Facebook Twitter RSS
*/

Latest News

சிரியாவின் மீது அமெரிக்கா தொடுத்துள்ள ஆக்கிரமிப்பிற்கான காரணங்கள்



இந்த கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு  முன் சில உண்மைகளை தெளிவுபடுத்திக்கொள்வது அவசியமாகும்.
1. மற்ற நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகளுடன் ஒப்பிடும்போது, சிரியாவில் ஏற்பட்ட புரட்சி முற்றிலும் வேறுபட்டதாகும். இப்புரட்சி இஸ்லாத்தை மையமாக  கொண்டுள்ளதால் சிரிய புரட்சியை  இஸ்லாமிய புரட்சி என்றே அழைக்கலாம்.
2. புரட்சியாளர்கள் இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்டு போராடுவதால், அமெரிக்கா தன் கைக்கூலியான பஸாரைக்கொண்டு இரண்டு வருடங்களுக்கு மேலாக படுகொலைகளை நிகழ்த்திய போதிலும், அது தன் இலட்சியத்தில் இருந்து திசை திருப்பப்படாமல்; அன்னிய சக்திகளின் கையகப்படுத்தலிலிருந்து தன்னை தற்காத்துக்கொண்டுள்ளது.
3. பஸாருக்கு பிறகு  ஆட்சியில் அமர வைக்க புதிய ஏஜெண்டுகளை அமெரிக்கா உருவாக்கிய போதிலும், புரட்சியாளர்கள்  தங்களுடைய போராட்டம் யாருக்கு எதிரானது என்று நன்கு உணர்ந்துள்ளமையால், அந்த ஏஜெண்டுகள் புரட்சியின் பாதையில் எந்த தலையீடும் செய்ய இயலாமல் உள்ளனர்.
4. கிலாஃபா மீண்டும் ஏற்பட வேண்டும் என்கின்ற அழைப்பு புரட்சியாளர்களிடையே அதிகரித்துக்கொண்டுவரும் அதே வேளையில், அதுவே இந்த புரட்சியின் வாயிலாக தாங்கள் அடைய விரும்பும் இறுதி இலட்சியம் எனவும், மேலும் சிரியாவோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் ஃபலஸ்தீனத்தை விடுதலை செய்ய முயல்வோம் என்றும் அறிவித்துள்ளனர். இவற்றை வைத்து ஆய்வு செய்வோமானால் இது ஒரு உண்மையான விடுதலைக்கான புரட்சி என்று உணர்கிறது. புரட்சியை கையகப்படுத்த அமெரிக்கா எடுத்த  முட்டாள்தனமான நடவடிக்கைகளும் பலனளிக்காமல் போனதோடு, இந்த புரட்சி இறுதி கட்டத்தை அடைந்து தன்னுடைய இலட்சியத்தில்  வெற்றி வாகைசூட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சிரிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 30% க்கும் குறைந்த இடங்களும், ஏனைய இடங்களனைத்தும் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழும்  உள்ளது. கடந்த சில வாரங்களில் புரட்சியாளர்களுக்கு கிடைத்துள்ள வெற்றி, அமெரிக்காவின் கைப்பாவை அரசான பஸாரின் வீழ்ச்சியையும், வரவிருக்கும்  பெரும் வெற்றிக்கான நற்செய்தியையும் அறிவிக்கின்றதாக உள்ளது.
இந்த காலகட்டத்தில் தான் இரசாயன ஆயுதம் உபயோகிக்கப்பட்ட சர்ச்சை கிளப்பட்டுள்ளது. வளைகுடாப்போருக்கு முன்பு சதாம் ஹுசைன், குவைத்தை கைப்பற்ற அமெரிக்கா எவ்வாறு அனுமதித்ததோ,  அதைப்போன்றே அமெரிக்காவின் அனுமதியின்றி கண்டிப்பாக கொடுங்கோலன் பஸார் இரசாயன ஆயுதத்தை பிரயோகித்திருக்க முடியாது.
இந்த நிலைமையில் பஸாருடைய ஆட்சி கவிழ்வது உறுதி என்பதையும், எந்நேரமும் அவன் வீழலாம் என்பதையும் அமெரிக்கா உணர்ந்துவிட்டது. இந்த வீழ்ச்சி  பஸாருடைய தனிப்பட்ட வீழ்ச்சியாக இல்லாமல் சிரியாவின் முழு அரசியலமைப்பின் வீழ்ச்சியாக அமையும். மேலும் மேற்கத்திய நாடுகள் கடந்த காலங்களில்  சிரிய அரசுக்கு கொடுத்து வந்த பெரும் ஆயுதங்களும் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். சிரியா முழுவதுமாக அவர்களின் கட்டுப்பாட்டில் வருவதோடு  நிலையான அரசின் அனைத்து அங்கங்களும் இராணுவ தளங்களும் (vital centers of Power) சேர்ந்து புரட்சியாளர்களின் வசப்படும்.
எனவே அமெரிக்காவின் வரையறுக்கப்பட்ட இராணுவ தலையீடு என்பது,அதிமுக்கிய அங்கங்களும் இராணுவ தளங்களும் புரட்சியாளர்களின் வசம் வருவதை தடுப்பதற்காகும். (இதே காரணத்திற்காக தான் இஸ்ரேல் முன்னர் சில குறிப்பிட்ட இடங்களில் விமானங்களை வைத்து தாக்குதல் செய்தது நாம் அறிந்த்ததே).அதோடு நிற்காமல் லிபியாவில் செய்ததைப்போல் முஜாஹிதீன்களையும் ,அவர்களுடைய முக்கிய பயிற்சி மற்றும் இராணுவ தளங்களையும் தாக்குவதே அமெரிக்காவின் குறிக்கோளாகும். இதற்காககவே ஜபதுன்னுஸ்ரா  அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று முன்னரே அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஆகவே அமெரிக்காவின் இராணுவ தலையீடு என்பது ஒபாமா சொல்வதைப்போல் அப்பாவி சிரிய மக்களுக்கு உதவி புரிவதற்காக அல்ல. மாறாக இராக், ஆஃப்கானிஸ்தான் மற்றும் பல நாடுகளில்  நடைபெற்றதைப்போன்று  இதுவும் உம்மத்திற்கு எதிரான போராகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த எதிரிகளின் சூழ்ச்சியில் இருந்து நம்மை காப்பாற்றுவானாக ! மேலும் அவர்களின் சூழ்ச்சி அவர்களின் அழிவுக்கே காரணமாக அமைய வழிவகுப்பானாக !.
சிரியாவில் அல்லல்படும் மக்களுக்காகவும்,  இறுதி வெற்றி இஸ்லாத்திற்காக அமையவும் முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்திப்போம். மேலும் இஸ்லாம் இந்த பூமியில் மீண்டும் மேலோங்க அல்லாஹ் அருள் புரிவானாக ! ஆமீன்.

இந்தியன் முஜாஹிதீனுக்குப் பெயர் சூட்டியவர் யார்?

பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு ஒரு பேட்டியில் இவ்வாறு தெரிவித்திருந்தார்:

இந்தியன் முஜாஹிதீனுக்குப் பெயர் சூட்டியவர் யார்?
"மார்க்கண்டேயர் கட்ஜு: அநேக நேரங்களில் மக்களை பிளவுபடுத்துகிறது ஊடகங்கள். ஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் குண்டு வைத்தது இந்தியன் முஜாஹிதின் அல்லது ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல்ஜிஹாத் அமைப்பு என ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்பின் பெயரை சேனல்கள் சொல்கின்றன. அதற்கு ஆதாரமாக எஸ்.எம்.எஸ். அல்லது இமெயில் வந்தது என்கிறார்கள். எஸ்.எம்.எஸ், இ.மெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும். யாரோ ஒரு விஷமி கூட அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக தொலைக் காட்சிகளில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரித்து முஸ்லிம்கள் எல்லாருமே குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என ஒரு மதத்தையே ஒட்டு மொத்த கொடூரகாரர்களாக மாதிரி சித்தரிக்கின்றன ஊடகங்கள். எந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.
ஊடகங்கள் இந்த விஷயத்தில் அலட்சியமாகவோ, தகவல் உண்மையா என்பதை சரி பார்க்காமல் பொறுப்பற்ற முறையில் செய்தி வெளியிடுகிறது என்று நான் நினைக்கவில்லை. மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த ஊடகங்கள் வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன். நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது."
குண்டு வெடித்த சிறிது நேரத்திலேயே எஸ்.எம்.எஸ். வந்தது என்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக ஊடகங்கள் சித்தரிப்பதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்?"
முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் கூற்றில் உண்மை இல்லாமலில்லை.
தீவிரவாதச் செயல்கள் என்றாலே அதை செய்தவர்கள் முஸ்லிம்கள்தான் என்ற கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன இந்திய ஊடகங்கள். இதில் மிக முனைப்புடன் செயல்படுபவர்களில் ஒருவர் ஹிந்து நாளிதழின் பிரவீன் சுவாமி. இந்தியன் முஜாஹிதீன் என்ற முகவரியில்லாத அமைப்புப் பற்றி எல்லா புள்ளிவிவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர் அவர்.
சமீபத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் யாசின் பட்கல் என்பவரைப்பற்றி இந்திய முஜாஹிதீன் அமைப்பின் தலைவர், கமாண்டர், ஃபவுண்டர், கோ ஃபவுண்டர் என பலவித பதவிகளை சூட்டியே அல்லாமல் ஊடகங்கள் செய்தி வெளியிடுவதில்லை. பிரவீன் சுவாமியும் யாசின் பட்கலின் சரித்திரத்தை புட்டுப் புட்டு வைக்கும் விதத்தில் நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அப்படியானால் இ.மு. அமைப்பைப் பற்றியும் யாசினுக்கும் அந்த அமைப்பிற்கும் உள்ள தொடர்புகள் பற்றியும் பிரவின் சுவாமிக்கு கட்டாயம் தெரிந்திருக்கும்தானே?
இது பற்றி பிரவின் சுவாமி அளித்த பேட்டியை இந்த காணொளியில் கண்டு களியுங்கள்.

பேட்டியின் எழுத்து வடிவம்:
கேள்வி: இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைமையகம் எங்கே இருக்கிறது? அதன் தலைவர் யார்? செயலாளர் யார்? அதன் உள்கட்டமைப்பு எப்படிப் பட்டது? அதன் அமைப்பு விதிகள் என்னென்ன?
பிரவீன் சுவாமி: அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளையும், உரையாடல்கள் மூலம் தெரியவந்த தகவல்களையும் வைத்துப் பார்த்தால் அவர்கள் ஒரு நிறுவன அமைப்பாக எக்காலமும் இருந்ததில்லை என்று தெரிகிறது.
கே: அதன் தலைவர்கள் யாவர்?
பி.சு: அதன் தலைவர்கள் என சில பெயர்கள் சொல்லப் படுகின்றன. நானறிந்தவரையில் (அந்த அமைப்பின் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்காக) தேர்தல் எதுவும் நடத்தப்பட்டிருக்கவில்லை.
கே: அப்படியென்றால் அது ஒரு பெயரும் சில நபர்களும் மட்டும்தானா?
பி.சு: ஆம். மற்றவர்களிலிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டுவதற்காக அவர்கள் இந்தப் பெயரை உபயோகிக்கிறார்கள். ஒரு நல்ல அடையாளம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அக்குழுவினரைக் குறிப்பதற்கு நாம் இந்தப் பெயரை உபயோகிக்கிறோம்.
கே: அவர்கள் இந்தப் பெயரை ஏதாவது ஆவனங்களில் பயன்படுத்தியிருக்கிறார்களா?
பி.சு: பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் செய்தித்தாள் அலுவலகங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் மற்றும் அறிக்கைகளில்...
கே: இவை மட்டும்தான் ஆதாரங்களா?
பி.சு: பல்வேறு ஒப்புதல் வாக்குமூலங்களிலும், நீதிமன்றங்களில் அளிக்கப்பட்ட அறிக்கைகளிலும் கூட.. அதறான விசாரணைகள் இன்னும் நடந்துக் கொண்டிருக்கின்றன.
கே: 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற பெயரைப் பற்றி நான் குறிப்பாகக் கேட்கிறேன். மின்னஞ்சல் தவிர்த்து வேறு எந்த ஆவனங்களிலாவது நீங்கள் இந்தப் பெயரை பார்த்திருக்கிறீர்களா?
பி.சு: யாருடைய ஆவனங்கள்?
கே: உதாரணமாக அறிக்கைகள், பதிப்பிக்கட்ட அமைப்பு விதிகள் போன்றவை..
பி.சு: நான் அறிந்தவரை அமைப்பு விதிகள் என்று எதுவும் இல்லை. ஆனால் மின்னஞ்சல்களில் பல பக்கங்களைக் கொண்ட அறிக்கைகள் இருக்கும். அவற்றில் தாங்கள் ஏன் இந்தக் காரியங்களைச் செய்கிறோம் என்பதை விளக்கமாக விவரித்திருப்பார்கள்.
கே: உதாரணமாக, ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பிற்குப் பிறகு குருஅல்ஹிந்த்ஜெய்ப்பூர் என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்ததே..!
பி.சு: ஆம். அவர்கள் புனைப்பெயர்களால் தங்களை அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள். இது பொதுவாக நடப்பதுதானே?
இந்தப் பேட்டியை கவனமாகப் பார்த்தீர்களென்றால் பிரவீன் சுவாமி கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலம் தெளிவாகப் புலப்படும். அது 'இந்தியன் முஜாஹிதீன் என எந்த அமைப்பும் கிடையாது. போலி முகவரிகளிலிருந்து அனுப்பப்பட்ட சில மின்னஞ்சல்களைத் தவிர்த்து வேறு எந்த ஆவனங்களிலும் 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற இப்பெயர் பயன்படுத்தப் பட்டிருக்கவில்லை. ஒவ்வொரு குண்டு வெடிப்பின்போதும் சில முஸ்லிம்களை அடையாளப் படுத்துவதற்காக பிரவீன் சுவாமி போன்ற ஊடகத்தினர்தான் இப்பெயரை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.'
இப்போது திரு. மார்க்கண்டேய கட்ஜுவின் குற்றச்சாட்டை நினைவுகூர்ந்து பாருங்கள்:
எஸ்.எம்.எஸ், இ.மெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும். யாரோ ஒரு விஷமி கூட அனுப்பியிருக்கலாம்.
ஊடகங்கள் இந்த விஷயத்தில் அலட்சியமாகவோ, தகவல் உண்மையா என்பதை சரி பார்க்காமல் பொறுப்பற்ற முறையில் செய்தி வெளியிடுகிறது என்று நான் நினைக்கவில்லை. மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த ஊடகங்கள் வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன். நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.
-இப்னு பஷீர்

