Facebook Twitter RSS
*/

Latest News

பிரெஞ்சு ஜனாதிபதி ஹாலண்ட் சிரியாவிற்கு எதிரான அமெரிக்கப் போரிற்கு ஆதரவு - ஏகாதிபத்திய சுவாசம்!!


   பிரித்தானிய பாராளுமன்றம் சிரியாவில் இராணுவ நடவடிக்கைக்கு எதிராக வாக்களித்த மறுநாள், சோசலிஸ்ட் கட்சியின் (PS) பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட், ஒரு முன்னாள் பிரெஞ்சுக் காலனி நாடான சிரியாவிற்கு எதிரான அமெரிக்கப் போருக்கு ஆதரவை தொடர்வதற்கு உறுதியளித்தார். Le Monde இடம் வெள்ளியன்று பேசிய அவர், போர் உந்துதலை நியாயப்படுத்த இயந்திரகதியில் கூறப்பட்டுள்ள பொய்களை மீண்டும் கூறினார்; அவைகளோ பிரித்தானியப் பிரதம மந்திரி டேவிட் காமெரோனின் அவமானகரமான தோல்விக்குப் பின் சிதைந்துள்ளன.


கூத்தாவில் இரசாயனத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுவதை யார் நடத்தினார்கள் என்பது குறித்து “100 சதவீத உறுதிப்பாட்டுடன்” கூறுவதற்கில்லை என்பதை காமெரோன் ஒப்புக்கொண்டார்—ஆனால் சிரியாவில் இஸ்லாமியவாத பினாமிப் படைகளுக்கு தங்களுடைய ஆதரவைக் காட்ட தலையீடு செய்வதை நியாயப்படுத்துவதற்காக, வாஷிங்டன், லண்டன் மற்றும் பாரிஸ், சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தைத்தான் குற்றம் சாட்டுகின்றனர். வெகுஜன எதிர்ப்பு குறித்து காமெரோன் ஆட்சியில் ஏற்பட்டுள்ள பீதி மற்றும் சிரியாவின் நட்பு நாடுகளான ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் உலகப் போர் என்னும் ஆபத்து பற்றிய விவாதத்தை ஒட்டியும், போருக்கான சட்டவரைவு தோல்வியுற்றது.

ஒபாமா நிர்வாகம் தனது போர்த் திட்டங்களை தொடர விரும்புகையில், ஹாலண்ட் வாஷிங்டனின் குற்றம்சார்ந்த ஆக்கிரமிப்புச் செயற்பாட்டிற்கு சர்வதேச ஆதரவைத் திரட்ட முற்படுகிறார். அமெரிக்கா பகிரங்கமாக மதிப்பிழந்த பொய்களை அடிப்படையாகக் கொண்டு போரை நடத்த முற்படுகிறது என்றால், அது ஹிட்லர் சகாப்தத்திலிருந்து முன்னோடியில்லாத ஒரு திட்டமிட்ட சர்வதேச காடைத்தன நடவடிக்கையாகும்.

 மற்றும் இதற்கு பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் கோழைத்தனமான சுயநல மிக்க ஆதரவானது, ஹாலண்டின் அரசியல் குருவான பிரான்சுவா மித்திரோன் ஹிட்லருடன் ஒத்துழைத்த பாசிச விஷி ஆட்சியின் சீருடையை அணிந்த முன்னோடியில்லாத செயலுக்கு ஒப்பாகும். Le Monde இடம் பேசிய ஹாலண்ட், பிரித்தானிய பாராளுமன்ற வாக்களிப்பின் முக்கியத்துவத்தைக் கண்டு கொள்ளாத வகையில் உதறித்தள்ளினார். “ஒவ்வொரு நாடும் இறைமையைப் பெற்றுள்ளது, ஒரு நடவடிக்கையில் பங்கு பெறலாமா வேண்டாமா என்பதை அது முடிவெடுக்கலாம். இது ஐக்கிய இராச்சியத்திற்கும் பொருந்தும், பிரான்சிற்கும் பொருந்தும்” என்றார் அவர்.

“இதற்கு ஆட்சிதான் பொறுப்பு என்பதை இது காட்ட பிரான்சிடம் சான்றுகளின் தொகுப்பு உள்ளது” என்று ஹாலண்ட் உறுதிபடக்கூறினார். அமெரிக்க ஆதரவுடைய “எதிர்த்தரப்பு அத்தகைய ஆயுதங்களைக் கொண்டிருக்கவில்லை, கையிருப்புக்கள் அனைத்தும் பஷர் அல்-அசாத்தினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன” என்றும் கூறினார்.
இவைகள் அப்பட்டமான பொய்கள் ஆகும். காமெரோன் தோல்வியுற்றமையானது லண்டனோ அதனுடைய நட்பு நாடுகளோ அசாத்திற்கு எதிரான தங்களுடைய குற்றச்சாட்டுக்களை ஆதரிக்க சான்றுகள் எதையும் கொண்டிருக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்க ஆதரவு பெற்ற எதிர்த்தரப்பிடம் இரசாயன ஆயுதங்கள் இல்லை என்று கூறுவது, அவைகள் சிரியாவில் ஐ.நா. அதிகாரிகளின் கண்டுபிடிப்புக்கள் மற்றும் துருக்கிய பாதுகாப்புப் படைகளால் துருக்கியிலுள்ள அட்னாவில் சிரிய எதிர்த்தரப்பு போராளிகளின் வீடுகளில் மே மாதம் கண்டுபிடிக்கப்பட்ட சரின் எரிவாயுவும் நிராகரிக்கப்படுகின்றன.

