Facebook Twitter RSS
*/

Latest News

ஹோம்ஸை இழந்தமையும் F.S.A.யின் துரோகமும்!!


சிரியாவின் வரலாற்று சண்டைக்களமான ஹோம்ஸின் பல பகுதிகளை அரச படையினர் தங்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளனர். தரையில் இருந்து தரைக்கு ஏவப்படும் ஏவுகணைகள் 20 இற்கும் அதிகமாக ஹோம்ஸ் நகரை நோக்கி சிரிய ஏவுகனை படைப்பிரிவினரால் ஏவப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் பல டன்கள் எடையுடையவை. ஹோம்ஸின் வடமுனையில் 70 யுத்த டாங்கிகள் வரிசையாக நிறுத்தப்பட்டு பீரங்கி தாக்குதல்களை நடாத்தியுள்ளன.


60 இற்கும் அதிகமான ஆட்டிலறிகள் விடாமல் ஷெல்களை ஏவியுள்ளன. இவற்றிற்கும் மேலதிகமாக ரஷ்ய பைலட்டுக்களால் ஓட்டப்பட்ட தாக்குதல் விமானங்கள் வானிலிருந்து ஏவுகனை தாக்குதல்களையும் வெடிகுண்டு தாக்குதல்களையும் மேற்கொண்டுள்ளன. இதன் பின்னரே சடுதியாக சிரிய படையினர் இஸ்லாமிய போராளிகளின் அரண்களை உடைத்து கொண்டு உள்நுழைந்துள்ளனர்.

உள்நுழைந்த சிரிய படையினருடன் ஹிஸ்புல்லாஹ் கெரில்லா படையணியினர் 2000 பேர் நகர் சண்டைகளில் ஈடுபட்டுள்ளனர்.

காப்பரண்களை இழந்த நிலையில் இரண்டாம் நிலை காப்பரண்களில் நிலை கொண்ட போராளிகளால் ஏவுகணைகள் வந்து விழ ஆரம்பித்தவுடன் தாக்கு பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தற்காப்பு தாக்குதல் நடாத்தி அழிவதா அல்லது பின்வாங்கி விடுவதா என்ற இரண்டு தேர்வுகள் அவர்கள் முன் எழுந்துள்ளன.

ஹோம்ஸின் சிரிய படைகள் ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட 13 நிலைகளில் 9 நிலைகள் F.S.A. போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன.

எனைய 04-ல் 03 நிலைகள் அல் பாரூக் படையணியிடமும், ஒரு நிலை உள்ளூர் போராளிகளின் வசமும் இருந்தன. பெரும் வெடிப்புக்களை சிரிய அரச படையினர் நிகழ்ந்த ஆரம்பித்த போது தான் அந்த துரோக நாடகமும் அரங்கேறியது.

விமானத்தாக்குதலிற்கு முன்னதாகவே  F.S.A. அணியின் 06 முனைகளில் இருந்த படைப்பிரிவுகள் ஹோம்ஸை விட்டு  பின்வாங்க ஆரம்பித்து விட்டன.

இரண்டாம் நிலை காப்பரண்களிற்கு பின்வாங்கிய அல்-பாரூக் அணியினர்  F.S.A. போராளிகளிடம் உதவி கோரிய போது அவர்கள் அதற்கு இணங்கவில்லை. முன்னேறும் ஹிஸ்புல்லாக்களை உள்வாங்கி அழிக்கும் தாக்குதல் திட்டத்தை வழங்கிய போது அந்த திட்டம் சிரிய படையினரிற்கு  F.S.A. அணியினரால் கடத்தப்பட்டுள்ளது. 

ஹோம்ஸ் இழக்கப்பட்ட வரலாறு இப்படித்தான் ஆரம்பிக்கிறது. ஷியாக்களின் இலக்கான ஹோம்ஸின் காலித் இப்னு வலீத் மஸ்ஜித் இருந்தது. அதனை தரைமட்டமாக்குவோம் என சூளுரைத்தபடியே ஹிஸ்புல்லாக்கள் முன்னேறினர்.

குசைரில் வாங்கிய அடிகளிற்கு பகரமாக ஹோம்ஸில் தங்கள் வெறித்தனத்தை ஆட ஆரம்பித்தனர் சுமார் 500 இற்கும் மேற்பட்டவர்களை படுகொலை செய்து தங்கள் ஆத்திரங்களை தீர்க்க முற்பட்டனர்.

கையில் கிடைத்த பொது மக்களை தங்கள் துப்பாக்கிகளால் சல்லடை போட்டு தீர்த்ததுடன் கத்திகளால் உடலின் ஓகன்களை குத்தி குதறி தங்கள் ஷியா குணத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.

 F.S.A. கொமாண்டர் ஜபாஃ அல் நுஸ்ராவின் சோதனை சாவடியில் சுட்டுத்தள்ளப்பட்டதன் எதிரொலியாகவோ அல்லது பழிவாங்களாகவோ இது இருக்கலாம் என்பதே வலிதான ஊகங்களாகும்

சினாயை நெருங்கும் எகிப்திய இராணுவம் - கடல் அரண் அமைக்கும் கடற்படை - அழித்தொழிப்பு சண்டைகளிற்கு தயாராக..

“48 மணி நேர கால அவகாசத்தினுள் சினாயில் உள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகளை அழித்தொழிப்போம். அவர்கள் கூண்டில் அடைபட்ட எலிகள் போல் எம்மிடம் மாட்டிக்கொண்டனர். சினாயின் எல்லையை விட்டு அவர்களால் வெளியேற முடியாது. அவர்களது வெற்றுடலங்கள்தான் வெளியேற்றப்படும்”. இந்து சூளுரையை முழங்கியது யார் என்று யோசிக்கிறீர்களா? வேறு யாரும் அல்ல, எகிப்தின் இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் சிஸியின் காபந்து அரசின் உள்துறை அமைச்சகமாகும்.



சினாயில் உள்ளக தகவல்களின் படி சுமார் 500 முதல் 800 வரையான போராளிகள் உள்ளனர். அவர்களை சுற்றி வளைத்து அழித்தொழிக்கும் தாக்குதல் திட்டத்துடன் எகிப்திய இராணுவத்தின் மூன்றாம் பட்டாலியனும், கடற்படையும் சினாயை நெருங்கியுள்ளன. குறுந்தூர தாக்குதல் சிறப்பு பயிற்ச்சி பெற்ற படையினர் இதில் உள்ளனர்.