சிரியாவின் Liwa 'al-Islam போராளிகளின் அமைப்பு முதல் டாங்கி படையை உருவாக்கியதுடன் அதற்கான பயிற்ச்சி பாடசாலையையும் ஆரம்பித்தது !!

Allahu akbar, mujahideen Liwa 'al-Islam established the first school in the Syrian tank
      சிரியாவின் டமஸ்கஸ் மகாணத்தில் உள்ள Ghautah East-ன் மீதே சிரிய படைகள் (?) இரசாயன வாயுத்தாக்குதலை மேற்கொண்டனர். இப்போது டமஸ்கஸ் மாகாணத்தின் பெரும்பாலான பிரதேசங்கள் போராளிகளின் வசம் வீழ்ந்து விட்டன. இப்போது ‘றோட் டு டமஸ்கஸ்‘ எனும் பாதையில் தலை நகர் நோக்கிய தாக்குதல்களை மேற்கொள்ள போராளிகள் தயாராகி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. டமஸ்கஸ் மாகாண சமர்களில் பிரதானமாக இரண்டு அணிகள் பங்கெடுத்துள்ளன. Liwa 'al-Islam மற்றும் Harakat Ahrar al-Sham al-Islamஎன்பனதே பிராந்திய இராணுவ ஆதிக்கம் உள்ளவையாக மாறியுள்ளன. இவ்வணிகள் இரண்டும் "submission only to God alone" எனும் பெயரிலேயே தங்கள் ஒப்பரேசன்களை செயற்படுத்தி வருகின்றனர். Qolamoun நகர் மீதான வெற்றிகரமான தாக்குதலை இவ்வணிகள் இரண்டும் இணைந்தே நடாத்தியிருந்தன. 


Sheikh Zahran bin Abdullah al-Alusy யினது தலைமையில்  Liwa 'al-Islam அணிகள் அண்மையில் சிரிய இராணுவத்தின் 81-வது பிரிகேட் டாங்கிய அணியின் தலைமையகத்தை தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர். இந்த தாக்குதல்கள் மூலம் சிரியாவில் போராடும் முஜாஜிதா அணிகளுல் இவர்களிடமே டாங்கிகள் அதிகம் உள்ளன. இதன் மறு கட்டமாக இவர்கள் தங்களது அணிகளில்  டேங் அன்ட் ஆமரி கொப் எனும் படைப்பிரிவை உருவாக்கியுள்ளனர். 

இந்த படைப்பிரிவிற்கான பயிற்ச்சி பாடசாலையையும் அவர்கள் ஆரம்பித்து 154 போராளிகளிற்கு டாங்கிகள், கவசவாகனங்கள் தொடர்பான முழு பயிற்ச்சியையும் அழித்து அவர்களை முதல் அணியாக பட்டமளித்து வெளியேற்றியுள்ளனர். எல்லாமே ஒரு கனவு போல நடந்து வருகிறது சிரியாவில். 

ரஸ்ய தயாரிப்பான T 72 ரக டாங்கிகளை ஓட்டி செல்வது. அவற்றின் மூலம் தாக்குதல்களை நடாத்துவது, Shilka BMPரக தாக்குதல் கவச வாகனங்களை ஓட்டுவது,தாக்குதல்களை மேற்கொள்வது, டாங்கிகளை எதிர்கொண்டு டாங்கிகள் மூலம் தாக்குவது, எதிரி டாங்கிகளை டாங்கிகள் இல்லாமல் தாக்குவது போன்ற சிறப்பு பயிற்ச்சிகளை இதில் வழங்கி வருகின்றனர். 

Liwa 'al-Islam Tank Combat School-ல் டாங்கிகள் கவசவாகனங்களை திருத்துவது பற்றியும் கற்று கொடுக்கின்றனர். ஏனைய சிரியாவில் போராடும் ஜபாஃ அல் நுஸ்ரா போன்ற அமைப்பின் உறுப்பினர்களையும் வந்து இதில் பயிலுமாறு வேண்டியுமுள்ளனர். 

குப்ரிய ஏகாதிபத்தியமும் முஸ்லீம் உம்மாவும் .(ஒரு சிறப்புப் பார்வை.)


          ஒவ்வொரு ஏகாதிபத்தியத்தினதும் நோக்கமும் பண்பும் ஒன்றுதான் .அது தனது மேலாதிக்க நிலையை காப்பற்றிக்கொள்ளவும் , தனது அழிவைத் தடுக்கவும் அரசியல் ,இராணுவ ,பொருளாதார ரீதியாக ஆக்கிரமிப்புகளை செய்து தன்னை சாராத அடுத்த மனிதர்களை எவ்வகையிலேனும் கட்டுப்படுத்தும் ,மேலும் தன்னை வளப்படுத்த வளங்களை அளவு கணக்கின்றி சுரண்டும் ,கட்டுப்படுத்தும் .இத்தகு பணிகளுக்காக எந்த ஒரு கொடூரமான அழிவையும் ,அழிப்பையும் செய்யும் .
     எனவே இத்தகு அதிகாரங்களுக்கு எதிராக அநீதியை எதிர்க்கும்  மக்கள் போராட எழுவது இயல்பானது .அந்த வகையில் மனித குல வரலாறு நெடுகிலும் வடிவங்களில் வேறுபட்ட ஏகாதிபத்தியங்கள் தமது அடக்குமுறையை மனித சமூகத்தின் மீது பிரயோகித்து வந்துள்ளது . மனித குலமும் தனக்கு தெரிந்த வழிமுறைகளில் இத்தகு மேலாதிக்க சக்திகளுக்கு எதிராக போராடியே வந்துள்ளனர் . ஆனால் இந்த போராட்டப் பாதையின் உன்னத வடிவத்தை மிகச் சரியாக வரைவிலக்கணம் செய்தது இஸ்லாம் தான் என்றால் அது மிகையான கருத்தல்ல .

        எப்படி ? மனிதன் மனிதன் மீது அடிமைப்படும் மனோபாவத்தையும் ,சூழ்நிலையையும் முற்றாகவே , தவிர்த்தல் , தடுத்தல் , தவிடுபொடியாக்கல் என்பதில் இருந்துதான் இஸ்லாம் சொல்லும் ஏகாதிபத்திய எதிர்ப்பின் மூலவடிவம் தோற்றம் பெறுகிறது .

