Facebook Twitter RSS
*/

Latest News

மோடி மீதான விமர்சனம்- கட்ஜூவுக்கு அருண்ஜேட்லி எதிர்ப்பு- திக்விஜய்சிங் கண்டனம்!


டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை விமர்சித்து இந்திய பிரஸ் கவுன்சில் தலைவரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜூ கட்டுரை எழுதியதை அருண்ஜேட்லி விமர்சித்திருந்தார். இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கண்டனம் தெரிவித்திருக்கிறார். குஜராத் கோத்ரா கலவரம் தொடர்பாக கட்டுரை ஒன்றை எழுதியிருந்த கட்ஜூ, கோத்ராவில் என்ன நடந்தது என்பது இப்போதும் மர்மமாகவே உள்ளது. 2002-ம் ஆண்டு சம்பவங்களில் மோடிக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறுவது நம்புவதற்கு கடினமாக உள்ளது என்று கூறியிருந்தார். மேலும் ஜெர்மனியில் 1933-ம் ஆண்டு அந்நாட்டு மக்கள் ஹிட்லரின் நாஜிக் கட்சியைத் தவறாக தேர்வு செய்தனர். அதேபோன்ற தவறை நமது மக்களும் செய்துவிடக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருந்த பாஜக மூத்த தலைவர் அருண்ஜேட்லி, மோடி குறித்து கட்ஜு எழுதியுள்ள கட்டுரை தனிப்பட்ட முறையில் பகைமையோடு விமர்சிப்பதாக உள்ளது. அவர் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அக்கட்சியைச் சேர்ந்தவர்களையும்விட அதிக விசுவாசமாக செயல்படுகிறார்.காங்கிரஸ் இல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களான குஜராத், பிகார், மேற்கு வங்கம் என தேர்வு செய்து கட்ஜு விமர்சிக்கிறார். ஆகையால் இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து கட்ஜு உடனடியாக விலக வேண்டும். என்று சாடியிருந்தார். அருண்ஜேட்லிக்கு பதிலடியாக, தாம் ஒருபோதும் காங்கிரஸ் சார்பாக நடந்து கொண்டது இல்லை என்றும் உண்மைகளை மறைத்து தவறான தகவல்களைக் கொடுத்து வரும் ஜேட்லிதான் அரசியலைவிட்டு விலக வேண்டும் என்றும் கட்ஜூ காட்டம் காட்டியிருக்கிறார். உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு ஓய்வுக் காலத்தில் மாற்றுப் பதவிகள் கொடுப்பது என்பது மத்திய சட்ட அமைச்சர் பொறுப்பு வகித்த ஜேட்லி காலத்திலும்தான் நடந்தது என்றும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமக்கு மட்டுமே அப்படியான ஒரு பொறுப்பு கொடுக்கப்படவில்லை என்றும் கட்ஜூ பதிலளித்திருக்கிறார். ஜேட்லிக்கு திக்விஜய்சிங் கண்டனம் இதனிடையே மார்க்கண்டேய கட்ஜூவை விமர்சித்திருக்கும் அருண்ஜேட்லிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கட்ஜூ எழுதிய கட்டுரை உண்மைகளின் அடிப்படையிலானது. ஆனால் ஜேட்லியோ கட்ஜூக்கு எதிராக மிக மோசமான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக இருக்கக் கூடிய கட்ஜூ, பெய்ட் நியூஸ் பற்றி கேள்வி எழுப்பக் கூடாதா என்ன? ஓய்வு காலத்தில் பிரபல நீதிபதிகளுக்கு பொறுப்புகள் கொடுப்பது எவருக்கும் எதிராக செயல்படுவதற்கு அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.


பலஸ்தீனர்கள் ஒன்றுபட்டு அணிதிரள வேண்டும் : துருக்கியப் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகன்