உள்துறை அமைச்சின் Mohammed Ibrahim இது பற்றி தகவல் தருகையில் சினாயின் எல்லையில் இஸ்ரெல் இருப்பதனால் எமக்கு இங்கு இராணுவ நெருக்கடிகள் மட்டுமன்றி இராஜதந்திர நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன. ஆகவே எமது படையினரின் இலக்கு சினாயில் இருந்து இஸ்லாமிய பயங்கரவாதத்தை விரட்டியடிப்பதாகும் என தெரிவித்துள்ளார். 

மதச்சார்பற்ற, மேற்கத்தைய கலாச்சார நாகரீகசிந்தனை இன்றைய எகிப்திய ஆட்சியாளர்கள் இஸ்லாமிய விரோத மனப்பான்மை மிக்கவர்களாக உள்ளனர். கமால் அப்தல் நாஸர் காலத்தின் சோஸலிச சிந்தனா தாக்கம் காரணமாக இஸ்லாத்தை விட்டு முரண்சிந்தனைகளின்பால் இட்டுசெல்லப்பட்ட எகிப்திய இராணுவம் பின்னர் துருக்கிய இராணுவம் போல் மதச்சார்பற்ற மேற்கத்தைய மோகம் கொண்ட இராணுவமாக மாறியது.

எகிப்தில் ஏற்பட்ட மக்கள் புரட்ச்சி என்பது ஹுஸ்னி முபாரக்கின் ஏதேச்சாதிகாரத்திற்கு எதிரான மக்களின் உரிமை போராட்டம் என்பதே யாதார்த்தம். ஆனால் அதனை இஹ்வான்கள் “மாபெரும் இஸ்லாமிய எழுச்சியாக” சித்தரித்தனர். (உண்மையிலேயே அது இஸ்லாமிய எழுச்சியாக இருந்திருந்தால் நாமும் அதில் திளைத்திருப்போம்). விகிதாச்சார ரீதியில் முர்ஸி அனைத்து கட்சிகளையும் கூட்டாளிகளாக்கி ஆட்சியை பிடித்தார்.

இராணுவ உயர் நிலை அதிகாரிகள் சிலரை மாற்றினால் இராணுவமே மாறி விடும் என கனவு கண்டார். விளைவு....

நேற்றைய தினம் கெய்ரோவில் நடந்த இராணுவ அரசிற்கு எதிரான மக்கள் பேரணியினை எகிப்திய இராணுவம் தாக்கியதில் 200 பேர் கொல்லப்பட்டனர். 4500 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். வெருண்டோடிய சன நெருசலில் சிக்குண்டவர்கள் இதில் அதிகம்.

சினாயின் நெருக்கடி என்பது எகிப்தின் உள்விவகாரம் மட்டுமல்ல. அது சிரியாவின் எதிரொலி. புரிகிற பாஷையில் சொன்னால் சிலுவை யுத்த வீரர்களிற்கும் யஹுதிகளிற்கும் எதிரான இறுதி புனிதப் போரின் ஆரம்ப ஓசை.

தாகூத்திய அடிப்படையும் அதன் வேறுபட்ட செயற்பாடும் - “இறை மறுப்பாளர்களின் இராஜ்ஜியம்”

'தாகூத்கள் ' ஒரே விதம் அதன் (action)'அக்சன்கள் ' பலவிதம் !

                             
  'தாகூத்' என்றால் வரம்புமீறிய சைத்தான் என்ற சொற்பதம் விளக்கமாக சொல்லப்பட்டாலும்  சற்று அழமாக இஸ்லாமிய மொழி மரபில் இப்பதம் மிகவும் பாரதூரமான ஒரு விடயத்தை காட்டி நிற்கின்றது .
அதாவது தான்தோன்றித் தனமாகவும் பகிரங்கமாகவும் , தனது செயல்களுக்கான நியாயப் போலிகளுடனும் ,காரண காரிய விதிகளுக்கு உற்பட்ட தனது பலத்தை பிரயோகித்தும் இறைவனின் பண்புகள் சிலதோ பலதோ தனக்கு இருப்பதாக சொல்லால் அல்லது செயலால் காட்டி  இறைவனோடும் , அவன் அருளிய வழிமுறை ,மற்றும் அதை பின்பற்றும் மனிதர்களுக்கு எதிராக சவால் விடும், சதி செய்யும்  எந்த ஒன்றையும் இந்த 'தாக்கூத்' எனும் பதம் உள்ளடக்கி விடும் .


                                            அந்த வகையில் நும்ரூத ,பிர் அவ்ன் மற்றும் இந்த சமூகத்தின் பிர் அவ்ன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல் )குறிப்பிட்ட அபூஜஹல் உட்பட இத்தகு பண்பு கொண்ட எவரையும் வஹியின் பாசை 'தாக்கூத்' என்ற கருத்தியலுக்குள் உள்ளடக்கி  விடும் . 
                    இவர்கள் முஸ்லீம் பெயர் தாங்கிகளாக இருந்தாலும் பண்பு ரீதியில் இந்த வரைவிலக்கணத்துக்கு உட்பட்டு விடுவார்கள் .அதிகாரம் ,பதவி ,மேலாதிக்கம் ,சுயலாபம் சுரண்டல் ,அடக்குமுறை போன்ற காரணிகளோடு மனித சமூகத்தின் முன் தம்மை அடையாளப் படுத்தி நிற்கும் இந்த அல்லாஹ்வின் எதிரிகள் வெள்ளை மாளிகை முதல், அரேபிய மன்னர் மாளிகையை உள்ளடக்கி , அலறி மாளிகை வரை இந்த தாகூத்களின் கொடூரமான மேலாதிக்கம் இருந்து வருவதை எவரும் மறுப்பதற்கில்லை .

                                இவர்களின் அடிப்படைப் பண்புகள் ஒன்று பட்டாலும் இறைவனை எதிர்த்து சதி செய்யும் விதங்கள் வேறுபட்டவை . நவீன 'தாகூத்கள்' எடுத்த எடுப்பிலேயே தர்க்க வியல் பாணியில் தம்மை இலாஹ் ,ஆக ரப் ஆக காட்டி நிற்க மாட்டார்கள் , சட்டங்கள் யாப்புகள் , விதிகள் என தமக்கு முன்னால் சில வரையரைகளால் வேலிபோட்டு மனித சமூகத்தின் கண்களுக்கு ஒரு நாடக பாணி அரசியலை காட்சிப் படுத்துவார்கள் .

