Facebook Twitter RSS
*/

Latest News

இஸ்ரேலில் கடும் பதட்டம்: பொதுமக்கள் பாதுகாப்புக்கு கேஸ் தடுப்பு முகமூடிகள்


   சிரியா மீது எந்த நிமிடத்திலும் அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்ற நிலையில், அங்கு பதட்டம் நிலவுகிறது. அதற்கு எந்த விதத்திலும் குறையாத பதட்டம் இஸ்ரேலில் நிலவுகிறது. காரணம், சிரியா மீது தாக்குதல் நடந்தால், சிரியா உடனடியாக திருப்பி தாக்கப்போவது, அநேகமாக இஸ்ரேலை நோக்கித்தான்!
இதனால், இஸ்ரேலிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடங்கிவிட்டன.
சிரியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாக அமெரிக்கா சொல்கிறது. இஸ்ரேல் மீது சிரியா ஏவுகணை தாக்குதல் நடத்தினால், ஏவுகணையின் வார்-ஹெட்டில் ரசாயன ஆயுதங்களே பொருத்தப்படலாம் என்ற அச்சம் இஸ்ரேலில் நிலவுகிறது.
இஸ்ரேலின் வடக்கு நகரங்களில், ரசாயன தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கொடுக்கும் கேஸ் தடுப்பு முகமூடிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. மொத்தம் 800 பாடசாலைகள், 2,800 சிறார் பள்ளிகளில் திங்கட்கிழமை பாதுகாப்பு பயிற்சிகள் கொடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த நிமிடமும் தாக்குதல் நடக்கலாம் என்ற பதட்டம் ஏற்பட்டுள்ள இஸ்ரேலிய நகரங்களில் எடுக்கப்பட்ட சில போட்டோக்கள், கீழேயுள்ள இணைப்பில் உள்ளன.
1-வது போட்டோவில், கேஸ் தடுப்பு முகமூடிகளை றெ்றுக்கொள்ள காத்திருக்கும் மக்களை பாருங்கள். 2-வது போட்டோவில், கிர்யாட் கட்டில் உள்ள கேஸ் முகமூடி தொழிற்சாலையில் அவசரகதியில் தயாரிக்கப்படும் முகமூடிகள்.
3-வது போட்டோவில், கோலன் ஹைட்ஸ் எல்லைப் பகுதியில் டாங்கிகளுடன் தயாராகும் இஸ்ரேலிய ராணுவம். 4-வது போட்டோவில், இஸ்ரேலிய சிரியா எல்லையில் மெர்க்கவா டாங்கிகளில் பயன்படுத்தப்படும் ஷெல் ஒன்றை லோட் பண்ண எடுத்துச் செல்லும் இஸ்ரேலிய ராணுவ வீரர்.
5-வது போட்டோ, தலைநகர் டெல்-அவிவ்வில் உள்ள மத்திய போஸ்ட் ஆபீஸில் புதிய கேஸ் முகமூடிகளை பெறுவதற்கு பதிவு செய்துகொள்ள தமது அடையாள அட்டைகளுடன் காத்திருக்கும் மக்கள். 6-வது போட்டோவில் நீங்கள் பார்ப்பது, ஹைஃபா நகரில் தயார் நிலையில் உள்ள பாட்ரியாட் ராக்கெட் தடுப்பு சாதனம்.
7-வது போட்டோவில், ஹைஃபா நகரில் கேஸ் தடுப்பு முகமூடிகள் வழங்கப்படும் காட்சி. 8-வது போட்டோவில், கோலன் ஹைட்ஸ் எல்லைப் பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மெர்க்கவா டாங்கிகள். 9-வது போட்டோவில், அதே பகுதியில் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் மேற்கொள்ளும் பயிற்சி.
10-வது போட்டோவில், ஜெருசலேம் நகரில் ஆர்தோடாக்ஸ் மதவாதி ஒருவர், தமது குழந்தைகளுடன் வந்து பாதுகாப்பு முகமூடிகளை பெற்றுச் செல்லும் காட்சி. 11-வது போட்டோவில், இஸ்ரேல் – சிரியா எல்லையில் டாங்கி ஒன்றை செலுத்திச் செல்லும் இஸ்ரேலிய ராணுவ வீரர்.
12-வது போட்டோவில் நீங்கள் பார்ப்பதுதான், Iron Dome. ராக்கெட் மற்றும், ஏவுகணைகளை தடுத்து விழுத்தும் சாதனம். இந்த இன்டர்செப்டர் பேட்டரிகள் கொடுக்கப்போகும் பாதுகாப்பை நம்பித்தான் உள்ளன, இஸ்ரேலிய நகரங்கள். போட்டோக்களை, கீழேயுள்ள லிங்கில் கிளிக் செய்து பார்க்கவும்.
tel-aviv-20130831-1


