Facebook Twitter RSS
*/

Latest News

முஸ்லிம் பள்ளியில் புத்தர் சிலை!

முஸ்லிம் பள்ளியில் புத்தர் சிலை!


கொழும்பு: இலங்கை வாழைசேனை  சாதுலியா வித்தியாலயா என்கிற முஸ்லிம்  பள்ளி மைதானத்தில் திடீரென தோன்றிய புத்தர் சிலையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு  இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் நடுவில் மேசையொன்றில் புத்தர் சிலை வைக்கப்பட்டு, நிழலுக்கு குடையொன்றும் நடப்பட்டுள்ளதை மறுநாள் காலையில் தாங்கள் கண்டதாகக் கூறும் பள்ளி நிர்வாகம் வாழைச்சேனை காவல் நிலையத்தில்  இது தொடர்பாக புகார் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த சிலையை வைத்த வாழைச்சேனை புத்த ஜயந்தி, "சிலையை வைப்பதற்கு நான் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது" என்று கூறியுள்ளார். மேலும் இந்த மைதானம் புத்தர் சிலைக்காக ஒதுக்கப் பட்டதாகவும்   இது முஸ்லிம்களுக்கு எதிரான செயலாக  எவரும் கருதக் கூடாது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 இந்த மைதானம் உரிமை தொடர்பாக  விகாராதிபதிக்கும் பள்ளி நிர்வாகத்திற்குமிடையில் ஏற்கனவே முரண்பாடு இருந்துள்ளது. எனினும் இந்த மைதானம் பள்ளி நிர்வாகத்திற்கே சொந்தம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இங்கு புத்தர் சிலை வைக்கப் பட்டுள்ளது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

அல்-குர்ஆன் மீது பதவிப்பிரமாணம்.. ஆஸி.யின் முதல் முஸ்லீம் அமைச்சரை விமர்சித்த இனவெறியர்கள்

  அல்-குர்ஆன் மீது பதவிப்பிரமாணம்.. ஆஸி.யின் முதல் முஸ்லீம் அமைச்சரை விமர்சித்த இனவெறியர்கள்



மெல்போர்ன்: திருக்குரான் மீது கை வைத்து பதவிப்பிரமாணம் செய்து கொண்ட ஆஸ்திரேலியாவி்ன் முதல் இஸ்லாமிய அமைச்சரை கடுமையாக விமர்சித்து, இனவெறியர்கள் டிவிட்டர், பேஸ்புக்கில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இனவெறிக்குப் பெயர் போனது ஆஸ்திரேலியா. அங்கு தோலைப் பார்த்து ஆளைப் பார்க்கும் கூட்டம்தான் அதிகம். இந்தியர்கள் இந்த ஆஸ்திரேலியர்களிடம் சிக்கி பட்ட பாடு உலகுக்கே தெரியும். இப்படிப்பட்ட இனவெறி பிடித்த ஆஸ்திரேலியாவில், அந்த நாட்டு அமைச்சர் ஒருவரே இனவெறி விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்.

முதல் இஸ்லாமிய அமைச்சர் எட் ஹூசிக் 43 வயதான எட் ஹூசிக் அந்த நாட்டின் ஒலிபரப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இஸ்லாமியர் ஆவார். மேலும் ஆஸ்திரேலியாவின் முதல் இஸ்லாமிய அமைச்சரும் கூட.




 இவரது பெற்றோர் போஸ்னியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இடம் பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வசித்து வருகின்றனர்.

குரான் மீது பதவிப்பிரமாணம் இவர் திங்கள்கிழமையன்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அப்போது திருக்குரான் மீது கை வைத்தப்படி பொறுப்பேற்றார்.

குரான் இல்லாமல் எப்படி பதவியேற்பது:
இதுகுறித்து ஹூசிக் கூறுகையில், நான் ஒரு முஸ்லீம். எனது நம்பிக்கையை நான் வெளிப்படுத்தினேன். என்னால் பைபிள் மீது கை வைத்து உறுதி ஏற்க முடியாது. நான் யாரோ அதுவாகவே இருக்க விரும்புகிறேன் என்று கூறினார் ஹூசிக்.

பிரதமர் கெவின் ரூட் வருத்தம்:

 ஹூசிக் மீதான இனவெறி தாக்குதல் குறித்து பிரதமர் கெவின் ரூட் வருத்தம் தெரிவித்துள்ளார். ஹூசிக்கின் பெற்றோருக்கு அவர் போன் செய்து தனது வருத்தத்தையும் பதிவு செய்தார்.


