Facebook Twitter RSS
*/

Latest News

'அமைதியீனத்தின் மத்தியிலும் எகிப்துக்கு அமெரிக்கா போர் விமானம் வழங்கும்'


எகிப்தில் ஒரு அரசியல் அமைதியீனம் தொடருகின்ற போதிலும் அந்த நாட்டுக்கு எஃப்-16 ரக போர் விமானங்களை வழங்குவதற்கான திட்டத்தை அமெரிக்கா தொடரும் என்று மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கடந்த வாரம் இராணுவத்தால் எகிப்திய அதிபர் முஹமட் மோர்சி அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் குறித்து அமெரிக்கா தொடர்ந்தும் ஆராய்ந்து வரும்.
இஸ்லாமியவாதத் தலைவரான மோர்சி நீக்கப்பட்டது ஒரு இராணுவ சதிப் புரட்சி என்ற முடிவுக்கு அமெரிக்கா வருமானால், எகிப்துக்கான அமெரிக்காவின் பாரிய இராணுவ உதவிகள் சட்டத்தின் அடிப்படையில் வெட்டுக்கு உள்ளாகும்.
மோர்சியை மீண்டும் அதிபராக நியமிக்க வேண்டும் என்று அவரது முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி போராடி வருகின்றது.
அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படும் கெய்ரோவில் உள்ள இராணுவ குடியிருப்பு பகுதியில் அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.
திங்களன்று இராணுவத்துடன் நடந்த மோதல்களில் 50க்கும் அதிகமான முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.
இஷ்ரத் என்கவுன்ட்டரில் சிக்கிய ஐபி அதிகாரி.. சுஷ்மா குடும்பத்துக்கு நெருக்கம்: திக்விஜய்சிங்


டெல்லி: குஜராத்தில் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் சிக்கிய ஐபி அதிகாரி ராஜேந்திர குமார், பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், நரேந்திர மோடி ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறி புதிய சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார் காங்கிரஸின் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங். இஷ்ரத் வழக்கு என்ன? 2004ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத் புறநகரில் மும்பை மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்ல ஊடுருவிய தீவிரவாதிகள் என்று போலீசார் கூறினர். ஆனால் இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, நடந்தது போலி என்கவுன்ட்டர் என்று கூறியதுடன் 4 பேரையும் ஒரு அறையில் அடைத்து வைத்து பின்னர் சுட்டுக் கொன்றதாகவும் கூறியது. மேலும் இந்த வழக்கில் மத்திய உளவு அமைப்பான ஐபியில் பணிபுரியும் ராஜேந்திர குமாருக்கும் தொடர்பு இருப்பதால் அவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று கூறியது சிபிஐ. தடலாடி திக்விஜய்சிங் இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் புதிய சர்ச்சையை விதைத்து விட்டிருக்கிறார். அவர் தனது பேட்டியில், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சிக்கிய ராஜேந்திரகுமார், பாஜகவின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ் கெளசல் வடகிழக்கு மாநிலம் ஒன்றில் (மிசோரம்) ஆளுநராக இருந்த போது நெருக்கமானவராக இருந்தார் என்பது உண்மை இல்லையா? ஐபி அதிகாரியாக அகமதாபாத்தில் அத்வானி அமைச்சராக இருந்தபோது நியமிக்கப்பட்டது உண்மை இல்லையா? அப்போது அகமதாபாத் போலீஸ் அதிகாரியாக இருந்த ஜி.எல்.சிங்கால் சிபிஐயிடம் அளித்த வாக்குமூலத்தில் குஜராத் போலீசார் போலி என்கவுன்ட்டர் நடத்த ராஜேந்திர குமார் உதவினார் என்பது உண்மை இல்லையா? அதனால்தான் நரேந்திர மோடி ஒரு கதாநாயகனார்... தீவிரவாத செயல்களை செய்பவர்களே முஸ்லிம்கள்தான் என்று மக்களின் மனதிலும் பதியப்பட்டது என்று கூறியிருக்கிறார்.

சினாயின் El Arish-ல் தொழுகையில் ஈடுபட்டிருப்போரை எகிப்திய இராணுவம் சுட்டு தள்ளும் காட்சி (வீடியோ)

ஈராக், லிபியா, சிரியா வழியில் இப்போது எகிப்து - பயணங்கள் முடிவதில்லை !!