                               " நானே ரப்புகளுக்கு எல்லாம் பெரிய ரப்பு" என பிர் அவ்னைப் போலவோ அல்லது ஒரு மனிதனை கொலை செய்து விட்டு ,இன்னொரு மனிதனை "நீ வாழ்ந்து கொள் " என அனுப்பி விட்டு நும்ரூதைப் போல்  "என்னாலும் வாழ்வளிக்கவும் மரணிக்கச் செய்யவும் முடியும் " என கூறி நிற்க மாட்டார்கள் ! மாறாக நிறைவேற்று அதிகாரம் எனும் கிரீடத்தை சூட்டிக் கொண்டு மனித சமூகத்தை அடக்கி நிற்பது , அல்லது ' குழுமுறை தாகூத்தியம் செய்யத்தக்க குட்டிக் கடவுள்களின் கூட்டு அதிகாரம் கொண்ட (senate) செனட் அல்லது மன்றம் இப்படி தமது செயல்களுக்கு ஒரு காரண காரிய நியாயத்தை வடிவப் படுத்துவார்கள் .
                                      அல்லாஹ்வின் மார்க்கத்தை அவமதிப்பது தொடங்கி , அதை பின்பற்ற முனையும் மனிதர்களை உடல் ,உள ,சிந்தனை ரீதியாக கொடுமைப் படுத்துவது இவர்களின் கைவந்த கலையாகும் ! அதற்கு  உரிமை, சுதந்திரம் எனும் போலிப் பெயர்களோடு ஒரு சுரண்டல் தர பக்கச் சார்பு அரசியல் நியாயத்தையும் கொண்டிருப்பார்கள் . இன்றைய உலகில் நான் கடவுள் ! என்ற இத்தகு உருவங்களை நாம் ஏராளமாக காணலாம் . இவர்களின் சதி முக நாடகங்களில் ஒன்று 1982ல் எகிப்தில் அன்வர் சதாதின் கொலையின் பின் நிகழ்ந்தது .

                                              இஸ்லாத்தை நடைமுறை சாத்தியமற்றதாக காட்ட 'தாக்கூதிய' கூட்டு சாம்ராஜ்யம் எப்படியான வேலைத் திட்டத்தை செய்தது !? இன்ஷா அல்லாஹ் அந்த விபரங்களோடு இன்னொரு முறை சந்திக்கிறேன் . 

ash-Sham Ahrar al-Islamiyah அமைப்பின் இரண்டாம் நிலை கட்டளை தளபதி மரணம்!!

Again, the mujahideen commander falls on the third day of Ramadan in Idlib

Ash-Sham Ahrar al-Islamiyah. சிரிய சண்டைக்களங்களில் முக்கிய 
பாத்திரம் வகிக்கும் அமைப்பு. குறிப்பாக இட்லிப் நகரின் பல
 பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள்.
 அந்த அமைப்பின் இரண்டாம் நிலை கட்டளைத்தளபதி Lathuf Abu 
Hafs Umar, வெள்ளிக்கிழமை ((7/12/2013)) இடம்பெற்ற தாக்குதலில்
 வீரமரணமடைந்துள்ளார். 


இஸ்லாமிய ஆட்சியை அஷ்-ஷாமில் ஏற்படுத்துவதற்காக போராடி 
அல்லாஹ்வின் பாதையில் இவர் மரணித்துள்ளார். இறைவன் 
நாடினால் இவர் அஷ்-ஷஹீத்துடைய அந்தஸத்திற்கு உயர்த்தப்படலாம். 

சவுதி அரசு ஒருபோதும் இஸ்லாமிய அரசு அல்ல ,அது ஒரு அமெரிக்க அடிவருடி அரசு!!!!!!!!!!part-4

எகிப்திய இஹ்வானிய அரசை கவிழ்பதற்கு நிதியுதவியளித்த சவுதி அரேபிய ஆட்சியாளர்கள் - ”பேராண்மை”

Saudi Arabia plans to fund Syria rebel army
சமகால அரசியலில் சவுதி அரேபிய அரசின் பெயர் அடிக்கடி இடம்பெறும் விடயமாகி விட்டது. அமெரிக்க அரசியல் அஜன்டாவின் மத்திய கிழக்கின் ஏஜென்டாக தொழிற்படுவதும் இதற்கு ஒரு காரணமாகும். எகிப்திய புரட்சியில் அமெரிக்காவின் பங்கு அதிகம்.  ஜெஸ்மின் புரட்ச்சி என்ற பெயரில் மத்திய கிழக்கினை புரட்டி போட்டது முதல் தஹ்ரீர் ஆர்ப்பாட்டங்களை நடாத்தியது, இஹ்வான்களுடன் டீல் போட்டது, முர்ஸியின் அரசை கவிழ்த்தது என அது குறுங்காலத்தில் பல பங்களிப்புக்களை பின்புலத்தில் இருந்து செய்துள்ளது. அண்மையில் நடந்த எகிப்திய இராணுவ புரட்ச்சியின் பின்னாலும் அமெரிக்காவே இருந்துள்ளது. அந்த புரட்சிக்காக நிதியுதவியை வழங்கிய தேசம் சவுதி அரேபியா !!.

Mujtahid Bin Hareth Bin Hammaam. சவுதி அரேபிய அரசியலில் மாற்றுக்கருத்துடைய அரசியல்வாதி. டிவீட்டரில் இவரை @Mujtahidd என்றால் எல்லோருக்கும் தெரியும். சர்ச்சைக்குரிய கருத்துக்களை சவுதி அரசியல் பற்றி வெளியிடுவதில் புகழை தேடிக்கொண்ட மனிதர். சவுதி அரேபியாவின் ஜீலியன் அஸன்ஜே எனவும் இவரை குறிப்பிடுவர். சவுதி அரேபிய ரோயல் குடும்பத்தின் உள்விவகாரங்கள் முதல் அதன் அமைச்சர்களின் நிதி கையாள்கை வரை இவர் பேசுபவர். சுமார் 250000 பேர் இவரது டிவீட்டரில் பளோவர்களாக உள்ளனர். 


எகிப்திய இஹ்வான்களின் அரசினை கவிழ்ப்பதற்காக அந்நாட்டின் பிரதம இராணுவ தளபதியும் பாதுகாப்பு அமைச்சருமான 
General Abdel Fattah al-Sisi இற்கு ஒரு பில்லியன் டொலர்களை (one billion dollars) சவுதி அரேபிய அரசு வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

எகிப்திய பிரதம இராணுவ தளபதியை முஹம்மட் முர்ஸி நீக்கிய போது அமெரிக்கா முர்ஸி அரசிற்கு பரிந்துரைத்த பெயரே அப்தல் பதாஃ அல் சிஸி. முர்ஸியும் அவரை பிரதம தளபதியாக்கி அழகு பார்த்தார். இப்போது அந்த தளபதியே அடித்துள்ளார் ஆப்பு முர்ஸிக்கு. ஏனென்றால் அவர் அமெரிக்காவினால் நொமினேட் செய்யப்பட்டவர் ஆயிற்றே. இஹ்வானிய அரசியலின் இழுக்கான பக்கங்களில் இதுவும் ஒன்று. 