அண்மையில் துருக்கியப் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகன், பலஸ்தீன் அரசியல் தலைவர்களை அலைபேசி வழி தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். பலஸ்தீன் அதிகார சபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ், ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் காலித் மிஷைல் ஆகியோரைத் தொடர்பு கொண்டு பேசிய அர்தூகன், பலஸ்தீனுக்குள் காணப்படும் உள்ளகப் பிரிவினைகளை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளைத் துரிதப்படுத்துமாறு வேண்டியுள்ளார். மிக அண்மையில் கெய்ரோவில் இடம் பெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் குறித்துத் தம்முடைய மகிழ்ச்சியைத் தெரிவித்த துருக்கியப் பிரதமர், "இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை வெற்றிகரமாக எதிர் கொள்வதற்குப் பலஸ்தீனர்களுக்கிடையே நிலவும் பிரிவினைகள் களையப்பட்டு, அவர்கள் ஒரே அணியில் திரள வேண்டும். பலஸ்தீனின் உள்ளகப் பிரிவுத் தலைவர்களுக்கு இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை அன்காரா அரசு மிகுந்த ஆவலோடு அவதானித்து வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ்- ஃபதஹ் இயக்கங்கள் கையெழுத்திட்ட நல்லிணக்க ஒப்பந்தம் அடுத்த மாதம் முதல் அமல்



நீண்ட காலத்திற்கு பிறகு ஹமாஸ்- ஃபதஹ் இயக்கங்கள் கையெழுத்திட்ட நல்லிணக்க ஒப்பந்தங்களை அடுத்த மாதம் முதல் அமல்படுத்த இரு அமைப்பினரும் தீர்மானித்துள்ளனர். வியாழக்கிழமை எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் இரு அமைப்பின் தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.ஃபலஸ்தீன் ஐக்கிய அரசு உருவாக்குவதை ஒப்பந்தத்தில் முக்கியமானது என்று ஃபதஹ் தலைவர் அஸ்ஸாம் அல் அஹ்மத் பேச்சுவார்த்தைக்கு பிறகு தெரிவித்தார். காஸ்ஸாவில் வாக்காளர்களின் பதிவு நடவடிக்கைகளை ஃபலஸ்தீன் தலைமை தேர்தல் கமிஷன் பூர்த்தியாக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் ஷரத்து உள்ளது. ஃபதஹிற்காக தேர்தல் கமிஷன் ஒரு தலை பட்சமாக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டி காஸ்ஸாவை ஆளும் ஹமாஸ் அங்கு பதிவு நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருந்தது. ஊடகங்கள் மூலமாக பரஸ்பரம் தாக்குதலை நிறுத்தவேண்டும், ஃபலஸ்தீன் கைதிகளின் விடுதலைக்காக ஒன்றாக செயல்படுதல் உள்ளிட்ட ஷரத்துக்களை கொண்ட ஒப்பந்தத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கத்தர் நாட்டில் வைத்து இரு அமைப்புகளின் தலைவர்களும் கையெழுத்திட்டிருந்தனர். ஆனால் பல காரணங்களால் ஒப்பந்தம் அமல்படுத்தாமலிருந்தது. ஹமாஸ் – ஃபதஹ் தலைவர்களை உட்படுத்தி எகிப்திய வல்லுநர்கள் தலைமை வகிக்கும் குழு உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும். ஃபதஹுடன் இணைந்து சுதந்திர அமைச்சரவையை உருவாக்குவது தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது என்று ஹமாஸ் அரசியல் உயர்மட்ட குழு உறுப்பினர் இஸ்ஸத் அல் ரஸாக் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ்., பாஜக முகாம்களில் தீவிரவாத நடவடிக்கைகளுக்குப் பயிற்சி: ஷிண்டே புது குண்டு!



டெல்லி: பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் முகாம்களில் தீவிரவாத பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன என்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே புது குண்டை வீசியுள்ளார். இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

 காவி தீவிரவாத பயிற்சி இது தொடர்பாக சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்த கருத்து:

 ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா ஆகியவை இந்துத்துவா தீவிரவாத்தை உருவாக்குகின்றன. சில குண்டு வெடிப்பு சம்பவங்களின் விசாரணைக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் பாரதிய ஜனதா கட்சி தங்களது முகாம்களில் பயிற்சி இந்துத்துவா தீவிரவாதத்திற்கு பயிற்சி அளித்து வருகின்றன. சமாஜ்வுதா எக்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு, மெக்கா மசூதி குண்டு வெடிப்பு மற்றும் மாலேகான் குண்டு வெடிப்புக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் காரணம் என்பது ஷிண்டேயின் கருத்து. பாஜக கண்டனம் சுஷில் குமார் ஷிண்டேவின் கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன், உள்துறை அமைச்சரின் பேச்சு பொறுப்பற்றது. இந்த பேச்சு மிகவும் வேதனை அளிக்கிறது. இதற்கு நாங்கள் பெரிதும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார் அவர்.