இஷ்ரத் வழக்கு

இஷ்ரத் வழக்கு: குஜராத் போலீஸ்- ஐபி இணைந்து நடத்திய “போலி என்கவுன்ட்டர்”- குற்றப்பத்திரிகையில் சிபிஐ!


அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அம்மாநில போலீசாரும் ஐபி உளவுப் பிரிவும் இணைந்து நடத்திய "போலி என்கவுன்ட்டர்" நடவடிக்கை என்று சிபிஐ இன்று தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத் புறநகரில் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்யும் நோக்கத்துடன் ஊடுருவிய தீவிரவாதிகள் என்று மும்பை மாணவி இஷ்ரத் ஜஹான், ப்ரனேஷ் பிள்ளை என்ற ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி ரானா, ஜீஷான் ஜோகர் ஆகிய 4 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இந்த 4 பேரும் அப்பாவிகள் என்றும் குஜராத் போலீசார் நடத்தியது போலி என்கவுன்ட்டர் என்றும் புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. சிபிஐ விசாரணையில் ஐ.பி. மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரி ராஜேந்திர குமாருக்கும் இந்த என்கவுன்ட்டரில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் இதை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி மிரட்டப்படுகிறார்.. அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சிபிஐயே கோரியது. இந்நிலையில் இந்த வழக்கில் அகமதாபாத் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. அதில், அகமதாபாத் புறநகரில் குஜராத் போலீசார் 4 பேரை சுட்டுக் கொன்றது போலி என்கவுன்ட்டர். இந்த போலி என்கவுன்ட்டரை குஜராத் போலீசாரும் மத்திய புலனாய்வு அமைப்பான ஐபியும் இணைந்து மேற்கொண்டன. குஜராத் உயர் போலீஸ் அதிகாரிகளான பாண்டே உள்ளிட்டோர் இந்த போலி என்கவுன்ட்டர் சம்பவத்துக்குக் காரணம். ஐபி அமைப்பின் அதிகாரி ராஜேந்திரகுமாரின் பங்கு குறித்து அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும். இந்த வழக்கில் போலி எண்கெளன்டரை மூடி மறைக்க குஜராத் போலீசார் முயன்றனர். ஆதாரங்களை அழிக்கவும் முயன்றனர். இந்த விவகாரத்தில் 4 பேரையும் கடத்தி, சட்டவிரோதமாக சிறை வைத்து, மயக்க மருந்து செலுத்தி மயக்கமாக்கி, கொலை செய்துள்ளனர். இஷ்ரத் ஜகான் உள்ளிட்டோர் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட ஏ.கே.-47, 2 பிஸ்டல்கள் குஜராத் ஐபி அலுவலகத்தில் இருந்து போலீசாரால் கொண்டு வரப்பட்டு சம்பவ இடத்தில் போடப்பட்டன. அதிகாரி வன்சாராவின் உத்தரவுப்படி இதை ஐபிஎஸ் அதிகாரியான ஜி.எல். சிங்கால் (இந்த விவகாரத்தில் இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்) தான் ஐ.பி. அலுவலகத்துக்கு ஜூலை 14ம் தேதி சென்று இந்த ஆயுதங்களை வாங்கிக் கொண்டு வந்துள்ளார். பின்னர் அதை போலி எண்கெளன்டர் நடந்த இடத்தில் போட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் எண்கெளன்டருக்கு முன்பாகவே எப்ஐஆரை குஜராத் போலீசார் தயார் செய்துள்ளனர். மேலும் கோதார்பூர் வாட்டர் ஒர்க்ஸ் பகுதியில் வைத்து இந்த போலி எண்கெளன்டர் நடத்தப்பட்டபோது இந்த நான்கு பேரையும் சுட ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும், கமாண்டோவும் மறுத்துள்ளனர். இதனால் கிரைம் பிராஞ்ச் போலீசாரிடையே சண்டை கூட நடந்துள்ளது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் கமாண்டோவிடம் இருந்து துப்பாக்கிகளைப் பறித்த மற்ற போலீசார் இஷ்ரத் ஜகான் உள்ளிட்டோரை சுட்டுக் கொன்றனர் என்று சிபிஐயின் குற்றப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக புகார் கூறப்பட்ட குஜராத் முன்னாள் அமைச்சர் அமித்ஷாவின் பெயர் இந்த முதல் குற்றப்பத்திரிகையில் இடம் பெறவில்லை. மேலும் இஷ்ரத் ஜகான் தீவிரவாதியா இல்லையா என்பது குறித்து நாங்கள் விசாரிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த போலி எண்கெளன்டருக்கான காரணம் குறித்து விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்படும் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் போலீஸ் அதிகாரிகள் டிஜி வன்சாரா, பி.பி. பாண்டே (இவர் தலைமறைவாக உள்ளார்), தருன் பரோட், பார்மர், அமின் மற்றும் ஐபி அதிகாரி ராஜேந்திர குமார் உள்பட மொத்தம் 7 பேர் மீது சிபிஐ கொலைக் குற்றம் சாட்டியுள்ளது. போலி எண்கெளன்டர் நடப்பதற்கு முன் சில நாட்கள் இஷ்ரத் ஜகான் உள்ளிட்டோரை கொடியார் பண்ணையில் வைத்து பாண்டே உள்ளிட்ட போலீசார் விசாரித்துள்ளனர். இதன்மூலம் எண்கெளனடரே பொய்யானது என்பதும், இவர்கள் ஏற்கனவே கடத்தி வரப்பட்டு, சிறை வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதும் உறுதியாகிறது என்று சிபிஐ தனது குற்றப் பத்திரிக்கையில் கூறியுள்ளனர். இவர்களை போலீஸ் அதிகாரிகளான அமின், தருன் பரோட் ஆகியோர் தான் கடத்தி வந்தனர் என்றும் சிபிஐ கூறியுள்ளது.