சவுதி ஆட்சியாளர்களிற்க ஒரு விடயம் நன்றாகவே தெரியும். மிக உறுதியான இஸ்லாமிய அரசின் ஆட்சி உதயமானால் அது சவுதியின் வீழ்ச்சிக்கு அத்திவாரமாகிவிடும் என்று. சவுதி அரேபிய அரசிற்கு எதிரான அரசியல் கொள்கைகள் மத்தியகிழக்கில் உருவாவதற்கு இது வாய்ப்பாகிவிடும் என்று. இதனாலேயே எகிப்திய ஆட்சிக்கவிழ்ப்பில் சவுதி அரேபிய கரங்களும் ஈடுபட்டுள்ளன. 

சவுதி ஆட்சியாளர்கள் தங்கள் அரசியல், நிதி, ஊடக பலங்களினால் எகிப்திய இராணுவ புரட்சிக்கு ஆதரவான ஒரு களநிலையை உருவாக்க பெரிதும் முயன்று வருகின்றனர். இவர்கள் தங்கள் செல்வாக்கின் மூலம் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற தேசத்தலைவர்களை எகிப்திய இராணுவ புரட்சியினால் உருவாக்கப்பட்ட அரசிற்கு எதிராக கடும் போக்கை கைக்கொள்ளாமல் பார்த்துக்கொண்டனர். 

ஜனநாயகம் பற்றி பேசும், அந்த ஜனநாயகத்திற்காக இறைமையுள்ள தேசங்களின் தலைவர்களை கொலை செய்யும் அமெரிக்கா, பல தசாப்பதங்களின் பின்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை கவிழ்க்க அல்லது கவிழ்த்தவர்களிற்கு உதவுவது எந்த வகை ஜனநாயகம் என்பது என்றைக்குமே ஒரு கேள்வியல்ல.


மூலதன முதலைகளின் வேட்டைக் காடாகிய தெற்கு சூடான்!


"சூடான் மக்கள் விடுதலை இயக்கம், விடுதலை பெறும் தெற்கு சூடானின் விடுதலை நாள் விழாவில் பங்கேற்குமாறு, ‘ நாடு கடந்த தமிழீழ அரசு ’க்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தமிழீழத்திற்கான முதல் அங்கீகாரம்!"

இரண்டு வருடங்களுக்கு முன்னர், சூடானில் இருந்து பிரிந்து சுதந்திர நாடான தெற்கு சூடான், நம்மூர் தமிழ் தேசியவாதிகள் மனதிலும் பெருமளவு எதிர்பார்ப்புகளை உண்டாக்கியது. தெற்கு சூடானை விட, சூடான் நாட்டின் டாபூர் பிராந்தியம் அளவிட முடியாத மனிதப் பேரழிவை சந்தித்திருந்தது. அங்கு இனப்படுகொலை நடந்ததை, ஐக்கிய நாடுகள் சபையும் அறிவித்திருந்தது. ஆயினும், சர்வதேச சமூகம் டாபூரை கைவிட்டு விட்டு, தெற்கு சூடானுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த காரணம் என்ன? எல்லாமே எண்ணைக்காக தான். தெற்கு சூடான் விடுதலைப் போராட்டத்தை, "இஸ்லாமிய-அரபு மேலாதிக்கத்திற்கு எதிரான கிறிஸ்தவ பழங்குடியின மக்களின் போராட்டம்..." என்று பலர் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், எண்ணை வளத்தை பங்கு பிரிப்பது சம்பந்தமான சர்ச்சை தான் போருக்கு காரணம் என்பதை அறிந்தவர்கள் மிகக் குறைவு.

முப்பதாண்டுகளாக ஆயுதப் போராட்டம் நடத்தி, தனியரசு அமைத்த தெற்கு சூடானின் இன்றைய நிலைமை என்ன? அங்கே மக்கள், எந்தக் குறையுமற்று, சந்தோஷமாக வாழ்கின்றனரா? இதற்கான பதில் அதிர்ச்சியை உண்டாக்கும். தெற்கு சூடான், பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைக் காடாகியுள்ளது. விடுதலைக்காக உயிரைக் கொடுத்து போராடிய மக்கள் வறுமையில் வாடுகின்றனர். அவர்களை வழிநடத்திய தலைவர்கள், சொகுசு வாழ்வில் மெய்மறந்து போயுள்ளனர். 

அன்று தெற்கு சூடான் விடுதலை அடைந்ததை வரவேற்றவர்கள், இன்று அந்நாட்டு மக்களின் நிலையைப் பற்றிக் கவலைப் படாமல் பாராமுகமாக இருப்பது ஏன்? உண்மையில், தமிழீழ உழைக்கும் மக்கள் தான், தெற்கு சூடான் உழைக்கும் மக்களின் நிலைமை குறித்து அக்கறை கொள்வார்கள். எமக்குத் தெரிந்த "தீவிரமான தமிழீழ போராளிகளுக்கு," அந்த அக்கறை துளியும் கிடையாது. ஏனெனில், அவர்கள் வசதியான மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தமது வர்க்க நலன்கள் மட்டுமே முக்கியமானவை. அதனைப் புரிந்து கொள்வதற்கு, நாங்கள் தெற்கு சூடானில் இருந்து படிப்பினைகளை பெறுவது அவசியம்.

முதலில், தெற்கு சூடான் அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி பற்றிய சிறிய குறிப்பு. அந்நாடு சுதந்திரமடைந்த நாளில் இருந்து இன்று வரை, ஒரு கட்சி ஆட்சி தான் நடக்கின்றது. சூடானில் இருந்து பிரிவதற்காக, "சூடான் மக்கள் விடுதலை இயக்கம்" (SPLM) ஆயுதப் போராட்டம் நடத்தியது. அதன் இராணுவப் பிரிவின் பெயர் : "மக்கள் விடுதலைப் படை" (PLA). தெற்கு சூடான் சுதந்திரமடைவதற்கு முன்னரே, அதன் தலைவர் ஜோன் காரெங் ஒரு விபத்தில் கொல்லப் பட்டார். அதன் பிறகு, தலைவரான சல்வா கீர், சுதந்திர தெற்கு சூடானின் முதலாவது ஜனாதிபதியாகி உள்ளார். ரீக் மாஷார் உப ஜனாதிபதியாகினார்.