           அது முன்னைய நபிமார்களின் வரலாற்றை வஹி சொல்லவந்து பிர் அவன் , நும்ரூத் போன்றோரை குறிப்பிட்டாலும் சரி ,அல்லது மனித குலத்தின் இறுதி வழிகாட்டியான முஹம்மத் (ஸல் ) அவர்களின் சமகால ஏகாதிபத்தியங்களான ரோம் , பாரசீகமாக இருந்தாலும்  இத்தகு சக்திகளின் கைக்கூலிகளாக இருந்த குரைசிக் காபீர்களாக இருந்தாலும் இஸ்லாம் வேறுபடுத்தாமல் ஒரே பண்புடனே நோக்குகிறது .

           இந்த வகையில் இத்தகு கொடூர சக்திகளுக்கு எதிராக வரலாற்று நெடுகிலும் இஸ்லாத்தின் மோதலும் இயல்பாகியது . இந்தப் போராட்டத்தின்  தவிர்க்க முடியாத போராளிதான் முஸ்லீம் . அவனது பணியும் பார்வையும் மிக உயர்ந்தது .இன்று தவறான வழிகாட்டலாலும் திட்டமிட்ட சதிகளாலும் ,தனது சுய பலவீனங்களாலும் இப்பணியை மறந்தான் . இப்பணிக்காகவே கட்டமைக்கப் பட்ட தனித்துவமான கிலாபத் எனும் ஒரே தலைமையைக் கொண்ட இறைவனின் பிரதி நிதித்துவ ஆட்சியையும் இழந்தான் .

          விளைவு முழு உலகையும் ஆக்கிரமித்த அந்த ஏகாதிபத்திய அதிகாரப் பேய் முஸ்லீம் நிலங்களையும் குடிகொண்டு இரத்தம் குடிக்க கற்றுக் கொண்டது . நர வேட்டையின் குத்தகை களஞ்சியமாக முஸ்லீம் நிலங்களை பாவிக்கும் ஏகாதிபத்தியம் இப்போது 'காசாவில்' சியோனிஸ 'ரெகுலாவாக ' தனது திசை திருப்பும் கோரத் தாண்டவத்தை தொடங்கியுள்ளதாக தெரிகின்றது . எகிப்தின் இரத்தக் கலரியில் கண் கலங்கி நின்ற சுவடுகள் கூட மாறவில்லை !

                   இது ஆணவத்தில் நேற்று  ஆடிய இந்த ஏகாதிபத்திய காட்டேரிகள்  இன்று அச்சத்தோடு நடுங்கிக் கொண்டு  இருக்கின்றார்கள் என்பதன் ஆதாரம் .அதன் காரணம் ஒரே ஒரு வார்த்தை ! அது சிரிய போராளிகளின் உளப்பூர்வமான  வார்த்தையாக வெளிவரும்  'கிலாபா' தேசம் பற்றிய எதிர்வு கூறலே ! இப்போது முஸ்லீம் உம்மத்தை குப்பாரிய ஏகாதிபத்தியம் ஒரு திசை திருப்பும் போர் ஒன்றின் மூலம் அதன் உண்மையான மறுமலர்ச்சி பார்வையை விட்டும் தவிர்க்க பார்க்கிறார்கள் .

                     அழிவுகள் ,அழிப்புகள் மூலம் இந்த முஸ்லீம் உம்மத்தை திசை திருப்பி விட்டு இந்த ஏகாதிபத்தியங்களின் கூட்டு  மீண்டும் கட்டமைக்கப்படும் சத்திய விடுதலையின் கேடயமான கிலாபா அரசின்  மீள் வருகையை இரகசியமாக  குழிதோண்டிப் புதைக்க நினைக்கிறார்கள் . அநியாயக் காரர்களும் அக்கிரமக்காரர்களும் முடிந்தால் எம் உயிரற்ற உடல்களின் மீது ஆட்சியை தொடரட்டும் என இலட்சியத் தெளிவோடு போராடும் அந்த தூய வீரர்களோடு அல்லாஹ் இருக்கின்றான் . அல்லாஹு அக்பர் ... அல்லாஹு அக்பர் ....

டாலரை காக்கும் செளதி அரேபியா!!!

அமெரிக்க மிரட்டலை நிராகரித்து ஈரானிடம் இருந்து இன்னும் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு ரூ. 57,000 கோடி மிச்சமாகும் என்று நேற்று கூறியிருந்தேன்.
ஆனால், அதைச் செய்வது சாத்தியமா?

கச்சா எண்ணெய் வர்த்தகம் என்பது உலகளவில் டாலரில் மட்டுமே நடக்கும் ஒரு வியாபாரம். கச்சா எண்ணெய்யை வளைகுடா நாடுகளே மிக அதிக அளவில் உற்பத்தி செய்தாலும் கூட அதன் விலையை நிர்ணயிப்பது லண்டன் பங்குச் சந்தை தான். இங்கு தான் சர்வதேச அளவிலான காரணிகளை வைத்து கச்சா எண்ணெய்க்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலகில் பல்வேறு நாடுகள் தங்களுக்கு இடையிலான ஏற்றுமதி, இறக்குமதிக்கு டாலரையே பொது கரன்சியாக பயன்படுத்தி வருகின்றன.


இப்போது ஒரு பிளாஷ்பேக்...



ஹிட்லர் கொல்லப்பட்டு இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நேரம். அமெரிக்கப் பொருளாதாரம் மீண்டும் சூடு பிடித்து, கார்கள் உற்பத்தியும் விற்பனையும் உச்சத்தை அடைந்த நேரம். உலகிலேயே மிக அதிகமான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக இருந்தாலும் அமெரிக்காவிலேயே எரிபொருளுக்கு தட்டுப்பாடு... தனது எதிர்காலம் கச்சா எண்ணெய்யின் வரத்துடன் சார்ந்து இருப்பதை அமெரிக்கா உணர்ந்த நேரம். அதே நேரத்தில் செளதி அரேபியாவில் தான் உலகிலேயே மிக அதிகமான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளதாக கண்டறியப்பட்ட நேரம்


கப்பலில் ரூஸ்வெல்ட்-செளதி அரேபிய மன்னர்:

இந் நிலையில், அமெரிக்க அதிபர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் எகிப்துக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையிலான ரெட் சீ பகுதிக்கு ரகசியமாய் செல்கிறார். அங்கு நிலைநிறுத்தப்பட்டிருந்த USS Quincy போர்க் கப்பலில் ரூஸ்வெல்ட் மற்றும் அப்போதைய செளதி அரேபிய மன்னர் இப்ன் செளத் இருவரும் சந்தித்துப் பேசுகின்றனர். அமெரிக்காவுக்கு தடையில்லாத கச்சா எண்ணெய் சப்ளை வேண்டும். இதை செளதி அரேபியா நிறைவேற்றித் தர வேண்டும் என்ற ரூஸ்வெல்ட்டின் கோரிக்கையை இப்ன் செளத் மெளனமாய் கேட்கிறார்.