முற்றிலும் இழிந்த வகையில் வாஷிங்டனும் பாரிசும் கட்டவிழ்த்து விடவுள்ள இராணுவ நடவடிக்கையை ஹாலண்ட் குறைந்த தன்மையுடையது எனக் காட்ட முயலுகையில், மற்றொரு போருக்கான எதிர்ப்பு, மக்கள் மத்தியில் பரந்துள்ளது என்பதை அவர் நன்கு அறிவார். ஜனவரி மாதம் பிரான்ஸ் மாலி மீது படையெடுத்ததும், 2011ல் லிபியாவிற்கு எதிரான போர் உந்துதலில் அது கொண்டிருந்த பங்கு ஆகியவற்றிற்குப் பின், சமீபத்திய கருத்துக்கணிப்பானது சிரியத் தாக்குதலுக்கு 59 சதவிகித எதிர்ப்பு உள்ளதை காட்டுகிறது.
நடவடிக்கையின் பண்பை விளக்கி அவர் அறிவிக்கையில், “நான் போர் பற்றி பேசவில்லை” என்று அறிவித்த அவர்,சில சொற்றொடர்களுக்குப் பின், சிரியத் தாக்குதலுக்கு “அனைத்து விரும்பத் தேர்வுகளும் மேசையின் மீது உள்ளன” என்று அச்சுறுத்தினார்.

ஒரு பிரெஞ்சு ஏவுகணை அழிப்புக் கப்பலும், ஹெலிகாப்டர் காவியும் நேற்று மத்தியதரைக்கடல் துறைமுகமான துலோனிலிருந்து புறப்பட்டு சிரியாவை நோக்கிச்சென்றன; அதே நேரத்தில் பிரெஞ்சு போர் விமானங்கள் பிரான்சின் தளங்களில் இருந்தும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்களிலிருக்கும் தளங்களிலிருந்தும் சிரியா மீது தாக்குதலுக்குத் தயாராகின்றன.

புதனன்று தேசிய சட்டமன்றம் மற்றும் செனட்டின் அசாதாரண கூட்டுக் கூட்டத்தை ஹாலண்ட் புதனன்று கூட்டுகிறார். ஆனால் பிரான்சின் 1958 அரசியலமைப்பின்படி, இந்தக் கூட்டத் தொடர் முற்றிலும் ஆலோசனைதான் தரமுடியும்; ஜனாதிபதி போருக்குச் செல்லும் முடிவெடுக்கும் முழு அதிகாரத்தையும் கொண்டுள்ளார்; தன்னுடைய முடிவைப் பாராளுமன்றத்திற்கு “தெரிவிக்கும்” கடப்பாட்டை மட்டும்தான் கொண்டுள்ளார். பாராளுமன்றத்தின் ஒரே பயனுள்ள அதிகாரமானது நான்கு மாதங்களுக்கு மேல் நீடிக்கும் எந்தப் போருக்கும் அனுமதி பெறவேண்டும் என்பதுதான்.

மரபார்ந்த முறையில் வாஷிங்டனின் மிக நெருக்கமான நட்பு நாடான பிரித்தானியாவால்கூட கைவிடப்பட்டுவிட்ட அமெரிக்கப் போர் உந்துதலுக்கு பிரான்சின் ஆதரவு, அதிர்ச்சி தரும் திருப்புமுனையாகும், இது பிரான்சிலும் ஐரோப்பாவிலும் கடந்த தசாப்தத்தில் வர்க்க மோதல்கள் உக்கிரமாகியுள்ளதை குறிக்கின்றது.


2003ல் கன்சர்வேடிவ் பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக், ஈராக் மீது அமெரிக்கப் படையெடுப்பில் சேர மறுத்தார்; அப்போரும் இன்று சிரியாவை எதிர்க்கும் போரைப் போலவே பேரழிவு ஆயுதங்கள் என்னும் பொய் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. படையெடுப்பிற்கு பிரித்தானிய படைகளை வழங்குகையில், பிரதம மந்திரி டோனி பிளேயர் மக்களுடைய பொது அவமதிப்பையும், வாஷிங்டனின் செல்லமான நாய் என்ற பெயரையும்தான் சம்பாதித்தார்.

ஆனால், பிரித்தானிய முதலாளித்துவம் கணநேரம் அதனுடைய இயல்பான பங்கிலிருந்து வியாழனன்று நகர்ந்த பின், ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS), உடனே அதற்குப் பதிலாக நகர்ந்துவந்துள்ளது; இதற்கு கோலிச கன்சர்வேடிவ்களின் கணிசமான பிரிவுகளில் ஆதரவும் உள்ளது. அவர்கள், ஒரு பிராந்திய, ஏன் உலக இராணுவ மோதல் என்ற அளவிற்குக்கூட அச்சுறுத்தும் ஒரு பொறுப்பற்ற போரில் அனைத்தையும் பணயம் வைக்கின்றனர்.

இதில் சம்பந்தப்பட்டுள்ளது பிரான்சின் முதலாளித்துவ ஆளும் “இடது” கட்சியான சோசலிஸ்ட் கட்சி (PS) ஐ உள்ளடக்குவதாக மட்டுமின்றி, அதனுடைய ஸ்ராலினிச மற்றும் போலி இடது சுற்றுவட்டத்திலுள்ள கட்சிகளான பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF), புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியையும் (NPA) உள்ளடக்கியுள்ளன. இவைகள் கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் ஆர்வத்துடன் ஹாலண்டை ஆதரித்ததோடு மட்டுமன்றி, ஏகாதிபத்தியத்தின் பினாமிப் படைகளை —பிற்போக்குத்தன இஸ்லாமியவாத எதிர்த்தரப்புப் போராளிகள்— புரட்சியாளர்கள் எனக் கூறி சிரியாவில் ஊக்குவிப்பும் கொடுத்தன..