தெற்கு சூடானில் பல கட்சி ஜனநாயகம் கிடையாது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி இல்லை. ஆளும் SPLM கட்சிக்குள் மட்டுமே தேர்தல் சாத்தியமானது. அதனால், அந்தக் கட்சிக்குள் தான் அதிகாரத்திற்கான பதவிப் போட்டியும் நடக்கின்றது. அண்மையில் ஜனாதிபதி சல்வா கீர், மந்திரி சபையை கலைத்து, மந்திரிகளை வீட்டுக்கு அனுப்பிய பிறகு, அங்கே பெரும் அரசியல் நெருக்கடி தோன்றியுள்ளது.

ரீக் மாஷார், தானே அடுத்த ஜனாதிபதியாக வர வேண்டுமென விரும்புவது ஒன்றும் இரகசியமல்ல. ஆனால், இங்கே குறிப்பிடத் தக்க விடயம், கீர், மாஷார் ஆகிய தலைவர்களுக்கு இடையிலான பதவிப் போட்டி, இரண்டு இனங்களுக்கு இடையிலான போட்டியை எதிரொலிக்கின்றது. கீர் டிங்கா இனத்தை சேர்ந்தவர். (அகால மரணமுற்ற முன்னாள் தலைவர் ஜோன் காரெங் கூட ஒரு டிங்கா தான்.) ஆனால், மாஷார் நூவர் (அல்லது நூர்) இனத்தை சேர்ந்தவர். தெற்கு சூடானில் பல இன மக்கள் வாழ்ந்த போதிலும், டிங்கா, நூவர் இனத்தவர்கள் தான் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

தலைநகர் ஜூபாவில் தண்ணீர் சுத்திகரிக்கும் ஆலையோ, அனைவருக்கும் மின்சாரம் வழங்கும் வசதியோ கிடையாது. ஜூபாவில், நகரமயமாக்கலுக்கு அவசியமான நவீன கட்டுமானப் பணிகளை செய்யாமல் புறக்கணிக்கும் அரசு, வடக்கே சில நூறு கிலோமீட்டர் தொலைவில், ரமிசெல் என்ற புதிய தலைநகரம் ஒன்றை அமைக்க விரும்புகின்றது. பெட்ரோல் விற்றுக் கிடைத்த வருமானத்தில் தான் புதிய தலைநகரம் கட்டப் படப் போகின்றது. நிர்மாணப் பணிகளில் ஈடுபடும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத் தக்கது.

பெற்றோலிய தொழிற்துறை, தெற்கு சூடானின் முக்கால்வாசி தேசிய வருமானத்தை ஈட்டித் தருகின்றது. சூடான் எல்லையோரம் உள்ள வட மாகாணங்களில் மட்டுமே எண்ணை வளம் உள்ளது. இன்னும் பத்து வருடங்கள் மட்டுமே எண்ணை கிடைக்கும். எண்ணைக் கிணறுகள் வற்றிய பிறகு என்ன நடக்கும்? அதற்கான எந்தத் திட்டமும் அரசிடம் கிடையாது. பன்னாட்டு முதலீட்டாளர்களும், தற்போது கிடைக்கும் எண்ணைக்காக மட்டுமே வருகின்றனர். தெற்கு சூடானின் பொருளாதாரம் வளர்ச்சி அடைகின்றது என்றால், எண்ணை உற்பத்தி மட்டுமே மூல காரணம்.

சுதந்திரத் தனியரசான தெற்கு சூடானில், எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனம், எந்த நாட்டவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று தெரியுமா? "சீன தேசிய பெற்றோலிய நிறுவனம்" தான், சுதந்திர தெற்கு சூடானில் மிகப் பெரிய முதலீட்டாளர்! முன்பு சூடான் என்ற ஒரே நாடாக இருந்த காலத்திலும், சீனர்கள் தான் எண்ணை தொழிற்துறையில் முதலிட்டிருந்தார்கள். ஆமாம், அதே எண்ணைக் கிணறுகள், அதே நிறுவனம், அதே சீனர்கள். ஆனால், கமிஷன் வாங்கும் உள்நாட்டுப் பிரதிநிதி மட்டுமே மாறி இருக்கிறார்.

ஒரு காலத்தில், "சூடானிய அரபு பேரினவாதிகளை ஆதரிக்கும் சீன முதலீட்டாளர்கள்" பற்றி, அமெரிக்கர்களிடம் முறையிட்டவர்கள், இன்று சீனர்களை வரவேற்று, தெற்கு சூடானில் முதலிடச் சொல்லி இருக்கிறார்கள். சீனர்கள் கொடுக்கும் கமிஷனை வேண்டாம் என்று மறுப்பதற்கு, தெற்கு சூடானின் ஆட்சியாளர்கள் அந்தளவுக்கு முட்டாள்களா?   நாளை தமிழீழ தனியரசு உருவானாலும், அது தான் நடக்கப் போகின்றது. சந்தேகத்திற்கிடமின்றி, சீனர்கள் தான் தமிழீழத்திலும் முதலிடப் போகிறார்கள். இன்று ராஜபக்சவுக்கு கமிஷன் கொடுக்கும் சீனர்கள், நாளை தமிழீழ ஜனாதிபதிக்கு கொடுப்பார்கள்.

தெற்கு சூடான் நாட்டு எண்ணை வள தொழிற்துறையில், ஏன் அமெரிக்க நிறுவனங்கள் எதுவும் முதலிடவில்லை? எண்ணை தொழிற்துறை மட்டுமல்ல, தெற்கு சூடானில் வர்த்தகத்தில் ஈடுபடும் பெரிய நிறுவனங்கள் எதுவும் அமெரிக்கர்களுடையதல்ல! ஏன்? பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவும், ஆரம்பக் கட்ட கோளாறுகளை கொண்ட புதிய தேசத்தில் முதலிடுவதற்கு, அவர்களுக்கு கிறுக்குப் பிடித்திருக்கிறதா? அந்த வேலையை மற்றவர்கள் செய்யட்டும் என்று காத்திருக்கிறார்கள். நிலைமை சீரான பின்னர், அமெரிக்கர்கள் களத்தில் இறங்குவார்கள். மேலும், சீனர்கள் எண்ணை எடுத்தாலும், உலகச் சந்தையில் தானே விற்க வேண்டும்?