tel-aviv-20130831-2

tel-aviv-20130831-3

tel-aviv-20130831-4

tel-aviv-20130831-5

tel-aviv-20130831-6


tel-aviv-20130831-7

tel-aviv-20130831-8

tel-aviv-20130831-9

tel-aviv-20130831-10

tel-aviv-20130831-11

tel-aviv-20130831-12

tel-aviv-20130831-13



ஆப்கானில் இன்று ஏராளமான மனித வெடிகுண்டுகளின் ‘மிகப்பெரிய’ தற்கொலை தாக்குதல்! :viruvirupu

  ஆப்கானிஸ்தானில் இன்று (திங்கட்கிழமை) சற்று நேரத்துக்குமுன் நடந்தப்பட்ட மிகப்பெரிய தற்கொலை தாக்குதல் காரணமாக, நேட்டோ படைகளுக்கான சப்ளை பாதை துண்டிக்கப்பட்டுள்ளது.
‘மிகப்பெரிய தற்கொலை தாக்குதல்’ என்று குறிப்பிடுகிறோம் அல்லவா? எத்தனை மனித வெடிகுண்டகள் வெடித்தன என்ற கணக்கே சொல்ல முடியாத அளவில், ஏராளமானவர்கள் தமது உடல்களில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு வந்து தாக்கினார்கள்!
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில், ஜலாலாபாத்துக்கும், தொர்க்காமுக்கும் இடையேயுள்ள வேகப் பாதையில் இன்று காலை நேட்டோ சப்ளை ட்ரக்குகள் வரிசையாக வந்துகொண்டிருந்தபோது, வந்து இறங்கிய தலிபான் இயக்கத்தினர் இந்த தாக்குதலை நடத்தினர்.
முதலில் ட்ரக்கில் இருந்த நேட்டோ படையினரை நோக்கி தாக்குதல் நடத்திய தலிபான்கள், ட்ரக்குகளை நோக்கி கையெறி வெடிகுண்டுகளையும் வீசினர். அதையடுத்து, நேட்டோ படையினரின் 1லிகாப்டர்கள் அங்கு விரைந்து வந்து தலிபான்களின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தது.
இந்தக் கட்டத்தில் தமது உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு வந்திருந்த தலிபான்கள் ஒவ்வொருவராக வெடித்துச் சிதறினர்.
இந்த தாக்குதலில் நேட்டோ படையினருக்கு சொந்தமான பல ட்ரக்குகள் அழிக்கப்பட்டன. அந்த ட்ரக்குகளில் எத்தனை பேர் இருந்தனர், சேத விபரம் எவ்வளவு என்று தெரியவில்லை.
இந்த தாக்குதலுக்கு உரிமைகோரி தலிபான் செய்தித் தொடர்பாளர் அஹ்மத் அலி அப்துல்லாசி அனுப்பியுள்ள இமெயிலில், தாக்கி அழிக்கப்பட்ட ட்ரக்குகளில் ராணுவ டாங்கிகளும் ஏற்றப்பட்டு இருந்தன என்று கூறியுள்ளார். மத்திய ஆசிய நாடு ஒன்றில் இருந்து இந்த ட்ரக்குகள் நேட்டோ படைகளுக்கான சப்ளையை எடுத்துக்கொண்டு அந்தப் பாதை வழியாக வந்தன என்று தெரியவருகிறது.
தாக்குதல் நடைபெற்றதால், வேகப்பாதையில் ஆங்காங்கே ட்ரக்குகள் எரிந்துகொண்டு உள்ளதால், தற்போது நேட்டோ படைகளின் இந்த சப்ளை பாதை மூடப்பட்டுள்ளது. (மேலேயுள்ள போட்டோ, இதே பாதையில் கடந்த ஆண்டு நேட்டோ ட்ரக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்டது)