அல்ஜீரியாவில் இருந்து ஆள் பிடித்து அனுப்புகிறது இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்!
  

 

!

யூதர்களின் சூழ்ச்சி வலை!!!


உள்நாட்டு யுத்தம் நடக்கும் சிரியாவுக்குள், இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் ‘வேறு விதமான ஆட்டம்’ ஒன்றை ஆடுகிறது என்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது அல்ஜீரியப் பத்திரிகை அல்-பஞ்ர்.
அல்ஜீரியாவுக்குள் இருந்து இயங்கும் மொசாத் டீம் ஒன்று, அல்ஜீரிய இளைஞர்களை ஒன்றுதிரட்டி, சிரியாவுக்குள் யுத்தம் புரியும் போராளி அமைப்புகளில் ஒன்றில் இணைந்து யுத்தம் புரிய அனுப்பி வைக்கிறது என்கிறது இந்தப் பத்திரிகை. ஆனால், அனுப்பி வைக்கப்படும் அல்ஜீரிய இளைஞர்களுக்கு, தம்மை அனுப்பி வைப்பது இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் என்ற விபரம் தெரியாதாம். (தெரிந்தால் போகமாட்டார்கள்)
அல்ஜீரியாவில் இயங்கும் ஒரு சலாஃபி ஜிஹாத் இயக்கம், இஸ்லாமிய போராளி  இயக்கம் என்ற போர்வையில் இயங்கினாலும், அதை பின்னணியில் இருந்து இயக்குவது, மொசாத் ஏஜென்ட்டுகள் சிலர். இந்த இயக்கத்தில் ஏராளமான அல்ஜீரிய இளைஞர்கள் சமீப நாட்களில் வந்து சேருகின்றனர்.
அவர்களே, யுத்தம் புரிவதற்காக சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
குறிப்பிட்ட சலாஃபி ஜிஹாத் இயக்கத்துக்கு, பெருமளவில் நிதி கத்தாரில் இருந்து வருவதாகவும், அந்த நிதியே, அல்ஜீரியர்களை சிரியாவுக்கு அனுப்பி வைக்க செலவு செய்யப்படுகிறது என்றும் செய்தி வெளியிட்டுள்ளது அல்-பஞ்ர்.
இதுதானுங்க, டிபிகல் இஸ்ரேலிய ஸ்டைல்! இஸ்ரேலுக்கு இஸ்லாமியர்களை கண்ணில் காட்டக்கூடாது. ஆனால், இரு இஸ்லாமியத் தரப்புகள் தமக்கிடையே சண்டையிட்டால், அதற்குள் மொசாத் புகுந்துவிடும்!!