தெற்கு சூடானின் எல்லைகள் இன்றைக்கும் சரியாக வரையறுக்கப் படவில்லை. "அபெய்" என்ற பகுதியை சூடானும் உரிமை கூறுவதால், அதற்காக ஒரு எல்லைப் போர் நடை பெற்றது. தெற்கு சூடான் அரச செலவினத்தில் பெரும் பகுதி இராணுவத்திற்கு செலவிடப் படுகின்றது. இது உலகிலேயே மிக அதிகமான பாதுகாப்புச் செலவினமாகும். எண்ணைக் கிணறுகளை பாதுகாப்பதற்கு, இராணுவத்திற்கு அதிக சலுகைகள் கொடுத்து பராமரிப்பது அவசியம் என்று கருதப் படுகின்றது. முன்பு, வட சூடானிய படைகள் ஆக்கிரமித்திருந்த காலத்திலும், அதுவே காரணமாக இருந்தது.

தெற்கு சூடானில், எண்ணை வளம் நிறைந்த மாநிலங்களில் நிலைமை எப்படி இருக்கிறது? எண்ணை உற்பத்தியினால் கிடைக்கும் இலாபத்தின் பெரும் பகுதி, அந்தப் பிரதேச மக்களுக்கு போய்ச் சேருகின்றதா? முன்பெல்லாம், அந்தப் பிரதேசத்தில் உற்பத்தி செய்யப் படும் எண்ணெயினால் கிடைக்கும் வருமானம், நேரடியாக கார்ட்டூமுக்கு (வட சூடான்) செல்கிறது என்ற முறைப்பாட்டின் பேரில் தான், தெற்கு சூடான் விடுதலைப் போராட்டம் நடைபெற்றது. தெற்கு சூடான் சுதந்திர தனியரசானால், எண்ணை வருமானத்தில் 5% தினை, அது உற்பத்தியாகும் பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு தருவதாக, SPLM வாக்குறுதி அளித்தது.

தற்போது அதிகாரத்தில் இருக்கும் SPLM அரசு, தனது வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளதா? இல்லை, முன்பு எண்ணை வருமானம் நேரடியாக கார்ட்டூமுக்கு சென்றது. தற்போது அது ஜூபாவுக்கு (தெற்கு சூடான் தலைநகரம்) செல்கின்றது. முன்பு அந்தப் பிரதேச மக்கள் எதிர்ப்பைக் காட்டிய பொழுது, கார்ட்டூம் படைகளை அனுப்பி எதிர்ப்பை அடக்கியது. இன்று ஜூபாவும் அதையே செய்கின்றது. அரபு-இஸ்லாமிய பேரினவாதப் படைகள் வெறியாட்டம் நடத்திய அதே இடத்தில், தெற்கு சூடான்-கிறிஸ்தவ குறுந்தேசியப் படைகள் அட்டூழியம் புரிகின்றன. அதிகாரத்தில் உள்ளவர்களின் இனமும், மொழியும் தான் மாறியிருக்கிறது. அதிகார வர்க்கம் ஒன்று தான். அடக்குமுறை ஒன்று தான். பாதிக்கப்படும் மக்களும் ஒன்று தான்.

தெற்கு சூடான் அரசு, எண்ணெய் உற்பத்தி மூலம் கிடைக்கும் வருமானத்தை, நேர்மையான வழியில் பங்கிட்டுள்ளதா? மக்கள் நலன் பேணும் திட்டங்களில் செலவிடுகின்றதா? அதுவும் இல்லை. இன்று அரசில் முக்கிய பொறுப்புகளை ஏற்றுள்ள, SPLM இயக்கத் தலைவர்கள் மட்டுமே, அதன் பலனை அனுபவிக்கிறார்கள். அவர்கள் பெரிய பங்களாக்களை கட்டிக் கொண்டு, வசதியாக வாழ்கிறார்கள். குளிரூட்டப் பட்ட ஆடம்பர கார்களில் பவனி வருகிறார்கள். 

பெரு நகரங்களில், தலைவர்களின் பிள்ளைகள் கல்வி கற்பதற்காக, ஆங்கில மொழி வழி பாடத்திட்டத்தை கற்பிக்கும், உயர்தரமான சர்வதேச பாடசாலைகள் கட்டப் படுகின்றன. மேலும், தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைக்கிறார்கள். கடந்த முப்பது வருடங்களாக காடுகளுக்குள் மறைந்திருந்து போராடியவர்கள், இப்போது கிடைத்துள்ள வசதிகளை அனுபவிக்கக் கூடாதா என்று அதற்கு நியாயம் கற்பிக்கலாம்.

மக்கள் விடுதலைப் படை (PLA) என்ற விடுதலை இராணுவத்தில் போராடிய முன்னாள் போராளிகள், அவர்களது குடும்பங்களின் நிலைமை எப்படி இருக்கின்றது? குறிப்பிட்ட அளவு முன்னாள் போராளிகள், புதிய தெற்கு சூடான் இராணுவத்தில் சேர்க்கப் பட்டுள்ளனர். ஆனால், பெரும்பாலான முன்னாள் போராளிகள், எந்த வேலை வாய்ப்புமின்றி, அவர்களது பாரம்பரிய தொழிலான, மாடு மேய்க்கும் வேலை செய்கின்றனர்.

"மாடு மேய்ப்பது எமது கலாச்சார பாரம்பரியம்" என்று SPLM தலைவர்கள் சப்பைக் கட்டு கட்டினாலும், முதலாளித்துவ பொருளாதாரம் அவர்களை ஒதுக்கி வைத்திருக்கிறது என்பது தான் உண்மை. ஏனெனில், போரிடுவதற்கு மட்டுமே பயிற்றுவிக்கப் பட்ட முன்னாள் போராளிகளுக்கு, வேறு வேலை எதுவும் தெரிந்திருக்கவில்லை. அவர்களிடம் தொழில் தகைமை எதுவும் கிடையாது. அதனால், உணவு விடுதி பணியாளர் வேலை கூட அவர்களுக்கு கிடைப்பதில்லை. சுயமாகத் தொழில் செய்து சம்பாதிப்பதற்கு, அவர்களிடம் பணமும் கிடையாது.

சுதந்திர தெற்கு சூடானில் முதலிட்டு வர்த்தகம் செய்பவர்களில், தொண்ணூறு சதவீதமானோர் வெளிநாட்டவர்கள்! சீனர்கள், ஐரோப்பியர்கள், லெபனானியர்கள், இந்தியர்கள் மட்டுமல்ல, பிற ஆப்பிரிக்க முதலாளிகளும் அங்கே முதலிட்டுள்ளனர். பிரபல பியர் தொழிற்சாலை உரிமையாளர் ஒரு தென் ஆப்பிரிக்க நாட்டவர். பிரபல வானொலி உரிமையாளர் கென்யா நாட்டவர். செல்பேசி சேவை வழங்கும் நிறுவன உரிமையாளர் ஒரு லெபனான் நாட்டவர். இவ்வாறு பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். 