இட்லிப்பின் Ariha நகர் போராளிகள் வசம் வீழ்ந்தது!! - மரபு படையணிகளாக மாற்றம் பெறும் முஜாஹிதா அணிகள்

Allahu akbar, mujahideen liberate Ariha city in Idlib province
சிரியாவின் இட்லிப் மாகாணத்தின் Ariha நகர் இப்போது சிரிய போராளிகளால் மீட்கப்பட்டுள்ளது. இட்லிப் சமர்களில் சவால் மிக்கதும் மிக மோசமான எதிரியை சந்திக்க நேர்ந்ததுமான இந்த சண்டைகளில் போராளிகள் முழு Ariha பிரதேசத்தையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். FSA போராளிகளின் கடும் முற்றுகைக்கும் தாக்குதலிற்கும் கடந்த இரண்டு வார காலமாக முகம் கொடுத்திருந்த இந்த நகரை சிரிய அரசு இழந்துள்ளது. 
ஈரானிய ஷியா புரட்சி படையின் ஒரு தொகுதியினர் இங்கு சிரிய அரசு சார்பில் சமராடியிருந்தனர். அது போலவே லெபனானிய ஹிஸ்புல்லாக்களும், ஈராக்கிய ஷியாக்களான Fadhl Abu al-Abbas படையணியும் சிரிய ஆட்சியாளர்களின் இராணுவ ஆதிக்கத்தை பலப்படுத்தும் விதத்தில் இந்த நகரில் தரித்திருந்தனர். 

FSA போராளிகள் தங்கள் இறுதி கட்ட தாக்குதலின் போது முஜாஹித்களின் உதவியையும் கோரியிருந்தனர். ஈராக்கிய பதுல் அல்-அப்பாஸிகளும், லெபனானின் ஹிஸ்புல்லாக்களும் இந்த சண்டைகளில் ஆக்ரோஷமான பதில் தாக்குதலை நடாத்தியிருந்தனர். இவர்களது கர்ண கடூரமான தாக்குதல்களின் முன் ஈடுகொடுக்க முடியாத நிலையில் FSA கட்டளைத்தலைமை முஜாஹித்களின் உதவியை அவசரமாக வேண்டி நின்றனர். இவர்களிற்கு உதவும் பொருட்டு Ahrar Movement ash-Sham al-Islamiya தனது முஜாஹித்களை களமிறக்கியது. அல்ஹம்துலில்லாஹ் இறைவன் அவர்களிற்கு வெற்றியை நல்கினான். 

இந்த தாக்குதலில் சோவியத் தயாரிப்பான BMP panser இன்பன்ட்ரி பைட்டிங் வெகிகில், டாங்கிகள், கனரக இயந்திர துப்பாக்கிகள், கயூட்ஷா ரக மல்டி பரல் லோஞ்சர்கள், ஜீ.பீ.எம்,ஜீ. நடுத்தர இயந்திர துப்பாக்கிகள், ஒலிகன் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் போன்றவற்றை தம் வசப்படுத்தியுள்ளனர். இதனை விட இலட்சக்கணக்கான ரவைகளையும், மல்டி பரல் ரொக்கெட்களையும், பல டன் எடையுள்ள வெடிபொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். 

Ariha நகர் மீதான தாக்கதல்களில் போராளிகள் வீதிகள் ஊடாக நகர்ந்து பிரான செக் போஸ்ட்களை சேஜரி செய்து அதன் பின்னர் அதனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இரண்டு இந்த நகரிற்கான பிரதான நெடுஞ்சாலை சந்திகளில் உள்ள அரண்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பின்னர் அந்த பாதைகள் வழியாக நேரடி சமரிற்கு போராளிகளை கொண்டு வந்து குவித்துள்ளனர். 

சிரிய போராளி அமைப்புக்கள் தங்களை மரபு நிலை கட்டமைக்கப்பட்ட படைகளாக வடிவமைத்து வருகின்றனர். சண்டையிடும் அணிகள் பின்னகர்த்தப்பட்டு வேறு அணிகள் களங்களிற்கு அனுப்பும் அளவிற்கு அனுபவமும், போர்ப்பலமும் அவர்களிடம் வந்துள்ளது. இது அமெரிக்காவிற்கு அலர்ஜியான விடயம். அவர்களை எப்போதும் கெரில்லா போராளிகளாக பராமரிக்கவே பென்டகன் விரும்புகிறது. இஸ்லாமிய போராளிகள் மரபணிகளாக கட்டமைக்கப்பட்டால் அவர்களது பயணம் அடுத்ததாக சவுதி அரேபியாவை நோக்கியும், இஸ்ரேலை நோக்கியும் இருக்கும் என்பது அமெரிக்காவிற்கு தெரியாதா பின்னே!!