பறக்கும் சைக்கிள் வெற்றிகரமா​க பரீட்சிப்பு (வீடியோ இணைப்பு)


cycle_002முதன் முறையாக பறக்கும் துவிச்சக்கர வண்டி ஒன்று வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான வண்டிகளை டிஸ்னி படங்களில் பார்த்திருந்த போதிலும் முதன் முறை அதனை நிஜத்தில் உருவாக்கியுள்ளதுடன் டம்மி பொம்மை ஒன்றினைக் கொண்டு முதற்கட்ட பரிசோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த வண்டி தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.


லண்டனில் உலா வரும் பறக்கும் தட்டுகள்


fly_plat_001.w245லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில், மாயாஜாலக் காட்சிகள் போன்றே ஓர்டர் செய்த உணவுகள் பறக்கும் தட்டாக ஆகாயத்தில் வந்து குதிக்கிறது.
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஹோட்டல் நிறுவனம் யோ சுஷி. தலைநகர் லண்டன் மட்டுமின்றி நாட்டின் பல இடங்களிலும் ரஷ்யா, ஐக்கிய அரபு குடியரசு உள்ளிட்ட நாடுகளிலும் இதன் கிளைகள் உள்ளன. இதன் லண்டன் கிளையில் தான் சமீபத்தில் டிரோன் சர்வீஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர் ஓர்டர் செய்த உணவை மினி டிரோன் ஒன்று சுமந்து கொண்டு டேபிளுக்கே பறந்து வருகிறது. ஐபேட் கண்ட்ரோலில் இயக்கப்படும் இந்த டிரோன் சப்ளை வாடிக்கையாளர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
இதில் மினி ஹெலிகாப்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளதால், அது அழகாக இறக்கைகளை சுழற்றியபடி ஜிவ்வென்று பறந்து செல்கிறது. உணவுப் பதார்த்தங்களை வாடிக்கையாளர் எடுத்துக் கொண்ட பிறகு திரும்பி பறந்து சென்று விடும் வகையில் இது ட்யூன் செய்யப்பட்டுள்ளது.
2 நவீன கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த டிரோனை, ஹோட்டல் ஊழியர் ஒருவர் ஐபாட் உதவி கொண்டு இயக்குகிறார். இந்த டிரோன் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறனுடையது.
இது குறித்து யோ சுஷி ஓட்டல் அதிகாரிகள் கூறுகையில், உலகம் முழுவதும் எங்கள் ஹோட்டல்கள் 70 இடங்களில் உள்ளது. கன்வேயர் பெல்ட் மூலம் சப்ளை செய்வது, ரோபோ மூலம் சப்ளை செய்வது ஆகிய முயற்சிகளை தொடர்ந்து, தற்போது மினி டிரோன் உதவியுடன் சப்ளையை தொடங்கியிருக்கிறோம்.
அசம்பாவிதங்கள் எதுவுமின்றி, இது சிறப்பாக நடந்தால் மற்ற கிளைகளிலும் அறிமுகப்படுத்தப்படும் எனதெரிவித்தனர்.

உம்மாவின் ஒற்றுமைக்காக உழைப்பது இஸ்லாம் விதித்துள்ள கட்டாயக் கடமை

முஸ்லிம்களின் தலைமைத்துவம் வீழ்த்தப்பட்ட பிறகு இந்த உம்மா இன்னல்களையும், இழிநிலையையும் சந்தித்துவருகிறது. முஸ்லிம்களின் ஒற்றுமைக்காக முயற்சிக்க வேண்டியது நல்ல காரியம் மட்டுமல்ல. ஷரியா நம்மீது ஆக்கியுள்ள முக்கிய கடமைகளில் ஒன்றாகும் .முஸ்லிம்களின் ஒற்றுமைக்காக பாடுபட  வேண்டியது  குறித்து குர்ஆன் சுன்னாவின் வெளிச்சத்தில்  மௌலவி ஜியாவுதீன் பாகவி ஆற்றிய உரை இங்கு பதியப்பட்டுள்ளது
உம்மாவின் ஒற்றுமைக்காகஉழைப்பது இஸ்லாம்
விதித்துள்ள கட்டாயக் கடமை (பகுதி – I)


விதித்துள்ள கட்டாயக் கடமை (பகுதி – II)

விதித்துள்ள கட்டாயக் கடமை(பகுதி – III)