முஸ்லிம் உலகின் பலமிக்க இராணுவங்களை செயலிழக்க வைக்கும் யூத பொறி முறை!!One Bullet Multiple Targets

சினாயை நோக்கி எகிப்திய இராணுவம் நகர தயாராவதாக தகவல்கள் வருகின்றன. தேடி வரும் இராணுவத்தை ஒரு கை பார்ப்தற்கு முஸ்லிம் போராளிகள் கங்கணம்கட்டி காத்திருக்கிறார்கள். வெற்றி அல்லது வீரமரணம் என்பதை அவர்கள் உதடுகள் உச்சரிக்கின்றன. ஆக இரண்டு முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் காபிர் செய்த துப்பாக்கியால் சுட்டுக்கொள்ளப் போகிறார்கள்.


ஈராக். இந்த தேசத்தை அமெரிக்கா மேற்கைரோப்பிய நாடுகளையும் கூட்டு சேர்த்துக்கொண்டு தாக்கியது. ஷியாக்களை ஆட்சியில் அமர்த்தி உள்நாட்டு சண்டை களத்தை திறந்து விட்டது. லிபியாவின் ஆட்சியை கவிழ்த்தது. அங்கும் பிராந்திய சண்டைக்களங்கள் திறக்கப்பட்டன. சிரியாவில் உலகம் கண்டிராத சகோதர படுகொலைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இப்போது எகிப்து. சகோதர படுகொலைகளிற்கான மத்திய சந்தையாக மாறவிருக்கிறது. இதையெல்லாம் ஏன் செய்கிறார்கள் இந்த நஸரானிகள்?.

“யூத நலன்”. இந்த ஒற்றை சொல்லிற்காக. இஸ்ரேல் எனும் சட்டவிரோத தேசம் தன் சாம்ராஜ்யத்தை விஸ்தரிப்பதற்காக செய்யும் சதிகளின் நிகழ்வுகளே நாம் மேற்கூறியவை.

லிபியாவின் இராணுவம் அல்ல அமெரிக்காவின் இலக்கு. அந்த தேசத்தின் இராணுவத்தில் உள்ள சில முக்கிய படை பிரிவுகளே இலக்காகும். உதாரணமாக லிபியாவின் ஏவுகணை படைப்பிரிவு, இரசாயன கட்டமைப்பு என்பன. அது போலவே ஈராக்கின் இராணுவத்தின் டாங்கி படைப்பிரிவும், ஏவுகணை படைப்பிரிவும், அதன் இரசாயன கட்டமைப்பும். சிரியாவிலும் அது போலவே. அதன் ஏவுகணை, டாங்கி படைப்பிரிவுகள். இப்போது எகிப்திய இராணுவத்தின் சில அதி முக்கிய கட்டமைப்புகள்.

முஸ்லிம் உலகின் பலம் பொருந்திய இராணுவங்கள் அதன் வளங்களையும் வலுக்களையும் இழந்த நிலையில் அதன் கட்டமைப்புக்கள் சீர்குலைந்த நிலைியில், திறமைமிக்க தேசிய நலனில் அக்கறையுள்ள படைத்தளபதிகள் அற்ற நிலையில் இடியமீனின் உகண்டா இராணுவம் போல செயற்திறனற்று போயுள்ளன. இது தான் மேற்கிற்கும் அமெரிக்காவிற்கும் தேவை. 

எஞ்சியுள்ளது துருக்கியும், எகிப்தும். துருக்கி நேட்டோவில் தவக்கல் வைத்து அதனிடம் அடைக்கலம் தேடி விட்டது. அப்படியானால் அடுத்து கத்தி வைக்க வேண்டியது எகிப்திய இராணுவத்தையே. அதற்கான செயற்திட்டங்கள் தான் இப்போது அழகாக உள்நாட்டு சண்டைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 

ஒரு விடயத்தை நாம் விளங்கிக் கொள்ளல் வேண்டும். அமெரிக்கா எல்லாவற்றையும் ஓரிரு வருடங்களிற்கு முன்னரே திட்டமிட்டு விட்டது. இப்போது அதற்கு செயல் வடிவம் கொடுத்து வருகிறது. எதிர்பாராத திருப்பங்கள் வரும் போது தான் அவர்களிற்கு நெருக்கடிகள் வருகின்றன. மற்றப்படி எல்லாமே சுபம்.

சினாய் மீது தாக்குதல் நடாத்த தயாராகும் எகிப்திய இராணுவம்..


சினாயில் முஜாஹித்கள் வசம் உள்ள பகுதிகளை மீட்கவும், முஜாஹித்களை  இல்லாதொழிக்கவும் எகிப்திய இராணுவம் பாரிய இராணுவ நடிவடிக்கைக்கு தயாராகி வருகிறது. இந்த தகவலை எகிப்திய இராணுவ அதிகாரியொருவர் நேற்றைய தினம் (07/07/2013) வெளியிட்டுள்ளார். பயங்கரவாதிகளையும், குற்றவாளிகளையும் இந்த நடவடிக்கை மூலம் கொன்றொழிக்க போவதாக அவர் சூளுரைத்துள்ளார். 


