற்கான சர்ஜரிகளை செய்து வந்தார். எகிப்திய இரகசிய பொலீஸார் இவரை தீர்த்துக்கட்ட தயாராகினர்..

மீண்டும் சிரியா நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தார் டாக்டர் அப்துல் பதாஹ்ஃ நுஃமான். சிரிய சமர்க்களத்தில் காயமடைந்த முஜாஹித்களிற்கான வைத்திய சிகிச்சைகளை வழங்குவதில் முன்னணியில் திகழ்ந்தார். சமர்க்கள முனைகளில் வீழ்ந்து வெடிக்கும் செல்களிற்கு மத்தியில் அவர் தனது சத்திர சிகிச்சைகளை செய்து வந்தார். 

அலிபோவில் நடமாடும் ஹொஸ்பிடலை உருவாக்கி அலிபோ சமர்க்களத்தில் அளப்பரிய சேவைகளை ஆற்றினார் சகோதரர் நுஃமான். சிரிய பஸர் அல் அஸாதின் படையினர் அவரது அலிபோ ஆஸ்பத்திரி மீது நடாத்திய விமான குண்டு தாக்குதிலில் தனது இன்னுயிரை இறைவனிற்கு அர்ப்பணம் செய்தார் இந்த இனிய சகோதரர். 

களமுனையில் துப்பாக்கி ஏந்தி போராட முடியவில்லையே, எதிரியினால் தனக்கு இன்னும் மரணம் விளையவில்லையே!! என ஏங்கிய அவரது உள்ளத்திற்கு இசைவாக இறைவன் அவரின் மரணத்தை நிர்ணயித்து விட்டான். அல்ஹம்துலில்லாஹ்.