அயல்நாடான எத்தியோப்பியாவில் இருந்து வருபவர்கள் கூட, தெருக்களில் தின்பண்டம் விற்று பிழைப்பு நடத்துகின்றனர். இவ்வாறு சிறிய வணிக நிறுவனம் முதல், பெரிய முதலீட்டு வங்கி வரையில், அனைத்தும் வெளிநாட்டவர் வசம் உள்ளன. இவர்கள் யாரும், தெற்கு சூடான் விடுதலைப் போராட்டத்தில் எந்தவிதப் பங்களிப்பையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. விடுதலைப் போராட்டத்திற்கு தமது பங்களிப்பைச் செய்தவர்கள், அதன் பலன்களை அனுபவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

தெற்கு சூடான் நாட்டை சேர்ந்த எந்த முதலாளியும் கிடையாதா? இருக்கிறார்களே! அவர்கள் ஒன்றில், SPLM அரசினால் பலனடைந்த பெரும் புள்ளிகளாக இருப்பார்கள், அல்லது மேற்கத்திய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்தவர்களாக இருப்பார்கள். போர் நடந்த காலங்களில், ஓரளவு வசதி படைத்தவர்கள், மேற்கத்திய நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்து சென்றனர். பணக்கார நாடுகளில் வேலை செய்து சேமித்த பணத்தை முதலிட, தாயகத்திற்கு திரும்பி வந்திருக்கிறார்கள். அவர்கள் கொடூரமான போரில் இருந்து தப்பிப் பிழைத்தது மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்து கொண்டு SPLM இயக்கம் ஆயுதம் வாங்க பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அன்று, வெளிநாடுகளில் இருந்து கொண்டு, தீவிரமாக தெற்கு சூடான் தேசியவாதம் பேசியவர்கள், இன்று சிறு முதலாளிகளாக திரும்பி வருகிறார்கள்.

முப்பதாண்டு கால போரில், அயல் நாட்டுக்கு கூட தப்பிச் செல்ல வழியற்ற ஏழைகள் தான், தமது பிள்ளைகளை போராளிகளாக அர்ப்பணித்திருந்தனர். தெற்கு சூடான் சுதந்திர நாடானால், தமது வாழ்க்கை சிறக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். அந்தோ பரிதாபம்! அவர்களது எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்த்துப் போயின. விடுதலையடைந்த தெற்கு சூடானில்,பெரும் மூலதனத்தை கொண்டு வந்து கொட்டும் முதலாளித்துவத்திற்கு முகம் கொடுக்க முடியாமல் துவண்டு போகின்றனர். சாதாரண ஏழை மக்களுக்கு, சிறிய பெட்டிக் கடை திறப்பது கூட ஒரு கனவாகத் தான் இருக்கும். ஏனெனில், அவர்களுக்கு எந்த வங்கியும் கடன் கொடுப்பதில்லை. வங்கிகள், கடனை திருப்பிச் செலுத்தக் கூடிய உறுதிமொழியை எதிர்பார்க்கின்றன.

முப்பதாண்டு காலமாக நடந்த போரில் உடமைகளை இழந்து, உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு வாழும் மக்களால், வங்கிகள் கேட்கும் அடமானப் பத்திரங்களை கொடுக்க முடியுமா? SPLM தலைவர்களோ, தமது நாட்டின் கடந்த கால அவல நிலையை மறந்து விட்டுப் பேசுகிறார்கள். "அயல் நாட்டவரான எத்தியோப்பியர்கள் ஏதாவது தொழில் முயற்சியை தொடங்கலாம் என்றால், ஏன் இவர்களால் முடியாது?" என்று கேள்வி கேட்கின்றனர். சுருக்கமாக சொன்னால், "முதலாளித்துவ போட்டியை சமாளிக்க முடியாத சோம்பேறிகள்" என்று, SPLM தலைவர்கள் தமது சொந்தப் பிரஜைகள் மேல் பழி போடுகின்றனர்.

உண்மை தான். தெற்கு சூடான் விடுதலை அடைந்தால், அது காட்டு முதலாளித்துவத்தை வரித்துக் கொள்ளும் என்று அவர்கள் நினைத்திருக்கவில்லை. இந்த உண்மை அன்றே தெரிந்திருந்தால், அரபு - சூடான் பேரினவாத அரசுக்கு எதிராக மட்டுமல்லாது, முதலாளித்துவத்திற்கு எதிராகவும் போராடி இருப்பார்கள். காலம் இன்னும் கடந்து விடவில்லை. தெற்கு சூடான் உழைக்கும் மக்கள், அடுத்த கட்ட விடுதலைப் போராட்டத்திற்கு தயாராகிறார்கள். ஆங்காங்கே நடக்கும், வெளிநாட்டவருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதற்கான அறிகுறிகள். அதனால் தான், "அபாயகரமான சூழ்நிலை" கருதி, அமெரிக்கர்கள் தள்ளி நிற்கின்றனர்.


ஹோம்ஸினுள் நுழைந்தனர் ஹிஸ்புல்லாக்களும் சிரிய படையினரும்

சிரியாவில் கடந்த ஒரு மாத யுத்தத்தின் பின் நேற்று ஹொம்ஸ் நகரமும் ராணுவத்திடம்
 வீழ்ந்தது. ரஷ்யா மற்றும் ஈரானின் பின்னணி உதவிகளுடன் யுத்தம் புரிந்துவரும்,
 சிரியா ராணுவம், மிக முக்கிய வெற்றி ஒன்றை பெற்றிருக்கிறது. தற்போது ராணுவத்தால்
 கைப்பற்றப்பட்டுள்ள ஹொம்ஸ் நகரம்தான், சிரியா அரசுக்கு எதிரான போராட்டங்கள் 
ஆரம்பிக்கப்பட்ட இடம். போராளி அமைப்பினர் இந்த நகரை ‘சுதந்திரத்தின் தொடக்கம்’
 என்று அழைத்து வந்தனர்.
முற்றுமுழுதாக போராளிப் படையினருக்கு ஆதரவான, அவர்களது பலம் பொருந்திய
 இந்த நகரத்தை கைப்பற்றியிருப்பதாக சிரியா நேற்றிரவு அறிவித்தது.