எகிப்திய இராணுவத்தின் ஒரு ஆண்டிற்கான மொத்த செலவினத்தில் 30 விகிதம் அமெரிக்க அரசு வழங்கும் நிதி மூலமே கிடைக்கிறது. சினாய் யூத தேசமான இஸ்ரேலின் எல்லையில் உள்ளது. சினாயின் ஒரு பகுதியை அரபு யுத்தத்தின் போது இஸ்ரேல் கைப்பற்றியும் இருந்தது. சினாய் மீதான முஜாஹித்களின் ஆதிக்கம் இஸ்ரேலின் பாதுகாப்பினை கேள்விக்குட்படுத்தும். இப்போது எகிப்திய இராணுவம் அதனை தடுக்க சினாய் நோக்கி செல்லவிருக்கிறது. 

ரபாவின் al-Barahmeh பகுதியில் உள்ள சுரங்கப் பாதைகளில் எகிப்திய இராணுவம் நேற்றைய தினம் வெடிமருந்துகள் அடங்கிய 07 பெட்டிகளை கைப்பற்றியிருந்தது. இதனையடுத்து கவச வாகனங்கள் ரபாவின் எல்லைகளில் ரோந்துகளை அதிகரித்துள்ளது. 

சினாயை நோக்கி எகிப்திய துருப்புகாவி வாகனங்களும் டாங்கிகளும் நகர ஆரம்பித்துள்ளன. யூத தேச நலன்களிற்காக எகிப்திய இராணுவம் செயற்படும் அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியே இந்த செய்தி. 

எகிப்தில் இன்று இடம்பெற்ற ‘படுகொலை’ இஹ்வான்களையும் ஸலபிகளையும் ஒன்று படுத்துமா ?


எகிப்து தலைநகர் கெய்ரோவில்  ஜனாதிபதி முர்ஷியை  சிறைப்படுத்தி வைத்திருக்கும் இராணுவ முகாம்  என்று நம்பப்படும் முகாமுக்கு முன்பாக அமைதி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தொழுதுகொண்டிருந்த போது    இராணுவம் அவர்கள் மீது  பயங்கரமான துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளது.

இந்த ‘படுகொலை’ தாக்குதலில் 35 பேர்  சஹீதானதாகவும் 500 பேருக்கும் அதிகமானவர்கள்  காயமடைதுள்ளதாகவும்   இஹ்வான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாலை சுபஹ் தொழுகையின்போது எந்தவிதமான எச்சரிக்கைகளும் இன்றி இராணுவம்  தம்மீது துப்பாக்கி தாக்குதல்  மேற்கொண்டதாக அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அல்- நூர் கட்சி
அதேவேளை இராணுவத்தின் தாக்குதலை ‘ படுகொலை’ என்று வர்ணித்துள்ள எகிப்தின் இரண்டாவது பெரிய  அரசியல் கட்சியான அல்- நூர் இஸ்லாமிய கட்சி ‘ படுகொலை’ க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக  புதிய  அரசாங்கத்தை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தையில்  இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது .
அல்- நூர்  கட்சி ஜனாதிபதி  முர்ஷியை  பதிவியிலிருந்து கவிழ்த்த இராணுவ சதிப்புரட்சியை ஏற்றுகொண்டு இராணுவத்தின் திட்ட வரைபை  ”ரோட் மெப்” ஆதரித்திருந்து அதில் கையொப்பமிட்ட   முதலாவது  பெரிய  அரசியல் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் முதல் பெரும் செல்வாக்கை பெற்ற பல்கூட்டணி (மதசார்பற்றோர் அடங்களாக)   கட்சியான இஹ்வான்களின் அரசியல் கட்சியான நீதிக்கும் சுதந்திரத்துக்குமான கட்சி விளங்கும் அதேவேளை அல்- நூர்  கட்சி தனி ஸலபி இஸ்லாமிய வாதிகளை மட்டும் கொண்ட கட்சியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை இன்று அமைதி ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது  நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில்  இராணுவம் தெரிவித்துள்ள செய்தியில்  ‘பயங்கரவாதக் கும்பலொன்று’ முகாமின் பாதுகாப்பு தடுப்பு அரணை தகர்க்க முயன்றதாகவும் அதனால் தாக்குதல் நடாத்தியதாகவும் தெரிவித்துள்ளது .
இணைப்பு:2
இந்த ‘படுகொலை’ தாக்குதலில் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தது 53 என்று சர்வதேச  தகவல்கள் குறிப்பிடுகிறது  1000 பேருக்கும் அதிகமானவர்கள்  காயமடைதுள்ளதாகவும். சர்வதேச  தகவல்கள் குறிப்பிடுகிறது.