இந்த பிற்போக்கு சக்திகள் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் எதிப்பை அடக்கிய நிலைமையின் கீழ், முக்கிய பயனாளி, ஆளும் உயரடுக்கின் ஒரே எதிர்க்கட்சி என்று காட்டிக் கொள்ளும் மரீன் லு பென்னுடைய நவ பாசிச தேசிய முன்னணியாகும். ஒரு சமீபத்திய செய்திக் குறிப்பில், இவர் ஹாலண்டின் சிரியப் போர்த் திட்டங்களை விமர்சித்து, அவைகள் இஸ்லாமியவாத சக்திகளுக்குத்தான் நலன் தருகின்றன என்றார்—இதையொட்டி அவருடைய கட்சி நச்சுத்தன்மையான இஸ்லாமிய எதிர்ப்பு வெறுப்பை வளர்க்கிறது, அதே நேரத்தில் ஒரு வெகுஜன போர் எதிர்ப்பாளர் என்பதாக போலியாகவும் காட்டிக்கொள்கிறது.

மத்திய கிழக்கில் ஒரு பேரழிவுப் போர் மற்றும் நவ பாசிசத்தின் எழுச்சியின் பின்னால் கிட்டத்தட்ட முழு அரசியல் ஸ்தாபனமும் அணிவகுத்து நிற்பது, போர்கள் ஏதோ ஒரு சில முதலாளித்துவ அரசியல்வாதியின் தவறான கொள்கை இல்லை என்பதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது சக்திவாய்ந்த வர்க்க சக்திகளின் இயக்கத்தைப் பிரதிபலிப்பதோடு, மேலும் ஒரு அடிப்படையிலும் மற்றும் தீர்க்க முடியாதவகையிலான மோதலை ஆளும் உயரடுக்கின் அனைத்து நிறுவனங்களுடன் ஒரு புரட்சிகர நெருக்கடி வெளிப்பட்டிருப்பதைத்தான் தொழிலாள வர்க்கம் தன்னுள் காண்கிறது.

முழு முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியலும், அதற்கு நெருக்கமான மிக வசதி படைத்த மத்தியதர வர்க்கத்தின் போலி இடது பிரிவுகளுடைய அரசியலும், வலதின் வெகு தொலைவிற்குச் சென்றுள்ளன. அவைகள் இப்பொழுது ஏகாதிபத்திய கொள்ளைப் போர்களை, முக்கியமாக தங்களுடைய சமூக அந்தஸ்தை உறுதிப்படுத்துபவையாக காண்கின்றன.

இது, பிரெஞ்சு முதலாளித்துவமும் மற்றும் NPA போன்ற சக்திகளும் 2011 ம் ஆண்டு லிபியப் போருக்கு வழங்கிய ஆதரவில் இருந்து, அப்பொழுது லிபியாவின் எண்ணெய் வயல்கள் கைப்பற்றப்பட்டன, சர்வதேச வங்கிகள் லிபியாவின் எண்ணெய் வயல்களின் வருமானங்களான பல பில்லியன்களை கைப்பற்றிக்கொண்டன.

நவ சிலுவை யுத்தமும் பேஸ்புக் முஸ்லிம்களும் (மீள்பதிப்பு)



   இதை எழுதுகின்ற வேளை முஸ்லிம்களின் பெரிய தேசங்களில் ஒன்றானசூடான் துண்டாடப்பட்டிருக்கும். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் கூட்டுச் சதியில் பிரிக்கப்பட்ட தென் சூடான் ஒரு கிறிஸ்தவ தேசமாக மலர்ந்திருக்கும். இனியென்ன. வட சூடானாகிய முஸ்லிம் தேசத்தில் வாழும் கிறிஸ்தவர்களிற்கு எதிரான அபாண்டமான ஒடுக்குமுறைக்கும், சித்திரவதைகளிற்கும் எதிராக மீண்டும் இந்த மேற்குலகு ஓலமிடத்தொடங்கும். நெதர்லாந்து சூடானிற்கு செல்லும் அமைதி காக்கும் படையில் தானும் பங்கு கொள்வதாக முன்வரும்.சூடானிய முஸ்லிம்களின் இரத்தம் ஸஹாரா பாலைவனத்தை குளிர வைக்கும்..


இது தானே இன்று உலகில் நடைபெறும் நிகழ்ச்சிகள். முஸ்லிம் தேசங்களிற்கு எதிராக கிறிஸ்தவ மற்றும் யூத ஆக்கிரமிப்பாளர்கள் செய்யும் யுத்தங்கள் தான் இன்றைய தலைப்புச் செய்திகள். இஸ்லாமோஃபோபியா எனும் மேற்குலகின் நயவஞ்சக சொல்லின் கீழ் தாங்கள் செய்யும் அனைத்து விதமான மனிதகுலத்திற்கு எதிரான பயங்கரவாதங்களையும் மறைக்கப் பார்க்கின்றார்கள். இஸ்லாமிய பயங்கரவாதம், முஸ்லிம் அடிப்படைவாதம்எனும் சொற்களும் இவர்களி்ன் பாதகச் செயல்களை மறைக்க வெகுவாக உதவுகின்றன.