சிக்கல் இல்லாமல் ஆட்சியில் இருக்க:

இதைச் செய்தால், உங்களது பரம்பரையே செளதியில் தொடர்ந்து எந்த சிக்கலும் இல்லாமல் ஆட்சியில் இருக்க அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும் என்ற வாக்குறுதி தரப்படுகிறது. அமெரிக்க ராணுவம் எப்போதும் செளதிக்கு (மன்னர் குடும்பத்துக்கு) ஆதரவாய் இருக்கும், உங்களுக்கு எந்த ஆபத்து வந்தாலும் நாங்கள் வருவோம் என்கிறார் ரூஸ்வெல்ட். ஆனால், நீங்கள் தரும் கச்சா எண்ணெய்க்கான பணத்தை நாங்கள் டாலர்களில் வழங்குவோம் என்கிறார். (அதற்கு முன் சர்வதேச வர்த்தம் பல்வேறு நாடுகளின் கரன்சிகளிலும் தங்கத்தையும் அடிப்படையாக வைத்து நடந்து வந்தது).

இப்படித்தான் டாலரின் ஆதிக்கம் உலகில் ஆரம்பமானது: 

இதை செளதி மன்னர் ஏற்றுக் கொள்ள உலகின் மாபெரும் வர்த்தகம் (கச்சா எண்ணெய்) டாலர்களில் ஆரம்பிக்கிறது. இதன் பின்னர் உலகளவிலான பெரும்பாலான வியாபாரம் டாலர்களுக்கு மாறுகிறது. இப்படித்தான் டாலரின் ஆதிக்கம் உலகில் ஆரம்பமானது. எல்லா நாடுகளும் தங்களது வேண்டியதை இறக்குமதி செய்ய டாலர்களை சேமித்து வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றன. 
        
பலவீனமான நிலை:

        இந் நிலையில் 1970ம் ஆண்டில் டாலரின் மதிப்பு சடாரென சரிந்தது. இதனால் கச்சா எண்ணெய்யை விற்று விற்று டாலர்களைக் குவித்து வைத்திருந்த வளைகுடா நாடுகளுக்கு பெரும் சிக்கல். அவர்களது அன்னிய செலாவணி கையிருப்பு (டாலர்கள்) வீங்கிப் போய், பலவீனமான நிலைக்குப் போனது. இதையடுத்து சில வளைகுடா நாடுகள் இனியும் டாலரை மையமாக வைத்து கச்சா எண்ணெய் வர்த்தம் செய்வது தவறு, இதை பல்வேறு கரன்சிகள் அடங்கிய வர்த்தகமாக மாற்ற வேண்டும் என்று குரல் தந்தன. குறிப்பாக, ஈரான். இதை கத்தார், இராக், யுஏஇ, வெனிசுவேலா ஆகியவை ஆதரித்தன.

செளதி அரேபியா இதை ஏற்கவில்லை:

ஆனால், உலகின் முன்னணி கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான செளதி அரேபியா இதை ஏற்கவில்லை. காரணம், செளதியில் அவ்வளவு டாலர்கள் இருந்தது தான். எண்ணெய் வர்த்தகத்தை மற்ற கரன்சிகளுக்கு மாற்றினால் அதனிடம் இருப்பில் உள்ள டாலர்களின் மதிப்பு பெருமளவில் சரிந்துவிடும். இது ஒரு குறுகிய கால பிரச்சனை தான். இருந்தாலும் அந்த ரிஸ்க்கை செளதி எடுக்கவில்லை. இதற்கு இன்னொரு முக்கிய காரணம், அமெரிக்காவை பகைக்க விரும்பாதது.


இது தான் பின்னணி:
                  
                 (இதை இன்னும் விளக்க வேண்டுமானால்... ரூஸ்வெல்ட் தந்த உறுதிமொழிப்படி செளதி அரச குடும்பத்துக்கு இன்று வரை உறுதுணையாக நிற்கிறது அமெரிக்கா. செளதியில் ஜனநாயகம் தளைக்க வேண்டும் என்றெல்லாம் அமெரிக்கா பேசுவதில்லை, அதே போல இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு கோபம் வரும் அளவுக்கு, செளதியும் பெரிய அளவில் மூக்கை நுழைப்பதில்லை)

இது தான் செளதி நிலைமை

இப்படியே பல ஆண்டுகளாய், டாலர்களிலேயே வர்த்தகத்தைத் தொடர்ந்து, தொடர்ந்து இன்று என்ன நிலைமை என்றால் டாலரின் மதிப்பைக் காப்பாற்ற அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரயத்தனப்படுவது செளதி அரேபியா தான் என்ற நிலை வந்துவிட்டது. 1980 நிலைமையின்படி செளதி அரேபியாவின் வருவாயில் 90 சதவீதம் டாலர்கள் தான். அதே போல செளதி அரேபியாவின் முதலீடுகளில் 83 சதவீதம் டாலர்களாகவே இருந்தன. இப்போதும் நிலைமை அதே. இதனால், டாலர்களின் மதிப்பை காக்க வேண்டிய பொறுப்பு அமெரிக்காவை விட செளதிக்கே அதிகம் என்ற நிலைமை வந்துவிட்டது.

இந்திய ரூபாயின் சமீபத்திய நிலைமை தான் உருவாகும்

(இதன்மூலம் நாம் அறிவது என்னெவென்றால், டாலர் சர்வதேச கரன்சியாக கோலோச்ச வேண்டும் எனில் உலகளவிலான கச்சா எண்ணெய் வர்த்தகம் டாலர்களில் தான் தொடர்ந்து நடக்க வேண்டும். அது நடக்கும் வரை அமெரிக்காவுக்கு எந்தக் கவலையும் இல்லை. வேண்டும் அளவுக்கு டாலர்களை அச்சடித்து செலவிடுவார்கள். ஆனால், மற்ற நாடுகள் தான் டாலர்களின் பின்னால் ஓடி, ஓடி அதை சேர்த்து வைக்க வேண்டும். டாலர்கள் கையில் இல்லாத நாட்டின் கரன்சிக்கு இந்திய ரூபாயின் சமீபத்திய நிலைமை தான் உருவாகும்.)

ஈரான் மட்டுமே இதில் விதிவிலக்கு:


செளதியின் ஆதரவு இல்லாததால் டாலரைத் தவிர்த்த பிற கரன்சிகளில் வர்த்தகம் செய்யும் முடிவை மற்ற வளைகுடா நாடுகளும் நீண்ட காலததுக்கு முன்பே கைவிட்டுவிட்டன. ஆனால், ஈரான் மட்டுமே இதில் விதிவிலக்கு. நீண்ட காலமாகவே அமெரிக்காவின் டார்ச்சருக்கு உள்ளாகி வரும் ஈரான், ரஷ்யா- சீனா- இந்தியா போன்ற நாடுகளுடன் தனது வர்த்தகத்தை டாலரிலும் ரூபிளிலும், யுவான் மற்றும் ரூபாயிலுமாக மேற்கொண்டு வருகிறது. ஆனால், ஈரானுக்கும் டாலர் தேவை. வெறும் ரூபிளையும் யுவானையும் ரூபாயையும் வைத்துக் கொண்டு அந்த நாடு என்ன செய்ய முடியும்?.