களமிறங்க தயாராகும் இஹ்வான்கள் !

களமிறங்க தயாராகும் இஹ்வான்கள் !! - “இஸ்லாத்திற்கும் மதச்சார்பின்மைக்கும் இடையிலான பலப்பரீட்சை களமாகும் எகிப்து”

Heating Cairo, the Muslim Brotherhood called for a national demonstration to support Mursi

எகிப்தின்  “இஸ்லாமிய தேசிய முன்னணி” நாடு தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்திற்கு அவசரமாக அழைப்பு விடுத்துள்ளது. தலைநகர் Cairo விலும் Giza விலும் இந்த ஆர்ப்பாட்ட பேரணியை நடாத்தி முடிக்க அவர்கள் ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளார்கள். எகிப்திய அதிபர் முர்ஷிக்கு ஆதரவாக இந்த பேரணி நடைபெறவுள்ளது. அண்மைய நாட்களில் அரசிற்கு எதிராக மதச்சார்பற்றவர்கள், முதலாளித்துவாதிகள், தாராளகொள்கைவாதிகள், ஷியாக்கள், இஸ்லாமிய எதிர்புண்ர்வு கொண்ட மேற்கத்தைய நாகரீத்தினை ஆகர்ஷிப்பவர்கள், இஸ்லாமிய அரசை விரும்பாத சடவாத சிந்தனை கொண்ட இராணுவ ஆதரவாளர்கள் என பல தரப்பட்டவர்களும் ஒன்றினைந்து அலெக்ஸாண்டிரியாவில் ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தை நடாத்தியிருந்தனர். அந்த ஆர்ப்பாட்டம் மெல்ல அரசிற்கு எதிரான கலவரமாக மாறியது. அது தலைநகர் கெய்ரோ வரைக்கும் தனது பாதங்களை பதித்துள்ளது. இதற்கெதிராகவே இந்த பேரணிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


நாம் முன்பு கைபர் தளத்தில் “இஹ்வானிய அரசின் பின் பதுங்கியுள்ள இராணுவ மூளைகள்” எனும் தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தோம். அதில் கோடிகாட்டிய எதிர்வு கூறல்களிற்கு ஏதுவாக இப்போது நிலைமைகள் உருவாகியுள்ளன.

இஸ்லாமியவாதிகளிற்கும் (இஹ்வான்களிற்கும்) சடவாத சிந்தனை கொண்ட மதச்சார்பற்றவர்களிற்கும் இடையிலான போராட்டமே அங்கு உருவாகியுள்ளது. முர்ஷியின் அரசை கவிழ்ப்பதன் ஊடாக எகிப்தில் இராணுவ ஆட்சியை உருவாக்கும் பெரிய ஒரு திட்டத்தின் முதற்கட்ட செயற்பாடுகளாகவே இவையமைந்துள்ளன. அதற்கு ஏற்றாற் போல இப்போது எகிப்திய இராணுவம் 48 மணி நேரத்தினுள் இருதரப்பையும் சமரசத்திற்கு வருமாறும் இல்லாவிட்டால் இராணுவம் ஆட்சியை பாரமெடுக்கும் நிலை உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பாதுகாப்பமைச்சர் General AbdelFattah al-Sissi இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஆனால் அல்-இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினர் வரும் திங்கட்கிழமை எகிப்திய பல்கலைக்கழகத்தில் இருந்து தங்கள் அடையாள ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை ஆரம்பிப்பதில் உறுதியாக உள்ளனர். 

இஹ்வான்கள் எகிப்திய அரசிற்கு எதிரான வன்முறையில் இயங்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை தாங்கள் முகம் கொள்ள தயாராக உள்ளதாக அறிவித்துள்ளனர். எகிப்திய இராணுவத்ததை ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதித்தால் அது இன்னொரு இராணுவ புரட்சிக்கு வித்திடும் என இஹ்வான்கள் கருதுகின்றனர். 

எகிப்தில் இதுவரை நடந்த கலவரங்களில் 18 இற்கும் மேற்பட்டவர்கள் மரணித்துள்ளனர். அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் நேரடியாகவே இறங்கியுள்ளனர். இவர்களிற்கு பின்னால் சர்வதேச அரசியல் சக்திகள் உள்ளன என்பது வெளிப்படை.