நெதர்லாந்தில் நபியை கேவலப்படுத்தி கார்டூன் வரைகிறான். அதை அந்நாட்டு நீதித்துறையும் பாராளுமன்றமும் வேடிக்கை பார்க்கிறது. ஹலால் இறைச்சிகளை தடை செய்கிறது. நிகாபை நீக்கச் சொல்கிறது. நிகாபை நிரந்தரமாக நீக்க பிரான்ஸ் சட்டம் கொண்டுவரப்பார்க்கிறது. அவுஸ்திரேலியா முஸ்லிம்களிற்கு எதிராக சகலவிதமான வார்த்தை பிரயோகங்களையும் பாவிக்க சட்ட ரீதியாக பொதுமக்களிற்கு அங்கீகாரம் அளிக்கிறது. இப்படி பல விடயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.


ஆப்கான், பலஸ்தீன், செச்னியா, ஈராக், மியன்மார் என முஸ்லிம்கள் மீது கூட்டு படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. முஸ்லிம் நாடுகள் பலவீனப்படுத்தப் படுகின்றன. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வாறான நிகழ்வுகளில் இருந்து நமக்கு அவர்கள் சொல்லும் செய்தி இதுதான். முஸ்லிம்களிற்கு கிறிஸ்தவ மண்ணில் இடமில்லை. நீங்கள் உங்கள் தேசங்களில் போய் உறையுங்கள் என்பதே.


இதிலிருந்து ஒரு தெளிவான செய்தி நமக்கு கிடைக்கிறது.நவ சிலுவைப்போரை மேற்குலகு முஸ்லிம்கள் மீது எப்போதோ ஆரம்பித்து விட்டது. அதன் நிகழ்ச்சி நிரலின் அங்கமே இப்போது நடைபெறும் நிகழ்வுகள்.
போர் என்றதும் நமக்கு நினைவிற்கு வருவது இரு அணிப்படைகளும் பரஸ்பரம் மோதிக்கொள்வது. பழைய சிலுவை யுத்தங்களும் அவ்வாறே நிகழ்ந்தன. ஆனால் உண்மை அப்படியல்ல. இன்றைய போரில் இராணுவம் எனும் வரையறைக்குள் எதையும் பார்க்க முடியாது. பொருளாதாரம், கலாச்சாரம், கல்வி, வர்த்தகம் என ஆரம்பித்து ஒரு கடையின் விற்பனையாளர் , வாடிக்கையாளர் வரை இந்த சிலுவை யுத்தம் விசாலப்படுத்தப்பட்டுள்ளது.


ஒரு முஸ்லி்ம் வீதியில் இறங்கியது முதல் மீண்டும் தனது இல்லம் வந்து சேரும் வரை விதவிதமான சிலுவை யுத்த வீரர்களையும் பலதரப்பட்ட களங்களையும் சந்திக்கின்றான். ஆனால் இதன் பரிணாம வீச்செல்லைகளை இந்த முஸ்லிமால் உணர்ந்து கொள்ள முடிவதில்லை. கொக்கோ கோலா கல்சரில் மூழ்கிய முஸ்லிமாக அவன் வாழ்க்கை நகர்கிறது.


மொங்கோலிய ஜெங்கிஸ்கானின் வருகையை அன்றைய உலமாக்கள் சிலர் இவன் தான் தஜ்ஜாலா என அஞ்சினர். அவ்வளவு கொடூரமானது அவனதும் அவனது படையினரதும் அனுகுமுறை. இப்போது பல்லாயிரக்கணக்கான ஜெங்கிஸ்கான்கள் உலகில் முஸ்லிம்கள் மீது முழு வீச்சுடன் களமிறங்கியுள்ளனர். ஆனால் அவர்களது தாக்குதலும் அதனால் ஏற்படும் அழிவுகளும் முஸ்லிம்களால் உடன் உணரப்படக்கூடிய ஒன்றாக இல்லை.


இன்றைய ஜெங்கிஸ்கான்களும், கிங் ரிச்சர்ட்களும் மென்மையாகவே முஸ்லி்ம்களை அழிக்கின்றனர். ஒரு போராளி முஸ்லிமின் பேஸ்புக்கே அவனையும் அவனுடன் தொடர்புடைய ஏனைய போராளிகளையும், போராட்ட அமைப்புக்களையும் துல்லியமாக காட்டிக்கொடுக்கிறது. முஸ்லிம்களை முஸ்லிம் நாடுகளிற்கு விரட்டும் இவர்களது இந்த நடவடிக்கை கேன்சர் போன்றது. உடன் உணரப்பட முடியாதது. உணரும் போது எதுவுமே மிச்சமிருக்காது.

லண்டனிலும், பாரிஸிலும் இஸ்லாத்தை முழங்கும் முட்டாள்களாகவே நாம் இன்றும் இருக்கின்றோம். தனது சொந்த நாட்டில் தஃவா செய்ய துப்பில்லாமல் வெளிநாடுகளில் சென்று தஃவா செய்யும் தாயிகளே நாளை இந்த ஜெங்கிஸ்கான்களை எதிர்கொள்ளப்போகிறார்கள். இஸ்லாமிய சூழல் என்றும் இகாமத்தே தீன் என்றும் முழங்கும் இந்த காட்போர்ட் போராளிகள் தங்கள் குடும்பங்கள் சகிதம் ஜாஹிலிய சூழல் குறைந்த யெமனின் சில பிரதேசங்களிலோ அல்லது சூடானிய வெளிகளிளோ வாழ தயாரா?. இல்லை. இல்லவே இல்லை. மேற்குலகின் அதீத சமூக சேவையின் ஊடாக இனாமாக கிடைக்கும் ஊதியம் இவர்களிற்கு இலாஹியத்தை விட முக்கியம். இலவச கொடுப்பனவுகளை பெற்றக்கொண்டு இஸ்லாமிய ஆட்சியின் மகிமை பற்றி பேசும் தாயிகள் இருக்கும் வரை மேற்குலகு வெற்றிபெற்றுக் கொண்டே தான் இருக்கும்.