டமஸ்கஸ் இராணுவ தளம்மீதான சிரிய முஜாஹித்களின் வெற்றிகர தாக்குதல்!!

  
   Operation Retaliation volcano warஎரிமலை போரிற்கான பதிலடித்தாக்குதலினை 09 சிரிய முஜாஹிதா அணிகள் இணைந்து மேற்கொண்டுள்ளன. டமஸ்கஸ்ஸின் புறநகர் இராணுவ கூட்டுப்படைகளின் கொம்பிளக்ஸ் கடந்த திங்கட்கிழமை (8/26/2013) தாக்கியழிக்கப்பட்டுள்ளது. விஷவாயுத்தாக்குதலினால் இறந்த 1700 சிவிலியன்களின் நினைவாக இந்த தாக்குதல் ஒருங்கிணைக்கப்பட்டதாக இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஒப் ஈராக் அன் ஷாம் தெரிவித்துள்ளத. டமஸ்கஸ் மீதான பழிவாங்கும் தாக்குதலிற்கு ஏப்.ஏஸ்.ஏ.யின் கூட்டு யூனியன் அமைப்புக்களும் அறைகூவல் விடுத்திருந்தன. 



சூறா தஃபாவில் (09-14) அல்லாஹ் சுபுஹானுவத்தால்லாஹ் "Fight them [unbelievers] Allah will punish them by your hands intermediates, insult them, you win over them and heal the [wrath of] faith community chest." என கூறும் வார்த்தைகளிற்கு அமைய முஜாஹிதீன்களிற்கு ஒரு பெரிய வெற்றியை விஷ வாயு தாக்குதலிற்கு பின்னர் வழங்கியுள்ளான். 

இந்த வீரமிகு தாக்குதலில் பங்கேற்ற கூட்டு முஜாஹிதா அணிகளின் பட்டியல் வருமாறு..

1. Liwa 'al-Islam
2. Jabhah Nushrah
3. Ahrar Movement ash-Sham al-Islamiya 
4. Brigades of Al-Habib al-Musthafa
5. Ash-Shiddiq Brigade
6. Shabab Al-Huda Brigade 

7. Brigade Jesus the son of Mary

சிரிய படையினர், லெபனானிய ஷியா மில்ல பிளட்டூன்கள், லெபனானிய ஹிஸ்புல்லா போராளிகள், ஈராக்கின் ஷியா மில்ல ஆயுத பிரிவான Abu Fadhl Iraq போன்ற பல மிலீஷியாக்களும் அங்கு முகாமிட்டிருந்தனர். அந்த கூட்டு இராணுவ தொகுதியையே முஜாஹித்கள் தாக்கி கைப்பற்றியுள்ளனர். அது தொடர்பான வீடியோ இமேஜ்கள் இதோ







சிரியா: மகனே, நீ உயிரோடு தான் இருக்கியா?: யூ டியூப்பில் 4.3 லட்சம் ஹிட்டடித்த பாசப் போராட்ட வீடியோ!