சிரியா ராணுவத்துடன், ஹிஸ்பொல்லா இயக்க படையும் இணைந்து தாக்குதல்
 நடத்தியதில், ஹொம்ஸ் நகரைக் கைவிட்டு பின்வாங்கியுள்ளனர் போராளிப் படையினர்.
 அமெரிக்காவும், வேறு சில அரபு நாடுகளும் போராளிப் படையினருக்கு ஆயுதங்கள் 
கொடுத்தும், தமது கட்டுப்பாட்டில் இருந்த ஹொம்ஸ் நகரை தக்க வைக்க முடியாத நிலை
 போராளிப் படையினருக்கு ஏற்பட்டுள்ளது.

3 மாதங்களுக்கு முன்பு, சிரியா ராணுவமும், ஹிஸ்பொல்லாவும் இணைந்து அல்-குசைர் 
என்ற நகரைக் கைப்பற்றின. அந்த வெற்றியின் பின் அடுத்த இலக்கு ஹொம்ஸ் 
நகரம்தான் என பரவலாக ஊகிக்கப்பட்டது. அல்-குசைரை கைப்பற்றிய பாணியிலேயே, 
சிரியா ராணுவமும், ஹிஸ்பொல்லாவும் இணைந்து ஹொம்ஸ் மீது தாக்குதலை நடத்தின.
எப்படி நடந்தது இந்த யுத்தம்?

கடந்த ஒரு மாத காலமாகவே ஹொம்ஸ் நகருக்கு செல்லும் பாதைகளை துண்டிக்க
 தொடங்கியிருந்தது ராணுவம். போராளி அமைப்பினர் போக்குவரத்துக்கு பயன்படுத்திய
 சிறிய வீதிகள்கூட ராணுவத்தால் கைப்பற்றப்பட்டு, காவலரண்கள் அமைக்கப்பட்டன.

இதையடுத்து, போராளி அமைப்பினருக்கு ஆயுதங்கள் போய்ச் சேர்வது தடுக்கப்பட்டது. 
ஆயுதங்கள் மட்டுமல்ல, உணவுப் பொருட்கள்கூட ஹொம்ஸ் நகருக்கு செல்வதை தடுத்தனர்
 ராணுவம்.

அதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை, தரை தாக்குதல்கள் ஆரம்பமாகின. பீரங்கித் 
தாக்குதல்களும், ராக்கெட் தாக்குதல்களும் நகரை நோக்கி நடத்தப்பட்டன. ஹொம்ஸ் 
நகரை தெற்கேயிருந்து சிரியா ராணுவம் முற்றுகையிட்டது. மேற்கே இருப்பது லெபனான்.
 அங்கிருந்து வந்தன ஹிஸ்பொல்லா படைகள்.

தெற்கு மற்றும் மேற்கில் இருந்து குண்டுகள் மழையாக பொழியத் தொடங்கின.
அதையடுத்து, நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை), விமான குண்டு வீச்சு தொடங்கியது.

ஹொம்ஸ் நகரில் போராளி அமைப்பினரின் ஃபாரூக் பிரிகேட் என்ற படையணி இருந்தது.

நேற்று (திங்கட்கிழமை) அதிகாலையில் விடிவதற்கு முன், போராளிப் படையினர்
 வடக்கு திசையில் பின்வாங்கத் தொடங்கினர்.
வடக்கே உள்ள பெரிய நகரமான அலிபோ, இன்னமும் போராளிப் படையினரின்
 கட்டுப்பாட்டிலேயே உள்ளது. ஆனால், அங்கிருந்து ஹொம்ஸூக்கு உதவிகள் வராதபடி,
 அலிபோ மீதும் விமானத் தாக்குதல்கள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டன.

சிரியா விமானப்படையின் விமானங்கள் அலிபோ நகர் மீது தாக்குதல் நடத்துவதற்கு
 பறந்து செல்லும்போது, துருக்கி நாட்டு எல்லைக்கு மிக சமீபமாக பறக்க வேண்டியிருக்கும்
 ஆனால், அப்படி பறந்து சென்று குண்டு வீசியபோது, துருக்கி விமானப்படை அந்த
 விமானங்களை இடைமறிக்க முயற்சிக்கவில்லை.

சிரியா – துருக்கி எல்லையில் நேட்டோ படையினரின் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் 
உள்ளன. அவையும், இந்த விமானங்களை நோக்கி ஏவப்படவில்லை. (அவை 
இயக்கப்படுவதற்கு துருக்கி அனுமதிக்கவில்லை என்கிறார்கள்)

இதையடுத்து போராளிப் படையினர் தமது ஜீப்களிலும், பிக்கப் வாகனங்களிலும்,
 ஆயுதங்கள் சகிதம் ஹொம்ஸ் நகரைக் கைவிட்டு தப்பிச் செல்வது நேற்று அதிகாலை
 முதல் நடந்தது. காலை சுமார் 10 மணியளவில், சிரியா ராணுவம், ஹிஸ்பொல்லா 
படையினரின் டாங்கிகள் நகருக்குள் பிரவேசித்தன.

நகரின் முக்கிய இடங்களில் காவலரண்களை அமைத்தார்கள். போராளிப் படையைச்
 சேர்ந்த யாராவது நகருக்குள் மறைந்துள்ளார்களா என்ற தேடுதல் வேட்டை நடந்தது.
 அதன்பின், ஹொம்ஸ் நகரம் முழுமையாக கைப்பற்றப்பட்டது என்ற அறிவிப்பு, சிரியா
 அரசு தொலைக்காட்சியில் வெளியானது.

சில தினங்களுக்கு முன்னரே, ஹொம்ஸ் நகரத்தில் நிலைமை மோசம் என்று அமெரிக்காவும், 
அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டாளிகளும் புரிந்து வைத்திருந்தன. அதையடுத்தே சில 
தினங்களுக்கு முன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஹிஸ்பொல்லா இயக்கத்தை ‘பயங்கரவாத
கருப்பு பட்டியலில்’ சேர்ப்பதாக அறிவித்தன.

சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தில் இருந்து ஹிஸ்பொல்லா விலகிக் கொண்டால்,
 ‘பயங்கரவாத கருப்பு பட்டியலில்’ இருந்து அந்த இயக்கத்தின் பெயர் நீக்கப்படும் 
என மறைமுக அழுத்தம் கொடுக்கப்பட்டது.
ஆனால் ஹிஸ்பொல்லா, இந்த ராஜதந்திர அழுத்தம் பற்றி கவலை கொள்ளாமல்,
 சிரியா ராணுவத்துடன் இணைந்து யுத்தம் புரிந்து, ஹொம்ஸ் நகரை கைப்பற்ற 
உதவியுள்ளது.

சிரியா ராணுவத்தின் அடுத்த இலக்கு அனேகமான அலிபோ நகரமாக இருக்கும்!