கிலாபா கோட்பாட்டை முழங்கும் இன்னொரு கூட்டமும் லண்டனில் தான் முகாமிடுகிறது. அன்றைய முஸ்லிம் சாம்ராஜ்யங்கள் சோமாலியா மற்றும் எதியோப்பியாவில் இவர்களால் கிலாபாவை கட்டியெழுப்ப முடியாது. இவர்கள் கனவு காணும் கிலாபா அன்றைய உமையாக்களின் எச்சங்களே.
சில தனி நபர்களிற்கு அல்லது குழுக்களிற்கு அவர்களது அடைவுகளை மேற்கொள்ள கிலாபா கோஷம் தேவைப்படுகிறது. ஜிஹாத் வேண்டும் என்பதற்காக ஜிஹாத் களங்களை திறக்கும் மார்க்க முட்டாள்கள் இவர்கள்.
நவீன சிலுவை யுத்தம் ஆரம்பமாகி பல வருடங்களாகி விட்டன. அதை முகம் கொடுக்க நாம் தயாராகவில்லை. யுத்தத்தின் கட்டங்கள் மாறும் பொழுது முஸ்லி்ம்கள் மீதான நெருக்கடிகளும் படிப்படியாக அதிகரிக்கின்றன. 

டொனி பிளேயர் குர்ஆனை தினமும் ஓதுவது தான் இன்றை முஸ்லிம் மீடியாக்களின் தலைப்பு செய்தி. முஸ்லி்ம்கள் பரஸ்பரம் பகிர்வதும் இதைத்தான். நேற்றைய குத்பாவில் (இலங்கையில்) ஒரு முல்லா மிம்பரில் ஏறி நின்று முழங்குகி்ன்றது. டொனி பிளேயரின் தனித்துவங்களை பற்றி. அது மேலும் சொல்கிறது ”அவரிற்காக நாம் பிரார்த்திப்பது கடமையென்று”. கடைசியில் அவரிற்கு ஜன்னதுல் பிர்தவ்ஸ் வேண்டி பிரார்த்திக்கிறது. அட முல்லா தான் இப்படி என்றால் அங்கு வந்திருந்த முஸ்லிம்களும் ஆர்வமாக ஆமீன் சொல்கிறார்கள். எவ்வளவு கேவலமான நிலை. இந்த பிளேயரின் கட்டளையால் பஸராவிலும், கந்தஹாரிலும் நுழைந்த பிரித்தானிய இராணுவ மிருகங்கள் செய்த கொலைகள், கற்பழிப்புக்கள், சித்திரவதைகள், அழிவு நாச வேலைகள் ஆயிரம் ஆயிரம். இந்த அநியாயங்களை பற்றி பேசாத முல்லா அவன் குர்ஆன் ஓதுவதை இஸ்லாத்தின் வெற்றியாக பிரகடனப்படுத்துகிறது. 

இது தான் இன்றைய நிலை. கிறிஸ்தவ வெறியர்களை களம் கண்ட சலாஹீதீன் அய்யூபியை மக்களிற்கு இனங்காட்ட வேண்டியவர்கள் ஸெய்ன்பிகாவை அறிமுகப்படுத்துகிறார்கள். காஸாவின் பட்டிணியை பற்றி பேச வேண்டிய முல்லாக்கள் மைக்கல் ஜக்ஸனின் ஜனாஸாவை பற்றி கவலைப்படுகிறார்கள். 


சிலுவை தயார். சிலுவை யுத்தமும் தயார். சிலுவை வீரர்களும் தயார். நாம் என்ன செய்யப் போகிறோம்? மஹ்தியும் தயார். ஈஸாவும் தயார். மறுமையும் தயார். என பதில் சொல்லப்போகிறோமா என்ன?!!

தாய்லாந்து முஸ்லிம் படுகொலையும் - முன்னாள் பிரதமர் மீதான மரண வாசகமும்!!


Thailand's former Prime Minister Thaksin Shinawatra speaks during an interview with Reuters at his residence in Dubai
   நேற்று முன்தினம் யூ டியூப்பில் ஒரு வீடியோ கிளிப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அது மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜுலை மாதம் இந்த வீடீயோ பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் தென்கிழக்காசியாவிற்கான Al - Qaeda Southeast Asia என தம்மை இனங்காட்டிக்கொள்பவர்கள் முகத்தை மறைத்த நிலையில் கையில் துப்பாக்கிகள் ஏந்திய வண்ணம் சில விடயங்களை கூறியுள்ளனர். தாய்லாந்தில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்களிற்காக பழிக்கு பழி வாங்கப்படும் எனவும் சூளுரைத்துள்ளனர். 