டமாஸ்கஸ்: சிரியாவில் நடந்த ரசாயன தாக்குதலில் இறந்தவிட்டதாக நினைத்த மகன் உயிருடன் கிடைத்த சந்தோஷத்தில் அவனை ஓடி வந்து கட்டித் தழுவி அழும் தந்தையின் வீடியோ யூ டியூப்பில் பிரபலமாகியுள்ளது. சிரியாவில் கடந்த புதன்கிழமை   நடந்த ரசாயன தாக்குதலில் பெண்கள், குழந்தைகள்  உள்பட 1,200 அப்பாவி மக்கள்  பரிதாபமாக உயிர் இழந்தனர்.
இந்த தாக்குதலில் தனது மகன் இறந்துவிட்டதாக நினைத்து ஒரு இளம் தந்தை வாடினார்.
இந்நிலையில் அவரது மகன் உயிருடன் திரும்பி வந்ததைப் பார்த்து அவர் ஓடி வந்து அவனை கட்டித் தழுவிய வீடியோ சிரிய போராளிகளால் யூ டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று இரவு வரை இந்த வீடியோவை 430,000 பேர் பார்த்துள்ளனர்.
ரசாயன தாக்குதலில் பாதிக்கப்பட்ட சுமார் 600 பேர் கிழக்கு டமாஸ்கஸில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் இந்த தாக்குதலில் பலியான ஒரு மாத பெண் குழந்தை உள்பட 20 குழந்தைகளின் உடலை அடையாளம் காண யாரும் வரவில்லை. ஏனென்றால் அவர்களின் குடும்பத்தாரும் தாக்குதலில் பலியாகிவிட்டனர்.
இந்த கொடூர தாக்குதலுக்கு பின் சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத்தின் சகோதரர் மஹர் அல் ஆசாத் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆயுத பரிசோதகர்கள் சிரியாவை விட்டு வெளியேறி லெபனான் சென்றனர் - சீறும் ஏவுகணையும் சிவக்கும் சிரியாவும்!!


   ஐ.நா. ஆயுத பரிசோதகர்கள் குழு இன்று காலை சிரியா தலைநகர் டமாஸ்கஸ்ஸில் தங்கியிருந்த ஹோட்டல் அறைகளை காலி செய்துவிட்டு புறப்பட்டு விட்டனர். சிரியாவில் இருந்து வெளியேறிய இவர்கள், அருகிலுள்ள லெபனானுக்குள் சென்றுவிட்டதாக தெரியவருகிறது.


இவர்கள் புறப்பட்டு சென்றதையடுத்து, நாளை கூட சிரியா மீது ஏவுகணை தாக்குதல்கள் தொடங்கப்படலாம் என்று பரபரப்பாக பேச்சு அடிபடுகிறது.
சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது என்றால், தமது போர்க் கப்பல்களில் இருந்து தொலைதூர பாலஸ்டிக் ஏவுகணைகளை ஏவும் என்றே ராணுவ வட்டாரங்களில் கூறப்படும் தகவல்கள் உள்ளன. அமெரிக்க போர் கப்பல்கள் மெடிட்டரேனியன் கடலில் தயாராக உள்ளன.

பிரிட்டிஷ் அரசு, சிரியா மீது தாக்குதல் நடத்தும் திட்டம் தொடர்பாக கொண்டுவந்த தீர்மானம் வெற்றி பெறவில்லை என்பதால், பிரிட்டன் ஒதுங்கிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்காவுடன் பிரான்ஸ் கைகோர்த்துக் கொள்ளும் என்று தெரிகிறது.


பிரான்ஸ் கடற்படையின் ஒரேயொரு போர்க்கப்பல்தான் தற்போது மெடிட்டரேனியன் கடலில் உள்ளது. அதேநேரத்தில் பிரான்ஸ் நினைத்தால், 24 மணி நேரத்துக்குள் வேறு கப்பல்களை சிரியாவுக்கு அருகே கொண்டுவர முடியும்.

சிரியா தாக்கப்படுமானால் ரஷ்யா சவுதி அரேபியாவை தாக்கும் !! - விளாடிமிர் புட்டின் அசோல்டிங் ஓடரில் கையொப்பமிட்டார்!!

Bandar_Putin

இதன் பெயர் எண்ணைய் யுத்தம். மத்திய கிழக்கின் ரஷ்யாவின் பெறுமதிமிக்க ஒரே ஒரு தளத்தையும் அழித்து அதன் பின் மத்திய கிழக்கு நாடுகளை தன் அடிமை தேசமாக மாற்றி பூகோள பெற்றோலிய அதிகாரத்தை தக்க வைக்கும் முதலாளித்து தேங்களின் பொறியில் இருந்து விடுபட ரஷ்யா தாயராகிறது. அதனை செய்ய சிரயாவை காப்பாற்றல் என புருடா விடுகிறது”

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் இருந்து Russian Federation for the Armed Forces-இற்கு ஒரு அவசர மெமரண்டம் அனுப்பப்பட்டுள்ளது. “முழு நேர தாக்குதலிற்கான படைகளை தயார்படுத்தும் கட்டளை” அதில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கு நாடுகள் சிரியா மீது தாக்குதல் தொடுக்குமானால் சவுதி அரேபியா மீத ரஷ்யாவின் தாக்குதல்களை ஆரம்பிக்க வேண்டும் என்பதே அதன் உள்ளடக்கம். இதனை யூரோ டைம்ஸ் தெரிவித்துள்ளது.