 ஹபீஸ் சையத்துக்கு கிடைத்தது ஆயுதம்!:

 உள்துறை அமைச்சர் சுஷில்குமார் தெரிவித்த கருத்தை லஷ்கர் இ தொய்பாவின் தலைவர் ஹபீஸ் சையத் ஆதரித்திருக்கிறார். இது தொடர்பாக தனது ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள ஹபீஸ் சையத், இந்திய உள்துறை அமைச்சர் இந்து தீவிரவாதம் குறித்து அளித்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தை உலக நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவை அதன் சொந்த மண்ணில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக உலக நாடுகள் பிரகடனப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.



சுனில் ஜோஷியை கொன்றவர்கள் லோகேஷ் சர்மா, ராஜேந்திர சவுத்ரி – என்.ஐ.ஏ!

புதுடெல்லி: ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியை மலேகான் – சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளில் குற்றவாளிகளான ஹிந்துத்துவா தீவிரவாதிகள் லோகேஷ் சர்மாவும், ராஜேந்திர சவுத்ரியும் கொலை செய்துள்ளனர் என்று தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) தெரிவித்துள்ளது. நேற்று முன் தினம் மத்தியபிரதேச மாநிலம்
இந்தூரில் இருந்து கைதான பல்பீர் என்ற ஹிந்துத்துவா தீவிரவாதியிடம் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது. சுனில் ஜோஷி கொலைக்கான சதித்திட்டத்தில் பல்பீருக்கும் பங்குண்டு என்று என்.ஐ.ஏ தெரிவிக்கிறது.
மலேகானில் 2006-ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பிலும், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிலும் சூத்திரதாரியாக செயல்பட்டவன் சுனில் ஜோஷி. இவன் ஹிந்துத்துவா தீவிரவாத குழுவில் பெண் தீவிரவாதி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபொழுது கொலைச் செய்யப்பட்டதாக என்.ஐ.ஏ கூறுகிறது.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிலும், டெல்லி பல்கலைக் கழக பேராசிரியர் எஸ்.ஏ.ஆர் கிலானி கொலை முயற்சி வழக்கிலும் தொடர்புடைய லோகேஷ் சர்மாவுக்கு பல்பீர் நெருங்கிய கூட்டாளி ஆவான். இவனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியை என்.ஐ.ஏ ஃபாரன்சிக் சோதனைக்கு அனுப்பியுள்ளது.
2007 டிசம்பர் 29-ஆம் தேதி சுனில் ஜோஷி கொலை செய்யப்பட்டான். ஆனால், இவ்வழக்கில் தொடர்புடைய லோகேஷ் சர்மா இதுவரை கைது செய்யப்படவில்லை. ஜோஷி கொலையைக் குறித்து முதலில் விசாரணை நடத்திய மத்தியபிரதேச மாநில போலீஸ் 5 பேர் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

மலேகான்:சாட்சியை கொலைச் செய்ததாக ஹிந்துத்துவா தீவிரவாதி!