முன்னால் தாய்லாந்தின் பிரதமர் Thaksin Shinawatra இந்த கொலைகளிற்கு ஜவாப் சொல்ல வேண்டும் என்றும் அவரின் உத்தரவின் பேரிலேயே தென்தாய்லாந்தில் இராணுவத்தினரால் முஸ்லிம் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து பிரதமரிற்கு தாங்கள் மரண தண்டமை விதித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 


Tak Bai 25 October 2004
Thaksin Shinawatra-வை விழித்து அவர்கள் ‘உன்னை நாம் எங்கு கண்டாலும் எவ்விடத்திலும் கொல்வோம். உலகின் எந்த மூளையில் போய் மறைந்தாலும் நீ கொல்லப்படுவாய். மரணித்த முஸ்லிம்களின் வலிகளிற்கு பகரமாக உனது உயிரை எடுப்போம். நாம் முஸ்லிம் உலகிற்கு உனது முகத்தை ஞாபகத்தில் வைத்திருக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். அப்போது தான் உன்னை உலகில் எங்கு கண்டாலும் கொல்ல முடியும்‘ என தெரிவித்துள்ளனர். 

2004ல் பிரதமராக இவர் இருந்த போது Narathiwat-ல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தினை நசுக்க உத்தரவிட்டார். அதில் 1300 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் இராணுவத்திடம் கையழிக்கப்பட்டனர். அவர்களில் 78 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். 

இந்த யூடியூப் வீடியோ 27-07ல் ரத்து செய்யப்பட்டது. சமூக வன்முறைகளை தூண்டும் கிளிப் என இதற்கு யூ-டியூப் காரணம் சொன்னது. பின்னர் அது மீண்டும் கடந்த மாதம் இன்னொருவரால் அப்லோட் செய்யப்பட்டது. இப்போது அதனை மீண்டும் யாரும் பார்க்க முடியாமால் நிறுத்தி விட்டது நிர்வாகம். 

சிரியாவின் படுகொலைகளை அப்பட்டமாக காட்டும் யூடியூப், ஈராக்கிய போராளிகளின் மிரட்டல்களை வெளியிடும் யூடியூப் தாய்லாந்தின் முஸ்லிம்கள் மீதான படுகொலையை காட்ட மறுத்து வருவதன் பின்னணி பற்றி இன்னொரு தருணத்தில் அலசுவோம். 

சிரியா மீதான தாக்குதலை 60 நாட்களுக்கு முடிக்க அமெரிக்க பார்லிமென்ட்டில் தீர்மானம்


   சிரியா மீதான தாக்குதலை, 60 நாட்களுக்குள் முடிக்க அமெரிக்க பார்லிமென்ட்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்க வீரர்கள், அந்த நாட்டில் இறங்கி போரிடாமல், வான்வழி தாக்குதல் நடத்தவும், இந்த தீர்மானம் வழி செய்கிறது.
சிரியாவின் அதிபர், பஷர்-அல்-ஆசாத் பதவி விலகக் கோரி, கிளர்ச்சியாளர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே, கடும் சண்டை நடந்து வருகிறது.கடந்த மாதம், 21ம் தேதி, ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதால், 1,300 பேர் பலியானதாக கூறப்படுகிறது. ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா மீது, ராணுவ தாக்குதலை நடத்த, அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டமிட்டு உள்ளார். இதற்காக, அமெரிக்க பார்லிமென்ட்டின் ஒப்புதலை கோரியுள்ளார். அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு, இஸ்ரேல், பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. சிரியாவுக்கு ஆதரவாக செயல்பட, ரஷ்யா திட்டமிட்டு உள்ளது. இதற்காக, உளவு கப்பல் ஒன்றை, மத்திய தரைகடல் பகுதிக்கு, ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது. ஜெர்மனும், பிரிட்டனும், இந்த தாக்குதலில் ஈடுபடப் போவதில்லை என, தெரிவித்துவிட்டன. "சிரியா மீது தாக்குதல் நடத்த வேண்டாம்' என, அரபு நாடுகளும், சீனாவும் கேட்டு கொண்டுள்ளன. சண்டைக்கு முன்னோட்டமாக, அமெரிக்கா, போர் கப்பலை, மத்திய தரைகடல் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி, அந்நாட்டு, பார்லிமென்ட்டின் மேல்சபையில் பேசுகையில், ""ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய, சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்காவிட்டால், ஈரான் மற்றும் வடகொரியா நாடுகளுக்கு கொண்டாட்டமாகிவிடும்; அதுமட்டுமல்லாது, சர்வதேச அளவில், தோழமை நாடுகளின் உறவை, நாம் இழக்க நேரிடும்,'' என்றார்.
சிரியா மீது தாக்குதல் நடத்த அனுமதி கோரும் தீர்மானம், அமெரிக்க பார்லிமென்ட்டில், நேற்று தாக்கல் செய்யப்பட்டது. சிரியா மீதான தாக்குதல் நடவடிக்கை, 60 நாட்களுக்குள் முடிய வேண்டும். இந்த நடவடிக்கையில், அமெரிக்க வீரர்களின் காலடி அந்த நாட்டு மண்ணில் படக்கூடாது. (அதாவது விமான தாக்குதல் அல்லது கடற்படை தாக்குதல் நடத்தப்பட வேண்டும்) என, இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனினும், இந்த தீர்மானம், நேற்று இரவு வரை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை

Sheikh Abu Qatada-வின் விசாரணைக்கு இன்னும் 10 நாட்கள்!! - சிங்கத்தை எங்கடைத்தாலும் சிங்கம் சிங்கம்தான்!!