ஈரானுக்கும் டாலர்கள் வேண்டுமே..:

ரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவிடம் இருந்து அரிசி, பருப்பு, டீ, மருந்துகள், கருவிகள், ராணுவ தளவாடங்கள், மின்னணு சாதனங்களை இறக்குமதி செய்யலாமே தவிர, ரஷ்யா- சீனா- இந்தியாவில் கிடைக்காத, மற்ற நாடுகளில் கிடைக்கும் பொருள்களை இறக்குமதி செய்ய ஈரானுக்கும் டாலர்கள் வேண்டுமே.. இதனால், அமெரிக்க மிரட்டலை நிராகரித்து ஈரானிடம் இருந்து இன்னும் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு ரூ. 57,000 கோடி மிச்சமாகும் என்றாலும், இதற்கு மேலும் இந்தியாவுக்கு ரூபாயில் ஈரான் கச்சா எண்ணெய்யை விற்குமா என்பது சந்தேகமே

யூகோ வங்கியில் ஈரானின் ரூ. 30,000 கோடி:

(இந்தியாவுக்கு ஈரான் விற்கும் கச்சா எண்ணெய்க்காக அந்த நாட்டுக்கு தரப்படும் பணத்தில் 45 சதவீதம் கொல்கத்தாவில் உள்ள யூகோ வங்கிக் கிளை மூலம் ரூபாயாகத் தரப்படுகிறது. இந்தப் பணம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து ரூ. 30,000 கோடிகளைத் தொட்டுவிட்டது. ஆனால், இதை ஈரான் இதை இன்னும் பயன்படுத்தவே இல்லை. காரணம், ரூபாயை வைத்துக் கொண்டு சர்வதேச சந்தையில் ஈரானால் ஏதும் வாங்க முடியவில்லை)

கப்பல்கள் இல்லை:


மேலும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய்யைக் கொண்டு வர நாம் சார்ந்து இருப்பது அமெரிக்க- ஐரோப்பிய நாடுகளின் டேங்கர்களைத் தான். இந்த அளவுக்கு மாபெரும் டேங்கர்கள் இந்தியாவிடமும் இல்லை, ஈரானிடமும் இல்லை. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இந்த டேங்கர்களை ஈரான் பக்கமே போகக் கூடாது என்று உத்தரவு போட்டுவிட்டன. இதனால் ஈரானே முன்வந்தாலும் அதை இந்தியாவுக்குக் கொண்டு வருவது எளிதல்ல. மேலும் தனது கச்சா எண்ணெய்க்கு ஈடாக ஈரான் ரூபாய்க்குப் பதிலாக தங்கத்தைக் கேட்கலாம். அதைத் தருவதிலும் இந்தியாவுக்குப் பிரச்சனை இல்லை.


பிரச்சனை அமெரிக்காவுக்கு அல்ல: 

ஆனால், இதில் அமெரிக்காவுக்குத் தான் பிரச்சனை. கச்சா எண்ணெய் வர்த்தகம் டாலர் தவிர்த்து வேறு எதிலும் (தங்கம் அல்லது ரூபாய்) நடக்கக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளது அந்த நாடு. இதனால் இந்தியாவுக்கு மறைமுகமாக பலவிதமான நெருக்கடிகளைத் தந்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைக்க வைத்துவிட்டது. இதனால் இழப்பு அமெரிக்காவுக்கு அல்ல. ஈரானுக்கும் இந்தியாவுக்கும் தான்!

                                                                    விழித்து கொள்ளுமா இந்தியா?

ரஸ்ய குரூஸர் ஏவுகணைதாங்கி கடற்கலம் மத்தியதரைக்கடல் நோக்கி விரைவு..




  ரஸ்ய ஏவுகணை தாங்கி கடற் கலமான Moskva-வை மத்திய தரைக்கடலின் கிழக்கு பகுதிக்கு விரையுமாறு ரஸ்ய கடற்படை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு துணையாக மேலும் 03 கடற்கலங்கள் கிழக்கு மெடிட்டேரியன் கடலை நோக்கி விரைகின்றன. இந்த தகவலை இன்டர்பக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஜிப்ரோல்டர் முனைக்கு நேராக பயணித்து இன்னும் சில தினங்களில் இது கிழக்கு மத்திய தரைக்கடலையடையும். அங்கு ஏலவே நிலை கொண்டுள்ள, கொள்ளவிருக்கும் ரஸ்ய கடற்கலங்களிற்கு பிளேக்ஸிப்பாக இது தொழிற்பட தயாராகிறது என ரஸ்ய இராணுவ வட்டாரங்களின் செய்திகளில் இருந்து தெரிய வருகிறது. 

சிரிய சமர்களை எதிர்பார்த்து காத்திருக்கும் ரஸ்யாவின் Baltic Fleet மற்றும் Black Sea Fleet என்பவற்றுடன் மேலும் வலுச்சேர்க்கும் வகையில் இந்த குரூஸர் ஏவுகணைதாங்கி கலம் இணைந்து கொள்ளும். 

ரஸ்யா கடந்த செப்டம்பர் முதலாம் திகதி அதன் நவீன சட்டலைட் கண்காணிப்பு வசதிகள் அடங்கிய Priazovye எனும் வேவுக்கலத்தை மத்தியதரைக்கடலிற்கு அனுப்பியிருந்தது. இந்த கலம் அமெரிக்க போர்க்கலங்களின் நகர்வை கண்காணிக்கும் திறன் படைத்தது. 

கடந்த வாரமே ரஸ்ய பாதுகாப்பு அமைப்பு மேற்படி கடற்கலம் மத்தியதரைகடலிற்கு அனுப்பப்படும் என தெரிவித்திருந்தது. 

அமெரிக்கா நடாத்திய போர்களும் அமெரிக்க நடாத்த போகும் போரும் - சில வித்தியாசங்களின் கோணத்தில்....


   அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரியும் ஜனாதிபதி பாரக் ஒபாமாவும் நேற்று பிற்பகல், தனித்தனி அறிக்கைகளில் வியாழனன்று பிரித்தானிய பாராளுமன்றம் போருக்கான ஆதரவு வாக்குப் பிரேரனையை நிராகரித்துள்ளமையானது, அமெரிக்க நிர்வாகத்தின் சிரியா மீதான தாக்குதல் திட்டங்களில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெளிவுபடுத்தியுள்ளனர்.
தன்னுடைய கருத்துக்களில் ஒபாமா, தான் “எடுக்க வேண்டிய பல நடவடிக்கைகள் குறித்து முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை” என்று பாசாங்குத்தனமாக கூறினார். ஆனால் வாஷிங்டனில் விவாதங்களானது தாக்குதல் நடக்குமா என்பதற்கு பதிலாக எப்பொழுது நடக்கும் என்பதைப்பற்றித்தான் உள்ளன.