2006-ஆம் ஆண்டு மலேகானில் நடந்த குண்டுவெடிப்பில் குண்டை வைத்த டான்சிங்கை அடையாளம் கண்ட இளைஞரை ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கொலைச் செய்துள்ளனர். என்.ஐ.ஏவின் காவலில் இருக்கும் டான்சிங், நேற்று முன் தினம் தன்னை அடையாளம் கண்ட இளைஞரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளான். இக்கொலையில் நேரடியாக தொடர்பு இல்லை. ஆனால், சதித்திட்டத்தில் பங்குண்டு என்பதை டான்சிங் ஒப்புக்கொண்டுள்ளான். குண்டுவெடிப்பு நிகழ்ந்து 2 வாரங்கள் கழித்து செப்டம்பர் 26-ஆம் தேதி மலேகானில் வீட்டின் பின் பகுதியில் இறந்து கிடந்த அஸ்ஹர் பர்வேஸ் என்ற இளைஞனின் மரணம் கொலை என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. புற்றுநோய் பாதித்த 38 வயது பர்வேஸ், மனக்கவலையால் தற்கொலைச் செய்தார் என்று போலீஸ் இவ்வழக்கை மூடிவிட்டது. இரண்டு கைகள் பிளக்கப்பட்ட நிலையிலும், இடது கணுக்காலில் ஆழமான காயம் பட்ட நிலையிலும் பர்வேஸின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அளவுக்கதிகமான இரத்தம் வெளியேறியதால் மரணம் சம்பவித்ததாக போஸ்ட் மார்ட்டம் அறிக்கை கூறியது. இறந்த உடலில் காயங்களும், அடி பட்டதன் அடையாளங்களும் இருந்த போதும் போலீஸ் வழக்கை அவசர அவசரமாக தற்கொலை என்று மூடிவிட்டது. புதிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க என்.ஐ.ஏ பரிசீலிக்கிறது. 2006 செப்டம்பர் எட்டாம் தேதி 31 பேர் பலியான மலேகான் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அன்று,வெடிக்குண்டு பொருத்திய சைக்கிளுடன் வந்த டான்சிங்கை, சைக்கிளின் பின் சீட் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதை கண்டு ஆச்சரியமுற்ற பர்வேஸ் தடுத்து நிறுத்தி, இதனை எங்கு வாங்கினீர்கள்? இந்த சீட்டை என் மகனின் சைக்களில் இணைக்கவேண்டும் என்றும் கேட்டுள்ளார். ஆனால், பதில் எதுவும் கூறாமல் டான்சிங் சென்றுவிட்டான். குண்டுவெடித்த பிறகு பர்வேஸ் கண்ட சைக்கிளில் பொருத்திய குண்டுதான் வெடித்தது என்ற செய்தி வெளியானது. இதனை டி.வியில் கண்ட பர்வேஸ், குண்டுவைத்த நபரை தான் அடையாளம் கண்டுகொண்டதாக மலேகானில் ஜமாஅத்தே உலமாவின் மார்க்க அறிஞர்கள் உள்ளிட்டவர்களிடம் தெரிவித்தார் என்று பர்வேஸின் சகோதரர் மஸ்ஹர் கூறுகிறார். ஆனால், பர்வேஸின் கூற்றை நம்பாததுடன், இக்காரியத்தை போலீஸில் கூறவேண்டாம் என்று அவர்கள் அறிவுறுத்தியதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

யுவான் ரிட்லிக்கு விசா மறுப்பு:இந்திய அரசின் இஸ்லாமோஃபோபியா!



பிரபல பத்திரிகையாளரும், மனித உரிமை ஆர்வலருமான யுவான் ரிட்லிக்கு இந்தியாவுக்கு வர விசாவை மறுத்துள்ளது மத்திய அரசு.ஜமாஅத்தே இஸ்லாமி சார்பாக ஹைதராபாத்தில் நடக்கும் மாநாட்டில் கலந்துகொள்ள யுவான் ரிட்லிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இதனைத் தொடர்ந்து அவர் இந்தியாவுக்கு வர விசாவுக்கு விண்ணப்படித்திருந்தார்.ஆனால், அவருக்கு விசா அளிக்க இந்திய அரசு மறுத்துவிட்டது.ஏற்கனவே கேரள மாநிலத்தில் நடந்த மாநாட்டில் கலந்துகொள்ள அவர் விசாவுக்கு விண்ணப்பித்திருந்தபோதும் இந்திய அரசு விசா அளிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், யுவான் ரிட்லி வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலமாக மாநாட்டில் உரையாற்றினார் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தனது கண்டனத்தை பதிவுச்செய்துள்ள யுவான் ரிட்லி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பது:பெண்கள் உரிமைகள் குறித்து 50 ஆயிரம் பெண்கள் மத்தியில் உரையாற்றும் வாய்ப்பை இந்திய அரசு மறுத்துள்ளது.டெல்லியில் கூட்டு பாலியல் கொடுமை போன்ற அக்கிரமங்கள் நடந்த பிறகும் இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள் அதன் தீவிரத்தன்மையை உணரவில்லை.பெண்களை 2-ஆம் தர குடிமக்களாகவே பார்க்கின்றனர் என்று யுவான் ரிட்லி கூறியுள்ளார். லண்டனில் வாழும் யுவான் ரிட்லி 2001 ஆம் ஆண்டு ஆப்கானில் பத்திரிகை பணிக்காக சென்றபொழுது தாலிபான் போராளிகளால் கைதுச் செய்யப்பட்டார்.2003-ஆம் ஆண்டு விடுதலைச் செய்யப்பட்ட யுவான் ரிட்லி பின்னர் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.