     Pengadilan Syeikh Abu Qatada akan digelar sepuluh hari mendatang
      Sheikh Abu Qatada-வை பிரித்தானிய அரசு பலவந்த வெளியேற்றம் செய்ததும், அவரை ஜோர்தானிய உளவுத்துறையிடம் பாரமளித்ததும் எமது முன்னைய பதிவில் வெளியாகியிருந்தது.  ஜோர்தானிய நீதித்துறை வட்டாரங்கள் ஜோர்தானிய அரசு அவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் அடங்கிய நீதி விசாரனையை இன்னும் பத்து நாட்களில் ஆரம்பிக்கிவிருக்கிறது என தெரிவித்துள்ளன. ஜோர்தானிய அரசாங்கத்திற்கு எதிரான தாக்குதல் முயற்ச்சிகள் பற்றியே இவர் மீதான விசாரணை ஆரம்பமாகவிருக்கிறது. 


இங்கிலாந்தின் சிறந்த பிரஜையாக வாழ்ந்த Sheikh Abu Qatada Muwaqqar அவர்களை பிரித்தானிய புலனாய்வு அமைப்பு எம்16 இஸ்லாமிய அடிப்படைவாதி என பொய் குற்றச்சாட்டினை சுமத்தி சிறையிட்டது. ஆதாரங்களை அவர்களால் நிரூபிக்க முடியாமல் போனதால் அவர் விடுதலையானார். அவரை எப்படியாவது பலிவாங்க வேண்டும் என பிரித்தானிய அரசு துடித்தது. ஆப்கானிய ஜிஹாத்திற்கு இவரை சந்திப்பவர்களே செல்வதாக அவர்களது உளவுத்துறை உறுதியாக சொல்லியதே இதற்கு காரணம்.

அம்மானிற்கு அருகில் உள்ள ஒரு பாலைவனத்தில் உள்ள சிறைச்சாலையில் Sheikh Abu Qatada Muwaqqar அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளார். 1000 கைதிகள் வரை இங்கு தடுத்து வைத்திருக்க முடியும். பலத்த ஜோர்தானிய கொமாண்டோ பாதுகாப்புமிக்க இந்த சிறைச்சாலையில் இருப்பவர்கள் அனைவருமே இஸ்லாமிய போராளிகள், செயற்பாட்டாளர்கள், பிரச்சாரகர்கள், மதகுருமார்கள் ஆவர். உலகலாவிய முஸ்லிம் உம்மாவின் பிரச்சனைகளிற்கு தீர்வாக புனித ஜிஹாதை ஆகர்ஷித்து நின்றவர்களே இங்கு சிறையிடப்பட்டுள்ளனர். அமெரிக்க உளவமைப்பான சீ.ஐ.ஏ. உளவுத்துறை உத்தியோகத்தர்கள் அடிக்கடி இந்த சிறைச்சாலைக்கு இன்டரகேசன் சம்மந்தமாக வந்து செல்வது வழமை. அமெரிக்காவின் உத்தியோகபற்றற்ற சிறைச்சாலையாகவே இது கருதப்படுகிறது. 

முஸ்லீம்களாகிய நாம் எமது போராட்டத்தை எங்கிருந்து தொடங்குவது !?

   ரசூல் (ஸல் ) அவர்களது உம்மத்தைப் பொறுத்த வரையில் அந்த மக்கா காலப்பகுதி முதல் இன்றுவரை இஸ்லாத்தை தெளிவோடும் விரும்பியும் ஏற்ற நிலையிலோ அல்லது இன்றுபோல் புரியாமல் ஏற்றுக்கொண்ட நிலையிலோ ஒரு தனிப்பெரும் சித்தாந்தம் இஸ்லாம் என்ற வகையில் பின்வரும் அடிப்படைப் பிரச்சினைகளைத்தான் எதிர் கொள்கிறார்கள் .

1. தமது இஸ்லாமிய  சித்தாந்தத்தை சுமந்தவர்களாக வாழ்ந்திடும்
 உரிமை.

2.தமது  இஸ்லாமிய  சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியல் அடையாளங்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் .

3. தமது இஸ்லாமிய சித்தாந்த கட்டளைகளையும் , வழிமுறைகளையும் பின்பற்றும் ,பிரயோகிக்கும் உரிமை ,மற்றும் பிரச்சாரப் படுத்தும் உரிமை.  
4.தமது இஸ்லாமிய சித்தாந்த அடிப்படையான வாழ்வியலை பாது காத்தல் எனும் அடிப்படையில் அரசியல் இராஜதந்திரக் கேடயமான கிலாபா அரசை  ,(இஸ்லாத்தை ஏற்காதோர்  விரும்பியோ விரும்பாத நிலையிலோ)   ஏற்படுத்தல் .

                               பெரு நிலங்கள் முதல் , சிதறிவாழும் நிலங்கள் வரை முஸ்லீம் உம்மா எதிர் நோக்கும் பிரச்சினைகள் மேலே தந்த நான்கு காரணிகளுடனும் சம்பந்தப் பட்டு வருவதை எவராலும் மறுக்க முடியாது .மேலும் இந்த நான்கு காரணிகளும் ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாத ஆத்மார்த்தப் பிணைப்பைக் கொண்டிருபதையும் நிதானமாக அவதானித்தால் உணர முடியும் .

                                  இஸ்லாத்தின் எதிரிகளின் துல்லியமான திட்டமிடல் இந்தக் காரணிகளில் நான்காவதை அதாவது அரசியல் இராஜதந்திரக் கேடயத்தை உடைத்தல் என்பதில் இருந்துதான் தமது வெற்றிகரமான மேலாதிக்கத்தை முஸ்லீம் உம்ம்மத்தின் மீது பதித்தனர் .