ஒபாமாவும் தாக்குதல் அதனுடைய நோக்கத்தில் “மட்டுப்படுத்தப்பட்டு” இருக்கும் என்று மீண்டும் மீண்டும் பொய் கூறினார். உண்மையில் வாஷிங்டன் பார்வையில் நடவடிக்கையானது, சிரியாவில் அமெரிக்கா உள்நாட்டுப் போரைத் திருப்பிவிடும் நோக்கத்தை கொண்டது; இப்போர் அசாத்தை அகற்றுதல், மத்தியக் கிழக்கில் ஈரான், ரஷ்யா, சீனா ஆகியவற்றின் நிலையை குறைமதிப்பிற்கு உட்படுத்துதல் என்று உள்ளன.

போருக்கு அது விரைகையில், அமெரிக்க ஆளும் வர்க்கம் மக்களில் பெரும்பாலானவர்களுடைய போர் எதிர்ப்பு உணர்வை இகழ்வுடன் கருதுகிறது. ஒரு தசாப்தத்திற்கும் மேலான தொடர்ந்த முடிவிலாப் போர் மற்றும் “பயங்கரவாதத்தின் மீதான போருக்கு” தொடரும் வேண்டுதல், ஆப்கானிஸ்தானின் அனுபவங்கள், குறிப்பாக ஈராக் படையெடுப்பை நியாயப்படுத்த கூறப்பட்ட பொய்கள்—இவைகள் அனைத்தும் பொதுமக்கள் நனவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்க மக்களில் 9 சதவிகிதத்தினர்தான் சிரியா மீது இராணுவத் தாக்குதல்களுக்கு ஆதரவு கொடுக்கின்றனர், இது சிரிய பஷர் அல் அசாத்தின் ஆட்சி இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது என நிரூபிக்கப்பட்டால் 25 சதவிகிதம் என உயரும் என்று கருத்துக் கணிப்புக்கள் காட்டுகின்றன. அமெரிக்கா மற்றும் அதனுடைய நட்பு நாடுகளுக்கு இப்பொழுது இரசாயன ஆயுதப் பயன்பாடுதான் பிரச்சாரத்தில் முக்கியமாக உள்ளது.

ஆயினும்கூட இந்த உணர்வுகள் அரசியல் ஸ்தாபனத்திலும் அரச அதிகாரத் துணை நிறுவனங்களிலும் வெளிப்பாட்டைக் காணவில்லை—குறைந்தபட்ச முதலாளித்துவ அரசியலின் வடிவமைப்பிற்குள்கூட. அரசாங்கமும் செய்தி ஊடகமும் உறுதியாகப் போருக்கு ஆதரவாக இருக்கின்றன. 

ஒரு தசாப்தத்திற்கும் மேலான முடிவிலா, பேரழிவு கொடுக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பின், மற்றொரு தாக்குதலுக்கான எதிரிகள் என நம்புவதற்கு பெரும்பாலான மக்கள் இன்னும் எதிராக உள்ளனர்.
உத்தியோகபூர்வ கருத்தை மக்களின் பெரும்பாலானவர்களின் உண்மை உணர்வுகளிலிருந்து பிரிக்கும் பிளவு கிட்டத்தட்ட முன்னோடியில்லாத தன்மையில் உள்ளது. வியட்நாம் போரின்போது, அரசியல் ஸ்தாபனம் அமெரிக்க ஈடுபாடு பற்றிப் பிளவுகளைக் கொண்டிருந்தது. 

இரு அரசியல் கட்சிகளும் கணிசமான “போர் எதிர்ப்பு” பிரிவுகளைக் கொண்டிருந்தன. செனட்டர் வில்லியம் புல்பிரேட் தலைமை தாங்கிய காங்கிரஸ் குழு போர் எதிர்ப்பு உணர்விற்குக் கணிசமாக பங்களிப்புக்களைக் கொடுத்தது.

1990-91ல் முதலாவது புஷ் நிர்வாகம் ஈராக்கிற்கு எதிரான முதல் போருக்கு தயாரானபோது, அது இசைவு வாக்கைப் பெற வேண்டும் என்ற கட்டாயத்தை உணர்ந்தது; 48 செனட்டர்கள் எதிர்த்து வாக்களித்த நிலையில் அது இயற்றப்பட்டது. 2003ல் கூட ஈராக் போரைத் தொடர்ந்த ஆண்டில், ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள் இரண்டாவது புஷ் நிர்வாகத்தை விமர்சிப்பதாகக் காட்டிக்கொண்டனர். பாசாங்குத்தனமாகவும், நேர்மையற்றதாகவும் போர் எதிர்ப்பு உணர்வு இருந்தபோதிலும்கூட, அத்தகைய உணர்வை வெளிப்படுத்திய வகையில் கெர்ரி ஜனநாயக வேட்பாளர் நிலையை 2004ல் பெற்றார், ஒபாமா 2008ல் ஜனாதிபதிப் பதவியை பெற்றார்.

இப்பொழுது கருத்துக் கணிப்புக்கள் 2003 ஐ விட போருக்கு அதிக எதிர்ப்பைக் காட்டுகையில், எதுவும் பொருட்படுத்தப்படுவதில்லை. செய்தி ஊடகம் முன்னைய போக்கைத்தான் பின்பற்றுகிறது. வியட்நாம் சகாப்த காலத்தில் பொது மக்களின் போர் எதிர்ப்பு உணர்வுக்கு கணிசமான பங்களிப்பு கொடுத்து அரசாங்கத்தின் பொய்களை அம்பலப்படுத்திய டஜன் கணக்கான செய்தியாளர்களை பட்டியலிடுவது கடினமில்லை—இது பென்டகன் பத்திரங்களை நியூ யோர்க் டைம்ஸும், வாஷிங்டன் போஸ்ட்டும் 1971ல் வெளியிட்டதில் உச்சக் கட்டத்தை அடைந்தது.

இன்று செய்தி ஊடகம் வெளிப்படையாக அரசாங்கத்தின் ஊதுகுழலாகச் செயற்படுகிறது; தன்னுடைய மைய நோக்கமே அரசாங்கத்தின் பொய்களை பரப்பி, அரசாங்க இரகசியங்களை மூடி மறைத்தல் என்று காண்கிறது. செய்தியாளர்களை இராணுவத்தில் “பொதிந்து இருக்கச் செய்யும் வகையிலும் சிறிது திறனாய்வுச் சிந்தனையைக் காட்டினாலும் வெளியே அவர்களை அகற்றிவிடும் முறையிலும் இது பெருநிறுவனமயமாதல் வழிமுறையால் மாற்றப்பட்டுவிட்டது (CNN ஆனது 2003ல் பீட்டர் அர்னெட்டை ஈராக் படையெடுப்பு குறித்த அவருடைய திறனாய்ந்து கூறப்பட்ட தன்மைக்காக பதவியை விட்டு வெளியேற்றியது.)