சிரியா மீதான தாக்குதலிற்கு சவுதி அரேபியா எவ்விதத்திலும் உதவ கூடாது என்று கடந்த ஆகஸ்டில் சவுதி அரேபிய இளவரசர்  Bandar bin Sultan-னிடம் அதிபர் புட்டின் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் கடந்த ஒரு வருட காலத்தில் சவுதி ஆட்சியாளர்கள் அதற்கு நேர் முரணான அமெரிக்க சார்பு கொள்கைகளிற்கு துணை நின்றதுடன் நேரடியாகவே பணம், ஆயுத உதவி என சிரிய போராளிகளிற்கு வழங்க ஆரம்பித்தது. சிரியா மீதான தாக்குதலில் மேற்கு நாடுகளிற்கு தனது பரிபூரணை ஒத்துழைப்பை வழங்க அண்மையில் சவுதி அரேபிய அரசு உடன்பட்டிருந்தது. அதன் விளைவே "command battle" எனும் சவுதி மீதான ரஷ்யாவின் தாக்குதல் திட்டமாகும்.

Bandar bin Sultan ரஷ்ய அதிபருடன் பேசும் பொழுது பஸர் அல்-அஸாதின் ஆட்சி தூக்கி வீசப்பட்டாலோ அல்லது சிரியா மீதான தாக்குதல் ஏற்பட்டாலோ, சிரியாவில் உள்ள ரஷ்ய கடற்தளத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அது தொடர்ந்தும் இயங்கும்படியான சூழ்நிலைகள் உருவாக்கப்படும் என வாக்களித்திருந்தார். ஆனால் இப்போது அமெரிக்க முதன்மை தாக்குதல் திட்டத்தில் அனைத்து சிரிய துறைமுகங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

சவுதி அரேபிய அரசு சிரியா மீதான ஆதரவை ரஷ்யா விளக்கிகொள்ளுமாக இருந்தால் எண்ணை சந்தையில் உலகாதிக்கம் மிக்க நாடாக ரஷ்யாவை மாற்ற தாம் துணை நிற்பதுடன் ரஷ்யாவுடன் பாரிய எரிவாயு ஒப்பந்தத்தையும் செய்ய தயார் என மெல்ல டீல் பேசியிருந்தது. அதற்கு ரஷ்ய அதிபர் புட்டின் “தாம் ஒரு போதும் சிரியாவை கைவிட முடியாது” என ஆணித்தரமாக தெரிவித்து இருந்தார். இந்த தகவலை லண்டன் டெய்லி கிராப்ஃ பத்திரிகை தெரிவித்திருந்தது. 

இதற்கமைவாக லண்டன் இன்டிபென்டன்ட் பத்திரிகை ரஷ்ய வெளியுறவுதுறை செயளரின் பேச்சை ஆதாரம் காட்டியுள்ளது. Alexander Lukashevich சிரியா மீதான தாக்குதல்கள் பற்றி கருத்து வெளியிடுகையில் சிரியா மீதான அமெரிக்காவின் சீரியல் தாக்குதல்களின் விளைவாக மத்தியகிழக்கும் வடஆபிரிக்காவும் தாக்குதல்களிற்கு உள்ளாகும். இது மூன்றாம் உலகப் போரிற்கான ஆரம்பமாக அமையும் என எச்சரித்திருந்தார். 

“பிளேன் சிரியா”-வில் பஸர் அல்-அஸாதின் இராணுவ கட்டமைப்பை தகர்ப்பது மட்டும் அமெரிக்காவின் நோக்கமல்ல. டமஸ்கஸ் வரை நெருங்கி வந்து சண்டையிடும் அல்-காயிதா ஆதரவு அமைப்பை அழிப்பதும் அதன் நோக்கம். இறுதி இலக்காக ரஷ்யாவின் மத்தியகிழக்கிற்கான தளத்தை இல்லாமல் செய்வதே அதன் ஏகபோக எண்ணெய் சுரண்டலிற்கு வழியமைக்கும்.