                       இதன் விளைவு காஸா முதல் காஷ்மீர் வரை ,எகிப்து முதல் எரிட்ரியா வரை , சிரியா முதல் சிறீலங்கா வரை , அமெரிக்கா முதல் அசர்பைஜான் வரை வடிவங்களில் வேறுபட்ட அழுத்தங்கள் , கொடுமைகள் ,நிர்ப்பந்தங்கள் ,அழிப்புகள் மூலம்  முஸ்லீம் உம்மத் மீது தொடர்கின்றது .

                            குப்ரிய மேலாதிக்க எதிரியின் பிரதான நிபந்தனையே இஸ்லாத்தில் இல்லாத ,இஸ்லாம் தடுத்த தீர்வுகளில் ,வாழ்வியலில் இருந்து முஸ்லீம் சிந்திக்க வேண்டும் என்பதே ஆகும் . இதற்கு அரசியல் ,இராணுவ ,பொருளாதார வலிமையை பயன் படுத்துவது என்பதே எதிரியின் முடிவு .

                     இந்தப் போராட்டத்தை பொறுத்த வரை எதிரி முஸ்லீம்களை  பொது நோக்கிலேயே பார்க்கிறான் ! இங்கு அவனுக்கு அரபி ,அஜமி என்பதோ , 'மத்ஹபு களோ' இயக்க வாதங்களோ ஒரு பொருட்டல்ல .அது அமெரிக்காவாக ,இஸ்ரேல்  ,  ரஷ்யா  , பிரான்ஸ்  , சீனா ,ஈரான்  ,அல்லது (தம்மை 'ஹரத்தின்' காவலர்களாக காட்டிக்கொண்டு  தமது பரம்பரை சுல்தான் ,ஷேக் பட்டத்தை தக்கவைக்க 200பில்லியன் டொலர்களை ஜெனரல் சீசி க்கு கொடுத்து எகிப்தில் முஸ்லீம்களை கொல்லும் ஹராத்தை செய்யும் )அரபு மன்னர்களாக இருக்கட்டும் , ஒரே முடிவில் தான் இருக்கிறார்கள் .

                 தாகூத்களின்  அதிகாரம்  முஸ்லீம் உம்மத்தின் உருவத்தை இஸ்லாத்தில் இருந்து பார்க்கும் போதுதான் விடயங்கள் கைமீறிப் போகின்றன . இப்போது முஸ்லீம்கள் தம்மைப்பற்றி சிந்திக்க வேண்டும் .அந்த சிந்தனை சரியாக இருந்தால் . மேலே சொன்ன நான்காவது விடயத்தில் இருந்து அதாவது ....

       4.தமது இஸ்லாமிய சித்தாந்த அடிப்படையான வாழ்வியலை பாது காத்தல் எனும் அடிப்படையில் அரசியல் இராஜதந்திரக் கேடயமான கிலாபா அரசை  ,(இஸ்லாத்தை ஏற்காதோர்  விரும்பியோ விரும்பாத நிலையிலோ)   ஏற்படுத்தல் . என்பதில் இருந்து தமது போராட்டத்தை தொடங்குவார்கள் . அதுதான் பாதுகாப்பானதும் ஸுன்னா காட்டிய வழிமுறையுமாகும் .

“எமது ராணுவ தளபதிகளின் விரல்கள் ஏவுகணை ட்ரிக்கர்களில் உள்ளன!

சிரியாவின் பிரதமர் வாயெல் அல்-ஹல்கி
சிரியாவின் பிரதமர் வாயெல் அல்-ஹல்கி
    சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்ற பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டுள்ள நிலையில், “சிரியா ராணுவமும் எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராகவே உள்ளது. எமது விரல்கள் ஏவுகணை ட்ரிக்கரில் உள்ளன” என்று தெரிவித்துள்ளார், சிரியாவின் பிரதமர் வாயெல் அல்-ஹல்கி.
சிரியா பிரதமர் வெளியிட்ட அறிக்கை, நேற்று (சனிக்கிழமை) முழுவதும் திரும்ப திரும்ப சிரியா அரசு தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பாகியது. “எமது நாட்டின்மீது அமெரிக்கா உட்பட எந்தவொரு வெளிநாடு தாக்குதல் நடத்தினாலும், நாம் சும்மா பார்த்துக்கொண்டு இருக்கப் போவதில்லை. எந்த சக்தியையும் திருப்பி தாக்கும் வல்லமை, சிரியா ராணுவத்துக்கு உண்டு” என்பதே அவரது அறிக்கையின் பிரதான பாயின்ட்டாக உள்ளது.
“நம் நாட்டின் மீது ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை முறியடிக்கும் விதத்தில், எமது ராணுவத் தளபதிகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டு விட்டது. அவர்களது விரல்கள், ஏவுகணைகளின் ட்ரிக்கர்களில் உள்ளன.
சிரியாவை நோக்கி ஏவுகணைகள் எப்போது புறப்படுகின்றனவோ, அடுத்த விநாடியே, சிரியாவில் இருந்தும் ஏவுகணைகள் சீறிக்கொண்டு கிளம்பும்” என்று முடிகிறது அவரது அறிக்கை.
மற்றொரு புறமாக, சிரியா மீது தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானிய புரட்சிப்படை (Iran’s elite Revolutionary Guards) தளபதி மொஹமெட் அலி ஜஃபாரி, “அமெரிக்கா சிரியா மீது தாக்குதல் நடத்தினால், அது சிரியாவின் எல்லைக்குள் முடிந்து போகும் யுத்தமாக இருக்காது. சிரியாவுக்கு வெளியே உள்ள அமெரிக்க ஆதரவு நாடுகள் மீதும் ஏவுகணைகள் போய் விழும்” என்கிறது நேற்று வெளியிடப்பட்ட அவரது அறிக்கை.