பொதுவாக செய்தி ஊடகத்தில் இன்று காணப்படும் அதிகாரப் போக்கு உணர்வு நியூ யோர்க் டைம்   ஸின் ரோஜர் கோஹனால் வெளிப்படுத்தப்படுகிறது; தன்னுடைய வெள்ளிக் கிழமை கட்டுரையில், அவர் சிரியப் போருக்கு ஆதரவாக எழுதியுள்ளார். தாராளவாத செய்தியாளர் மக்கள் உணர்வைக் குப்பையில் போடுங்கள் என்று எழுதினார்: “அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் போர்க் களைப்பு என்பது ஒரு சமூகம் மூலோபாய முக்கியத்துவத்தை இழந்துவிடுவதற்குக் காரணமாகக் கூடாது; பொது மக்கள் கருத்தையொட்டி தேசிய நம்பகத்தன்மை இழக்கப்பட்டுவிடக்கூடாது.”
முழுப் பொய்களையும் ஆதரமாகக் கொண்டு துவக்கப்பெற்ற ஈராக் போருக்குப் பத்து ஆண்டுகளுக்குப் பின், ஒரு பெருநிறுவனக் கட்டுப்பாட்டுச் செய்தித்தாள்கூட அல்லது செய்தி நிறுவனம்கூட வெள்ளை மாளிகையிலிருந்து வெளிவரும் ஆதாரமற்ற கூற்றுக்களை கட்டுக்கதைகளின் தொகுப்பு என்று வினாவிற்கு உட்படுத்தவில்லை.
இந்த மாற்றத்தை எப்படி விளக்க முடியும்? சிரியா குறித்த நெருக்கடி அமெரிக்க அரசியல் வாழ்வின் ஆழமான உண்மை நிலையை வெளிப்படுத்துகிறது. 

“ஈராக் போர் அடிப்படையாகக் கொண்டிருந்த பெருமளவிலான, அப்பட்டமான பொய்யின் தன்மை, மற்றும் அசட்டையும் எதிலும் நம்பிக்கையற்ற தன்மை கொண்ட ஒரு செய்தி ஊடகத்தின் பதில் மொழி, இவை முதலாளித்துவ ஜனநாயக முறையின் பொதுவான நிலைமுறிவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த வெளிப்பாடுகளாகும். ஐக்கிய அமெரிக்க அரசுகளின் அரசியல் வாழ்வு அமெரிக்க அரசின் சிறு குழுவினர் ஆட்சியின் கூடுதலான குணநலன்களை, கோணல் மாணலான பார்வையில் பிரதிபலிக்கிறது.”

பத்து ஆண்டுகளுக்குப் பின், இப்போக்குகள் இன்னும் பெரிய அளவில்தான் உள்ளன. பெருநிறுவன மற்றும் நிதியப் பிரபுத்துவம் 2008ல் தொடங்கிய நெருக்கடியை பயன்படுத்தி தன்னுடைய கரங்களில் இன்னும் அதிக தேசிய செல்வத்தை குவித்துக் கொண்டது. அரசாங்க கொள்கை, மக்களில் உயர்மட்ட 1 சதவிகிதத்தினரால்தான் நிர்ணயிக்கப்படுகிறது.

வெளியுறவுக் கொள்கை தவிர்க்க முடியாமல் உள்நாட்டுக் கொள்கையுடன் பிணைந்துள்ளது. அரச நிறுவனங்கள் மக்களின் சமூக அக்கறைகள் குறித்து முழுமையான பொருட்படுத்தாத் தன்மை—வறுமை, வேலையின்மை, சமூகப் பணிகளின் அழிப்பு—அதனுடைய இயல்பான துணையை வெளியுறவுக் கொள்கையில் காண்கிறது. 90 சதவீதமான கீழ்மட்ட வருமானம் உடையவர்கள் நினைப்பது பொருட்படுத்தப்படுவதில்லை; செய்தி ஊடகம் இச் சிந்தனையை பிரச்சாரப் பொய்களுடன் பிணைக்க, திரித்து எழுதும் பங்கு அதற்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

முதலாளித்துவ சமூகத்தின் வடிவங்களை பாதுகாத்தல் என்பது இன்றைய அமெரிக்காவிலுள்ள சமூக சமத்துவத்துவமின்மை அளவுகளுடன் பொருந்தியிராது. எட்வார்ட் ஸ்னோவ்டென் வெளிப்படுத்தியுள்ள பரந்த உளவுபார்த்தல் கருவிகள் —பொலிஸ் அரசின் வடிவமைப்பு— எல்லாவற்றிற்கும் மேலாக ஆளும் வர்க்கத்தின் போர், சமூக எதிர்ப் புரட்சிக் கோரிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளிப்படுவதை எதிர்க்க இயக்கப்படுகிறது.
சிரியாவிற்கு எதிரான போர் உந்துதல் மற்றும் அமெரிக்க ஆளும் வர்க்கம் மேற்கொண்ட முந்தைய போர்களுக்கும் இடையே மற்றொரு குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. வியட்நாம் போர் வெகுஜன போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தூண்டிவிட்டது, அது கணிசமான எதிர்ப்பு பின்னர் பல தலையீடுகளில் நிகரகுவா, எல் சார்வடோர் தொடங்கி 1991 ஈராக் போர் வரை நிகழ்ந்தவைகளுக்கு எதிராக ஒழுங்கமைக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஈராக் போருக்கு எதிராக வெகுஜன எதிர்ப்புக்கள், பல மில்லியன் மக்கள் பங்குபற்றியமையும் நடந்தேறின.

இன்றும் எதுவும் இல்லை. வெகுஜன உணர்வு, போர் ஆதரவைப் பெற்றுவிட்ட காரணத்தால் அல்ல. உண்மையில் இது ஈராக் போருக்கு எதிரானதைவிட சிரியப் போருக்கு இன்னும் குறைந்த மக்கள் ஆதரவுதான் உள்ளது. மாறாக நீண்டகாலமாக “போர் எதிர்ப்பு இயக்கம்” எனக் குறிப்பிடப்படுவது, மத்தியதர வர்க்கத்தின் ஒரு பிரிவு, ஜனநாயகக் கட்சியுடன் பிணைந்ததால் வழிநடத்தப்பட்டது. பல தசாப்தங்களாக இந்த சமூகத் தட்டு பெருகிய முறையில் அரசியல் ஸ்தாபனத்துடன் ஒருங்கிணைந்துவிட்டது, பங்குச் சந்தை ஏற்றத்தால் செல்வம்மிக்கதுடையதாக ஆயிற்று, நிதியப் பிரபுத்துவம் உதிர்க்கும் ரொட்டிகளைத் தின்று வளர்கிறது.

அமெரிக்க ஆளும் வர்க்கம் சிரிய, மத்திய கிழக்கு, உலகம் முழுவதும் இருக்கும் மக்களுக்கு எதிராக தயாரிக்கும் இரத்தம் கொட்டும் பேரழிவை தடுக்க உலக மக்கள் அணிதிரள்வது காலத்தின் அவசியம். அமெரிக்கா எனும் ஆதிக்க சாத்தனை அடக்கா விட்டால் முழு உலகும் ஒரு தேசத்தின் பராமரிப்பில் வந்து விடும்.